சோனியாவுக்கு ராகுல் ஜாதகமும் ஆப்புதேன்

Posted on

பீகார் மேட்டர்லயே ராகுல் டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இருந்தாலும் அதை ஜோதிட ரீதியாவும் உறுதிப்படுத்திக்கனுங்கற எண்ணத்துல தான் இந்த பதிவே . ஐயாவுது மிதுன லக்னம்,விருச்சிக ராசி. ஜாதகத்தை தூக்கி பக்கத்துல வைங்க. தாளி விருச்சிக ராசிங்கறதே அரசியலுக்கு ஒரு டி க்வாலிஃபிகேஷன் தேன். மக்கள் ஆதரவு பெறனும்னா சந்திர பலம் ரெம்ப முக்கியம். விருச்சிகத்துல தான் சந்திரன் நீசமாகறாரே. அப்பாறம் எங்கே சப்போர்ட்டு ?

நரசிம்மராவ் பாவம்.. அவர் இவிக ஆரும் பண்ணாததா புதுசா பாவமேதும் பண்ணலை. இன்னைக்கு மன்மோகனார் கிழிச்சுக்கிற தாராளமயமாக்கலுக்கு நரசிம்மராவுதேன் மூலகர்த்தா. காங்கிரஸ் கட்சியை காணாம போயிராம காபந்து பண்ணி நேரு குடும்பமல்லாத தன் தலைமையின் கீழ் காங்கிரஸ் ஆட்சியை அதுவும் மைனாரிட்டி அரசாங்கத்தை ஒப்பேத்தினதுக்கே சிலை வைக்கலாம்.ஆனால் ங்கொய்யால அந்தாளோட பிணத்துக்கு கூட தில்லில இடம் தரலை.இதான்விருச்சிக ராசி நிலைமை. ( தாக நீலு லேதுங்கறாய்ங்களே அது இவிகளுக்கு சால பொருந்தும்.

நெஜமாலுமே இவிகளுக்கு ஜலயோகம் கிடையாதுங்கோ. மேலும் நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை வரவும் அதிகவாய்ப்புண்டு. ப்ளட் ப்யூரிஃபிகேஷன்லயே பிரச்சினை இருக்கும். சக்கரத்துல 8 ஆவது ராசிங்கறதால ரிஸ்க் எடுக்கிறது இவிகளூக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி. ஆனால் வெற்றி? அந்தந்த காலகட்டத்துல உள்ள நேரம் யோகத்தை பொருத்து இது அமையும். நேரம் சரியில்லின்னா எல்.ஐ.சி மேல இருந்து குதிச்சகதை தேன்.

லகன்ம் மிதுனம்.லக்னாதிபதியான புதனே விரயத்துல ( நெல்லாவே விளங்கும்யா) கடைக்கால் இல்லாத வீடு இந்த ஜாதகம். லக்னத்துல சூரியன் இருந்தாலே அகங்காரத்துல அழிஞ்சு போயிருவாய்ங்க தங்க தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு அடுத்தவுக துக்கமும் ஃபணால்.

லக்னத்துல சூரியன் இருந்தா தனக்காக செய்யற எதுவும் உருப்படாதுனு ஒரு கணக்கும் உண்டு. இதுல இங்கன செவ் வேற . லக்னத்துல ஒரு அஸ்தங்கத கிரகமிருந்தா போக போக ஜாதகர் தனிமைப்பட்டு போவாருன்னு ஒரு கணக்கு ( சீந்தற நாயே இருக்காது)

சூரியன் செவ் ரெண்டு பேரும் சேர்ந்தா ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்துக்கு அய்யாவோட ஜாதகமும் ஒரு காரணம்னு அடிச்சு சொல்லலாம். இது இவருக்கும் நடக்க வாய்ப்பிருக்குங்கறதுதான் சோகம்.

லக்ன செவ்;
அதி கோபத்தால் வரும் வியாதிகள் (ஹை பிபி) அல்லது கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் ( அல்சர்) இவருக்கு வரலாம். நிலம்,சகோதரம், எதிரிகள் தொடர்பாக விவகாரங்கள் வரலாம். மேலுக்கு சமாதானமாய் போனாலும் உள்ளுக்குள் விரோதம் கனன்று கொண்டே இருக்கும். எச்சரிக்கை தேவை.

