நவீன பரிகாரங்களுக்கான அடிப்படை

Posted on

நமக்கு அனுபவஜோதிடம் டாட் காம் ஏற்படுத்தி கொடுத்த திரு சரண் சம காலத்து ஒக்காபிலரி எல்லாம் யூஸ் பண்ணாதிங்க ( டர்ரு,திகீர்) உங்க சப்ஜெக்ட் எவர் க்ரீன். பத்து வருசத்துக்கு பின்னாடி உங்க ரைட்டிங்சை படிக்கிறவனுக்கு இந்த ஒக்காபிலரி எல்லாம் புரியாம மண்டை காய்வான்னு சொன்னாரு.

சமீபத்துல இன்னொரு பார்ட்டி “சரியான தமிழ்ல எழுது”னு ஆணையே போட்டாச்சு. இதயெல்லாம் கேட்டு “கெட்டு” போற பார்ட்டி நாம இல்லே.

2000 ஜுலை 31ல இருந்து 2009 மே வரை இலக்கணத்தமிழ்ல தான் குப்பை கொட்டிக்கிட்டிருந்தேன். டோட்டல் ப்ரொஃபைல் வ்யூஸ் என்னா தெரீமா .மயக்கம் போட்டுராதிங்க ஜஸ்ட் 2006 தேன்.

ஒரு தாட்டி ஏதோ கடுப்புல பேச்சுத்தமிழ்ல ஒரு பதிவு போட்டப்ப ஒரு ஈழத்து சொந்தம் ” நீங்க சூப்பர் மேட்டர்லாம் எழுதறிங்க. ஆனால் புரியாம சிண்டை பிச்சுப்பன். இதே மாதிரி பேச்சுத்தமிழ்ல எழுதலாமே”னு சஜஸ்ட் பண்ணதும் படக்குனு மாறிட்டன்.

ஆபிரகாம் லிங்கன் தாடி வச்ச கதையா அங்கனருந்து நம்ம வலை வாழ்வு ஒரு யு டர்ன் எடுத்துக்கிச்சு. இப்ப எதுக்கு முருகேசன் கொசுவர்த்திய சுழட்டி ஃப்ளாஷ் பேக்குனு கேப்பிக . சொல்றேன்.

நம்ம சைட்ல நவீன பரிகாரம்னு பந்தாவா ஒரு வார்த்தை பிரயோகம் அடிக்கடி வரும். அதனோட அர்த்தம் என்ன? பேசிக் என்னனு நியூ அட்மிசன் பார்ட்டிகளுக்கு தெரியாது. அதனால அந்த காலத்துல இ.தமிழ்ல எழுதின பதிவு ஒன்னை அப்டேட் பண்ணி தந்திருக்கன். அதைத்தான் இன்னைக்கு படிக்க போறிங்க.

மேலும் ஒன்பது கிரகங்களுக்கும் ஹோல்சேலா பரிகாரம் கிடைக்க நீங்க வணங்க வேண்டிய கடவுளரோட படங்களையும் ஒரே ஃபைலா தந்திருக்கேன். ஆனா ஒரு கண்டிஷன் இதை வீட்ல வைக்காதிங்க. பர்ஸுல மட்டும் வச்சுக்கங்க. ( என்ன ஏதுனு இப்ப கேட்காதிங்க – நாளைக்கு ஒரு தனிப்பதிவே போட்டு வுட்டுர்ரன்)

இப்ப இலக்கண தமிழுக்கான கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.

10
9
8
7
6
5
4
3
2
1

நவீன பரிகாரங்களுக்கான அடிப்படை

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு சம்பிரதாய பரிகாரங்களின் மூலம் குறித்து கூறி இறுதியாக நவீன பரிகாரங்களின் அடிப்படையை விளக்குகிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.
உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும்.

எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன்.

செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.

மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன்.

இதனால் தான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.

நவக்கிரகத் தோஷங்கள்:
நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.

நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள சம்பிரதாய பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.
1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.
2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.
3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்).

யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.

லக்னம் முதற்கொண்டு செவ்வாய் எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!

செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன்,

8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.

சம்பிரதாய பரிகாரம் என்பது கல்லை மூட்டையாக கட்டி மாங்காய் அடிக்கிறது. ஆனால் நம் நவீன பரிகாரம்?

கிராமத்துக்குள்ள புகுந்து அழிச்சாட்டியம் செய்யும் காட்டுப்புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? மயக்க மருந்தை ஏற்றிய சிரிஞ்சை பிஸ்டலில் பொருத்தி குறி பார்த்து சுடுகிறார்கள். ஊசியிலான மருந்து உள்ளே போக புலி மட்டையாகிவிடுகிறது.

