திமுக தேர்தல் அறிக்கை : ஒரு ஜோதிட ஆய்வு

Posted on

அண்ணே வணக்கம்ணே,
நமக்கும் கலைஞருக்கும் வாய்க்கா தகராறு எதுவும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா அவரோட எமர்ஜென்சி எதிர்ப்பு, ஒரு காலத்து ஈழத்தமிழர் ஆதரவு நிலை மேட்டர்ல ஹீரோ ஒர்ஷிப்பே உண்டு.

அம்மா மேல நமக்கேதும் அன்பு,பண்பு,பாசம்லாம் கிடையாது . இன்னம் சொல்லப்போனா அவிக குழந்தைதனத்து மேல கடுப்பே உண்டு.

ஒரு தேர்தல் அறிக்கைய ஜோதிட கண்ணோட்டத்த்தோட அணுகினது முதலும் கடைசியுமா நாமே இருக்கனும்னு ஒரு அல்ப்ப ஆசையில இந்த விஷப்பரீட்சையில இறங்கறேன்.

ஒரு கட்சித்தலைவர் தன் கட்சி தேர்தல்ல வெற்றி பெறனும்னா

1.தன் ஜாதகத்துல எந்த கிரகமெல்லாம் பலகீனமா இருக்கோ அந்த கிரகத்துக்குரிய (காரகம்) மேட்டர்ல எல்லாம் சனத்துக்கு இம்சை இல்லாத பண்றதுக்கான திட்டங்களை ப்ரப்போஸ் பண்ணலாம்.

2.பலகீனமான கிரகங்களுக்குரிய இனம் எதெது பார்த்து அந்த இன மக்களின் நலம் காக்க புது திட்டங்களை உருவாக்கி அறிவிக்கலாம்.

கலைஞர் விஷயத்துல இதெல்லாம் நடந்திருக்கா – அப்படி நடக்கலைன்னா இன்னம் என்னெல்லாம் வாக்குறுதி கொடுத்தா வெற்றி வாய்ப்பு கூடும்னு பார்க்கிறதுக்கு முந்தி பொதுவான கண்ணோட்டத்துல சில மேட்டரை பார்த்துரலாம்.

ஆந்திராவுல ஒய்.எஸ்.ஆர் ஃபார்முலாவை தாத்தா ஒர்க் அவுட் பண்ண பார்த்தாரு. இல்லேங்கலை.( இவரு சந்திர பாபு ஃபார்முலாவை கூட ரைட் பண்ணாருங்கண்ணா – நமக்கு நாமே (ஜன்ம பூமி) உழவர் சந்தை (ரைத்து பஜார்).

ஆனால் ஒய்.எஸ்.ஆர் ஸ்டைலே வேற அந்த மேட்டருக்குள்ள போனா நீங்க பக்கத்தை மூடிட்டு போயிருவிங்க. இங்கன எதுக்கு அந்த பேச்சை எடுக்கறேன்னா அவரும் நலதிட்டங்களை கச்சா முச்சான்னு அமல்படுத்தினாரு. கஜானா காலியாயிருச்சு. தேர்தலும் வந்துருச்சு. 2009 தேர்தல்ல ஒய்.எஸ்.ஆர் கொடுத்த தேர்தல் அறிக்கையில ரெண்டே ரெண்டு ஐட்டம்தான் புதுசு.

1.விவசாயத்துக்கு தர்ர 7 மணி நேர இலவச மின்சாரத்தை 9 மணிக்கு தர்ரது
2.ரெண்டு ரூபாய்க்கு கிலோ அரிசிதிட்டத்துல குடும்பத்துக்கு 15 கிலோவா இருந்ததை 30 கிலோ ஆக்கறது.

(இந்த ரெண்டையே அமல்படுத்தமுடியாம இன்றைய அரசுக்கு முழி பிதுங்கறது வேற கதை)

ஒய்.எஸ்.ஆரோட கவுண்டர் பார்ட் சந்திரபாபு மணி ட்ரான்ஸ்ஃபர்னுட்டு மாசா மாசம் உங்க அக்கவுண்ட்ல ரூ.1500 முதல் 2,500 வரை பணம் போடுவொம்னே வாக்குறுதி கொடுத்தாரு.

ஆனால் என்ன ஆச்சு? தனிய நின்ன காங்கிரசு ஜெயிச்சு போச்சு.. மகா கூட்டணி ஊத்திக்கிச்சு. ஏன் ஒய்.எஸ் ஆர் புது வாக்குறுதிகளை தரலை?

