உங்கள் ராசிப்படி உங்கள் மைனஸ் பாய்ண்ட்

Posted on

“உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்”னு கண்ணதாசன் எழுதி வச்சாரு. ஆனால் அவர் மட்டும் தன்னை அறிஞ்சுக்காமயே கடேசி காலத்துல அவாளோட ஊதுகுழலா மாறி போய் சேர்ந்துட்டாரு. நம்மை அறியறதுன்னா என்ன? நம்ம மைனஸ் பாய்ண்ட் என்ன? ப்ளஸ் பாய்ண்ட் என்ன? இந்த ரெண்டு டேட்டா இருந்தா மோதலாம்.

உலகம் எப்படின்னா உங்களுக்கு முன்னே உங்க மைனஸ் பாய்ண்ட் என்னனு கேட்ச் பண்ணி ஆப்பு வச்சிருது. உங்க ப்ளஸ் பாய்ண்ட் என்னன்னு அவிகளுக்கும் தெரியமாட்டேங்குது.. உங்களுக்கும் தெரியமாட்டேங்குது.

இதுதான் அசலான பிரச்சினை. சரி ஓஞ்சு போவட்டும் சமுதாயம் புரிஞ்சிக்காட்டா என்ன நாம அதை புரிஞ்சுக்கலாம்னு இறங்கினா ” ஈகோ” ஒரு பெருந்தடையாயிருது.

மனிதனுக்கு எது சொல்லப்படுகிறதோ அதை கேட்பதில்லை. அவன் எதை கேட்க விரும்புகிறானோ அதுவா அதை புரிஞ்சிக்கிறான். இதுக்கு காரணம் ஈகோ.

சிடி ட்ரைவ்ல ஏற்கெனவே ஒரு சிடி இருக்கிறச்ச இன்னொரு சி.டி.யை எப்படி போட முடியாதோ அகந்தையால் நிரம்பிய மனம் புதிய விஷயம் எதையும் கிரகிச்சுக்கறதில்லை.

(அஸ்கு புஸ்கு நம்ம கம்ப்யூட்டர்ல ரெண்டு சிடி ட்ரைவ் இருக்கேனு சொல்றது ஆருப்பா? இதெல்லாம் கம்ப்யூட்டருக்கு ஓகே .மூளையில இப்படியெல்லாம் அஞ்சறை டப்பா மாதிரி மெயிண்டெய்ன் பண்ணா சீக்கிரம் மன நல மருத்துவரை பார்க்கவேண்டி வந்துரும்)

சரிங்கண்ணா சமுதாயத்தை நான் புரிஞ்சிக்காட்டா போவட்டும் என்னை சமுதாயம் புரிஞ்சிக்க என்ன பண்ணனும்?

சமுதாயத்தோட ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணனும். “அந்த பையன் நல்ல மாறிங்க. (மொள்ளமாறிங்க இல்லை) டீ ஸ்ட்ராங்கா இல்லின்னா கூட பரவால்லை அங்கிள். ரெம்ப ஸ்ட் ராங்கா குடிச்சா தலைய சுத்துதுனு சொல்லும்” என்று உங்க ஏரியா டீக்கடைக்காரர் கூட சொல்லனும்.

இதெல்லாம் ம்யூச்சுவல். அந்த காலத்துல ராசா பண்ற தப்பை அவாள் கண்டுக்க மாட்டா. அவாள் பண்ற தப்பை ராசா கண்டுக்க மாட்டாரு.

நீங்க சமுதாயத்தோட ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணா மேட்டர் ஓவர். அதே நேரம் அதை நீங்க கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. அப்ப அதுவும் உங்களை கேள்வி கேட்காது. மவுனத்தை கொடுத்து மவுனத்தை வாங்கறது. ( அடங்கொய்யால என்னா மானங்கெட்ட பொயப்புடாங்கறிங்களா.. அதுசரி .. இங்கன சூப்பர் சக்ஸஸ் ஆகனும்னா மானம்,ஈனம்,சூடு,சொரணை அல்லாத்தையும் மூட்டை கட்டி வைக்கோணும்.