மேற்சொன்ன செவ் தோஷ கேஸையே பார்ப்போம். செவ் லக்னத்தில் இருந்தால் ஜாதகர் ஆயுதம் தரிக்கவேண்டும் அ ஆயுதங்களால் சிதைக்கப்படவேண்டும் என்பது பலன். எஸ்.எஸ்.சி பரீட்சையில கஷ்டமாய் இருக்கும் கேள்வியை சாய்சில் விடுவது போல் இரண்டி ஒன்றை விட்டுவிட முடியும்.

ஆயுதத்தால் சிதைக்கப்படுவதை விட தரிப்பது பெட்டர் சாய்ஸ் தானே. (அதுக்குனு கத்தி கப்படாவை தூக்கினா ஆயுதத்தடை சட்டம் பாயும்.

ஒரு சூலத்தையோ ,வேலையோ டாலரா அணியலாம்ல. சின்ன பேப்பர் கட்டர் இத்யாதிய கீ செய்ன்ல கொர்த்துக்கலாம்ல.

2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?

அடுத்து மேற்படி புண்ணியத்தலங்கள்ளாம் ஜி.ஹெச் என்று வைப்போம். உங்களுக்கு ஏதோ சின்னதா தலைவலி. நீங்க ஆஸ்பத்திரிக்கு போற நேரம் ஊர்ல காலரா வந்து அந்த வார்டே ஹவுஸ்ஃபுல்லா இருக்கு. அப்ப நீங்க ஜி.ஹெச் போனா தலைவலி குறையுதோ இல்லியோ காலரா நிச்சயம்.

சனிப்பெயர்ச்சி அன்று திரு நள்ளாறு போவதும் இதே வகை ரிஸ்க் தான். மேலும் மேற்படி புண்ணியத்தலங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன, அவற்றின் அதிர்வுகளை காக்க என்னெல்லாம் சாக்கிரதை எடுத்தக்கனும்? எப்படி மெயின்டெய்ன் பண்ணனுங்கற மேட்டர் எல்லாம் தெரியாத ஒரு ஜெனரேஷன் இப்ப நிர்வாகம் பண்ணுது.

அந்த நாள்ள பத்து நாள் மிந்தி புறப்பட்டு நாயடி பட்டு, நாறி நலிஞ்சு தரிசிப்பாய்ங்க. இவிக மைண்டெல்லாம் மேற்படி சனி பகவான் தான் இருந்திருப்பாரு. இப்ப அப்படியா? ஏசி கார், ஏசி லாட்ஜு, விட்டா புறப்படறப்பயே பாட்டிலை திறந்துர்ராய்ங்க. இதுல எம்.எல்.ஏ எம்.பி சிபாரிசு லெட்டர் வேற. போனதும் தெரியாது வந்ததும் தெரியாது.

இது ஒரு மேட்டர்னா நீங்க போறதே பணம் காசு பதவில்லாம் முக்கியமில்லே கிரகபலம் தேன் முக்கியம்ங்கற கான்செப்ட்ல போவிக. ஆனால அங்கன ரூவாய்க்கு கிடைக்கிற மருவாதிய பார்த்துட்டு “ங்கோத்தா கிரகமா ம…ரா பணம்தாண்டா முக்கியம்”ங்கற நீதியோட திரும்பி வருவிக.

இதுனால தோஷம் பரிகாரமாகுமா/ அல்லது உள்ள கிரகபலத்தையும் எக்ஸாஸ்ட் பண்றோமானு ரோசிச்சு பாருங்க.

3. தானம் வழங்குதல்:
நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக

பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும்,

அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!

விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.

இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.

நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.

நான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.

ஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான்.

ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து “நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம்,

இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை. அந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனை செய்து பாருங்கள்.

அந்த காலத்துல நான் ஜெபிச்ச ராம நாமம் ( 1986 முதல் 2000 வரை) அப்பாறம் செய்த சாக்தேய சாதனை, ஓஷோ கொடுத்த புரிதல் எல்லாம் சேர்ந்து என்னிலிருந்து என்னை கழட்டிவிட்டு ரோசிக்கும் “டெக்னிக்” ஒன்றை எனக்கு தந்தன.

அப்பத்தேன் கிரகம் பேசுறதை கேட்க முடிஞ்சது. இன்னைக்கு நான் எழுதறதெல்லாம் அன்றைய என் பத்தினி வாழ்வின் எச்சங்கள் தேன்.

இன்னைக்கு ‘இரவு ராணி” ஆயிட்டிங்களானு கேப்பிக. அப்படியும் சொல்லிரமுடியாது. அஷ்டாங்க யோகத்துல ப்ரத்யாஹாரம் ( பிறர் பொருளை ஏற்காமலிருப்பது) மட்டும் ப்ரேக் ஆயிருச்சு. அதனால ஒரு வித கில்ட்டி.

