பதில் மிதக்குது அங்கே ! கேள்வி பிறக்குது இங்கே!!

Posted on

அண்ணே ,வணக்கம்ணே.
பதிவோட தலைப்பை பார்த்துட்டு நம்ம எதிர்கால முதல்வர் ஜெயலலிதா அம்மா சினி ஃபீல்டுல வாய்தா போயி கெடந்த நாள்ள எடுத்த ” நதியை தேடி வந்த கடல் ” மாதிரி டிஃபரண்டா கீதுபான்னு நினைக்கிறிங்கோ . அப்டித்தானே.

சமுத்திரம் மாதிரி ஸ்தூலமான மேட்டர்லாம் ரூட் மார்ரது கஸ்டம். ஆனால் கேள்வி பதில் எல்லாம் சூட்சுமமான மேட்டரு டிஃபரண்டா சொன்னா அரசியல் வாதி மாதிரி அதனோட நேச்சர், ரூட்டுல்லாம் எப்டி வேணா மாறும்.

கேள்வித்தேன் பதிலை தேடோனம். இது லாஜிக். ஆனால் லைஃப்ல ஒரு ஸ்டேஜ்ல லாஜிக் எல்லாம் எகிறி பூடும் பாஸு. பதிவை தொடர்ந்து படிங்க. சூட்சுமத்தை பிடிச்சா மண்டை காஞ்சாலும் எட்டு இடமும் கூலாகி உச்சி மட்டும் சூடாகி குண்டலி ஸ்டார் ஹோட்டல் லிஃப்ட் மாதிரி விர்ருனு மேல் நோக்கி ஏற ஆரம்பிச்சுரும்.

நம்ம ஜாதகத்துல சந்திரன் சுக்கிரனை தவிர மத்த அல்லா கிரகமும் கேந்திர கோணங்கள்ள மாட்டிக்கிச்சு.இதை பரிவ்ராஜக யோகம்ங்கறாய்ங்க. அதாவது விடுதலையானவன்னு அர்த்தம்.

தாளி சந்திரன் சுக்கிரன் மட்டும் வாக்குஸ்தானமான ரெண்டுல.மாட்டினதால சைக்காலஜி -செக்ஸாலஜி பத்தி அள்ளி விட்டுக்கிட்டிருக்கேன். நம்ம ஜாதகத்துக்கும் புதனுக்கும் சம்பந்தமே இல்லை. (புதன் பகை -விரயாதிபத்யம் -ஜன்மத்துல கீறாரு) ஏதோ கடகலக்னத்துல குரு கீரதால ஒரு இன்ட்யுஷன்ல எல்லாத்தயும் மேனேஜ் பண்ணிக்கிட்டிருக்கேன். ஆனால் நம்ம டார்கெட் வெறும் ஜோசியமில்லிங்கண்ணா.

ஜொசியங்கறதை ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி – உங்க மனசுல இடம் பிடிக்க ஒரு கர்ச்சிஃப் மாதிரி யூஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். உங்க நம்பிக்கையை பெற என் கிட்டே இருக்கிறதுலயே அற்பமான மேட்டரை சேம்பிள் பாக்கா தரேன். ஒரிஜினல் சரக்கு அப்பாறம்.

நமக்கும் ஜோசியம் “ஏதோ” தெரியும். அம்புட்டுதேன். நான் என்ன சொல்றேன்னா நவகிரகம்ங்கறது கடவுளோட படைப்பு. கிரகங்களை பத்தி சதா சர்வ காலம் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருந்துட்டா “ஆவிசு” ஆய் பூடும்.

தாளி கிரகத்துக்கே இம்மாம் பவருன்னா இதையெல்லாம் படைச்ச கடவுளுக்கு எம்மாம் பவர் இருக்கும்னு ரோசிங்க. “கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்”

துரியோதனை கூப்டு கிட்ணரு “யப்பா.. நாட்ல எவனா நெல்லவன் கீறானா பார்த்துக்கினு வா”ன்னாரு. அவன் போய் வந்து ” அட ஆருமே இல்லை தலை”ன்னானாம்.

