2012 பிப்.8 முதல் 24 வ. இலங்கையில் தமிழர் ஆட்சி?

Posted on

1948+64 வருடங்கள் முடிந்தால் இலங்கையில் அதுவரை அடிமைப்பட்டு கிடந்தவர்கள் அதை ஆளும் வாய்ப்பை பெறலாம் என்பது என் ப்ரிலிமினரி ப்ரிடிக்சன். திடீர்னு என்ன இந்த மேட்டர்ல அக்கறைனு கேப்பிக.

என்னதான் இன்னொரு மானிலத்துல பிறந்து -அங்கனயே வளர்ந்தாலும் இனம் -மொழி இதெல்லாம் தமிழ் தானே. என்னதான் விட்டேத்தியா சோசியத்தை பத்தி பீசிக்கிட்டிருந்தாலும் உள்ளூற ஒரு ஃபீலிங் இருக்குங்கண்ணா.

இதுல வேற ஆரோ ஒரு சோசியர் 2011க்குள்ள இலங்கை அழியும்னு சொன்னதா தகவல்.இந்த கான்செப்ட்ல பதிவுலகத்துல நிறைய கச முசா நடக்கிறதை கேள்விப்பட்டு சரி நம்ம பங்குங்கு நாமும் கொஞ்சம் போல குழப்பி வைப்போமேன்னு தான் இந்த பதிவு. இன்னொரு நண்பர் ஏற்கெனவே இந்த சப்ஜெக்டுக்கு கர்சீஃப் போட்டு வச்சிருக்காரு.அவருக்காகவும் தான் இந்த பதிவு.

2011 க்குள் இலங்கை அழியுமா?ங்கற கேள்விக்கு ஆமானு பதில் தந்திருக்காரு ஒரு ஜோதிடர். இதுக்கு அடிப்படை என்னன்னா நேமாலஜிய கூப்புடறாரு. இந்த நேமாலஜிங்கறதே ஒரு சந்தேகாஸ்பதமான மேட்டர். இருந்தாலும் ஒரு சில பாய்ண்ட்ஸ் அச்சு அசலா ஒர்க் அவுட் ஆகும். அதெல்லாம் என்னனு சொல்லவே மாட்டேன். நீங்க பாட்டுக்கு சனத்தை பேதியாக்க ஆரம்பிச்சுருவிங்க.

லைஃப்ல நாலஞ்சு கான்செப்ட் , நாலஞ்சு ஐட்டம் , நாலஞ்சு ஃபேக்டர்ஸ் வேலை செய்தாதான் ஒரு சம்பவமோ ,மாற்றமோ நடக்கும். நான் சொம்மா பஞ்ச் டயலாக் மாதிரி க்ரஹம்,க்ருஹம், மந்த்ரம்,யந்த்ரம் எல்லாத்துக்கு முந்தி தெய்வானுக்ரஹம் இருக்கனும்னு சொல்றதுண்டு.

ஆனால் இன்னம் நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது வமிச விருட்சம், ஆவிகள், எட்ஸெட்ரா எட்ஸெட்ரா. அதையெல்லாம் சொன்னா பிற்போக்குவாதினு முத்திரை போட்டுருவாய்ங்க. இதுக்கு கூட நான் தயார் .ஆனால் ஓரளவு க்ரெடியபிலிட்டி இருக்கிற நான் அதையெல்லாம் அங்கீகரிச்சா டுபுக்குங்களுக்கு லைன் க்ளியர் பண்ண மாதிரி ஆயிரும். அதனால நான் அம்பேல்

மொத்தத்துல என்ன சொல்லவரேன்னா இங்க எல்லாமே நெஜம். ஆனால் கொஞ்சம் நெஜம். இதுல வைரஸ் மாதிரி கலந்திருக்கிற பொய்யை நீக்கி பார்க்க பவர் ஃபுல் ஆன்டி வைரஸ் வேணம் அதான் பெரியார். இந்த பவர் ஃபுல் ஆன்டி வைரஸ் சில சமயம் மிக தேவையான ஃபைல்ஸை கூட தூக்கிப்போட்டுரும். உ.ம் கடவுள்.அது அப்படி தூக்கி போட்டுராம இருக்கத்தேன் ஓஷோ.