அதை பேலன்ஸ் பண்ண இலவச ஜோதிட ஆலோசனை. நேரமின்மை காரணமா அதையும் இன் டைம் செய்யமுடியாத நிலை. இப்படி பல உள் நாட்டு கலவரங்கள்.

சரிங்கண்ணா .. எப்படியோ இன்னைக்கு ஒப்பேத்தியாச்சு. நாளைக்காச்சும் அயனான மேட்டர் வராப்ல எனக்காக ப்ரே பண்ணுங்க.

உங்க பலம் தேன் என் பலம். ஏன்னா உங்க நலமே என் நலம்.

34 thoughts on “நவீன பரிகாரங்களுக்கான அடிப்படை

  தனி காட்டு ராஜா said:
  March 17, 2011 at 6:41 am

  🙂

  தனி காட்டு ராஜா said:
  March 17, 2011 at 6:48 am

  //சமீபத்துல இன்னொரு பார்ட்டி “சரியான தமிழ்ல எழுது”னு ஆணையே போட்டாச்சு. இதயெல்லாம் கேட்டு “கெட்டு” போற பார்ட்டி நாம இல்லே.

  2000 ஜுலை 31ல இருந்து 2009 மே வரை இலக்கணத்தமிழ்ல தான் குப்பை கொட்டிக்கிட்டிருந்தேன். டோட்டல் ப்ரொஃபைல் வ்யூஸ் என்னா தெரீமா .மயக்கம் போட்டுராதிங்க ஜஸ்ட் 2006 தேன்.//

  பழச விடுங்க தல …சென்னை தமிழை விட …எளிய தமிழில் எழுதுங்கள் …..அப்போது தான் நெறைய பேரை பதிவு சென்று சேரும் 🙂

   S Murugesan said:
   March 17, 2011 at 9:39 am

   வாங்க ராசா,
   மாறுவோம். மாற்றமில்லாதது மாற்றம் ஒன்னுதானே

  R.Puratchimani said:
  March 17, 2011 at 7:56 am

  உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது. உங்கள் சென்னை தமிழுக்காகத்தான் இங்கே வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் தான் காரணம். எனவே தாங்கள் உரைநடைத்தமிழில் எழுதவேண்டும் என்பது என்னுடைய ஆசை. கொச்சை தமிழில் எழுதி நீங்கள் கெடாமல் இருப்பதை விட, நல்ல தமிழில் எழுதி கெட்டுவிடுதல் தாங்கள் தமிழுக்கு செய்யும் நல்ல சேவையாகும்.

  நீங்கள் எந்த தமிழில் எழுதினாலும் உங்கள் கருத்துக்கள் நன்றாக இருக்கும் வரை உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பேன். கொச்சை தமிழில் எழுதினால் ஒருவித சங்கடத்துடன்,மனமகிழ்சியற்று படிப்பேன்.
  நல்ல தமிழில் எழுதினால் மனமகிழ்ச்சியுடன் படிப்பேன். முடிவு உங்கள் கையில்.
  உங்கள் ஜோதிட சேவை தொடர, வாசகர்கள் அதிகரிக்க வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  இரா.புரட்சிமணி

   S Murugesan said:
   March 17, 2011 at 9:38 am

   புரட்சி மணி அவர்களே,
   தங்கள் அக்கறைக்கும் -ஒளிவு மறைவற்ற கருத்துக்கும் நன்றி. நான் ஜஸ்ட் ஒரு மீடியம். என்னை எழுத வைக்கிறது நீங்கதேன்.

   நீங்க மறுமொழியா போட்டதுல அந்த கருத்தோட வேக்குவம் குறைஞ்சு போச்சு. இதையே நீங்க ஒரு பத்து நாள் நினைச்சிருந்தா போதும். ஆட்டோமேட்டிக்கா தமிழ் மாறியிருக்கும்.

   தங்கள் கருத்து என் மூளையில் படிந்து விட்டது. எப்போது காரிய ரூபம் எடுக்குமோ பார்ப்போம்.

    Kalyan said:
    March 17, 2011 at 10:18 am

    நானும் புரட்சிமணி-யின் கருத்தை ஆதரிக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் சில வார்த்தைகளை பதிவில் படிக்கும்போது ஒருவித ஒட்டுதல் இல்லாமல் இருக்கும் (Kind of uneasiness). அதை தவிர்த்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும் திரு.முருகேசன் அவர்களே. மேலும் Hits கூடுவது உங்களுடைய கருத்துக்களுக்காக. அதற்காக நீங்க இலக்கிய தமிழில் எழுதுங்கன்னு சொல்லலை (அப்புறம் அதுக்கு dictionary -ஐ தேடி அலையை எங்களுக்கு நேரம் இருக்காதே!!!). இப்பொழுது நீங்க எழுதும் நடைமுறை தமிழ், பேச்சுவழக்கில் உள்ள வார்த்தைகள் நன்றாக இருக்கிறது. தவிர்க்கப்பட வேண்டிய சில வார்த்தைகள்னு சில – குறிப்பா சொல்லணும்னா எழவு, நாறிடும் போன்ற ஒரு சில வார்த்தைகள் மட்டுமே… மற்றபடி எழுத்துநடையை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்பது என்னோட கருத்து.

