ராத்திரிகள் வந்துவிட்டால்

Posted on

நீங்க ஏறக்குறைய என் வயசு ஆசாமியா இருந்தா கமல் ரஜினி சேர்ந்து நடிச்ச இளமை ஊஞ்சலாடுகிறது படம் ஒங்களுக்கு கியாபகம் இருக்கும் ( ரஜினி ஸ்டைலுங்கோ).

சரி சின்னவயசா இருந்தாலும் நள்ளிரவு எஃப்.எம்ல கேட்டிருப்பிங்க. – ஏதோ ஒரு பாடாவதி சானல்ல அதுல அந்த படத்துல வர்ர “எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்”ங்கற பாட்டை கேட்டிருப்பிங்க/பார்த்திருப்பிங்க.

கரீட்டா .அதே பாட்டுல “ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்”ங்கற வரியை எத்தீனி பேரு கவனிச்சிங்களோ தெரியாது. நான் கவனிச்சிருக்கேன். அந்த வரி தான் இன்னைக்கு லீட்.

அதென்ன ராத்திரிகள் வந்துட்டா சாத்திரங்கள் ஓடிப்போயிருங்கறாய்ங்க. அப்ப சாஸ்திரத்துக்கு ஆஃபா. அல்லது சாஸ்திரம்லாம் ஒரு ஷிப்டுதான் வேலை செய்யனுமா?

பகலுக்கும் ராத்திரிக்கும் என்ன வித்யாசம்?

பகல்ல சூரியனோட வெப்பத்தை கிரகிச்சுக்கிட்ட பூமி அதை மாலை முதல் வெளிவிட ஆரம்பிக்கும். ராத்திரிக்கு குளிர்ந்து போகும் (இதெல்லாம் அந்த காலத்து கணக்குங்கண்ணா. இப்பல்லாம் பால்காரன் ராத்திரி ஞாபகத்துல ஹாரனை அமுக்கிற நேரம்தான் குளிருது. எல்லாம் பொல்யூஷன்.

பகல்ல சூரியனோட ஆட்சி. இவர் ஆத்ம காரகர். சுயம் அ செல்ஃப் என்ற தன்னுணர்வுக்கு காரகர். அறிவு பூர்வமா ரோசிக்க வைப்பாரு.

ஒரு மாசத்துக்கு ஒரே ராசில சஞ்சரிக்க கூடியவர் (ஸ்திரம்) வருஷத்துல ஆடிமாசத்துல கடகத்துலயும், புரட்டாசி மாசத்துல துலாலயும் கொஞ்சம்போல தள்ளாடுவார் . எங்கயாச்சும் ராகு கேது கூட லிங்க் ஆனா, சனியோட லிங்க் ஆனா கொஞ்சம் போல தடுமாறுவார்.

மற்றபடி பர்ஃபெக்ட் ஜென்டில் மேன். இந்த சந்திரன் கீறாரு பாருங்க. லொள்ளு பிடிச்ச ஆசாமி. அரசியல் வாதி மாதிரி ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிப்புடுவாரு. மாசத்துல பாதி நா வளர்ச்சி,பாதி நாளு தளர்ச்சி.

இப்படியா கொத்த பார்ட்டியோட ஆட்சி ராத்திரில நடக்குது. மேலும் இவர் மனோகாரகர். முகம் விகாரமாயிருச்சுன்னா ஒரு வாரம் அட்மிட் ஆகி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கினு வெளிய வந்துரலாம். தாளி மனசு விகாரமாயிருச்சுன்னு வைங்க.. மாசக்கணக்குல கவுன்சிலிங் , அது இதுன்னு மன்னாடனும்.

மனம் ஒரு குரங்குனு கேள்விப்பட்டிருக்கிங்கல்ல. சந்திரன் தான் எப்படி 6 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திர பாதம் மாறிர்ராரோ அதே மாதிரி உங்க எண்ணமும் 6 மணிக்கொருதரம் அடியோட மாறிடுது.. 54 மணி நேரத்துல 30 டிகிரிய கடக்கிற பார்ட்டி. அப்போ ஒரு டிகிரி கடக்க எத்தீனி நேரம் புடிக்கும் கணக்கு போட்டு பாருங்கண்ணா.

அட ராத்திரி நேரம் மதியோட (சந்திரனோட) ஆட்சிங்கறதால சனம் மதி கெட்டு (புத்தி கெட்டு) நடந்துக்குவாய்ங்களாக்கும்னு சிம்பிளா நினைச்சுராதிங்க .

இன்னம் மேட்டர் கீது வாத்யாரே. ஒரு கொளந்தை பகல்ல பிறந்தா பித்ருகாரகன் சூரியன் – தந்தை ரூலிங் க்ளாஸா ஐ மீன் சொந்த தொழில்ல இருக்க சான்ஸு உண்டு.