உடனே கிட்ணர் தர்மராசாவ கூப்டு ” நைனா .. நாட்ல எவன்னா மொள்ளாமாரி கீறானா பார்த்துக்கினு வா” ன்னாரு. அவன் போய் வந்து ” அது மேரி ஆருமே இல்லியே கிட்ணா.. எல்லாம் பெரீமன்சனாதான் கீறாப்ல கீது”ன்னானாம்.

இதுலருந்து இன்னா தெரீது. “தான் திருடி பிறனை நம்பான் -கூத்திகள்ளன் பெண்டாட்டிய நம்பான்” தன்னை மாதிரிதான் அல்லாரும் நெனச்சிக்கிற்துதான் சனம் கேரக்டரு.

கடவுள் பிசினஸ்ல கூட இதே ஃபார்முலாதான்பா ஒர்க் ஆவுது. இருக்கிற கடவுள் ஒர்த்தன் தேன். பேரு இன்னா இன்னாமோ வச்சிக்கிறானுவோ , இன்னான்னாவோ ரூவம் கொடுத்து வச்சிக்கிறானுவோ. அட ஒரு ராமனையே எடுத்துக்கோ.. அத்வானியோட ராமர் ,” தாளி, மன்சன் மன்சன் குந்த குடிசை இல்லாம சாவட்டும்.. எனக்கு ஃபர்ஸ்ட் கோவிலு கட்டு” ங்கறாரு

என்னோட ராமன் ” நைனா.. காதலர்கள் இருக்கிற வரை தான் காதலுக்கு மருவாதி. கத்துக்கறவன் இருக்கிற வரைக்கும் தேன் வித்தைக்கு மருவாதி – பக்தருங்க இருக்கிற வரை தான் எனக்கு மருவாதி.. ரகசியமா தின்னு பகிரங்கமா கழிஞ்சு கால்ரா வந்து அல்லாரும் பூட்டா நான் இருந்து இன்னா .. இல்லாம இன்னா மொதல்ல அல்லாருக்கும் கக்கூஸு கட்டுங்கறாரு.

கடவுளே இல்லிங்கண்ணா சப்ஜெக்டு கூட இம்புட்டுதேன். நீங்க இன்னா சப்ஜெக்டு டீல் பண்ணாலும் தாளி அதுல உங்க கேரக்டர் இன்செர்ட் ஆயிருது. நம்ம சோசியத்தையே எடுத்துக்கயேன். இத்தீனி யுகமா சொன்ன சோசியத்துக்கும் நம்ம சோசியத்துக்கும் எம்மாம் டிபரன்ஸ் கீது பார்த்தியா?

எப்டி? எப்டி? எப்டி? நம்ம கேரக்டர் இதுல மிக்சிங்க் ஆயிருது பாஸ்! ” அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு”ங்கறது நம்ம கேரக்டர். அதனால கிரகம் நம்ம ரூல் பண்றதா? அதை நாம ரூல் பண்ண சான்ஸே இல்லியானு என் அடிமனசு துடிச்சிக்கினு கடந்துச்சு.

எண்ணம் செயலாச்சு. சோசியத்தோட அடிப்படை என்னானு தெரிஞ்சிக்கினேன். நம்ம சோசியம்னு ஒரு சோசியமே உருவாயிருச்சு.

பரிகாரம் மேட்டர்லயும் இதேதான்.மேலுக்கு பார்த்தா ஆம்பளை பொம்பளை அறுத்து பார்த்தா ஒன்னு ரெண்டு உருப்படி சாஸ்தியா – வித்யாசமா இருக்குமே தவிர மேட்டர் ஒன்னுதேன். அவளும் மன்ச சம்மம் தானேனு உறைக்கும். அப்படி சோசியத்தை அறுத்து ப்பார்த்தேன் (டிசக்சன்)

அல்லாம் கரீட்டு . ஆனால் இதெல்லாம் எப்டி ஒர்க் அவுட் ஆச்சு? நான் பொறந்த அதே லக்னத்துல ஜஸ்ட் இந்தியாவுல மட்டும் நான் இல்லாம 479 பேர் பொறந்தாய்ங்க .அவிகல்லாம் எங்கே ? அவிக ஆரும் அறுத்து பார்க்கலியே? மேட்டரை வெளிய கொண்டாரலியே. ப்ளாக் வைக்கலியே..இப்படி பட்டைய கிளப்பலியே?

“தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்” “தட்டுங்கள் திறக்கப்படும்” “கேளுங்கள் கொடுக்கப்படும்” இதெல்லாம் ஃப்ரீ பைபிள்ள கிடைச்ச கொட்டேஷன் இல்லே பாஸ். ஏசுங்கற சாதகனோட ( சாதனை செய்பவன் சாதகன்) அனுபவம் இது.

இதை தாண்டி போகனும். (எடிசன் பல்பு கண்டுபிடிச்சாரு – நாம குண்டு பல்புலயேவா நின்னுட்டம்) நீங்க இன்னா நினைக்கிறிங்கன்னா கேள்வி மொதல்ல பிறக்குது ..கேள்விக்குடையவன் தேடினா பதில் கிடைக்கும்.

நான் இன்னா சொல்றேன்னா தாளி பதில் ஏற்கெனவே கிடக்கு. அது கேள்விய தேடுது. கேள்வி எங்கே இருந்தா அங்கன போயி லிங்க் ஆயிருது.

பதிலை அங்கன அண்டை வெளியில மிதக்கவிட்டது ஆரு? கேள்விய இங்கன பிறப்பிச்சது ஆரு ? இதெல்லாம் அவன் அருளாலே அவன் தாள் பணிந்துங்கற மாதிரி குழப்படி கேஸு.

நான் இன்னா சொல்லவரேன்னா ஆண்டவன் சச்சிதானந்த ஸ்வரூபன்னு சொல்றாய்ங்க. சத் – நல்ல , சித்தம் -மனம் நல்ல மனசுல விளையக்கூடிய ஆனந்தம்தேன் கடவுள். நாமெல்லாம் அவனோட வாரிசுகள். மன்சனை சத்யான்வேஷிங்கறாய்ங்க. நான் சொல்றேன் சுகான்வேஷி.

இவனுக்குள்ள அந்த துடிப்பு விதை வடிவில் இருக்கு. ஆனந்தத்தை தேடறான். சிலர் செக்ஸுல நின்னுர்ரான். ஒரு சிலர் பயணத்தை தொடர்ரான். ஜோசியங்கறது இயற்கையை வியத்தல். படைப்பை கண்டு பிரமித்தல். அடுத்த ஸ்டெப் என்ன/ படைப்பாளியை நெருங்கனும். அதனாலதான் அப்பப்போ ஒரு பஞ்ச் டயலாக் விடறது வழக்கம் . ” ஜோதிடம் ஆன்மீகத்தின் முதல் படி”

வட்டிஞ்சே வாடு மனவாடைதே ஏ பந்தைதே ஏமுந்தி?” அதாவது வட்டிக்கிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்தா என்ன?

இந்த உலகமே ஒரு ரெஸ்டாரண்ட். நம்ம ஜாதகம்தான் டெபிட்/ க்ரெடிட் கார்டு (டெபிட் கார்டுன்னா கிரகயோகங்கல் புஷ்கலமா இருந்தாலும் அதை ஓவரா எக்ஸாஸ்ட் பண்ணாம அடக்கி வாசிக்கிறது. -க்ரெடிட் கார்டுன்னா அலைஞ்சு பறை சாத்தி கிரகங்களையெல்லாம் ஓவர் டைம் பண்ணவச்சு – ஒட்டக்கறந்து கடைசி காலத்துல அல்லாடறது)

இங்கே கடவுள் ஹோஸ்ட். நாம கெஸ்ட். ஹோஸ்ட் ( வட்டிக்கிறவன்) நம்மாளா இருந்தா கார்டு ,கவர் எல்லாம் தேவையே இல்லை.

மாத்தி யோசிங்கப்பு…

21 thoughts on “பதில் மிதக்குது அங்கே ! கேள்வி பிறக்குது இங்கே!!

  சாமி யார்? said:
  March 16, 2011 at 2:48 am

  ஐயா,
  மன்னிக்கவும், தங்கள் அனுமதி இல்லாமல் பப்ளிஷ் பண்ணியதற்கு.

  http://saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.html

   S Murugesan said:
   March 16, 2011 at 10:03 am

   சாமியார்,
   இதுல என்ன தப்பிருக்கு. சோர்ஸ் சொல்லியிருக்கிங்க . நம்ம சைட்டுக்கான லிங்கை கொடுத்திருக்கிங்க. இதுக்குஎன்னத்த அனுமதி ..