மறுபடி ஜெயிச்சு வருவோங்கற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கு. அன்னைக்கு 9 வருச தெ.தேசம் ஆட்சில நொந்து நூடுல்ஸாகியிருந்த சனத்துக்கு நலத்திட்டம் அத்யாவசியமா இருந்தது. அமல்படுத்தினார். ஒய்.எஸ்.ஆரோட ஐந்தாண்டு கால ஆட்சியில நிலைமையில நல்ல மாற்றம் ஏற்பட்டு போச்சு.

புதுசா நலத்திட்டத்துக்கான தேவையுமில்லை. சோர்ஸும் இல்லை. அதனால ஆகே பீச்சே மூடிக்கிட்டு ரெண்டே ரெண்டு வாக்குறுதி கொடுத்தாரு.

ஆனா தாத்தா கலர் டிவி , ஒரு ரூபா அரிசின்னு கொண்டாடி கஜானாவை காலியாக்கி, மானிலத்தை கடனாளியாக்கினதோட நிற்காம இன்னமும் இலவச திட்டங்களை அறிவிக்கிறாருன்னா என்ன அர்த்தம்?
ஜெயிப்போம்ங்கற நம்பிக்கை அவருக்கே இல்லைன்னுதான் அர்த்தம். தப்பித்தவறி ஜெயிச்சாலும் அமல் படுத்தனுங்கற கமிட்மெண்ட் இல்லேனு அர்த்தம்.

சரி சரி ஜோதிட கண்ணோட்டத்துக்கு போயிருவம். ஏற்கெனவே எதையெல்லாம் இலவசமா வாங்கினா என்னெல்லாம் தோஷம் கூடும்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். தாத்தாவோட இலவசம் தான் அதிகமா இருக்கு. மேற்படி இலவசங்களை பெற்றால் / அவற்றை பொய்க்கணக்கு எழுதி கடத்தி கள்ள மார்க்கெட்டில் விற்றால் அவிகளுக்கு என்ன மாதிரி கஷ்டங்கள் ஏற்படும்னு பார்ப்போம்.

*1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும்.
இது சுக்கிர சம்பந்தம். அதானால ஆண்மையிழப்பு ஏற்படும் – செக்ஸ் கிரைம்ஸ் அதிகரிக்கும் – லாஜிக்: இலவசமா கிடைக்குதுன்னு அரிசி உணவே தின்னா ஷுகர் வரலாம் – அதன் காரணமா ஆண்மை இழப்பு வரலாம்.

*ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் அயோடின் கலந்து உப்பு.
சந்திர சம்பந்தம் : மன நோய் ஏற்படலாம். நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்

* குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னூரிமை வழங்கப்படும்.
வயிறு,இதய தொடர்பான நோய் வரலாம் -திருமணம், மனைவி ,வாரிசு மேட்டர்ல பிரச்சினை வரலாம்.

*வீடுதோறும் பெண்களுக்கு இலவசமாக கிரைண்டர் வழங்கப்படும். ஏற்கனவே கிரைண்டர் உள்ள வீடுகளுக்கு இலவசமாக மிக்ஸி வழங்கப்படும்.
இதுவும் சுக்கிர சம்பந்தம் தேன். கில்மாவுக்கு ஆப்பு. டொமஸ்டிக் கிரைம்ஸ் அதிகரிக்கலாம்.

*பரம ஏழைகளுக்கு மாதம் தோறும் இலவசமாக 35 கிலோ அரிசி வழங்கப்படும்.
போச்சுரா .. குடும்ப கட்டுப்பாட்டுக்கு இது ஒரு நல்ல திட்டம். ஆந்திராவுல நாலில் ஒருவருக்கு ஷுகர். தமிழ் நாட்ல எப்படிங்கண்ணா?

*அரசு பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறை மூன்று மாதத்திலிருந்து 4 மாதம் ஆக உயர்தப்படும்.
தாய்குலம் வீட்ல உள்ள மின் உபகரணங்களை தூக்கி பரண்ல போட்டுட்டு ஒர்க் அவுட் பண்ணா நோ சிசேரியன் . நோ பேறுகால விடுமுறை நீடிப்பு. என்னமோ ஒழிங்க.

* சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை.
டாஸ்மாக்ல லாலா போட்டுட்டு விபத்துல சிக்கினாலும் இது அப்ளிக்கபிள் போல. குடிமகன்கள் மேல என்ன ஒரு பாசம் பாருங்க.