உங்களை நீங்க அறிஞ்சிக்கிட்டா உங்க வெற்றி உறுதி அல்லது தோல்வி உறுதின்னு தெரிஞ்சிக்கிட்டா சமுதாயத்தோட சச்சரவே வராது.

பரஸ்பரம் தங்கள் கொள்கைகள் மேல சந்தேகம் உள்ளவுக தான் வாதாடிக்கிட்டு போராடிக்கிட்டு இருப்பாய்ங்க.

எவ்ரி மேன் ஈஸ் என் ஐலண்ட் (தீவு) ங்கறாய்ங்க. அப்பாறம் பார்த்தா மேன் ஈஸ் எ சோஷியல் அனிமல்ங்கறாய்ங்க( சமூக பிராணி) .

இன்னாபா படா பேஜாஆஆஆஆஆஆஆரா போச்சுனு அலுத்துக்காதிங்க. சூட்சுமம் என்னடான்னா இவனோட/இவளோட தேவைகள் நிறைவேர்ர வரை சோஷியல் அனிமல் ,தேவைகள் நிறைவேறிட்டா ஐலண்டு (தீவு)

நீங்க இந்த சமுதாயத்தை டீல் பண்ணியே ஆகனும். உங்க தேவைகள் நிறைவேறனுமே. உங்க வெற்றியே சமுதாயத்தை நீங்க எப்படி புரிஞ்சிக்கிறிங்க? எந்த அளவுக்கு புரிஞ்சிக்கிறிங்க. உங்களை அதுக்கு எந்தளவு புரியவைக்கிறிங்கங்கறதை பொருத்த விஷயம்.

சமுதாயத்தோட ரேஞ்சுக்கு நீங்க இறங்கிட்டா தற்காலிகமா வெற்றி கிடைச்சாலும் நாளடைவுல குற்ற உணர்ச்சி வந்துரும்.

அதுக்காக உங்க ரேஞ்சுக்கு சமுதாயத்தை உயர்த்தறேனு இறங்கிட்டாலும் நாஸ்திதான். ( ஆனா நாட்டுக்கு லாபம்தேன்)

பின்னே இன்னாதாம்பா பண்ணச்சொல்றேனு கேப்பிக . சொல்றேன்.

கொஞ்சம் போல சமுதாய ரேஞ்சுக்கு இறங்கி வந்து அதை உங்க ரேஞ்சுக்கு தூக்கப்பார்க்கனும். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ் மெண்ட்.

எனக்கும் ஆசை தேன். பலான ஆசைல்லாம் இல்லை பாஸ்..

எல்.எம்.சி காடால பனியன்,வயித்துக்கு ரெண்டு பக்கம் ஜேபி.அதுல பீடி கட்டு தீப்பெட்டி. நாலு முழம் வேட்டி . காலை 6 மணிக்கு எந்திரிச்சு வவுறு நிறைய மண் சட்டியில ஆக்கின , கூழோ கஞ்சியோ குடிச்சுட்டு கார்ப்பெண்டரிங்கோ,பெயிண்டிங்கோ ஏதோ ஒரு இழவு ( விவசாயம் ஈஸ் மை பெஸ்ட் சாய்ஸ்) செய்து உடம்பு வேர்வையில அப்படியே குளிக்கனும்.

மதியம் கம்போ,கேழ்வரகோ,சோளமோ வரகரிசியோ தின்னுட்டு அரைமணி தீர்ப்பாட்டா வெத்தலை பாக்கு போட்டு சல்லுனு ஒரு பூபால் பீடிய இழுத்துட்டு ரெஸ்ட். மறுபடி இருட்டறவரை வேலை வெட்டி.