    S Murugesan said:
    March 17, 2011 at 3:29 pm

    கல்யாண்,
    புத்தர் சொன்னதையே நீங்க ரெண்டு பேரும் சொல்றிங்க. ஐ மீன் சத்தியம் அந்த பக்கமும் இல்லை இந்த பக்கமும் இல்லை . நடுவுல இருக்கு.

    பார்ப்போம். இன்னைக்கே பரீட்சை பண்ணிருவம்.

    R.Puratchimani said:
    March 17, 2011 at 2:07 pm

    என்னுடைய கருத்தை கருத்தில் கொள்வதற்கு நன்றி ஐயா .
    உள்நோக்கி சென்று பார்த்தால் எழுதவைப்பவனும் எழுதுபவனும் ஒருவனன்றோ? உங்களுக்கு தெரியாதது அல்ல.

    S Murugesan said:
    March 17, 2011 at 3:11 pm

    ஆர் .புரட்சி மணி அவர்களே,
    நெத்தியடி. ஹும்.. லேசா கற்பிழந்த நிலையில நான் எழுதவைக்கிறவன் வேற எழுதறவன் வேறங்கற கான்செப்ட்லயே இருக்கேன். சத்தியத்தை ஞாபகப்படுத்தினமைக்கு நன்றி.

    R.Puratchimani said:
    March 17, 2011 at 5:37 pm

    Ellaam Avan Seyal

  Kalyan said:
  March 17, 2011 at 8:24 am

  வணக்கம் முருகேசன் அவர்களே. கோவிலில் சரவிளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கி கொடுப்பது, மற்றும் மாதம் ஒரு முறை கோவில் மூலமாக அன்னதானம் அலல்து சர்க்கரை பொங்கல் தானம் வழங்குவது இதெல்லாம் எந்த விதமான பரிகாரத்தில் வரும்?

   S Murugesan said:
   March 17, 2011 at 9:35 am

   கல்யாண்,
   பரிகாரம்னா நீங்க என்ன கொடுக்கறிங்கங்கறதும் முக்கியம் .யாருக்கு கொடுக்கறிங்கங்கறதும் முக்கியம். பை தி பை எந்த பாவத்தோட ( Bavam) கொடுக்கறிங்கங்கறதும் முக்கியம்.

   சிதிலமாகி ,கவனிப்பாரற்று கிடக்கிற கோயிலுக்கு – பவர் கனெக்சன் இல்லாத கோவிலுக்கு எண்ணெய் தந்தா அது புண்ணியம்.

   ஏற்கெனவே ‘சவுண்டா’ கீற கோவிலுக்கு , பவர் கனெக்சன் கீற கோவிலுக்கு கொடுத்தா என்ன புண்ணியம்? கரண்ட் பில் கட்ட முடியாத நிலையில உள்ள கோவிலுக்கு கரண்ட் பில் கட்டுங்க. புண்ணியம் வரும். (செவ்வாய்க்கு பரிகாரம்)

   எண்ணெயை எரிக்க கொடுத்தா செவ்வாய்க்கு பரிகாரம், சமைக்க கொடுத்தா சுக்கிரனுக்கு பரிகாரம், அபிஷேகத்துக்கு கொடுத்தா சனிக்கு பரிகாரம்.

   ( இதையும்,எதையும் க்ஷீண தசையில உள்ள கோவிலுக்கு கொடுத்தா பலன் அதிகம் -ஏற்கெனவே ரன்னிங்ல நல்லா ஷகரா இருக்கிற கோவிலுக்கு கொடுத்தா பாவம் தேன் வரும் அவிக திருட்டு கணக்கு எழுதி திருட தூண்டின பாவமும் வரும்)

   அன்னதானம்:
   அரிசி சோறு சாப்பிட்டே பல வாரமான பார்ட்டிக்கு , உணவு தேடமுடியாத நிலைல உள்ளவங்களுக்கு , கொடுத்தா அது தானம், புண்ணியம் வரும். உ.ம் முதியோர் இல்லம், இலங்கை அகதிகள் முகாம். இது அத்யாவசிய பொருள் என்பதால் சூரியனுக்கும், உணவு என்பதால் சுக்கிரனுக்கும், அந்த நேரத்துக்கு உப சாந்தி தருவதால் சந்திரனுக்கும் பரிகாரம்.