நேமாலஜி பொய்னு நான் வாதாட வரலை. அதுலயும் நெஜம் இருக்கு. கொஞ்சமா இருக்கு. இன்னம் எத்தனையோ ஃபேக்டர்ஸ் இருக்கே. உதாரணமா நியூமராலஜி.

சாதாரணமா நான் இந்த நியூமராலஜிக்கு பெருசா முக்கியத்துவம் தர்ரதில்லை. என் அவதானிப்பு என்னன்னா டேட் ஆஃப் பர்த்ல உள்ள எண்களுக்குரிய கிரகங்கள் ஜாதகத்துல லீடிங் ப்ளேனட்ஸா இருந்தாலன்றி நியூமராலஜி நாலு காலையும் தூக்கிருது.

இதுலயும் நம்ம கொள்கையில சின்னதா மாற்றம் வந்துக்கிட்டிருக்கு. இதுக்கும் காரணம் இல்லாம இல்லை. சமீபத்துல கூகுல் ஸ்பூர்த்தி க்ரூப் காரவுக ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் டெஸ்க் ஒன்னு வச்சாய்ங்க.

ஐ மீன் மன அழுத்தத்துல உள்ளவுகளுக்கு கவுன்சிலிங் தர்ரது. அந்த டெஸ்க்ல என்னை சைன்டிஃபிக் அஸ்ட்ராலஜர்னு போட்டுவச்சாய்ங்க. நிறைய பேரோட மன அழுத்தத்துக்கு ஜோசியர்களே காரணமா இருந்திருக்காய்ங்க. அதனால நம்மையும் அந்த க்ரூப்ல போட்டாய்ங்க.

சனம் தினசரி இரவு 9 டு 10 ஃபோன் போடுவாய்ங்க. அவிகளுக்கு அவிக மன அழுத்தத்தை குறைக்க அஸ்ட்ராலஜிக்கலா சில சஜஷன்ஸ் தரனும். இதான் ப்ரோக்ராம். நான் ஏதோ நாலஞ்சு பேரு நாலஞ்சு நாளைக்கு கலாய்ப்பாங்க ..அதையும் பார்த்துருவம்னு கோதாவுல இறங்கினேன். ஆனா சனம் வெற்றிகரமான நூறாவது நாளைக்கப்பாறமும் பின்னி எடுக்கிறாய்ங்க.

க்ளையண்ட் ஃபோன்லைன்ல இருக்கிறச்ச ஜாதகம் போட்டு சொல்றதுன்னா அதுக்கு ராமானுஜமோ, சகுந்தலா தேவியோ வரனும். ஆல்ட்டர்னேட்டிவா நியூமராலஜிய வச்சுக்கிட்டேன். ஃபோன் வந்ததும் டேட் ஆஃப் பர்த் சொல்லுங்க. “உங்களுக்கு ………….தொடர்பா மன அழுத்தம் ஏற்பட்டிருக்கா?” ன்னு கேள்வி கேட்கிறது . அவிக ஆமாங்கன்னுட்டு கொட்ட ஆரம்பிச்சுருவாய்ங்க.

நூத்துல 60 கேஸ் சூப்பர் சக்ஸஸ். மத்ததும் சக்ஸஸ் தேன். என்ன ஒரு லொள்ளுன்னா அப்பாறம் காம்பவுண்ட் நெம்பரை வச்சு கேட்கிறது, அதுவும் ஒத்துவரலின்னா நேம் நெம்பரை கேல்குலேட் பண்ணி மேனேஜ் பண்றதுன்னு ஓடுது.ஆக நியூமராலஜி ஒன்னும் வத்தமாடு கிடையாது.