எப்பல்லாம் நம்ம ராசிக்கு செவ் 8,12 க்கு வராருன்னு பார்த்து அந்த பீரியட்ல செவ்வாய்க்குரிய நட்சத்திரத்துல மட்டும் ஸ்டிரிங்கை பிடிக்காம இருந்தா ப்ராப்ளம் சால்வ். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல ஆஃபீஸ் போனா அம்பத்தோரு பேரோட ராசி ஒர்க் அவுட் ஆகும். செலவு மிச்சம். ஃப்யூயல் கன்சம்பஷன் மிச்சம். பொல்யூஷனும் குறையும்

*அரசு கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு லேப்டாப்
அடடா அப்ப ஆந்திரம், கேரளத்துல சீப் அண்ட் பெஸ்டா லேப் டாப் கிடைக்கும் ( இப்ப டிவி கிடைக்குதுங்கோ)

தோல் வியாதி, விரை வாதம்,கீல் வாதம்,புத்திகுழப்பம் ஏற்படும்

ஒரு அரசாங்கத்தோட கடமை இலவசமா தர்ரதுல்ல. சனம் தங்கள் சுயமரியாதைக்கு பங்கமில்லாத வகையில வேலை வெட்டி உத்யோகம் வியாபாரம்னு பார்த்து தங்கள் தேவைய நிறைவேத்திக்கிற சூழலை ,வாய்ப்பை உருவாக்குவதுதானு ஆருனா சொல்லுங்கப்பா.

*அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையம்
அடப்பாவிகளா இதுவரை இல்லையா?

*எல்லா மாவடட்டங்களுக்கும் அரசு செவிலியர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும்.
அடடா.. இதுவரை சான்ஸ் கிடைக்காத மந்திரி மாரும் கல்வித்தந்தைகளாக ஒரு நல்வாய்ப்பு. ( இதை எல்லாம் கலைஞர் பகிரங்கமா சொல்லிக்கிட்டிருக்காரு – பொதுக்குழுக்கூட்டத்துல சொல்லவேண்டிய மேட்டர்)

*60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை.
டிக்கெட் இல்லாமயே டிக்கெட் கொடுக்கறேங்கறாரு.

*முதியோர் உதவித்தொகை ரூ 450 லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்படும்.
இதை ஒய்.எஸ்.ஆர் 2003லயே அமல் படுத்திட்டாருங்கோ.

*விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.
அய்யய்யோ அப்ப இன்னொரு சாதிக் பாட்சா உருவாகவே முடியாதா? அந்தளவுக்கு தாத்தா டர்ராய்ட்ட மாதிரி இருக்கு.

*சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை அதிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்ப அடுத்த அஞ்சு வருஷத்துக்கும் இருண்ட தமிழகம் தேன். உதய சூரியந்தான் அஸ்தமிச்சுரப்போவுதே

*அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்
இது மாண்புமிகுக்களுக்கான பொன்னான வாய்ப்பு. பொழுது போனா கடிக்காது

*மீனவர்களுக்கு நிதி தர புது காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படும்.
உசுரோட இருக்கிறவுகளுக்கா, இலங்கை ராணுவத்தால சுடப்பட்டவுகளூக்கா?

*திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்.
தாத்தா சி.எம் ஆனால் மொதல் அட்மிஷன் நமக்குத்தேன்.

*உழவர் சந்தை போன்று நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை அழைக்கப்படும்.
தோடா .. குடிசை தொழில் முனைவோருக்கான சந்தைனாலும் ஒரு லாஜிக் இருக்கும். நுகர்வோர் வந்து எதை விப்பாய்ங்க?

*அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மூன்று சீருடை வழங்கப்படும்.
பாவம் அவிக அப்பங்க டாஸ்மாக்லயே குடியிருந்தா சீருடை என்ன கோவணம் கூட வாங்கித்தரமுடியாதே .அரசாங்கம் தேன் செய்யனும்.