4 ஐ பார்ப்பதால்:

தாய், தாய் வழி உறவு , வீடு ,கல்வி,இதயம், அன்புக்குகந்தவர்கள் வாகனம் வகையிலும் பாதிப்பு வரலாம்.
இதய நோய் கூட வரலாம்.
7 ஐ பார்ப்பதால்:
ஜாதகருக்கு காதல்திருமணம் அ பெரியோரில் சிலருக்கேனும் விருப்பமில்லா திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது. அதே சமயம் அனைவரையும் எதிர்த்து மணந்தாலும் மனைவி வகையிலும் இவருக்கு நிம்மதி கேள்விக்குறியே.
8 ஐ பார்ப்பதால்:
தீ,மின்சாரம்,எதிரிகள்,வெடி பொருட்களால் ஆபத்து.
சூரியன்+செவ் கூட்டுப்பார்வை 7 ஆமிடத்தின் மேல் விழுவதால் காதல் தோல்வி அ மனைவிக்கு தீ,மின்,வெடி விபத்து நிகழலாம்.
2ல் சுக்கிரன்:
5 க்கு அதிபதியான சுக்கிரன் 2ல் நின்றதால் நல்ல பேச்சுத்திறமை இருக்கும்.இவருக்கே விரயாதிபத்யமும் இருப்பதால் கலைஞர் கணக்கா பேசியே காரியம் கெட்டுப்போகவும் வாய்ப்பிருக்கு.
3ல் கேது: தைரியத்தை தரும். இந்த பாவாதிபதியான சூரியன் லக்னத்தில் நின்றார். இந்த பாவத்தை விக்கிரமஸ்தானமுனும் சொல்றாய்ங்க,மாரக ஸ்தானம்னு சொல்றாய்ங்க. இதனால துணிச்சல்ங்கற பேர்ல தற்கொலைத்தனமான முடிவையும் எடுத்துரலாம்.
5ல் குரு:
குரு மீன்ஸ் ப்ளானிங். இவர் 7,10க்கு அதிபதி. இதனால ப்ளான் பண்றதுல புலிங்க இவர் டீம்ல இருப்பாய்ங்க. ப்ளான் பண்ணி வேலை செய்றவுகளும் இருப்பாய்ங்க. ஆனால் குரு இந்த லக்னத்துக்கு பாவிங்கறதால அவிகளே ஆப்பு வைக்கலாம். அ அவிக ப்ளான் எல்லாம் அப்செட் ஆகலாம்.குருவுக்கு களத்ராதிபத்யமும் கிடைச்சதால ஒரு பிராமண பெண்ணை மணக்கவும் வாய்ப்பிருக்கு.
இங்கன குரு தனிய நின்னதால அந்தணன் தனித்து நின்றால் விதிப்படி அவப்பேர் வந்து சேரும்.அ நியாயத்துக்கு வீண்பழி சுமக்கவேண்டி வரும்.
விருச்சிகத்துல சந்திரன் நீசம்னுட்டு ஏதேதோ சொன்னேன். இது எல்லா விருச்சிக ராசிக்காரவுகளுக்கும் வரனும்னு ரூல் இல்லே. ஆனால் அதே சந்திரன் ரோக ஸ்தானமான 6 ல நின்னதால ராகுலுக்கு ப்ரைட் சான்ஸஸ் இருக்கு.
ராகு 9ல நின்னாரு. இதனால தான் அப்பா ஒரு சதிக்கு பலியாயிட்டாரு. ( குனிஞ்சு வணங்கறாப்ல தான வெடிச்சு விட்டாய்ங்க) . மேலும் நம்மாளூ தூர பிரயாணம்லாம் போய் சுத்தி சுத்தி வந்தாலும் புஸ்ஸுதேன். ஏன்னா இவர் நின்ன இடத்ததிபதியான சனி மேசத்துல நீசம்.
சனி 8க்கு அதிபதி என்பதால் இது ஜாதகருக்கு ஆயுளை கொஞ்சம் பொல பெருக்கலாம்.அதற்காக தீர்காயுசுன்னெல்லாம் நினைச்சுராதிங்க.
அஷ்டமாதிபதியாகி இவர் 11 ல் நின்னதால ஜாதகருக்கு நரம்பு,ஆசனம்,கால் தொடர்பான பிரச்சினைகளில் ஏதேனும் ரெண்டு தீர்க காலத்துக்கு பாதிப்பை தரும்.
சனிக்கு பாக்கியாதிபத்யமும் கிடைத்திருப்பதால் தந்தை அசால்டா உயில் சொத்து கணக்கா பதவியை பெற்றார். சனிக்கு அஷ்டமாதிபத்யமும் கிடைச்சிருக்கிறதால செத்தும் போனாரு.
அல்லாத்துக்கும் முந்தி சொன்ன பாய்ண்டு. லக்னாதிபதி விரயம்.ஜாதகம் ஒரு வீடுன்னா லக்னாதிபதி கடைக்கால் மாதிரி . நீங்க 32 ஆம் நெம்பர் ஃப்ளாட்ல வீடு கட்டனும்னா கடைக்காலும் 32 ஆம் நெம்பர் ஃப்ளாட்ல தானே போடுவிங்க. பக்கத்து ஃப்ளாட்ல போட்டுட்டா என்னாகும்? அதே நிலைதான் இந்த ஜாதகத்துக்கும்.இதனால்
சர்வ காலம் தங்கள் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது, ஸ்திரமான அபிப்ராயம் இல்லாது போதல் போன்ற குணங்கள் ஏற்படும். அல்லல் அலைச்சல் தூக்கமின்மை , விரயமான பிரயாணங்கள்,இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது போன்ற பலனும் ஏற்படும்.
(இப்ப புரிஞ்சதா பார்ட்டி ஏன் இப்படி அல்லாடுதுன்னு) கோசாரம்னு பார்த்தா மே8 வரை குரு ஓகே, மே 16 வரை ராகு கேது ஓகே.
ஆனா டிசம்பர் 12 வரை சனி 4 ல கீறாரு. இவ்ரு தான் டபுள் ஆக்சனாச்சே இப்படி பார்த்தா பாக்யாதிபதி அப்படி பார்த்தா அஷ்டமாதிபதி.பாக்யாதிபதியா நிறையவே ஒர்க் அவுட் பண்ணியாச்சு. மிச்சம்? ரெம்ப சீரியசால்லாம் நினைச்சுராதிங்க ( அப்படி நடந்தாலும் நடக்கலாம் இல்லேங்க மாட்டேன்) மரணத்துக்கு சமமான துக்கம் கூட ஏற்படலாம்.
30/Mar/2007 முதல் ஆரம்பிச்ச சந்திர தசையில 28/Feb/2010 முதல் குரு புக்தி ஆரம்பிச்சு => 30/Jun/2011 வரை நடக்க போவுது.
பாவியான குரு அஞ்சுல உட்கார்ந்து சூப்பர் ப்ளானர்சோட பக்காவா ப்ளான் பண்ண வச்சு, பக்காவா பல்ட்டி அடிக்க வச்சு ” நிந்தனைக்கு” ஆளாக்கப்போறாருங்கோ ..