மகா சனங்களோட நான் எங்கே டிஃபர் ஆகிறேன்னா நியூமராலஜிக்காரர் அதையே பிடிச்சு கட்டி அழுவாரு, நேமாலஜி காரரு அதையே பிடிச்சு அழுவாரு. ராசிச்சக்கரம் பார்க்கிறவுக அதையே கட்டி அழுவாய்ங்க. நான் என்ன சொல்லவரேன்னா அட ஆன்மீகம்ங்கற மொட்டை மாடிக்கு ஏறி வானத்தை பாருங்கனு சொல்லலை. அதான் கச்சா முச்சான்னு சன்னல் ,வென்டிலேட்டர் எல்லாம் இருக்குல்லா அல்லாத்தையும் தான் திறந்து பாருங்க. எட்டின வரையில் எதிர்காலம் என்ற வானத்தை பாருங்க. அப்பாறம் உங்க ரிசல்ட்டை சொல்லுங்க.

சரி மொக்கை ஓவராயிருச்சுனு நினைக்கிறேன். மேட்டருக்கு வரேன்.2011க்குள்ள இலங்கை அழியுமா இல்லையான்னு சொல்ற நிலைல நானில்லை. ( நம்முது கடகலக்னமுங்கண்ணா – இறைவனுக்கும் இயற்கைக்கும் நெருக்கமா இருக்கக்கூடிய ராசி கடகம்) மதியம் வேற தூங்கலிங்கண்ணா. பேஸ்தடிச்சாப்ல இருக்கு.

இன்னொரு சென்டிமெண்ட் என்னடான்னா இதுக்கு முந்தியே இந்த மேட்டர்ல சில பாராக்கள் அடிச்சு வச்சிருந்தேன். அதை என்ன பேர்ல சேவ் பண்ணேன்னு ஞா இல்லை. முக்கியமா இலங்கைக்கு சுதந்திரம் கிடைச்ச நேரம் கிடைக்கலிங்கண்ணா ஆருனா கொடுத்தா ஜாதகம் போட்டு பார்த்துருவம்ல..

இப்பமே ஓவரா போயாச்சு. கிரக பலத்தை தெய்வபலத்தை எல்லாம் ஓவரா எக்ஸாஸ்ட் பண்ணியாச்சு. பவர் எங்கருந்து வருதுன்னு தெரிஞ்சிக்கிட்டவன் அதை இழக்கறதே இல்லைனு ஒஷோ சொல்றாரு. நமக்கு இன்னம் தெரியலிங்கண்ணா.

அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்னு ஜல்லியடிச்சுட்டிருக்கம். சரி முன் வச்ச காலை பின் வைக்கிறது தப்பு. ஆவலா பதிவை படிக்க வந்த உங்களை ஏமாத்தறது தப்பு . அதனால இருக்கிற டீட்டெய்லை வச்சு கொஞ்சமா முக்கிப்பார்க்கிறேன்.

இலங்கையோட அஃபிஷியல் நேம் Democratic Socialistic Republic of Sri Lanka இதை எண்கணிதப்படி கணக்கிட்டா 127 வரும். இதை சிங்கிள் நெம்பராக்கினா 1+2+7 = 10 ஆக இலங்கையோட பெயர் எண் 1

இலங்கைக்கு சுதந்திரம் கிடைச்ச தேதி 8-2-1948 இதுல உயிர் எண் 8 ( லாங் லைஃபுங்கோ ஆனா சண்டைன்னாலும் 8 வருசம் தொடரும் சமாதானம்னாலும் எட்டு வருசம் தொடரும் – ஐ மீன் எல்லாத்துலயும் draging irukkum) பிரபாகரனோட லைஃப்ல கூட எட்டாம் நெம்பர் நிறைய விளையாடியிருக்கு.பிராபகரன் உயிரோட இருக்கலாம்னு நான் சொல்ல ப்ரிலிமினரி பாய்ண்ட் இதான்.

சரி காம்பவுண்ட் நெம்பரை பார்ப்போம். 8+2+1+9+4+8 எல்லாத்தையும் கூட்டினா 32 வருது. 3ன்னா குரு . 2ன்னா சந்திரன். குரு சந்திர சேர்க்கை ஒரு 14 வருசத்தை நாறடிச்சுருங்கறது ஒரு கணக்கு. இதை சிங்கிள் நெம்பராக்கினா 5 வருது.

