தனபாவம் Vs ஆயுள் பாவம்

Posted on

ஜாதகத்துல லக்னத்துக்கு ரெண்டாமிடத்தை தனபாவம்ங்கறாய்ங்க. எட்டாமிடத்தை ஆயுள் பாவங்கறாய்ங்க.
ரெண்டு வாயை காட்டுது எட்டு மர்மஸ்தானத்தை காட்டுது. ரெண்டு குடும்பத்தை காட்டுது எட்டு தீர்க்க முடியாத கடனை காட்டுது. ரெண்டு பேச்சை காட்டுது எட்டு கொலை,கொலை முயற்சி, சிறைப்படல் தற்கொலை,விபத்து இத்யாதியகாட்டுது.

எல்லா கிரகங்களுக்கும் 7 ஆமிடத்தை பார்க்கிற சக்தி உண்டு. ( அதாவது தன் அதிர்வுகளை செலுத்துதல்). ரெண்டுக்கு ஏழாமிடம்னா அது எட்டாமிடம். எட்டுக்கு ஏழாமிடம்னா அது ரெண்டாமிடம்.இப்ப லிங்க் புரியுதா? இல்லியா சரி மொதல்ல …..

தனபாவத்துக்கும் ஆயுள் பாவத்துக்கும் உள்ள தொடர்பு:
தனபாவத்துல சுபகிரகம் இருந்தா ஜாதகருக்கு லீகலா, ப்ளஸ் மோரல் வேல்யூஸோட தன சேர்க்கை ஏற்படும். இவர் லக்னத்துக்கு எட்டை பார்த்தாலும் ஏதோ மருந்து மாயத்துல குணமாயிர்ர நோயா வரும். ஒரு வேளை பாபகிரகம் இருந்ததுனு வைங்க. இல்லீகலா இம்மாரல் வேஸ்ல பணம் வந்து கொட்டும். ஆனா அதே கிரகம் எட்டையும் பார்க்கிறதால பாப கிரகத்தோட காரகத்வத்துல உள்ள நோய்கள் வரும். பில்லு எகிறும், சனி செவ் சம்பந்தப்பட்டிருந்தா அறுவை சிகிச்சை ,அங்க ஹீனம் கூட ஏற்படலாம். இதான் தன பாவத்துக்கும் ஆயுள் பாவத்துக்கும் உள்ள தொடர்பு.

குடும்பம் Vs தீராக்கடன்:
கண்ணால நாளைக்கே கால் முழம் மல்லிப்பூ வாங்கிட்டுவர்ர ஆத்துக்காரர் செவ்வாய்கிழமை அதுவும் செண்டே வாங்கிட்டு வந்தாருனு வைங்க, பெட்டிக்கடையில மைசூர் பாகு வாங்கிட்டு வர்ர பார்ட்டி ஒருகிலோ அர்ச்சனா ஸ்வீட்ஸ் பெட்டியோட வந்தாருனு வைங்க ஆத்துக்காரி கேள்வி கேட்கனும். ” நாயே ஒனக்கேதுடா இத்தினி காசுன்னு கேட்கனும்” சரியான பதில் வர்ர வரை விடக்கூடாது. ஒரு வேளை அது இல்லீகல் இன்கம்னு தெரிஞ்சா “தாளி அதை கொடுத்தவன் மூஞ்சில வீசிட்டு வா..இல்லைனா குப்பை தொட்டில போட்டுட்டு வா அப்பத்தேன் பொஞ்சாதி.. இல்லைனா நீ கம்சாதி”ங்கனும். அப்ப அது நல்ல குடும்பம். அந்த ஜாதகனோட ஜாதகத்துல ரெண்டாமிடம் சுப பலமா இருக்குதுனு அர்த்தம்.

அதை விட்டுட்டு பொஞ்சாதி வாயெல்லாம் பல்லா ” என்னங்க என்னைக்கும் இல்லாத திருநாளா..எப்படியோ நாலு பேர் போற வழிக்கு வந்திங்களே ( நாலு பேர் சுடுகாட்டுக்குத்தேன் போவாய்ங்க) எவனாச்சும் குடுமி மாட்டினானா”ன்னுட்டு பெட் ரூம் பார்வை பார்த்தா அது நாறப்போற குடும்பம். அவன் ஜாதகத்துல ரெண்டாமிடம் பாப கிரகங்களால ஹவுஸ் ஃபுல் ஆகி இருக்குதுனு அர்த்தம்..