Advertisements

31 thoughts on “சோனியாவுக்கு ராகுல் ஜாதகமும் ஆப்புதேன்

  டவுசர் பாண்டி said:
  March 15, 2011 at 1:50 am

  தல, பதிவு அருமையா கீது. எலக்சன் நேரத்துல இத மாரி பதிவத்தேன் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தோம். தேர்தல் தேதிய மாத்தச்சொல்லி சவுண்டு குடுத்துக்கிட்டு இருந்தாங்களே, அதுக்கும் ஜோதிடத்தும் ஏதும் லிங்க் உண்டாபா.

   S Murugesan said:
   March 15, 2011 at 5:07 am

   பாண்டி,
   அறுதாலிக்கு எவ்ள நெல்ல முகூர்த்தத்துல கண்ணாலம் பண்ணாலும் அறுக்கிறது நிச்சயம். என்ன ஒன்னு ரெண்டு நாள் அதிகம் வாழலாம். நல்ல லீட் கொடுத்திங்க பாஸ்! ஆமா ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்குமா? எட்டுக்கா? சொன்னா நோண்டி நுங்கெடுத்துருவமில்லை

  டவுசர் பாண்டி said:
  March 15, 2011 at 1:54 am

  தல, ஒன்னோட வெப்சைட்டு நேத்து மதியம் ஒபெனாக மாட்டேண்டுபா. படா பேஜாரா இருந்துச்சுப்பா. நல்லவேளயா, நீ நெரிய வெப்சைட் வச்சிக்கிரதால எங்களுக்கு வசதியா பூடுச்சுப்பா.

