கிரக தோஷங்கள்: கொடுத்தா போகும்.. வாங்கினா கூடும்

Posted on

கிரகதோஷம்னா குறிப்பிட்ட கிரகம் வீக்கா இருக்குனு அர்த்தம். கிரகம் வீக்கா இருந்தா அதனோட காரகத்வத்துல எல்லாம் நமக்கு நஷ்டம் வரும்.

இதை தவிர்க்க நாம அந்த பேட்டையிலயே என்டர் ஆகக்கூடாது. விவரம் தெரியாம ஆல்ரெடி அந்த ஃபீல்டுல மாட்டிக்கிட்டிங்க. வெளிய வந்துதானே ஆகனும்.

அப்ப அந்த ஃபீல்டுல எதிர்படக்கூடிய நஷ்டத்தை குறைக்க /அவாய்ட் பண்ண குறிப்பிட்ட கிரக காரகத்வம் கொண்ட பொருளை பிறருக்கு கொடுக்கனும். ( அல்லாத்தையும் எங்களுக்கே கொடுன்னு அவாள் சொல்வா. அதை நம்பாதிங்க)

எந்த கிரகம் சரியில்லையோ அந்த கிரக காரகத்வம் கொண்ட குலத்தினருக்கு, தொழிலினருக்கு கொடுக்கலாம். ஸ்பீட் போஸ்ட் கணக்கா கிரகத்துக்கு மெசேஜ் போயிரும். வேலை நடக்கும். நான் கியாரண்டி. உதாரணமா சனி வீக்குன்னா தலித்துக்கு தரலாம், புதன் வீக்குன்னா ஒரு வைசியருக்கு தரலாம்.

சனி சரியில்லைன்னா ஐரன் ஸ்டில் ஆயில் தரலாம். புதன் சரியில்லின்னா ஸ்டேஷ்னரி,புக்ஸ்,பென் ட்ரைவ், கார்ட் ரீடர் தரலாம்.

“யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே” ஆனா நம்ம சனத்தோட மென்டாலிட்டியே வேறயாச்சே.எவனுக்கு எந்த கிரகம் வீக்கா இருக்கோ அந்த கிரகத்தோட காரகத்வம் உள்ள விஷயங்க மேலதான் அவனுக்கு ஜொள்ளே வரும்.

உ.ம் சுக்கிரன் வீக்காயிருக்கிறவனுக்கு பெண்கள் மேல , செவ்வாய் வீக்கா இருக்கிறவனுக்கு ரியல் எஸ்டேட் மேல

சரி .. புது பார்ட்டிகளுக்கு கொஞ்சம் தடுமாற்றமா இருக்கிறாப்ல இருக்கு.கொஞ்சம் விலாவாரியா பார்ப்போம்.

இந்த உலகத்துல உள்ள எல்லா பொருளையும், மனிதர்களையும் 9 க்ரூப்பா பிரிக்கலாம். ( பெண்களை பிரிச்சாப்ல) .ஒவ்வொரு க்ரூப்புக்கு ஒவ்வொரு ப்ளானெட் இன் சார்ஜு. உ.ம் இரும்புக்கு சனி, தங்கத்துக்கு குரு. இதைத்தான் காரகத்வம்னு சொல்றோம்.

நம்ம ஜாதகத்துல குறிப்பிட்ட பொருளுக்கு காரகத்வம் வகிக்கிற கிரகம் பலமா இருந்து அந்த பொருள் நமக்கு இலவசமா கிடைச்சா நோ ப்ராப்ளம். அப்படியில்லாம குறிப்பிட்ட பொருளுக்கு காரகத்வம் வகிக்கிற கிரகம் பலவீனமா இருந்து அந்த பொருள் நமக்கு ஓசில கிடைச்சதுன்னு வைங்க. வில்லங்கம் தான்.