வீட்டுக்கு வந்து குளிச்சுட்டு பட்டை போட்டுக்கிட்டு காவி வேட்டி, எதுனா மந்திரம் பொறிச்ச மேல் துண்டு போட்டுக்கிட்டு மரத்தடில உட்கார்ந்து சனத்துக்கு இலவசமா சோசியம் சொல்லனும். இது என்னோட டார்கெட். ஆனால் இன்னைக்கே செய்துட்டா சாமிக்கு ஸ்க்ரு லூஸாயிருச்சும்பாய்ங்க.

அதனால என்ன பண்ணேன்னா இருக்கிற சட்டையில சுமாரா நாலு சட்டை, நாலு பேண்ட் மட்டும் எடுத்து வச்சுக்கிட்டு மத்ததையெல்லாம் டிஸ்போஸ் பண்ணிர சொல்லியிருக்கேன். எல்.எம்.சி காடாவுல ரெண்டு ஜிப்பா தைக்க சொல்லியிருக்கேன். கைய லூசா விட்டா க்ளாஸ். முக்காகை மடிச்சா மாஸ். டூ இன் ஒன்.

ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ் மெண்ட். புரிஞ்சதா சூட்சுமம்..

சரிங்கண்ணா நீங்க ஏதோ உங்க ராசிக்கான மைனஸ் பாய்ண்ட்ஸை தெரிஞ்சுக்க தெரியாத்தனமா இந்த பக்கம் வந்திங்க. மேட்டருக்கு வந்துர்ரன்.

1.மேஷம்:
அவசரம் – தலைக்கு மிஞ்சின வேலைகள்ள முன்னபின்ன ரோசிக்காம இறங்கிர்ரது. அப்பாறம் ஆரு வந்து லிஃப்ட் பண்ணுவாய்ங்கனு பரிதாபமா வெய்ட் பண்றது.

2.ரிஷபம்:
தன் குடும்பம், பணமே குறியா இருந்து பணத்துக்காக எல்லாத்தையும் இழந்து கடைசியில அந்த பணத்தையும் இழந்துர்ரது. காரணம் கேட்டா கதை சொல்றது.

3.மிதுனம்:
அதீதமான செக்ஸ் அனுபவங்களாலயோ அ செக்ஸ் மீதான ஏக்கத்தாலயோ இளமைக்காலத்துல ஒரு ரேஞ்சுக்குமேல ரோசிக்க முடியாம போயிர்ரது.

4.கடகம்:
எதுலயும் கன்டின்யுட்டி இல்லாம விட்டு விட்டு தொடர்ரது. வீடொ வீடோனு பரபரக்கிறது. குழந்தைகளை அதீதமா கண்ட்ரோல் பண்ணி உருப்படாம பண்ணிர்ரது.

5.சிம்மம்:
சாவு வீட்ல பிணமா இருக்கனும்,கண்ணால ஊட்ல மாப்பிள்ளையா இருக்கனும்.அதுக்காக என்னவேணா பண்ணலாங்கற மென்டாலிட்டி. நாமிருவர் நமக்கொருவர்.

6.கன்னி:
வில்லங்கம் முன்னாடி பிறந்து பின்னாடி இவிக பிறந்த கணக்கா சுமுகம்ங்கற பாவத்தே இல்லாம லொள்ளு பண்றது.

7.துலா:
கையில காலணா வச்சுக்கிட்டு ஒன்னே முக்காலணாவுக்கு பட்ஜெட் போடறது. ஆட்டை தூக்கிமாட்டுல மாட்டை தூக்கி ஆட்டுலனு புரட்டிக்கிட்டே இருக்கிறது.

8. விருச்சிகம்:
எதை செய்தா ரெப்புடேஷன் ஃபணாலாகுமோ அதையே செய்யறது. சதா சர்வ காலம் அதிருப்தியாளராவே இருக்கிறது.

9.தனுசு:
ஆண்டவன் கொடுத்ததை அனுபவிக்காம ” வச்சு ” மோசம் போறது. எப்பப்பாரு ஃப்யூச்சரை பாருன்னுட்டு நிகழ்காலத்தை சிக்கலாக்கிக்கறது.