உயிர் எண்ணான எட்டையும் கூட்டு எண்ணான 5 ஐயும் கூட்டினா 13 வருது. 13ங்கற நெம்பரை பத்தி என்னென்னமோ கேள்விப்பட்டிருப்பிங்க. எல்லாம் நெஜம்னு சொல்ல முடியாட்டாலும் கொஞ்சமாச்சும் நெஜமிருக்கு. இல்லேனு அடிச்சு சொல்ல முடியாது.

எட்டுன்னா சனி அஞ்சுன்னா புதன் ரெண்டுமே நட்புதான். இதுல ஏதும் பெருசா வில்லங்கமில்லேனு நினைக்கிறேன்.

பின்னே ஏன் இத்தினி லொள்ளுன்னா பெயர் எண் 1 உயிர் எண் 8 வந்தது. ( சூரியன், சனி ஆதிக்கம்) இது ரெண்டும் பரஸ்பரம் எதிரிடையான அதிர்வுகளை கொண்ட கிரகங்கள். இந்த மாதிரி ஒரு அமைப்பு ( சூரியன் சனி சேர்க்கை ,பார்வை) வரும்போது அது குடும்பத்தலைவர்ல இருந்து நாட்டுத்தலைவர் வரை எல்லாரையும் லொள்ளு பண்ணும்.

இந்த இரண்டு கிரகங்களோட அதிர்வுகளை பாருங்க;

சனின்னா அடிமை சூரியன்னா சுதந்திரப்போக்கு

சனின்னா கால் , சூரியன்னா தலை

சூரியன்: தலைமை பண்புகள் சனி: கூலிக்கு மாரடிக்கிறது

இந்த காம்பினேஷன் எலிக்கும் தவளைக்கும் கயிறு கட்டி விட்ட கதையா வேலை செய்யும். எலி தரைக்கிழுக்க, தவளை தண்ணிக்கிழுக்கும்.

தில்லி பப்ளிகேஷன் புக் ஒன்னுலருந்து பிக் அப் பண்ண ஃபார்முலாப்படி (சுதந்திரம் பெற்ற பிறகு உள்ள )
இலங்கையோட வரலாறை எட்டு எட்டா பிரிச்சுக்கனும். இதுல 3 ஆவது எட்டு ,ஆறாவது எட்டு ,பத்தாவது எட்டு, பதினொன்றாவது எட்டு நல்ல பீரியட்.

இந்த கணக்கு பிரகாரம் பார்த்தா எட்டு xஎட்டு 64. ஆக இப்ப நடக்கிறது எட்டாவது ரவுண்டு. சுதந்திரம் வந்து 63 வருசத்தை தாண்டியாச்சு ( தாண்டியாச்சா / 63 ல இருக்கா) இன்னம் ஒரு வருசம் போனா 9ஆவது ரவுண்டு வந்துரும்.

அப்ப அதுவரை ஆரெல்லாம் அடிமைகளா கிடந்தாய்ங்களோ அவிகளுக்கு ஒரு சான்ஸ் வரும். கடல் வழியா ஓடி போனவுக கரையில கொண்டுவந்து தள்ளப்படுவாய்ங்க ( ஐ மீன் காலகதியால்) ஒரு எட்டுவருசம் பசி பட்டினினு அல்லாடுவாய்ங்க. அடுத்த எட்டுவருசத்துல ரெண்டரை வருசம் தொழில் ,விவசாயம்லாம் வளரும். அடுத்த ஒரு எட்டுவருசம் தூள் கிளப்புவாய்ங்க.

இதான் நம்ம கணக்கு. இலங்கைக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட சரியான நேரத்தை கொடுத்தா இன்னம் டிட்டெயில்டா, இன்னம் ஆக்யுரேட்டா, இன்னம் கிரெடியபிலிட்டியோட பலன் சொல்லலாம். நான் ரெடி நீங்க ரெடியா?

Advertisements

13 thoughts on “2012 பிப்.8 முதல் 24 வ. இலங்கையில் தமிழர் ஆட்சி?