சனத்தோட மென்டாலிட்டி என்னடான்னா ஃப்ரீயா கிடைக்குதுன்னா ஃபினைல் கூட வாங்கி குடிச்சுர்ராய்ங்க.(பத்திரிக்கைக்காரவுக கொடுக்கிற இலவசம்லா இலவசத்துல சேர்த்தி இல்லிங்கண்ணா. அதுக்கும் சேர்த்துத்தான் காசு .சோப்பு,ஷாம்பூ கொடுத்தா அதை கொடுக்கிறது கம்பெனிகாரன். அவனோட விளம்பரத்தை பத்திரிக்கை ஃப்ரீயா போட்டிருக்கும் . காசுக்கு பதில் இவன் பொருளைத்தரான்)

ஜாதகத்துல அஞ்சாமிடம் தான் வாரிசுகள் மற்றும் ஜாதகரின் பெயர் புகழை காட்டற இடம். எம்.ஜி. ஆர் ஸ்தூலமா என்ன பண்ணி கிழிச்சாருங்கறது அப்பாறம் கதை. எப்படியோ பப்ளிக்ல சூப்பர் பேரு வந்துருச்சு. ஆனா பேர் சொல்ல பிள்ளையில்லாம போயிருச்சு.

கலைஞரு மேட்டர்ல அஞ்சாமிடம் புத்ர ஸ்தானமா ஒர்க் அவுட் ஆயிருச்சு. ஆனால் அவர் அத்தோட திருப்தி அடையாம இலவசமா தர்ராய்ங்கன்னு புதுசு புதுசா பட்டங்களை வாங்கி வாங்கி வச்சு(க்கிட்டிருந்தாரு) க்கறாரு. என்ன ஆச்சு முக முத்து சோடை போயிட்டாரு.(புத்ர ஸ்தானமா ஃப்யூஸ் போயிருச்சு- பயங்கர அவப்பேர் வந்து – இப்ப சொனியா செருப்புக்கடில தேள் மாதிரி கிடக்காரு)

இவ்ள ஏன் ஜெயலலிதா அம்மா மேட்டரையே எடுத்துக்கங்க.வளர்ப்பு மகன் இல்லாதவரை எப்படியோ வண்டி ஓடிக்கிட்டிருந்தது. வ.மகனை சீனுக்கு கொண்டு வந்ததும் அவருக்கு கண்ணாலம் பண்ணதும் கருமாதி ஆயிருச்சு. அவிக ஜாதகத்துல அஞ்சுல கேது.கேதுன்னா சன்னியாசி. தத்துப்பிள்ளை இப்ப ஆன்மீக செம்மலானதுக்கு காரணம் கூட இதுதான்.

எங்க ஒய்.எஸ்.ஆர் கதையையே எடுத்துக்கங்க. அவர் ஜாதகத்துல அஞ்சாமிடம் பெயர்,புகழை அள்ளி அள்ளி கொடுத்துருச்சு. ஆனால் அவர் மகன் ? சிங்கியடிக்கிறாரு. கக்கன் சாரோட மகன் பைத்தியமானதுக்கு காரணம் கூட இதான்.

இதுலருந்து என்ன தெரியுது ? பேருக்கும் புகழுக்கும் அலையக்கூடாது. இலவசமா கிடைக்குதுன்னு பட்டங்களை வாங்கி வாங்கி வச்சுக்கிர கூடாது. எனக்கு வலையுலகத்துல ஜோதிட ஓஷோ, வலையுல மாத்ருபூதம்னெல்லாம் பட்டம் கொடுத்து வச்சிருக்காய்ங்க.

ஆனா என்ன புண்ணியம்? என் 18 வயது மகள் நம்ம மென்டாலிட்டிக்கு கொய்ட் ஆப்போசிட்.இலக்கியமா? இடியாப்பமா? பேராவது இன்னொன்னாவது.. ஆளை விடுப்பா துட்டுவருமாங்கறா.

இப்ப புரிஞ்சுதுங்களா அஞ்சாமிடத்துக்கும் பேர் புகழ் மற்றும் வாரிசுகளுக்குமிடையிலான லிங்க் ?

ஏன் அஞ்சாமிடம் ரெண்டும் தரக்கூடாதான்னு கேப்பிக. தேவையான ஓல்டேஜ் இருந்தா எல்லா லைட்டும் எரியும். லோ ஓல்டேஜ் இருந்தா என்ன ஆகும்? இந்த உலகத்துலயே எவனோட ஜாதகத்துலயும் எந்த பாவமும் , எந்த கிரகமும் 100 சதம் ஃப்ரூட் ஃபுல் கிடையாது. அதனால ஒன்னை பெறனும்னா ஒன்னை இழந்துதான் ஆகனும்.