ராத்திரில பிறந்தா பித்ருகாரகன் சனி -தந்தை ரூல்ட் க்ளாசா ஐ மீன் அடிமைத்தொழில் செய்றவரா இருக்க/மாற சான்ஸு உண்டு.

அதே மாதிரி அம்மா மேட்டரு நீங்க பகல்ல பிறந்தா மாத்ருகாரகன் சுக்கிரன். சுக்கிரன் வருசத்துல 9 மாசம் நாட் பேட் நிலையில சஞ்சரிப்பாரு ( 3,7,10 தவிர) ஆக உங்க மம்மிக்கு வருசத்துக்கு 9 மாசம் உணவு உடை இருப்பிடம் இத்யாதிக்கு குறையிருக்காது.

ராத்திரில பிறந்தா மாத்ருகாரகன் சந்திரன். இவரை பத்தி விவரமா தெரிஞ்சுக்க இங்கே அழுத்தி படிச்சிருங்க.

இதுமட்டுமான்னா இன்னம் கீது. ராத்திரி நேரத்துல பாபகிரகத்துக்கு பலம் சாஸ்தி. (பகல் நேரத்துல சுபகிரகத்துக்கு)

சரி ராத்திரிய வச்சு என்னெல்லாம் சாங்கியம் சம்பிரதாயம் இருக்கு அதெல்லாம் எந்த அளவு சைன்டிஃபிக் இப்பத்துக்கு அப்ளிக்கபிள்னு பார்ப்போம்:

பலான மேட்டரை ராத்திரிலதான் வச்சுக்கனும்.- இது ஒரு சோஷியல் அக்ரிமென்ட். அந்த நேரத்துல – பாவம் புருசன் பொஞ்சாதி “தூங்கறப்ப” டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுங்கற நார்ம்ஸ் இருக்கும். இது ‘மக்க மனுசா நெருக்கமா இருந்த காலத்துக்கு மாலை 6 க்கெல்லாம் தூங்கப்போன காலத்துக்கு கரீட்டா இருக்கலாம். இப்பல்லாம் தாளி ராத்திரில பொஞ்சாதிய தடவறப்பதேன் செல்ஃபோன் அலறுது.

மனுஷனுக்குள்ள இருக்கிற பாப எண்ணங்கள் -பாப கிரகங்கள் பலம் பெற்று இருக்கும் நிலையில செக்ஸில் வெளிப்படுத்தப்பட்டுவிட்டால் சுகமும் கூடும். கிரந்தி எனப்படும் மன முடிச்சுக்களும் அவிழும். பகல்ல சுபகிரகம்தானே பலம் பெற்றிருக்கும். அதனால கில்மா மேட்டர்ல கொல்லுதல் -கொல்லப்படுதல் கான்செப்ட் எல்லாம் நிறைவேறாம போக வாய்ப்பிருக்கும்னு இப்படி வச்சிருக்கலாம்.

மேலும் ராத்திரில கற்பனைகளின் பிறப்பிடமான சந்திரனோட ஆட்சி “மாத்தி ரோசி”க்கறதுக்கு பெஸ்ட் டைம் இதுவே. ( சிலர் ஆள கூட மாத்தி ரோச்சிர்ராய்ங்க அதான் வம்பு)

ராத்திரில ஜோசியம்பார்க்காதே:

ஜாதக கட்டத்துல “ச” என்றால் சனி ,” சு ” என்றால் சுக்கிரன் அசப்புல அதுவும் தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டு பிடிக்கிறதுக்கு முந்தின்னா ரெண்டும் ஒரே மாதிரிதேன் தெரியும்.

பை தி பை பாபகிரகங்கள் பலம் பெற்றிருப்பதால் ஜோசியர் கண்டதையும் ( ஐ மீன் துர்பலனை) போட்டு உடைச்சுருவாரு.மனசுக்கு கஷ்டம்.

என் கருத்து:
ஒழுங்கான ஜட்ஜிங் – வில் பவர் உள்ள ஜோசியர் சொல்லலாம். அதான் 40 ரூபாய்க்கு ட்யூப் லைட் விக்கிறானே.

ராத்திரில பணம் கொடுக்காதே:

அந்த காலத்துல பணம்னா ஓட்டை காலணா / அ ஒரே சைசிலான விவித லோகங்களால் ஆன காசுகள். மிஞ்சிப்போனா அகல் விளக்கு இருக்கும். அந்த வெளிச்சத்துல எல்லாமே ஒரே மாதிரி தெரியும்.சாஸ்தி கம்மியா கொடுத்துட்டா வில்லங்கம்னு இப்படி சொல்லியிருக்கலாம். இப்ப இந்த சாங்கியம் தேவையில்லைங்கறது என் கருத்து.