( இன்னம் நிறைய வாக்குறுதி இருக்குங்கண்ணா நாலஞ்சு மேட்டரை தவிர எல்லாமே தொழு நோய்க்கு அவில் 25 கொடுத்தாப்ல தான் இருக்கு)

இப்ப மேட்டருக்கு வருவம்:

கலைஞர் ஜாதகத்துல லக்னாதிபதி சந்திரன். இவர் தான் அப்பப்போ ஷேக் பண்ணி விட்டுக்கிட்டே இருக்காரு. சந்திரன் ஜல காரகன். தமிழக நதிகளை இணைப்பது பற்றி சேர்த்திருக்கலாம். (டாப் ப்ரியாரிட்டி)

ஜாதகத்துல ராகு கேது டப்பாஸு.( வாக்கு ,ஆயுள் ஸ்தானத்துல இருக்காய்ங்க) ரெண்டு பார்வைய காட்டுது, பேச்சை காட்டுது. கண்பார்வையற்றோர், ஊமைகளுக்காக ஒரு ஆக்ஷன் ப்ளான் அறிவிச்சிருக்கலாம்.

ராகுன்னா டாஸ்மாக். மதுவிலக்கை அறிவிச்சிருக்கலாம். தமிழகத்தில் வாழும் பிறமொழியினரின் நலனுக்காக எதையாவது யோசிச்சிருக்கலாம். இதரமதத்தவர்களுக்கான நலதிட்டங்களை அறிவிச்சிருக்கலாம். யோகா, தியானம் இத்யாதிய பாடமாக்கறதை பத்தி சொல்லியிருக்கலாம். இதை எல்லாம் செய்திருந்தா ராகு கேதுக்கு சாந்தி.

( சாரிங்கண்ணா இதோட இந்த பதிவு ஓவர். அப்பாறம் இதையெல்லாம் உருவி புது அறிக்கை வெளியிட்டுரப்போறாய்ங்க. நான் அம்பேல்)

Advertisements

25 thoughts on “திமுக தேர்தல் அறிக்கை : ஒரு ஜோதிட ஆய்வு

  maduraisaravanan said:
  March 19, 2011 at 8:40 pm

  அருமையான ஜாதக அலசல்… அது சரி அம்மா வருவது உறுதி தானே…

   S Murugesan said:
   March 20, 2011 at 5:39 am

   மதுரை சரவணன்,
   ஏன் டென்சனாகறிங்க.இது நாளைய நெஜம். ஆனால் அந்த நெஜமும் கசப்பாத்தான் இருக்கும். கூட்டணி ஆட்சியாச்சே. தாத்தா மா.ஈ.சூ,சு எல்லாம் விட்டு காலத்தை ஓட்டினாரு. அம்மா கிட்டே அதை எதிர்பார்க்கமுடியாது. (இப்பமே பார்த்திங்கல்ல கூத்தை)
   வி.கா ,ஜெ ரெண்டு பேருக்கும் சந்திர தசையோ/புக்தியோ நடக்குனு நினைக்கிறேன்.

   ரெண்டே கால் நாளைக்கொரு தாட்டி க்ளைமேக்ஸ் தேன். நல்லா பொழுது போகும்

  சாமி யார்? said:
  March 20, 2011 at 3:34 am

  எங்கள் ஊரில் 500 படுக்கைகள் கொண்ட பெரிய ஆஸ்பத்திரியை துணை முதல்வர் மற்றும் திறப்பு விழா நாயகன் ஸ்டாலின் அவர்கள் கடந்த 2009ஆம் வருடம் திறந்து வைத்தார். ஆனால் அவர் திறந்து வைத்த நேரத்தில் ஆஸ்பத்திரியினுள் கட்டில்களை தவிர வேறு எந்த உபகரணமும் இல்லை என்பதும் குறிப்பாக மின்சாரவசதியும் அந்நேரத்தில் இல்லாமல் இருந்தது என்பது வேடிக்கையான விஷயம். ஆனால் இன்று வரையில் அந்த பெரிய ஆஸ்பத்திரி காட்சிப்பொருளாக ஸ்டாலின் பெயரைதாங்கிப்பிடித்துக்கொண்டு மியூசியத்திற்கு கொண்டு செல்லும் நிலையில் உள்ளது.
  ““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““
  வணக்கம் சார். பதிவு சூப்பராக உள்ளது. தங்களிடம் கேட்காம டிசைன் பண்ணி பார்த்தேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  http://saamiyaar.blogspot.com/2011/03/blog-post_19.html

   S Murugesan said:
   March 20, 2011 at 5:37 am

   தூள் சாமியார். எப்படியும் ஒரு பெரிய ரூவா தேவைப்படும்னு நினைக்கிறேன்.

    சாமி யார்? said:
    March 20, 2011 at 9:59 am

    எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்தான். ரொம்ப நன்றி சார்.