இங்கே எதையெல்லாம் ஓசி வாங்கினா என்னென்ன நஷ்டம் நடக்கும்னு ஒரு பட்டியல் தந்திருக்கேன்.ஏற்கெனவே அந்த நஷ்டங்கள் நடந்து பிரச்சினையில் உள்ளவுக அதே பொருட்களை பிறருக்கு ஓசி கொடுங்க. மேட்டர் ஓவர்.

கடிகாரம்,காலண்டர் ஓசி வாங்கினா, அப்பனோட பி.எஃப் பணத்தை சண்டை போட்டு வாங்கினா, மலை சாதியினரை சுரண்டினா : பல் ,எலும்பு, முதுகெலும்பு, வலது கண் ரிப்பேர் ஆகலாம்

தண்ணீர்,கூல் ட்ரிங் ஓசி வாங்கினா,ஆத்து மணல அள்ளோ அள்ளுனு அள்ளினா , ஆற்று புறம்போக்கு, கம்மாக்கரைய ஆக்கிரமிச்சா : அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.

பீடி சிகரட்,பெட் ரோல், டீசல், எலக்ட் ரிக் சாமான் ஓசி வாங்கினா நில ஆக்கிரமிப்பு செய்தா:
ரத்தக்கொதிப்பு, அல்சர். உஷ்ண ரோகங்கள் பாதிக்கலாம். உம் கட்டிகள், பைல்ஸ்.
நிலம்,சகோதரம், எதிரிகள் தொடர்பாக விவகாரங்கள் வரலாம்.

சினிமா டிக்கெட், டிவிடி ,கேமரா ஓசி வாங்கினா, வைன்ஸ் :
திருடு போகலாம், வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படலாம்,ஃபுட் பாய்சன் நடக்கலாம்

வட்டி இல்லாம கை மாத்து வாங்கினா:
தங்கம் தொலையலாம், பணம் களவு போகலாம், வாரிசுகள் உருப்படாது போகலாம்.

இரும்பு,ஸ்டீல் ,ஆயில், கிரானைட் ஓசி வாங்கினா:
மலச்சிக்கல்லருந்து, பைல்ஸ் வரை வரலாம்

பேப்பர்,பத்திரிக்கை, மருந்து ஓசி வாங்கினா:
தோல் வியாதி வரலாம், டெஸ்டிக்கல்ஸ்க்கு பிரச்சினை வரலாம்

எந்த பொருளானாலும் சரி வேறு மதத்தை சேர்ந்தவுக கிட்ட ஓசி வாங்கினா:
சீலைப்பேன் வரலாம், நம்பினவுகளே கழுத்தறுக்கலாம்.

ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ், ஆடை,அணிகள், வெள்ளி உருப்படிகள் ஓசி வாங்கினா
லவ் ஃபெயிலியர் ஆயிரலாம், பேட்டரி வீக் ஆயிரலாம், பெண்டாட்டி கோச்சுக்கிட்டு ஆத்தா வீட்டுக்கு போயிரலாம்.

எனவே ஓசி வாங்காதிங்க. ஆல்ட்டர் நேட்டிவ் இல்லாம வாங்கினாலும் நேரம் வரும்போது அதுக்கு ரெட்டிப்பா ரிட்டர்ன் பண்ணுங்க.
கிரக தோஷங்களை பொருத்தவரை கொடுத்தா போகும்.. வாங்கினா கூடும்

Advertisements

4 thoughts on “கிரக தோஷங்கள்: கொடுத்தா போகும்.. வாங்கினா கூடும்

  Vinoth said:
  March 11, 2011 at 6:41 am

  நன்றி

  தனி காட்டு ராஜா said:
  March 11, 2011 at 7:10 am

  //( அல்லாத்தையும் எங்களுக்கே கொடுன்னு அவாள் சொல்வா. அதை நம்பாதிங்க) //

  :)))

  swami said:
  March 12, 2011 at 3:08 pm

  anna,enakku 2 doubt. Sarpa dosham sarpathai kolluvadhal varuvadha? aanaa,matha country-la sarpathai soup senju sappidarangale avingalluku onnum aagadha? aadu,madu idellaam sabham vidadha,sarpam mattum enna usathi? second, ella gnanigalum yogam,mantram,jebam payindru mathavangalluku upadesam seigirargal. aanal avanga kadaisi kalathil, kadumayaana noivaipattu sagindranar. (niraya udaranangal irukkiradhu)idhukku enna karanam?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s