10.மகரம்:
என்ன செய்யறோம்? ஏன் செய்யறோம்? யாருக்காக செய்யறோம்? இதன் பலன் யாருக்கு போகும்னு கூட ரோசிக்காம கருமமே கண்ணா இருக்கிறது.

11.கும்பம்:
எந்த வேலைன்னாலும் ” எனக்கென்ன லாபம்” னு ரோசிக்கிறது. அதுவும் உடனடியா எதிர்பார்க்கிறது.

12.மீனம்:
எந்த பந்திலயும் கடைசி இலை யாருதுன்னா மீனராசிக்காரவுகளுதுதான். பத்து ரூபா கைக்கு வர்ரதுக்கு முந்தியே ஆயிரம் ரூபாவுக்கு செலவை இழுத்துவிட்டுக்கறது. இதுல கோவில்,குளம்,பூசை ,புனஸ்காரம்னு டைவர்ட் ஆயிர்ரது.

Advertisements

25 thoughts on “உங்கள் ராசிப்படி உங்கள் மைனஸ் பாய்ண்ட்

  Vinoth said:
  March 19, 2011 at 4:36 am

  இன்னம் கொஞ்சம் டீடெய்லா போடுங்க.. மேலும்… இந்த வீக்னச சால்வ் பண்ண என்ன பண்ணலாம்னு சொல்லுங்க…

   S Murugesan said:
   March 19, 2011 at 5:36 am

   வாங்க வினோத்,
   நிச்சயமா செய்துருவம். உங்களை போன்றவர்களுடைய சங்கல்ப்ப பலம் தான் என்னை ஆப்பரேட் பண்ணுது.

  veera said:
  March 19, 2011 at 6:26 am

  முருகேசன் சார், இப்ப ராசியும் லக்னமும் உங்களுக்கு இருக்கற மாதிரி 2 /12 ஆ இருக்கறது ப்ராப்லம்தான. என்ன உங்களுக்கு கடகமும் சிம்மமும் அதனால கொஞ்சம் ஓகே இல்லியா?

   S Murugesan said:
   March 19, 2011 at 9:03 am

   வீரா அவர்களே,
   கொஞ்சம் ஓகேன்னு சொன்னால் ரஜினி ஒரு நடிகர்னு சொன்னாப்ல ஆயிரும். பரிவர்த்தனமுங்கோ.
   சூரியனோட வீட்ல சந்திரன், சந்திரனோட வீட்ல சூரியன். சூரியன் – அறிவு ,சந்திரன் உணர்ச்சிகள். அதனாலதான் உணர்வுமயமான விஷயங்களை கூட அறிவுப்பூர்வமா ரோசிக்கமுடியுது. அறிவுப்பூர்வமான விஷயங்களை கூட உணர்ச்சி கூட்டி சொல்லமுடியுது.

    veera said:
    March 19, 2011 at 11:43 am

    ஹா ஹா. உங்களுக்கு சூரியனும் குருவோட லக்னதுல இருக்கறத மறந்துட்டேன். சாரி.

    S Murugesan said:
    March 19, 2011 at 12:34 pm

    வீரா,
    நான் சாரி எல்லாம் கட்டறதில்லை. ( நமக்குள்ள எதுக்குங்க இதெல்லாம் ) உங்க ஆர்வம் அக்கறைதான் முக்கியம் அவுட் புட் எக்கேடு கெட்டா என்ன?

    இன்னைக்கில்லை நாளைக்கு பர்ஃபெக்டாயிருது

  வினோத்... said:
  March 19, 2011 at 8:42 am

  பிளாகில் எழுதுவது எப்படின்னு படிக்க போறேன்..