    S Murugesan said:
    March 20, 2011 at 12:14 pm

    சாமி யார்,
    ஆசீர்வாதம் அது இதுன்னு விலக்கிவச்சுராதிங்க. நாமெல்லாம் சக மாணவர்கள்.

    குரு யாரு?

    “வெட்ட வெளியில் கொட்டிக் கிடக்கிற” ஞானம்தேன் (உபயம்: இளையராசா)

  sky said:
  March 20, 2011 at 4:34 am

  தேர்தல் அறிக்கை 2011 கதாநாயகி (கதாநாயகன்)
  http://aagaayamanithan.blogspot.com/2011/03/2011.html

   S Murugesan said:
   March 20, 2011 at 5:33 am

   ஸ்கை,
   மேற்படி வலைப்பூவுலயே பின்னூட்டம் போட்டிருக்கன் பாருங்க.

  sugumarje said:
  March 20, 2011 at 5:19 am

  //ஒரு அரசாங்கத்தோட கடமை இலவசமா தர்ரதுல்ல. சனம் தங்கள் சுயமரியாதைக்கு பங்கமில்லாத வகையில வேலை வெட்டி உத்யோகம் வியாபாரம்னு பார்த்து தங்கள் தேவைய நிறைவேத்திக்கிற சூழலை ,வாய்ப்பை உருவாக்குவதுதானு ஆருனா சொல்லுங்கப்பா//
  சங்கா ஊதினாலும் மக்களுக்கும் கேட்காது… அரசியல்வாதிகளுக்கும் கேட்காது. எதிர்கால வாழ்வுக்கான விளக்கமில்லை, திட்டமுமில்லை… சும்மா… இப்போதைக்கு வாழ்வோம், அப்புறம் சாவோம்ங்கிற நிலைதான். 😦

   S Murugesan said:
   March 20, 2011 at 5:29 am

   சுகுமார்ஜீ,
   பசிச்சவனுக்கு ஒரு மண்டலத்துக்கு இலவசமா மீன் தரேன். அதுக்குள்ளாற அவனை ட்ரெய்ன் பண்ணி மீன் பிடிக்கவைக்கிறேனு சொல்லனும்.அதான் இதயத்தால யோசிச்சு மூளையோட வேலை செய்யறவனுக்கு அடையாளம். இதெல்லாம் எங்கத்தான் போய் முடியுமோ தெரியலை.

   ஒய்.எஸ்.ஆர் முகராசிக்கு ஒர்க் அவுட் ஆச்சு. இன்னைக்கு ஆந்திர அரசாங்கமே டீஃபால்ட்டர் ஆயிருச்சு. இதே கதிதான் அங்கனயும் ( அம்மா வந்தாலும் இதே இழவுதேன்)

  veera said:
  March 20, 2011 at 7:39 am

  //பரம ஏழைகளுக்கு மாதம் தோறும் இலவசமாக 35 கிலோ அரிசி வழங்கப்படும்.
  போச்சுரா .. குடும்ப கட்டுப்பாட்டுக்கு இது ஒரு நல்ல திட்டம்//

  கவுண்டமணியோட லொள்ளு ஜாஸ்தி உங்கள்ளுக்கு 🙂

   S Murugesan said:
   March 20, 2011 at 8:47 am

   வீரா,
   இது லொள்ளு இல்லை. நாளைய நிஜம். 30 நாளும் அரிசி உணவு சாப்பிட்டு (அதுவும் உழைக்காம கிடைச்சது) ஷுகர் வந்துட்டா ஆருக்கும் பேட்டரியே வேலை செய்யாது.

   ஆட்டோமெட்டிக்கா கு.க நடந்தேறும்.

  இரா. புரட்சிமணி said:
  March 20, 2011 at 2:19 pm

  இந்த பதிவு அருமையிலும் அருமை, புதுமையிலும் புதுமை. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
  ஐயா சில கேள்விகள்,

  ௧.அம்மாவுக்கு மிதுன ராசியா , சிம்ம ராசியா?
  ௨.மிதுன ராசி என்றால் பத்தில் குரு பதவி பறிபோகும் என்பது விதி, பதவி வருமா?
  ௩.சிம்ம ரசி என்றால் எட்டில் குரு, ஒன்னும் சொல்ற மாதிரி இல்லையே, அவர்களுக்கு பதவி கிடைக்குமா?
  ௪.கோச்சாரம் ஒன்னும் செய்யாமல் திசை படி நன்மை நடக்கும் என்கிறீர்களா?