   S Murugesan said:
   March 15, 2011 at 5:04 am

   டவுசர் பாண்டி,
   நேத்து மதியம் சைட் ஓவர் கப்பாசிட்டி ஆயிருச்சு. ( 1246 ஹிட்ஸ்) அதான் பாஸ் இப்படி ஆகிப்போச்சு. அப்பாறம் சர்வரோட பளுவை குறைச்ச பிறவு ( இம்போர்ட்டட் போஸ்டெல்லாம் தூக்கியாச்சு) நேராச்சு.

  டவுசர் பாண்டி said:
  March 15, 2011 at 1:58 am

  ஏம்பா, வர்ற பத்தொம்பதாம் தேதி பூமிக்கு பக்கத்துல ஏதோ ஒரு கெரகம் வர்துன்னு சொல்றாங்களே, அதால ஏதும் பாதிப்பு உண்டா தல.

   S Murugesan said:
   March 15, 2011 at 5:01 am

   டவுசர் பாண்டி,
   19 ஆம் தேதியோட ஹீரோ சந்திரன் . அஸ்ட் ராலஜிக்கும் அஸ்ட் ரானமிக்கும் நிறைய வித்யாசமிருக்கு. நீங்க சொல்ற மேட்டர்ல அஸ்ட் ராலஜரோட ரோல் ரெம்ப கம்மி வாத்யாரே. சந்திரன் ஜல காரகன் -சமுத்திரத்துக்கு அதிபதி-ஹ்யூமன் பாடில உள்ள வாட்டர் கன்டென்ட், மனம், நுரையீரல் ,சிறு நீரகத்துக்கு இவர் தான் காரகர். கடகத்துக்கு ராசி நாதன். விருச்சிகத்துல நீசம் அடைவார்.

   19 ஆம் தேதி பூரம் -உத்தரம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கிறார். ( சிம்ம -கன்னி) இவரோட திசை வாயு மூலை. ஏதாச்சும் நடந்தா அது மேற்சொன்ன விசயங்களில் பாதிப்பை தரலாம்ங்கறது என்கருத்து.

   சில அமைப்புகள் பிரளயமே ஆரம்பிச்சுருச்சுன்னு காபரா பண்றாய்ங்கப்பா. சனம் காபரே போயிரப்போவுதுனு தேன் இந்த விவரமான பதில்

  Vinoth said:
  March 15, 2011 at 6:09 am

  சரி தல, இந்திரா காந்தி/ராஜிவ் காந்தி ஜாதகம் இருக்கா?
  1) ஏன் அவங்க குடும்பத்தில் மட்டும் 3 தலை முறையாக மோதில்லால் நேருவுக்கு அப்புரம்
  பல கோடி மதிப்புள்ள பரம்பரை சொத்துக்கள் இருந்தாலும்..யாருக்கும் குடும்பம் சரியில்லை?.

  2) இந்திரா, ராஜிவ், சஞ்சய் கொலை /அகால மரணம்..அதேபோல் ராகுலுக்கும் ஏற்பட வாய்ப்பு.?

  3) ஒரு சின்ன பாவம் செய்தாலே அது வளரும் , எதிர் காலத்தில், அடுத்த பிறவிகளில் வட்டியுடன் அதற்கு கணக்கு தீர்க்க வேண்டும்னு இருக்கு. அப்போ.. ஈழதமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படும்போது கணவர் கொலைக்கு பழி வாங்குவதாக நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்தது / மறைமுகமாக உதவி செய்தது இதெல்லாம் இவர்களின் எதிர்கால சந்ததியை பாதிக்குமா? பாதிப்பு இருக்கும்ன எப்படி இருக்கும் ?

   S Murugesan said:
   March 15, 2011 at 9:09 am

   அய்யா வினொத்!
   சபிக்கப்பட்ட குடும்பங்கள்னு தனிப்பதிவே போட்டிருக்கேன். படிக்கலியா? விரையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா? மாதா செய்தது மக்களுக்கு. டீடிக்காஷனை பால்ல விட்டா போர்ன்விட்டாவா கிடைக்கும். கொய்யா மரத்துக்கு கொய்யாதான் காய்க்கும்

  Vinoth said:
  March 15, 2011 at 6:45 am

  பிரியாங்கா ஜாதகம் ஏதும் பாதிப்பை ஏற்படுத்தாதா?