   சொல்லப்போனா இது ஒரு இன்ப அதிர்ச்சி நன்றி

  Sankar Gurusamy said:
  March 16, 2011 at 4:27 am

  திரு சித்தூர் முருகேசன் அவர்களுக்கு, நான் கடந்த சில நாட்களாக தங்களின் வலைப்பூவை வாசித்து வருகிறேன். மிக அற்புதமான படைப்புகள். ஒரு மனிதன் பல ஆண்டு ஆன்மீக சாதனைக்கு பின் உணரவேண்டியவற்றை மிக எளிதாக கலோக்கியலாக எழுதி உள்ளீர்கள். இதுவே ஒரு மிகப்பெரிய சாதனை. தங்களின் இந்தப்பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும் போது என் வலைப்பூப் பக்கம் வரவும்.

  http://anubhudhi.blogspot.com/

  அன்புடன்

  சங்கர் குருசாமி

   S Murugesan said:
   March 16, 2011 at 9:59 am

   வாங்க சங்கர் குருசாமி,
   இதெல்லாம் நான் உணர்ந்த விசயங்கள்.உணர்த்தப்பட்ட விஷயங்கள்.அனுபவத்தால் சரிபார்க்கப்பட்ட விஷயங்கள். இப்பம் கொஞ்சம் “கற்பு” நிலை தவறியிருக்கிறதால பஜ்னு கீது தட்ஸால்

  veera said:
  March 16, 2011 at 4:32 am

  //துரியோதனை கூப்டு கிட்ணரு “யப்பா.. நாட்ல எவனா நெல்லவன் கீறானா பார்த்துக்கினு வா”ன்னாரு. அவன் போய் வந்து ” அட ஆருமே இல்லை தலை”ன்னானாம்.

  உடனே கிட்ணர் தர்மராசாவ கூப்டு ” நைனா .. நாட்ல எவன்னா மொள்ளாமாரி கீறானா பார்த்துக்கினு வா” ன்னாரு. அவன் போய் வந்து ” அது மேரி ஆருமே இல்லியே கிட்ணா.. எல்லாம் பெரீமன்சனாதான் கீறாப்ல கீது”ன்னானாம்.//

  ஹா ஹா ஹா. அதகளம்

   S Murugesan said:
   March 16, 2011 at 9:57 am

   வாங்க வீரா,
   நன்றி. பாயிண்டை பிடிச்சிங்களா? உங்க நாலெட்ஜ்ல உங்க கேரக்டர் இன்செர்ட் ஆகி கரப்ட் ஆக்குது. சனம் சோசியத்தை மட்டுமில்லை கடவுளையும் இப்படித்தேன் கரப்ட் ஆக்கிட்டாய்ங்க.

  R V Ramanan said:
  March 16, 2011 at 6:28 am

  anbhare,

  puriyudhu.intha thelivu complete still ness aagha maara en praarththanaighal

  regards
  ramanan

   S Murugesan said:
   March 16, 2011 at 9:49 am

   வாங்க ரமணன் !
   நன்றி. அல் -குரான்ல சொல்லியிருக்காம்” உங்களில் இருவர் ஒன்றையே கோரும்போது நாம் உடனே நிறைவேற்றுகிறோம்”

   உங்களுக்காக நான் எனக்காக நீங்க. ம்யூச்சுவல். சூ………ப்பர் .

  தனி காட்டு ராஜா said:
  March 16, 2011 at 7:46 am

  🙂

  swami said:
  March 16, 2011 at 11:36 am

  excellent post.

   S Murugesan said:
   March 16, 2011 at 12:08 pm

   Swami,
   Thank you. I divert your compliments to the “அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்”

  RV RAMANAN said:
  March 16, 2011 at 1:07 pm

  mikka nanri anbhare

  ramanan

  syed said:
  March 16, 2011 at 6:26 pm

  kadavul marrum girgangal parriya thangal vilkkam miga arumai
  giragangal kadavul kodutha velaigalai thavaraamal seithu varuginranar enathu en karuthu

  parigaarangal enbathu giragangalai naam emaarruvathu pol aagaatha?

  syed said:
  March 16, 2011 at 7:12 pm

  kadavul marrum giragangal parriya thangal vilkkam miga arumai
  giragangal kadavul kodutha velaigalai thavaraamal seithu varuginranar enpathu en karuthu

  parigaarangal enbathu giragangalai naam emaarruvathu pol aagaatha?