  ௫.ஐயாவுக்கு, ஒன்பதில் குரு சகல பாக்கியங்களும் கிடைக்காதா? பதவியும் சேர்த்து?

  ௬.சொந்த காசில் அதிக அரிசி உணவு சாப்பிட்டா அந்த மாதிரி பிரச்சனையை தவிர்க்கலாமா?

  உங்களுடைய பதிலுக்காக ஆவலுடன்.
  இரா. புரட்சிமணி

   S Murugesan said:
   March 20, 2011 at 5:59 pm

   புரட்சி மணி,

   தங்கள் பாராட்டுக்குரியவன் நானல்ல. ( எத்தீனி தாட்டித்தான் சொல்றது) நான் ஜஸ்ட் ஒரு மவுத் பீஸ்.

   //௧.அம்மாவுக்கு மிதுன ராசியா , சிம்ம ராசியா?//
   மிதுன லக்னம் -சிம்ம ராசி

   //௨.மிதுன ராசி என்றால் பத்தில் குரு பதவி பறிபோகும் என்பது விதி, பதவி வருமா?//
   பதவி போகனும்னா மொதல்ல வரனும்ல .. மாத்தி யோசிங்க

   //௩.சிம்ம ரசி என்றால் எட்டில் குரு, ஒன்னும் சொல்ற மாதிரி இல்லையே, அவர்களுக்கு பதவி கிடைக்குமா?//

   அவிக பெண். எட்டு என்பது மாங்கல்ய ஸ்தானம். அவிக அரசியல்ல இருக்கிறதால பதவிதான் புருசன். பதவி போனா ஆணாயிருந்தாலும் விதவைதேன். ஆக எட்டுல குரு கணவனை ஐ மீன் பதவியை கொடுக்கும். மேலும் எட்டுல குரு அரசுப்பணத்தை செலவழிக்கிற யோகத்தை தருவான்.

   //௪.கோச்சாரம் ஒன்னும் செய்யாமல் திசை படி நன்மை நடக்கும் என்கிறீர்களா?//
   வாழ்க்கைங்கற ரயில் மேற்படி ரெண்டு தண்டவாளங்கள் மேலதான் ஓடுது

   //௫.ஐயாவுக்கு, ஒன்பதில் குரு சகல பாக்கியங்களும் கிடைக்காதா? பதவியும் சேர்த்து?//
   குரு தானிருக்குமிடத்தை நசிக்க செய்வான் என்பது விதி. 9 என்பது தூர பிராந்தியத்துல உள்ள மேலிடத்தை காட்டும். சோனியா காட்டின ஃபிலிம் போதுமா? இன்னம் கொஞ்சம் வேணமா?

   //௬.சொந்த காசில் அதிக அரிசி உணவு சாப்பிட்டா அந்த மாதிரி பிரச்சனையை தவிர்க்கலாமா?//

   சொந்தகாசு எனும்போது உழைப்பும் வருகிறது .உழைப்பில் கூடுதல் சர்க்கரை எரிக்கப்பட்டுவிடுமே.

    இரா. புரட்சிமணி said:
    March 20, 2011 at 7:03 pm

    தங்களுடைய பதில்களுக்கு மிக்க நன்றி.
    குரு தானிருக்குமிடத்தை நசிக்க செய்வான் என்பது விதி என்று கூறுகிறீர்கள், பின்பு ஏன் லக்னத்தில் குரு இருந்தால் நல்லது என்கிறார்கள். (ஒருவேளை மறுபிறவி இல்லையோ? ரொம்ப நாளா இப்படி எனக்குள்ளே ஒரு சிந்தனை )மேலும் இயற்கை சுப கோள்கள் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் பலம் நன்றாக இருக்கும் என்பதில் பாதி பொய்யும் உள்ளதோ?