   S Murugesan said:
   March 15, 2011 at 9:07 am

   வாங்க வினோத்,
   “ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்க”னு புலம்ப வைக்கிறிங்க (ஐ மின் பெருமையாத்தான்) அதை ஏன் விட்டு வைக்கனும்/. பார்த்துருவம்

  R V Ramanan said:
  March 15, 2011 at 6:47 am

  Dear sir, Excellent analysis. I totally agree with most of what you say. One small clarification. Though Jupiter has both kendradipatya dosha as well as baadhaka for Mithuna lagna, his being posited in a trine and aspecting the 9th, 11th and the 1st, should mitigate atleast some of the negatives in this chart.
  Warm Regards,
  Ramanan

   S Murugesan said:
   March 15, 2011 at 9:06 am

   வாங்க ரமணன் சார்,
   டெக்னிக்கல் விளக்கம்லாம் கொடுக்கிற அளவுக்கு நம்ம இங்கிலீஷு சரி வராது. அதான் தமிழ்ல இறங்கிட்டன். ஒஙக பாயிண்டுக்கே வரேன். குரு இருக்கிற இடத்தை நசிக்க வைதது ( ஆண் வாரிசு ப்ர்ர்ர்ர்ர்) பார்க்கிற இடத்தை டெவலப் பண்ணனும். ஒகே. அஞ்சாம் பார்வையா 9 ஐ பார்த்து ராஜீவை காப்பாத்தினாரா/ சரி ஓஞ்சு போவட்டும் அங்கன ராகு விட்டுருவம்.

   ஏழாம் பார்வையா 11 ஐ பார்த்தாரு அக்கா கதை என்ன ஆச்சு? சரி ஒஞ்சு போவட்டும் அங்கன சனி. 9 ஆம் பார்வையா லக்னத்தை பார்ததாரு.. அங்கன சூ,செவ் இருக்காய்ங்க. ஒரு ராகு /ஒரு சனியையே சமாளிக்க முடியாத குரு சூ,சந்திரனையா சமாளிப்பாருங்கறிங்க?

   அப்படி பார்த்தது ஒர்க் அவுட் ஆயிருந்தா ஏன் அவரோட ப்ளான் எல்லாம் ரிவர்ஸ் ஆகுது/

    டவுசர் பாண்டி said:
    March 15, 2011 at 11:04 am

    ஒனக்கு நெறைய மொழி தெரிஞ்சிருந்தாலும் தமிழ்ல பதில் சொன்னதுக்கு நன்றி தல. நீ பாட்டுக்கு இங்கிலிஷ்ல பீட்டர் வுட்டுக்குனு இருந்தேன்னு வை, எங்க பாடு கஷ்டந்தேன். எதுனாலும் என்ன மாறி மரமண்டைகளுக்கு புரியிரமாதிரியே சொல்லு கன்னு.

    S Murugesan said:
    March 15, 2011 at 3:22 pm

    வாங்க டவுசர்,
    தமிழ்ங்கறது அம்மா பால். மாதிரி. ( பால் காரவுக சொல்ற – அம்மா! பால் – இல்லே.

    இங்கிலீஸு டப்பா பாலு தலை . திடீர்னு வவுத்த கலக்கும், செரிக்காது, இன்னாத்துக்குபா லொள்ளு.

    தமில் தமிலுதான் – டகுலு டகுலுதேன்.

  Vinoth said:
  March 15, 2011 at 10:24 am

  //..சபிக்கப்பட்ட குடும்பங்கள்னு தனிப்பதிவே போட்டிருக்கேன். படிக்கலியா? ..//
  பார்த்தேன்… அதிலும் நான் தான் கமெண்ட் போட்டு இருக்கேன்..
  Vinoth said…

  நம்ம இத்தாலி அம்மா குடும்பத்தை பாருங்க முதல்லே.. நேரு காலத்தில் மனைவி நோயாளி..
  இந்த்ரா குறுகிய காலத்தில் விதவை, 2 மருமகளும் இப்போ விதவை, மகன் 37 வயசு இன்னமும் சட்டப்படி(?) திருமணம் நடக்கல…

  இதை ஆராய்ந்து சொல்லுங்க..
  February 7, 2011 12:03 AM

   S Murugesan said:
   March 15, 2011 at 3:44 pm

   vinoth sir,
   உசுப்பேத்தியே ரணமாக்கிடறதுங்கற முடிவுல இருக்கிங்க. பார்ப்போம். (ரெம்ப பர்சனலா போகுமேனு பார்க்கிறேன்)

  Vinoth said:
  March 15, 2011 at 10:49 am

  சாரி… திரும்பவும் ஒரு சந்தேகம் தல…
  அதாகப்பட்டது என்னன்ன…..