  Vinoth said:
  March 18, 2011 at 4:08 am

  பயர் பாக்ஸ் தமிழ் அட் ஆன் வேலை செய்யுதா?
  டைப் பண்ன சுலபம இருக்கா தல…

  சுதந்திரம் பெற்ற நேரம்ன ..ஆட்சி மாறுன நேரம் தானே… பிரிட்டன் தலைமைக்கு பதில் லோக்கல் தலைமை…அது ஆட்சி, மற்றும் ஆட்சியாளர்களை தான பாதிக்கும் ? நாட்டில் குடியிருக்குற மக்கள், ஆயிரகணக்கான வருடமா இருக்காங்களே…சுதந்திரத்துக்கு முன்னலையும் இருந்தாங்க இல்ல.. அப்புரம் சுதந்திரம் பெற்ற நேரம் எப்படி அவங்களை பாதிக்கும் ?

   S Murugesan said:
   March 18, 2011 at 6:08 am

   வினொத் சார்,
   ஃபயர் ஃபாக்ஸ் மேட்டர் அப்பாறம் சொல்றேன் (ஹி ஹி இன்னம் ட்ரை பண்ணலை -டவுன்லோட் பண்ணி வச்சதோட சரி).

   சுதந்திரம் என்பது மிகப்பெரிய மாற்றம். மைல் கல். இதை ஆரூடம்னு சொல்வாய்ங்க. நம்ம இந்தியாவோட விஷயத்துல பக்காவா ஒர்க் அவுட் ஆகியிருக்கே. இதனோட பாதிப்பு அமில மழைன்னு வைங்க உங்க ஜாதகம் கிரக பலம்லாம் குடை,ரெயின் கோட்,கார் மாதிரி.

   இலங்கையிலருந்து எத்தனை லட்சம் தமிழர்கள் வலசை போயிட்டாய்ங்க. அவிக நேரம் நல்லாருந்ததால தானே இது சாத்தியமாச்சு.

  Vinoth said:
  March 18, 2011 at 4:09 am

  பரிகாரங்களை தொடருங்க…

   S Murugesan said:
   March 18, 2011 at 6:04 am

   வாங்க வினோத்,
   நிச்சயமா தொடர்வேன். மேலும் மேற்படி பரிகாரங்கள் நான் எப்டி கேட்ச் பண்ணேங்கற மேட்டரையும் தரேன்

  தனி காட்டு ராஜா said:
  March 18, 2011 at 6:10 am

  //இதுல வைரஸ் மாதிரி கலந்திருக்கிற பொய்யை நீக்கி பார்க்க பவர் ஃபுல் ஆன்டி வைரஸ் வேணம் அதான் பெரியார். இந்த பவர் ஃபுல் ஆன்டி வைரஸ் சில சமயம் மிக தேவையான ஃபைல்ஸை கூட தூக்கிப்போட்டுரும். உ.ம் கடவுள்.அது அப்படி தூக்கி போட்டுராம இருக்கத்தேன் ஓஷோ.//

  🙂

   S Murugesan said:
   March 18, 2011 at 6:13 am

   வாங்க ராசா!
   பெரியாரையும்,பெரியாழ்வாரையும் ஒரு சேர தூக்கிப்பிடிக்கிற TNK நான் ஒருத்தன் தான் போல. என்னையும் ஏத்துக்க கிரவுண்டு கணக்கா மனசு வேணம் பாஸ்.. ( ஃப்ளாட் போட்டு வித்துருங்க. அதையும் ஆக்கிரமிச்சுரப்போறாய்ங்க)

  வினோத்... said:
  March 18, 2011 at 8:31 am

  தல பயர் பாக்ஸ் எக்ஸ்டன்சன் பயன் படுத்தி பார்த்து … அத பத்தி
  ஒரு பதிவு போடுங்க…. பயன்படுத்த ரொம்ப சுலபம்… அனா வழிமுறை தெரியாம ரொம்ப பேர் தமிழ் எழுத சிரம படுராங்க… உஙக பிளாக் கமோன்லையே பருங்க…
  தமிழ் எழுத தெரியலனு சொல்லியிருக்கங்க…