    அதே போல் சனி இருக்கும் இடம் நன்றாக இருக்கும், பார்க்கும் இடம் நாசம் என்பது ஒரு விதி. இப்படி இருக்க சனி ஏழில் இருந்தால் ஏன் திருமணத்தடை ஏற்படுகின்றது? லக்னத்தில் இருக்கக் கூடாதது சனி என்கிறார்களே?
    சற்று விளக்கினால் நன்றாக இருக்கும்.
    அதிகமாக கேள்விகள் கேட்பதால் தவறாக என்ன வேண்டாம்…எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான்.
    நன்றியுடன் இரா.புரட்சிமணி

    S Murugesan said:
    March 21, 2011 at 6:37 am

    //தங்களுடைய பதில்களுக்கு மிக்க நன்றி.//
    ரீடைரக்டட்

    //குரு தானிருக்குமிடத்தை நசிக்க செய்வான் என்பது விதி என்று கூறுகிறீர்கள், பின்பு ஏன் லக்னத்தில் குரு இருந்தால் நல்லது என்கிறார்கள்.//

    குரு லக்னத்தில் இருந்து ஈகோவை நசிக்க செய்து – தான் அ நான் அற்ற ஒரு நிலையில் சமூகத்தை பார்க்க உதவி வெற்றிப்பெற செய்கிறான்.

    //(ஒருவேளை மறுபிறவி இல்லையோ? ரொம்ப நாளா இப்படி எனக்குள்ளே ஒரு சிந்தனை )//
    லக்னத்துல குரு உச்சமானா (கடகம்) இப்படி ஒரு பலன் என்று நானும் படித்திருக்கிறேன்.

    //மேலும் இயற்கை சுப கோள்கள் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் பலம் நன்றாக இருக்கும் என்பதில் பாதி பொய்யும் உள்ளதோ?//

    பாஸ் ! ஃபோக்கஸ் லைட் பின்னாடி கூட இருட்டு இருக்கத்தானே செய்யுது. அப்படித்தேன் இது. இன்னைக்கு பதிவை படிங்க. எந்த ஜாதகத்துலயும் எந்த கிரகமும், எந்த பாவமும் 100 சதம் ஃப்ரூட் ஃபுல்லா இருக்காதுன்னா இருக்காது.

    //அதே போல் சனி இருக்கும் இடம் நன்றாக இருக்கும், பார்க்கும் இடம் நாசம் என்பது ஒரு விதி.//
    சிரஞ்சீவி துலா லக்னம். லக்னத்துல சனி உச்சம். அவர் மட்டும் நெல்லா இருக்காரு.அவரை நம்பி ரோட்ல இறங்கினவன்லாம் திவால் பொஞ்சாதி இளமையிலயே பாட்டி மாதிரி தான் இருந்தாய்ங்க -.லக்ன சனி ஏழை பார்ப்பாருங்கறது விதி – அவர் 3 ஐ பார்த்ததால தம்பிங்க ஷெட் – பத்தை பார்த்ததால சினி ஃபீல்டே ஷெட்.

    //இப்படி இருக்க சனி ஏழில் இருந்தால் ஏன் திருமணத்தடை ஏற்படுகின்றது?//
    அது தடை இல்லை பாஸ்.. தாமதம். ட்ரெய்ன் லைஃப் டைம் டிலேட். சனி காரகத்வம் உள்ள பெண்ணை மணக்கிறதா இருந்தா (வேலைக்காரி மாதிரி இருக்கோனும்- அல்லது தலித்) லைன் க்ளியர்.

    //லக்னத்தில் இருக்கக் கூடாதது சனி என்கிறார்களே?//
    சோம்பேறியாயிருவமில்லை.

    //அதிகமாக கேள்விகள் கேட்பதால் தவறாக என்ன வேண்டாம்…எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான்.//

    கோளாறுனு ஏன் சொல்றிங்க. ஞான வேட்கை பாஸ். நீங்க கிளறுங்க. எனக்கும் பழைய பாடம்லாம் ஞா வரும்ல

  shakthi said:
  March 20, 2011 at 2:41 pm

  வணக்கம் சார் ,
  அம்மையாருதான் இந்த முறை வெற்றி பெருவாங்கனு சொல்லிருந்தின்களே ,அது கண்டிப்பா நடக்குமா சார் ?ஒரு சந்தேகம், கலைஞர் ஜாதகத்துல ராகு சரியில்லன்னு சொல்லி டாஸ்மாக் மூடணும்னு பரிகாரம் சொல்லிரிக்குரிங்க ,அரசாங்கமே டாஸ்மாக் நம்பிதானே நடக்குது ,இதுக்கு தாத்தாவ நீங்க வீட்டுக்கே போக சொல்லிருக்கலாம் .

   S Murugesan said:
   March 20, 2011 at 5:52 pm

   ஷக்தி,
   சிவமில்லையே சக்தியில்லை. சக்தியில்லையேல் சிவமில்லை. இருவரும் இருந்தால் தோல்வி என்பது இல்லவே இல்லை.( ஜெ கூட்டணி அரசின் முதல்வராவதை சொல்கிறேன்)

   தாத்தா மட்டும் டாஸ்மாக்கை மூடியிருந்தா அது அவரை வெற்றியிலிருந்து வெட்டி விடற ராகு கேதுவையே லைன்ல இருந்து வெட்டி விட்டிருக்கும்.