  நன்றி தல..
  http://vinothpakkangal.blogspot.com/

   S Murugesan said:
   March 19, 2011 at 9:00 am

   Vinoth Sir,
   Nothing doing. You are writing. I am inviting

  PERUMALSHIVAN.S said:
  March 19, 2011 at 12:10 pm

  minus point pathivu photta maathiri plus pointum phodunga – G
  ennum rendu line sherththu ezhuthunga .

  murugesan sir ,

  phothuva unga life eappadi ?
  santhosama nimmathiya vasathiyodava ?
  ellai kastamum thunbangaloduva?
  eathukku khetkaranna manasukkulla athigama thumbamum enbamum anubavikkiravanthaan ungalappola uyirin ulagin adivherappidichi ezhuthamudiyum .

  thanks to you .

   S Murugesan said:
   March 19, 2011 at 12:46 pm

   பெருமாள் சிவன்,
   என் லேப்ல நான் தான் மொதல் எலி. விரைவில் என் வாழ்க்கை மீதான கிரகங்களின் பாதிப்பை பகிர்ந்துகொள்கிறேன். ( எப்படியோ சொந்த கதைய சொல்ல ஒரு வாய்ப்பு – 43 வயசுல இது இன்னாமாதிரி சான்ஸு -அட்றா சக்கை)

   ஆங்கில லிபியில் கமெண்ட் போடுவதை தவிர்த்துவிடுங்கள். ஸ்பர்ம் கார்ட் உங்க கமெண்டை ஸ்பம்மாக்கிருது. வேணம்னா பக்கா இங்கிலீஷ்லயே கமெண்ட் போடுங்க.

  PERUMALSHIVAN.S said:
  March 19, 2011 at 12:15 pm

  nandri .G

   S Murugesan said:
   March 19, 2011 at 12:32 pm

   வாங்க பெருமாள் சிவன்,, இது ச்சொம்மா சேம்பிள் பேக் மாதிரி.

  மணி said:
  March 19, 2011 at 12:15 pm

  நல்ல பதிவு அய்யா, கொஞ்சன் டீட்டெய்லூ கொடுக்கலாமே
  அதிலும் என் ராசி லக்கினம் 2மே கன்னி யானதால் ஒரே கலக்குது போங்க.. எப்பவுமே பிரச்சினை தானோ?

   S Murugesan said:
   March 19, 2011 at 12:27 pm

   மணி அவர்களே ,
   துரதிர்ஷ்ட வசமாக உங்க கேள்விக்கான பதில் “ஆமாம்”. சீக்கிரமே டீட்டெய்ல்டா வருவம்ல.

  மணி said:
  March 19, 2011 at 12:34 pm

  ரெம்ப நல்லது. நாம என்ன செய்ய முடியும் நடக்கட்டும் . ஒரு சந்தேகம் சோதிட முறைல சாதகம்(கணினில) கணிக்கும் போது lahiri பாக்குறதா இல்லை raman பாக்குறதா 2 முறையிலும் சின்ன சின்ன மாற்றம் இருக்கே எது உங்கள் பார்வையில் சிறந்தது.

   S Murugesan said:
   March 19, 2011 at 12:41 pm

   மணி சார்,
   என் ப்ரிஃபரன்ஸ் லஹரி.

    மணி said:
    March 19, 2011 at 12:44 pm

    ஓ ரெம்ப நல்லது அய்யா. ரெம்ப விரைவாக பதில் அளிக்கிறீங்க நிறைய சந்தோசம் நன்றி.