வெள்ளிக்கிழமை விளக்கு வச்சப்பாறம் குப்பைய வெளிய கொட்டாதே:
வெள்ளிக்கிழமை எல்லா பெண்களும் எண்ணெய் தேச்சி குளிப்பாய்ங்க (இப்ப இதயம் நல்லெண்ணெய் காரவுக தலைதலையா அடிச்சிக்கிட்டாலும் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) இப்ப உள்ள ஜெனரேஷனுக்கு எண்ணெய் தேச்சு உளிச்சா “வீசிங்” வந்துருதுங்கோ. தங்க நகைல எண்ணெய் இறங்கிரும்னு கழட்டி வைப்பாய்ங்க. ஆத்திரம் அவசரத்துல மூக்குத்தி,கம்மல் எட்ஸெட்ராவோட திருகாணிங்களை கழட்டறச்ச கீழே விழுந்துருக்கலாம்.

அந்த காலத்துல இப்போ மாதிரி வெளிச்சத்தை வாரி வீசற ட்யூப் லைட்டெல்லாம் ஏது? விளக்கு வைக்கறதுக்கு முன்னாடி கட்டாயம் பெருக்குவாய்ங்க. ( இப்போ மாதிரி மெகா சீரியல் எல்லாம் கிடையாது) கீழே விழுந்த திருகாணிங்களையும் சேர்த்து வாரி கொட்டிட்டா என்ன பண்றது? குப்பைய வெளிய கொட்டாம வீட்டுக்குள்ள வச்சிருந்தா சனிக்கிழமை வெளிச்சத்துல பார்த்து பொறுக்கிக்கலாம்னு இந்த ரூலை வச்சிருப்பாய்ங்க.

ராத்திரில கீரை தயிர் சாப்பிடாதே:
இதை பத்தி கண்ணதாசனே அனலைஸ் பண்ணி எழுதியிருக்கிறதால நான் அம்பேல். ( மேட்டர்: இதெல்லாம் செரிக்க 18 மணி நேரம் ஆகும்-அகாலத்துல வவுத்த கலக்கும்)

Advertisements

8 thoughts on “ராத்திரிகள் வந்துவிட்டால்

  ஆகமக்கடல் said:
  March 13, 2011 at 3:10 am

  வணக்கம்,
  நல்ல பதிவு.அப்படியே 5ம் இடத்தை பத்தி விரிவா ஒரு பதிவு போடுங்க சார்

   S Murugesan said:
   March 13, 2011 at 5:15 am

   வாங்க கடல்!
   போட்டா போச்சு யோசனைக்கு நன்றி

    ஆகமக்கடல் said:
    March 13, 2011 at 4:42 pm

    மிக்க நன்றி,தளத்தின் கருப்பு பின்னனியை மாற்றினால் நன்றாக இருக்கும்

    S Murugesan said:
    March 13, 2011 at 6:17 pm

    ஆகமக்கடல்!
    கடலே அதன் அடி ஆழத்துல கருப்பாத்தான் இருக்கும். கருப்புக்கும் அழகுண்டு .காந்தலுக்கு ருசியுண்டு.
    விட்டுத்தள்ளுங்க..
    (ஹி ஹி அதை மாத்ததெரியாதுங்கண்ணா)

  Kalyan said:
  March 13, 2011 at 6:04 pm

  ஐயா Money Purse இலவசமா வாங்கினா என்ன ஆகும், அதை பயன் படுத்தலாமா அல்லது வேறே நாம விலை கொடுத்து வாங்கி பயன் படுத்தலாமா?

   S Murugesan said:
   March 13, 2011 at 6:16 pm

   கல்யாண் அவர்களே!
   சூட்கேஸ் வாங்கவே பயப்படமாட்டேங்காறாய்ங்க. நீங்க பர்ஸை அதும் காலி பர்ஸை வாங்கினதுக்கு பயப்படறிங்களே..

   உங்க எலிமென்டரி ஸ்கூல் ,அப்பர் ப்ரைமரி ஸ்கூல் வாத்யாரு ஆருக்குன்னாநீங்க ஒரு பர்ஸ் ப்ரசண்ட் பண்ணிட்டு அப்பாறம் இந்த பர்ஸை உபயோகிங்க.

  RV RAMANAN said:
  March 14, 2011 at 1:43 pm

  You have a high amount of clarity.

  Best Wishes
  Ramanan

   S Murugesan said:
   March 14, 2011 at 5:10 pm

   R.V.ramanan !
   I redirect all of your compliments to the noble men who founded Astrology.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s