   ஃபைனான்ஸ் செக்ரட்ரி மாதிரி யோசிக்காதிங்க. முறையற்ற வருவாய்க்கான ஒரு கதவு மூடினா முறையான வருவாய்க்கு 9 கதவு திறக்கும்.

   ராத்திரி 9 மணிக்கு மேல செல்லை ஆன்லயே வைக்கமுடியலிங்கண்ணா.

  எடப்பாடி சிவம் said:
  March 20, 2011 at 5:12 pm

  ( சாரிங்கண்ணா இதோட இந்த பதிவு ஓவர். அப்பாறம் இதையெல்லாம் உருவி புது அறிக்கை வெளியிட்டுரப்போறாய்ங்க. நான் அம்பேல்)

  உண்மைதான் ஐயா ,,, இலவசம் வாங்கியே நம்மாளுங்க பாதி நாசமா போயிட்டாங்க ,,, மீதியும் இந்த தேர்தல்லே முடிஞ்சிடுவாங்களோன்னு பயந்துட்டிருக்கும்போது ,,, புதுசா புதுசா ஐடியா தரீகளே ,,,

   S Murugesan said:
   March 20, 2011 at 5:46 pm

   சிவம் ,
   இலவசம் பற்றிய என் பார்வையை ஏற்கெனவே சொல்லிட்டன். மீன் பிடிக்க கத்துக்கறவரை ஒரு மீனை இலவசமா தரலாம். இவிக வாழ் நாள் எல்லாம் தரோங்கறாய்ங்களே

  Vinoth said:
  March 21, 2011 at 5:35 am

  ராகுவை பற்றி
  //..ராகுன்னா டாஸ்மாக். மதுவிலக்கை அறிவிச்சிருக்கலாம். தமிழகத்தில் வாழும் பிறமொழியினரின் நலனுக்காக எதையாவது யோசிச்சிருக்கலாம். இதரமதத்தவர்களுக்கான நலதிட்டங்களை அறிவிச்சிருக்கலாம். யோகா, தியானம் இத்யாதிய பாடமாக்கறதை பத்தி சொல்லியிருக்கலாம். இதை எல்லாம் செய்திருந்தா ராகு கேதுக்கு சாந்தி…//

  பிற மொழியான் இந்தியை ஒழிப்போம் சொல்லி தான ஆட்சியை பிடிச்சாங்க…
  ராகு அவர் என்ன பண்ணிச்சு?

  பிறமதம்ன.. முஸ்லீம்களுக்கு ஒதுக்கிடு சட்டம் வேனா சொல்லாம்..

   S Murugesan said:
   March 21, 2011 at 6:29 am

   வினோத் சார்,
   இந்திங்கற ராகு கீழ வராது.அது பாதி தேவ (?) பாசையாச்சே .அதனால குரு. அப்படியும் பல தசாப்தங்கள் வட இந்திய அரசியல்ல இருந்து ஐ மீன் தேசீய அரசியல்ல இருந்து விலக்கி தானே (வெட்டித்தானே) வச்சிருந்தது. இப்பயும் ஆப்புத்தானே. அதிகம் கலைக்கப்பட்டது கலைஞரோட ஆட்சித்தான்.

  Vinoth said:
  March 21, 2011 at 5:37 am

  பயர் பாக்ஸ் எக்டன்சன் உங்களுக்கு நல்ல ஒர்க் பண்ணுதா தல…

   S Murugesan said:
   March 21, 2011 at 6:25 am

   வினோத் சார்,
   சூப்பரா ஒர்க் அவுட் ஆகுது. மிக்க நன்றி. ஆல்ட் எஃப் 8 மற்றும் எஃப் 9 ஃபார்முலா பச்சக்குனு ஒட்டிகிச்சி

  NRITAMIL said:
  March 23, 2011 at 6:24 am

  அப்படியே நம்ம தாத்தாவுக்கு சிறைவாசம் கிடைக்குமா?
  ராசா என்ன ஆவாரு?? கனிமொழி, தயாழுஅம்மாள், அழகிரி, ஸ்டாலின் etc etc எல்லாம் உள்ளே போவாங்கலா??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s