   சர்க்கரை பொங்கல்:
   இதை சாப்பிடும் வசதியில்லாத மக்களுக்கு கொடுத்தா நல்லது . லக்சரிங்கறதால சுக்கிரனுக்கு பரிகாரம்.

    Kalyan said:
    March 17, 2011 at 10:03 am

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி திரு.முருகேசன் அவர்களே

  swami said:
  March 17, 2011 at 10:27 am

  anna, Prathyahara is withdrawal of senses from the worldly objects. But you have given a different meaning. why?

   S Murugesan said:
   March 17, 2011 at 3:28 pm

   ஸ்வாமி ,
   பதிவு போடும்போது “சித்தன் போக்கு சிவன் போக்கு “மாதிரி அசால்டா ,ரிலாக்ஸ்டா இருப்பேன். நோ ரெஃபரன்ஸ், நோ வெரிஃபையிங் .. ஜஸ்ட் நினைவிலிருந்து எழுதறதுதான். அதுலயும் லேசா கற்பிழந்த நிலையில இருக்கேன்னு கை தூக்கிட்டனில்லை.

  swami said:
  March 17, 2011 at 12:02 pm

  I got it. It is aparigraha.(To be free from hoarding)

   S Murugesan said:
   March 17, 2011 at 3:24 pm

   ஸ்வாமி,
   நான் சொல்ல நினைத்ததும் அதே தான்.

  Anand said:
  March 17, 2011 at 1:00 pm

  ஐயா ஆணை இடவில்லை வேண்டுகோளாகவே கூறினேன் .எனினும் அதை செயல் படுத்தியமைக்கு நன்றி. எனது கருத்தையே பல நேயர்கள் கூறியுள்ளார்கள் என்பதால் அவர்களுக்கும் புரிந்துகொள்ளுவதில் சிரமம் இருந்துள்ளது என அறிந்துகொண்டேன்

   S Murugesan said:
   March 17, 2011 at 3:22 pm

   ஆனந்த் அவர்களே,
   மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ( இருங்க இருங்க இன்னைக்கும் எழுத்துத்தமிழ் தேன் – தம்பிமாரு இன்னாமாரி பொங்கி எழறாய்ங்கனு பாருங்க)

  Vinoth said:
  March 17, 2011 at 1:24 pm

  1) சுனாமி நல நிதி கொடுத்தா அது பரிகாரம் கணக்கில் வருமா ? வந்த எந்த கிரகதேஷத்துக்கு பரிகாரம் ஆகும்.?
  2) பேரழிவு நிகழ்ச்சிக்கு எந்த கிரகம் காரகதுவம் பெற்றுள்ளது.. இதில் இறந்த அத்தனை பேருக்கும் ஆயுர் பாவம் முடிந்து இருக்குமா?
  3) உயிரை தவிர அனைத்தையும் இழந்த்வர்களின் அமைப்பு எப்படி இருக்கும் ?
  4) பேரழிவை பற்றி தெரிந்துகொள்ள , சுனாமி தாக்கிய போது இருந்த நேரமா? இல்லை கடலுக்கடியில் பூகம்பம் நிகழ்ந்த நேரத்தை கணகெடுக்க வேண்டும ?
  5) 2001 ஸ்டார் டெல்லர் இதழில் இந்தியாவின் மேற்கு கரை பகுதிகள் பூகம்பத்தால் பாதிக்கபடும் என தெரிவிக்கட்டது ஜனவரி 26ல் குஜராத் பூகம்பம் வந்தது… இன்னும் தெளிவாக முன்னறிவிக்க முடியுமா?

   S Murugesan said:
   March 17, 2011 at 3:21 pm

   1) சுனாமி நல நிதி கொடுத்தா அது பரிகாரம் கணக்கில் வருமா ? வந்த எந்த கிரகதேஷத்துக்கு பரிகாரம் ஆகும்.?
   நிச்சயமா -சந்திரன் – சனி- கேதுவுக்கு பரிகாரம். சமுத்திர சம்பந்தம் என்பதால் சந்திரன் – அவிக ஜீரோ பேலன்ஸுக்கு வந்துர்ரதால சனி – லைஃபே அல்லாட்டமா மாறிருங்கறதால கேதுவுக்கு-தொற்றுவியாதிகள் பரவுங்கறதால ராகுவுக்கு பரிகாரம்

   2) பேரழிவு நிகழ்ச்சிக்கு எந்த கிரகம் காரகதுவம் பெற்றுள்ளது.. இதில் இறந்த அத்தனை பேருக்கும் ஆயுர் பாவம் முடிந்து இருக்குமா?