  நீங்க பதிவுபோட்ட நிறையபேருக்கு தகவல் போய் சேரும்…

   S Murugesan said:
   March 18, 2011 at 9:18 am

   வினோத்!
   நிச்சயமா செய்யலாம். தமிழெங்கள் இளமைக்கு வயாக்ரானு சனம் துள்ளாட்டம் போடனும். அதான் நம்ம டார்கெட்

  வினோத்... said:
  March 18, 2011 at 8:32 am

  அனுபவசோதிடம் சைட்ட ஓப்பன் பன்னிய உடன் வெறும் வெள்ளை பக்கம் தான் வருது… ரிலோட் பன்னினால் தான் மேட்டர் வருது…

  கமேன்ட் போட்ட உடன் வெறும் வெள்ளை பக்கம் தான் வருது… ரிலோட் பன்னினால் தான் மேட்டர் வருது…

   S Murugesan said:
   March 18, 2011 at 9:17 am

   தகவலுக்கு நன்றி வினோத். ஐ வில் டூ தி நீட்ஃபுல்

  YOGA.S said:
  March 18, 2011 at 11:01 am

  யார் சொன்னது பெப்ருவரி-8ல் சுதந்திரம் அடைந்ததென்று?அது பெப்ருவரி-4-1948 ல்!அதுவும் ஒன்றும் பெரிதாகப் போராடியதாக தெரியவில்லை!அந்தக் காலத்தில் பிராந்தியத்தின் வல்லமை புரியாமல்,இந்தியாவை விட்டு விட்டோம் இந்தச் சிறிய”மாங்காய்”வடிவிலான தீவு எதற்கு என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்களோ என்னவோ பெட்டியைக் கட்டி விட்டார்கள்!இப்போது தான் விழிக்கிறார்கள்!பாண்டிச்சேரி,காரைக்கால் பிரதேசங்களில் இன்றும் சும்மாவாச்சும் பிரெஞ்சுக்காரர்கள் உட்கார்ந்திருப்பது போல் இருந்திருக்கலாம் என்று இப்போது அங்கலாய்க்கக் கூடும்!!!!!!!

   S Murugesan said:
   March 18, 2011 at 12:08 pm

   யோகா. எஸ் அவர்களே,
   எனக்கொன்னும் தெரியாதுங்கண்ணா.. விக்கிபிடியால பார்த்தேன். அம்புட்டுதேன். இவிக போராடினாய்ங்களோ இல்லையோ / கொடுத்தானோ, கழட்டி விட்டானோ / அன்னியர் ஆட்சி போய் சுதேசி ஆட்சி வந்துருச்சா? அதான் பாய்ண்டு.

  YOGA.S said:
  March 19, 2011 at 11:24 am

  அதெல்லாம் கரீக்டு தான்,சுதேசி ஆட்சி வந்துச்சு தான்.ஆனா பத்தே ஆண்டுக்குப் பின்னாடி 1958 ல ஆரம்பிச்சுட்டாய்யா,தமிழனை கொல பண்ண!பொறுத்துப் பொறுத்து தான் முப்பது வருஷத்துக்கப்புறம்,நாமளும் துப்பாக்கி தூக்கினாத்தான் சரியா வருமின்னு தூக்கினோம்!ஒட்டு மொத்தமா பக்கத்து வூட்டுக்காரன் துணையோட லச்சக் கணக்கில அப்பாவிங்கள கொன்னு தீத்துட்டாய்ங்க!இப்போ நீங்க இப்புடி சொல்லுறீங்க!இன்னிக்கு சூப்பர் மூனுங்கிறாய்ங்க.அது ஏதாச்சும் பண்ணுமா?தெர்ல!நாமளும் சொதந்திரம் சிங்களவனுங்ககிட்ட இருந்து கெடைக்கணுமின்னு தான் போராடுறோம்.நீங்க கூட எங்களுக்கு சப்போர்ட்டான ஆளுன்னும் தெரியும்!பாக்கலாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s