  கோதண்டராம் said:
  March 19, 2011 at 12:54 pm

  ஏண்டா அம்பி. தெரியாமத்தான் கேக்கறேன். சம்மந்தம் இல்லாத எடத்துல இந்த கேள்விய வைக்கேன்னு கோச்சுக்காதடா அம்பி. இந்த எலக்சன்ல கலைஞர் போயிருவாருல்லா? .அதாவது இந்த ஏலக்சனோட கலைஞர் ஆத்துக்கு போயிருவாருல்லாடா? ஒன்னோட பழைய பதிவுகளை படிச்சி மனசுல ஏத்திருக்கேண்டா. விசயகாந்து தம்பி திடீர்னு மூணாம் அணி அமைக்க திட்டம் போட்டுருக்கால்னு கேள்விப்பட்ட ஒடனே நேக்கு மயக்கம் வர்ற மாதிரி ஆயட்டுடா. பெறகு கந்த சஷ்டி கவசம் படிக்கிறமாதிரி நீ சொன்ன “ஜெ.தலைமையில்….” அத படிச்சி மனச ரிலாக்ஸ் பண்ணிருவேண்டா. முந்தா நேத்து மதிமுக காரங்க ஜெ.பொம்மனாட்டியோட உருவ பொம்மைய எரிச்ச ஒடனே மறுபடியும் பயமாயிருச்சுடா. நீ ஏற்கனவே அந்த பொம்மனாட்டிட்ட சுண்டல் வாங்கிருக்கேன்னு சொல்லிருக்கே இல்லியோ. எங்களுக்கு அல்வா கில்வா கொடுத்துராதேடா. கலைஞர் வேற தேர்தல் கதானாயகின்னு என்னத்தையோ சொல்லி வயித்துல புளிய கரைக்கிறாள். ஒன்னத்தான் பகவான் மாதிரி நம்பிருக்கொம்டா.

   S Murugesan said:
   March 19, 2011 at 4:56 pm

   கோதண்டராம்,
   நம்பினோர் கெடுவதில்லை . இது என் அனுபவத்தின் தீர்ப்பு. ( நம்பறதுன்னா என்னையில்லை.. இயற்கையை இயற்கையில் ஒரு அங்கமான கிரகங்களை.)

   ஜெ,வி.காந்த் ரெண்டு பேருக்கும் சந்திர தசையோ/புக்தியோ நடக்கிறதா ஞா. அதனால ரெண்டு நாளுக்கொரு க்ளைமேக்ஸ் வரும். கண்டுக்கிடாதிங்க.

   ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்

  sugumarje said:
  March 19, 2011 at 1:22 pm

  சூப்பரு 🙂

   S Murugesan said:
   March 19, 2011 at 4:53 pm

   சுகுமார் ஜி, நன்றி.

  balajikannan said:
  March 20, 2011 at 5:56 am

  //ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்/////////////
  முருகேசு இது மட்டும் நடந்துச்சுன்னா உங்களுக்கு தமிழ்நாட்டுல கோயில் கட்டிபுடுவம்ல….

   S Murugesan said:
   March 20, 2011 at 8:50 am

   பாலாஜி கண்ணன்,
   நான் ஆத்தாளையே ” நாலு சுவத்துக்கு மத்தியில சிறையிருந்து சாதிச்சதென்னா.. நாலு பார்ப்பானோட வவுத்த ரொப்பறதை தவிர.

   என்னோட வா.. என் நாக்குல நில்லு. தாளி ஒவ்வொரு குடிசையிலும் உன்னை அன்னபூர்ணேஸ்வரியா பிரதிஷ்டை பண்றேன்”னு கலாய்ச்சவன்.

   என்க்கெதுக்கு பாஸ் கோவில் எல்லாம். “யப்பா சோசியத்துலயும் மேட்டர் கீதுரா சாமி.. என்ன ஏதுனு விஜாரிக்க ஆரம்பிச்சா போதுங்கோ

  RV RAMANAN said:
  March 21, 2011 at 1:35 pm

  anbulla murugesan sir

  endha oru adippadai illusion indha maadhiri oru weak ness aa maarudhunnu sonna ubhayogamaa irukkum sir.

  warm regards
  ramanan

   S Murugesan said:
   March 21, 2011 at 1:50 pm

   ஆர்.வி.ரமணன்,
   ராசிப்படி மைனஸ் பாய்ண்டுனு சொல்லியிருக்கேன். இது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுனு கேட்டிருக்கிங்க. ஓகே. இன்னொரு பார்ட்டி (வினோத்) இதை எல்லாம் ஒவர் கம் பண்ண என்ன செய்யனும்னு கேட்டிருக்காரு. சொல்றேன். வெய்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s