  இந்திரா/ராஜிவ் நேரு குடு வாரிசு..
  அதனால சபிக்கப்பட்ட வம்சம்…..
  சாபத்தை அனுபவிக்கிறங்க……. சரி…

  ஆனா சோனியா ஊர் பேர் தெரியாத(ராஜிவ் திருமணத்துக்கு முன்) வெளியாள் தானே..
  குடும்ப சாபம் இந்த அம்மாவுக்கு எப்படி செல்லும் ?
  அப்ப மேனகா / வருண் இவங்க வம்சம் தானே..அவஙக எப்படி….

  டவுசர் பாண்டி said:
  March 15, 2011 at 10:54 am

  தல ஒன்னோட வெப்சைட்ட எம்புட்டு பேரு எந்தெந்த மேட்டர அதிகம் படிச்சிக்கிராங்கன்னு நாங்க கண்டுபுடிக்க முடியுமா கண்ணு. அந்த மாறி வசதி பண்ணிக்குடு தல. நான் எனக்கு தெரிஞ்சவங்க கைல ஒன்னோட வெப்சைட்ட பத்தி பெருமை அடிச்சிப்பேன்.

   S Murugesan said:
   March 15, 2011 at 3:43 pm

   டவுசர் பாண்டி,
   உங்களை எக்ஸ்ப்ளாய்ட் பண்றேனு நினைக்காதிங்க. என்னோட டாப் போஸ்ட்ஸோட லிஸ்ட் இந்த பேஜ்ல பப்ளிக்கா கிடைக்கும். லெஃப்ட் சைட் மெனுல ரெண்டாவது ஐட்டமே டாப் பேஜஸ்னு இருக்கும் பாருங்க.
   http://statcounter.com/project/standard/stats.php?project_id=5686730&guest=1

   ஆனால் இதுல வெறும் தொடுப்புகள் தான் தந்திருக்காய்ங்க. நீங்க ஒவ்வொன்னா திறந்து படிச்சுட்டு பதிவொட டைட்டில்+ யு ஆர் எல்னு ஒரு பட்டியலை தயாரிச்சு கமெண்டா போட்டிங்கண்ணா சனம் ரெம்ப சந்தோசப்படுவாய்ங்க.

   உங்க விமர்சனங்களோட இதையே ஒரு தனிப்பதிவா போடறாதுருந்தாலும் போடுங்க. ஆத்தரா இன்வைட் பண்றேன்

  RV RAMANAN said:
  March 15, 2011 at 1:44 pm

  dear sir
  i agree with your explanation and thank you very much for clarifying. Namakku thamizh type adikkira vasadhi illai. Mannikkavum.

  warm regards
  Ramanan

   S Murugesan said:
   March 15, 2011 at 3:16 pm

   ஆர்.வி.ரமணன்,
   தமிழ் டைப் செய்ய சாஃப்ட் வேர், ஃபான்ட்ஸ் எதுவும் தேவையில்லை. அதுக்கு நிறைய வலைதளங்கள் இருக்கு.

   நான் ஆத்திரம் அவசரத்துக்கு உபயோகிக்கறது http://www.tamileditor.org . நீங்களும் ட்ரை பண்ணுங்க ச்சோ ஈஸி

    NRITAMIL said:
    March 23, 2011 at 6:47 am

    This site more better
    http://www.quillpad.in/editor.html

    S Murugesan said:
    March 23, 2011 at 9:11 am

    NRITAMIL !
    பாருங்கப்பா.. நம்ம அனுபவஜோதிடத்தை முடக்க வெளி நாட்டு சதி ஆரம்பமாயிருச்சு. என்னா இது? தாத்தா,பாட்டி, அம்மா,அப்பா,அம்மம்மா, அப்பப்பானு இலங்கை ஒலிபரப்புகூட்டு தாபனம், தமிழ்ச்சேவை
    லிஸ்ட் போயிட்டே இருக்கு.