   பேரழிவை பொருத்து காரகத்வம் மாறும். ஆனால் இதுக்கு ஒரே கிரகத்தை பொறுப்பாக்க முடியாது. இதுக்கெல்லாம் டீட்டெய்ல்ட் ரூல்ஸ் இருக்கு பாஸ். நம்ம ரூட் சம்பூர்ண சரணாகதிங்கறதால கிரகங்களை பெருசா கண்டுக்கறதில்லை. இது நமக்கு ஜஸ்ட் வயா தான். – ஆயுள் பாவம் முடிஞ்சாதானே மரணமே வருது. ஆனால் மரணம் நிச்சயம்ங்கற நேரத்துல மரணத்தை தள்ளிப்போட சில ராங் ரூட்டெல்லாம் கூட அவெய்லபிள்.

   3) உயிரை தவிர அனைத்தையும் இழந்த்வர்களின் அமைப்பு எப்படி இருக்கும் ?
   பொதுவா நீங்க சொல்ற நிலை சனி -கேதுவோட எஃபெக்ட் தேன். சிலருக்கு பிராணகண்டம் இருக்கும்போது ஆயுள் நீட்டிப்புக்காக இப்படி ஒரு நிலை வர்ரதுண்டு (அதாவது கடவுளே தர்ரதுண்டு)

   4) பேரழிவை பற்றி தெரிந்துகொள்ள , சுனாமி தாக்கிய போது இருந்த நேரமா? இல்லை கடலுக்கடியில் பூகம்பம் நிகழ்ந்த நேரத்தை கணகெடுக்க வேண்டும ?

   காரணம்தானே முக்கியம். காரியம்ங்கறதுக்கு மூலமே காரணம் தேன். அதனால பூகம்பம் வந்த நேரம்தேன்

   5) 2001 ஸ்டார் டெல்லர் இதழில் இந்தியாவின் மேற்கு கரை பகுதிகள் பூகம்பத்தால் பாதிக்கபடும் என தெரிவிக்கட்டது ஜனவரி 26ல் குஜராத் பூகம்பம் வந்தது… இன்னும் தெளிவாக முன்னறிவிக்க முடியுமா?

   ஜோதிஷத்துல உள்ள ரிஸ்க் என்னடான்னா நீங்க எந்தளவுக்கு டீட்டெய்ல்டா கணிக்கிறிங்களோ அந்த அளவுக்கு கணக்கு தவற வாய்ப்பு அதிகம். ( சிலதெல்லாம் ஆண்டவன் என்ற ஈகோயிஸ்ட் தன் பிடியிலயே வச்சிருக்காரு. நீங்க ஃப்யூச்சரை பக்காவா கேட்ச் பண்ண கணமே அதை படக்குனு மாத்திருவாரு)

  Vinoth said:
  March 17, 2011 at 2:16 pm

  1) பயர் பாக்ஸ் பிரவுசர் டவுண்லோட் செய்யவும்…http://www.firefox.com
  2) பயர் பாக்ஸில் .. எக்ஸ்டன்சன் டவுன்லோட் செய்யவும்…https://addons.mozilla.org/en-us/firefox/addon/tamilvisai-tamilkey/
  3) தமிழ் அட் ஆன் இன்ஸ்டால் ஆன வுடன் பயர்பாக்ஸை ரி ஸ்டர்ட் செய்யவும்.
  4) எங்கு தமிழ் டைப் செய்ய வேண்டுமோ அங்கு கமெண் பாக்ஸில் கிளிக் செய்து ALT+F8 கொடுக்கவும் ..
  5) கமண்ட் பாக்ஸ் நிறம் மாறும் புதிய பார்டர் வரும் அப்போது ammaa என அடித்தால் அம்மா என டைப் ஆகும்.
  6) தமிழ் டைப் தெரிந்தால் ALT+F11,ALT+F12 கொடுத்து ஆங்கிலம் போல நேராக அடிக்கலாம்.

  நான் 5ம் வழி முறையிலேயே பயன்படுத்துகிறேன். … இன்னோரு வலைதளம் , காப்பி பேஸ்ட் எதுவும் இல்லை , நேராக டைப் .. ஆட் கமேன்ட் தான்.

  உங்களுக்கு இன்ஸ்டால் செய்ய சிரமம் இருந்தால் glomoinc@gmail.com கு ஒரு மெயில் போடுங்க.. உங்க கம்யூட்டரில் ரிமோட்டில் நான் இன்ஸ்டால் செய்து தருகிறேன்.