   S Murugesan said:
   March 17, 2011 at 9:45 am

   சையத்,
   கடவுளை மட்டும் ( மட்டும் அண்டர் லைன்) நம்பறதுதான் உண்மையான ஆத்திகம். கிரகத்தை நம்பறதே நாத்திகம் தான். இதுல கிரகத்தோட தீய பலனை தடுத்து நிறுத்துவேனு புறப்படறது நாத்திகத்திலயும் நாத்திகம் தானே.

   கிரகத்தோட பவர் ஒரு புல்லெட் மாதிரி. அது புறப்பட்டாச்சு. ஆனால் கடவுள் நம்மையும் சுதந்திரர்களாத்தான் விட்டு வச்சிருக்காரு. அதை பயன்படுத்தி அந்த புல்லெட்டுக்கு படக்குனு தோளை காட்டு , உன் செல்வத்தை காட்டு, உன் பதவியை காட்டு. இதுதான் உன்னால முடியுமே தவிர புறப்பட்ட புல்லெட்டை நிறுத்த அந்த ஆண்டவனாலயாச்சும் முடியுமான்னு கேட்டு சொல்றேன்

  Anand said:
  March 17, 2011 at 4:56 am

  நல்லா எழுதறீங்க ஆனா எல்லாருக்கும் புரியற மாதிரி எளிய தமிழை பயன்படுத்தி எழுதினால் நிறைய மக்களை சென்றடையுமே .நீங்க எழுதுற சென்னை தமிழ் பேச வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் படிக்கும்போது புரிந்துகொள்ள நிறய நேரம் தேவைப்பட்டு எரிச்சலை மட்டுமே உண்டு பண்ணு கிறது .பல நேரங்களில் 2 பத்தி படித்து முடிப்பதற்குள் பொறுமை இழந்து பக்கத்தை மூடிவிடுகிறேன். உண்மையில் இந்த மொழி பேசும் பெரும்பான்மையான மக்கள் இன்டர்நெட் பயன்படுத்துவதில்லை..ஆகையால் வழக்கத்தில் உள்ள எழுத்து நடை தமிழை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்

   S Murugesan said:
   March 17, 2011 at 5:46 am

   ஆனந்த்,
   இன்றைய பதிவை படியுங்கள்.

  syed said:
  March 17, 2011 at 11:15 am

  parigaarangalukk nalla vilakkam kuduthinga

  vidiya madiyaala dabaykkalaamnu puriya vaikkireenga

  unga uthaviyoodu naanum muyarchi panren

   S Murugesan said:
   March 17, 2011 at 3:26 pm

   சையத் பாய்,
   கடவுள் பெரிய சேடிஸ்ட். ஸ்விட்ச் போர்ட் எல்லாம் நம்ம கண்ட்ரோல்ல கொடுத்து மெயின் ஸ்விட்சை தன் கையில வச்சிருக்காரு. நான் சொல்றதெல்லாம் ஸ்விட்ச் போர்டு சமாசாரம் தேன் (ஜுஜுபி -அதுவும் இதெல்லாம் “அவர் ” அருளால ஏற்கெனவே அருளாளர்கள் வாழ்வில் நடந்தவைதான்.

   ஆனால் நம்ம சனம் இன்னம் ஸ்விட்ச் போர்டையே ஆப்பரேட் பண்ண கத்துக்கலியே

  karthi said:
  March 18, 2011 at 10:31 am

  ஆனந்த் சொன்ன கருத்தை நானும் வழிமொழிகிறேன்….
  இந்த தமிழை படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் மிகவும் கடினமாக உள்ளது…
  உரை நடை தமிழை உபயோகப்படுத்துங்கள்..

   S Murugesan said:
   March 18, 2011 at 12:09 pm

   கார்த்தி சார்,
   மாறுவம். மாறுவம். என்ன கொஞ்சம் கொஞ்சமா தான் மாறமுடியும் .வயசாகுதுல்ல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s