    சென்னையிலருந்து சித்தூர் “தொட்டு விடும் தூரம் தேன்” ஆள விடுங்க சாமி

  Vinoth said:
  March 16, 2011 at 4:14 am

  பயர் பாக்ஸ் எக்ஸ்டன்சன் பயன்படுத்துங்க..

   S Murugesan said:
   March 16, 2011 at 10:00 am

   வினோத் அவர்களே ,
   அக்கறைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. அது என்ன ஏதுனு விவரமா சொன்னா ஒடனே செஞ்சுரலாம். முடிஞ்சா லிங்க் ப்ளீஸ்

  R V Ramanan said:
  March 16, 2011 at 6:18 am

  அன்புள்ள முருகேசனுக்கு

  ராகுல் விஷயத்துல குரு வேல செய்யாததுக்கு காரணம் அவரு
  அஞ்சாம் வீட்ல ராகு நக்ஷத்த்ரதுல குந்திகீனு இருபாரு. ராகு 36 வயசு தான்டினப்பரம் குரு கழுத்த அறுக்கறத நிருத்திடுவாறு. அப்ரமேல்டு பாரு தல ராஹுலு சுமார வாது இருப்பாரு. அது வரைக்கும் நீ சொல்றது கரீட்டு நைனா .

  அன்புடன் ரமணன்

   S Murugesan said:
   March 16, 2011 at 9:55 am

   ஆர்.வி.ரமணன்,
   குரு சித்திரையில இருக்காரு. செவ்வாய்க்குரிய நட்சத்திரம். செவ் 3 ல இருக்காரு.அதான் ராகுல் தில்லா டூர் எல்லாம் அடிச்சிக்கினு கீறாரு போல.

   நட்சத்திரம் -பாதம்னு டீப்பா போனா அது ‘அஜீஸ்மென்ட்”சாஸ்திரம் ஆயிரும் பாஸ்! எதையும் அடிச்சு சொல்ல முடியாது. அனுபவத்துல இதெல்லாம் வேலை செய்யறது. சுபனா -பாவியாங்கற கேள்விதான் முக்கியம். பாவி கெட்டா தான் நல்லது. கோணத்துல உட்கார்ந்தா கதை கந்தல்.அதுவும் தனியா..

  R V Ramanan said:
  March 16, 2011 at 6:20 am

  Thala,

  naan english laiye adichidaren thala. first class mozhi tamizh athai en thala kola pannanum. Nee konjam adjeest panniko.

   S Murugesan said:
   March 16, 2011 at 9:51 am

   ரமணன் சார்,
   தமிழ் சந்தனமரம் மாதிரி. வெட்டினாலும் சரி கொளுத்தினாலும் சரி மணக்கும். இப்பல்லாம் பெரிய பெரிய பத்திரிக்கையிலயே எழுத்துப்பிழைல்லாம் வருது. நாம எதுல கணக்கு?

  RV RAMANAN said:
  March 16, 2011 at 1:16 pm

  sir, i fully agree with yr analysis.aanaa jaadhagham thaandiyadhu. genes. Rahu ketu kooda thatha paatti pathi sollumey thavira 7 thalamuraikku povaadhu. Intha payyannoda samudrika latchanam parunga . Naa moonji azhagaiyo illai vellai tholaiyo sollale. Konja neram intha moonjiye paarthukine iruntha ulla oru integrity theriyuthu.

  Oru 6th sense solluthu ivan avalo mosam illainnu. Poruthirunthu paarkalame. Intha election le eppadium kashtam. Aana en kanakkuku oru aaru varsham ivan ethaiyavathu saathippannu thonuthu. We will wait and see sir.

  negizhvudan
  Ramanan

   S Murugesan said:
   March 16, 2011 at 4:24 pm

   ரமணன் சார்,
   உங்களை விட்டு ” நீங்க” விலகி தூர வந்துருங்க. அப்பாறம் ஜட்ஜ் பண்ணுங்க. உங்க ஃபீலிங்னா இப்படி. என் ஃபீலிங் ராகுலை பார்த்தா என்னையே பார்த்தாப்ல இருக்கும். அதையெல்லாம் கழட்டி தூர எறிஞ்சுட்டு தேன் பலன் சொல்லனும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s