  Vinoth said:
  March 17, 2011 at 2:29 pm

  பயர் பாக்ஸ் டவுண் லோட் செய்யவும்…http://www.mozilla.com/en-US/firefox/
  தமிழ் ஆட் ஆன் இன்ஸ்டால் செய்ய https://addons.mozilla.org/en-us/firefox/addon/tamilvisai-tamilkey/
  இன்ச்ஸ்டால் செய்ய ….வழி முறை..http://www.accessfirefox.org/Addons_Installation_Guide.php

  இன்ஸ்டால் செய்தவுடன் பயர் பாக்சை ரி ஸ்டார்ட் செய்து…
  கமேன்ட் பாக்ஸ் கிளிக் செய்யவும்… Alt + F8 கொடுத்தால் போனிக் கீ போர்டு கிடைக்கும்
  ammaa என டைப் செய்தால் அம்மா என வரும்.
  தமிழ் டைப் தெரிந்தால் Alt + F11 , Alt + F12 கொடுத்து நேராக ஆங்கிலம் போல் டைய் செய்யலாம்.

  இன்ஸ்டால் செய்ய உதவி வேண்டும் என்றால் glomoinc@gmail.com கு ஒரு மெயில் போடுங்க..
  நான் உங்க கம்ப்யூட்டரை ரிமோட்டில் இன்ஸ்டால் செய்து தருகிறென்.

   S Murugesan said:
   March 17, 2011 at 3:01 pm

   வினோத் அவர்களே,
   தகவலுக்கு நன்றி. நன்றி. நன்றி. இன்ஸ்டால் செய்துவிட்டேன்.இன்று டைப் செய்து பார்க்கிறேன்

  R V Ramanan said:
  March 18, 2011 at 5:16 am

  Dear Sir,
  Extraordinary insight into pariharas. Beautiful!! Aminjikarai-la paavam pannittu america-la poi kazhikaraen-na athu aavavae aavaathu…correct-thaan. Ithey pola naan kaelvi patta oru pariharam sani bagawan-kku.

  Bus-la yeri kunthikinu bus city-a thaandinappuram, summa sillarai-ya eduthu onnu onnaa rottoram veesanum. Theru orathula vilayadittu irukkara kuzhanthainga antha kaasai porukichunna, avanga porukka porukka guru-oda putra dosham-um, sani bagawanoda thontharavum koraiyum-nu periyavanga solli kaelvi pattirukkaen.

  Vaazhga umathu thondu!!

   S Murugesan said:
   March 18, 2011 at 6:03 am

   R.V.Ramaan!
   உங்க பாராட்டுக்களுக்கு உரியவன் நானல்ல.ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல , எனக்குள்ள ஸ்பார்க் ஆனதை ஒரு இன்ட்யூஷன்ல இதையெல்லாம் சொல்றேன். இதுக்கான பேட்டென்ட் ரைட்,காப்பிரைட் எல்லாம் எனக்கிருக்கிறதா நான் நினைக்கலை.

   குரு தோஷம் குறைய அம்மா கூட நிறைய இலவச திருமணம் பண்ணாய்ங்க. இதெல்லாம் உலக்கைய விழுங்கிட்டு சுக்கு கஷாயம் சாப்ட கதையாயிரும். அவிகளுக்கு,அவிக ரேஞ்சுக்கு இ.தி எப்படி ஒர்க் அவுட் ஆகாதோ அப்படி நம்ம ரேஞ்சுக்கு காசை வீசறது ஒர்க் அவுட் ஆகாது.

   கிரகம் என்ன குழந்தையா சாக்லெட் கொடுத்தா காது ஜிமிக்கிய கழட்டிக்கன்னு நிக்கறதுக்கு.

   என் ஜாதகத்துல வீக் புதன் தான். ஆனாலும் இந்த ஜோசியம் என்ன விடமாட்டேங்குது. அதனால இலவச ஆலோசனை அனவுன்ஸ் பண்ணேன். அதுவும் போறலை 1991 முதல் 2007 வரை எந்த பில்டப்பும் இல்லாம ரகசியமா எனக்கு உதவின ஒரு நண்பருக்கு 2,750 வரை செலவழிச்சு ஒரு செகண்ட் ஹேண்ட் கம்ப்யூட்டர் ரெடி பண்ணி கொடுத்திருக்கன். சொம்மா கத்துக்கிட்டு அப்பாறம் அவர் லேப் டாப் வாங்கிப்பாரு.

   நான் ஒரு செகண்ட் ஹேண்ட் வண்டி (ஸ்கூட்டி) வாங்கின பிறவு வேற ஒரு நண்பருக்கு கடை பசங்க யூஸ் பண்ண என் ஸ்போர்ட்ஸ் சைக்கிளை கொடுத்தேன்.

   நான் வாங்கற ஃபீசு ரூ.250 என் பரிகாரத்தோட மதிப்பை பார்த்திங்களா? இதையும் ஜெ இ.தி ஐயும், சிட்டி லிமிட்ஸுக்கு அப்பாறம் வீசற காசோட மதிப்பையும் பாருங்க.

  krishnamoorthy said:
  March 18, 2011 at 9:22 am

  மிக பொறுமையான நடையில்
  எளிமையான சொற் தொடரில்
  ஆழமான விசயங்களை
  விளக்கி உள்ளீர்கள்
  நன்றி
  என்றென்றும் அன்புடன் ,
  சுகி …

   S Murugesan said:
   March 18, 2011 at 9:42 am

   கிருஷ்ண மூர்த்தி அவர்களே,
   தங்கள் பாராட்டுக்குரியவன் நானல்ல. நான் ஜஸ்ட் ஒரு மவுத் பீஸ்.ஆரோ என்னை உபயொகிக்கிறாய்ங்க. இருந்தாலும் தங்கள் பாராட்டுக்கு அந்த “யாரோ”சார்பில் நன்றி.

  karthi said:
  March 18, 2011 at 10:41 am

  இங்கே படிக்காமல் அங்கே பின்னூட்டம் போட்டதற்கு மன்னிக்கவும் ….
  உரைநடை தமிழ் விளங்கிக்கொள்ள மிகவும் எளிமையாக இருக்கும் என்ற காரணத்தினால் தான் அவ்வாறு கூறினேன் …….

   S Murugesan said:
   March 18, 2011 at 12:09 pm

   டியர் கார்த்தி,
   மொட்டை எங்கன போட்டா என்ன பக்திதான் முக்கியம் – கமெண்ட் எங்கன போட்டா என்ன அக்கறைதான் முக்கியம்.

  Saran R said:
  March 18, 2011 at 1:19 pm

  வணக்கம்,

  அநேகமாக நான் இந்த இணையத்தில் இரண்டாவது முறையாக மறுமொழி செய்கிறேன் என்று நினைக்கிறேன்.

  மேலே உள்ள மறுமொழிகளை பார்க்கும் பொழுது என்னுடைய கருத்தை நிறைய நண்பர்கள் வழிமொழிந்துள்ளதாக கருதுகிறேன். அதிலும் ஒரு நண்பர் குறிப்பிட்டதை போல், “உங்கள் கருத்துக்களுக்கு தான் வெற்றியே தவிர, உங்கள் தமிழுக்கு இல்லை” என்பது உண்மை.

  முடிந்தவரை நல்ல தமிழில் எழுதி தமிழையும் வளர்ப்போம், நாமும் வளர்வோம்.

  உபயோகமான பதிவு. பதிவிற்க்கு மிக்க நன்றி.

   S Murugesan said:
   March 18, 2011 at 2:10 pm

   சரண் சார்,
   சென்னை எஃபெக்ட் எல்லாம் குறைச்சிட்டே வரேன். கலைஞரோட செந்தமிழை சனம் கிண்டலடிக்கிறத பார்த்து அலர்ஜி ஆயிருச்சு அதனாலதான் பேட்டைய,ரூட்டை மாத்திட்டன்.

   பார்ப்போம். மாற்றம் வரும்.படிப்படியாக .

  kandhan said:
  April 2, 2011 at 12:54 pm

  தானம் செய்யும் பொது அதை வாங்கறவங்க நம்மை பார்த்த தான் அதுக்கு effect நு சொல்றாங்களே. அப்போ அன்ன தானத்துக்கு காசு மட்டும் அனுப்புனா செல்லுமா?

   S Murugesan said:
   April 2, 2011 at 1:20 pm

   கந்தன்!
   தானம்னா அல்லாருக்கும் கர்ணன் தான் ஞா வருவாரு. ஆனா பீமன் தொடர்பான ஒரு செய்தி. அவன் யாரிடமோ பேசிட்டிருக்கிறப்ப இடப்பக்கமா நின்னு அவன் கிட்ட ஆரோ என்னமோ கேட்கிறாய்ங்க. உடனே பீமன் வந்தவர் கேட்டதை இடது கையாலயே எடுத்து கொடுத்துர்ரான்.

   ஒடனே பக்கத்திலிருக்கிறவுக “என்னப்பா இடது கையில கொடுக்கலாமா? அதை ரைட்டுக்கு மாத்தி தரலாம்ல”ங்கறாய்ங்க.

   அப்ப பீமன் கேட்கிறான் ” லெஃப்ட்லருந்து ரைட்டுக்கு மாறும்போது மனசு மாறிட்டா”

   பாஸ்!
   கலோரிஸ் உற்பத்தியாறது உங்க பாடில. கலோரிஸை செலவழிச்சாத்தான் காசு ( ஐ மீன் உங்களை நீங்க வறுத்திக்கிட்டா தான் காசு) வருது. உங்க காசுலயே உங்க பாடி ( கலோரிஸ்) ப்ரசண்ட் ஆயிருது. அப்பாறம் பார்த்தா என்ன? பார்க்காட்டா என்ன?

   பார்க்கிறதுல இன்னொரு வில்லங்கமும் இருக்கு. உங்க ஈகோ சிலிர்த்துக்குமே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s