அவன் ஜாதகத்துல ரெண்டாமிடத்துல பாபகிரகங்கள் நின்னு எட்டாமிடத்தை பார்த்தா அவன் குடும்பம் இப்படித்தான் இருக்கும். குடும்பத்துக்காக திருடுவான்,பொய் பேசுவான்,ப்ளாக் மெயில் பண்ணுவான், மிரட்டுவான், லஞ்சம் வாங்குவான், கள்ளக்கடத்தல் பண்ணுவான். பத்து வட்டிக்கு கடன் வாங்குவான். ரப்பர் செக்கை வாரி விடுவான்.

இதையெல்லாம் பண்ணும்போது “ஜில்லு”னு இருக்கும். அதே நேரம் அவனுக்கு இல்லீகல் இம்மாரல் இன் கம்மை கொடுத்த அதே கிரகங்கள் எட்டை பார்த்து அவனுக்கு திகார் ஜெயிலையோ, கொலை, கொலை முயற்சி, தற்கொலை இத்யாதிக்கு செட் ரெடி பண்ணிக்கிட்டிருக்கும்.

இதான் குடும்பத்துக்கும் எட்டாமிடத்துக்கும் உள்ள தொடர்பு.

ரெண்டு பேச்சை காட்டுது எட்டு கொலை,கொலை முயற்சி, சிறைப்படல் தற்கொலை,விபத்து ஆகியவற்றை காட்டுது. தெலுங்குல ஒரு பழமொழி உண்டு ” நோரு மஞ்சிதைத்தே ஊரு மஞ்சிதி” ( வாய் நல்லதா இருந்தா ஊர் நல்லதா இருக்கும்) ரெண்டாமிடத்துல பாபகிரகங்கள் இருந்தா இரிட்டேட்டிங்கா பேசறது, துண்டி விடறாப்ல பேசறது, துவேஷத்தை வளர்க்கிறாப்ல பேசறது இதெல்லாம் நடக்கும். இதனோட விளைவா கொலை,கொலை முயற்சி, நடக்கலாம். சிறைப்படலாம். தற்கொலைக்கு தூண்டப்படலாம் ,விபத்து ஏற்பாடு செய்யப்படலாம்.

2 வாயைக் காட்டும் 8 இன உறுப்பை காட்டும்.
வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்பதால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன.

மனிதர்கள் செய்வது இரண்டே காரியங்களை . ஒன்று கொல்வது. இரண்டு கொல்லப்படுவது. ஸ்தூலமா இதை செய்ய தில் பத்தாதவுக செக்ஸுக்கு நழுவிர்ராய்ங்க. செக்ஸும் கிடைக்காதவுக பணத்துக்கு பதவிக்கு ,நகர்ராய்ங்க. இந்த மாற்று ஏற்பாடுகள்ல எதையும் சாதிக்க முடியாதவுக பேச்சுல இறங்கிர்ராய்ங்க. காரியத்தில் கொல்ல முடியாதவன் பேச்சில் கொல்றான். இவன் கொன்னுக்கிட்டே இருந்தா எதிராளி சொம்மா இருப்பானா அவன் சமயம் பார்த்து இவனை போட்டுத்தள்ள பார்ப்பான்.

ஜோதிஷ சித்தாந்தங்களை கண்டறிஞ்சவுக எந்த அளவுக்கு இயற்கையோட ஒன்றி அகமின்றி சிந்திச்சிருந்தா இந்த சைக்கலாஜிக்கல் ஃபேக்டை பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடியே உணர்ந்து ரெண்டுக்கும் எட்டுக்கும் தொடுப்பு வச்சிருப்பாய்ங்க. வாய்க்கும் -மர்ம உறுப்புக்கும் லிங்க் உள்ளதை உணர்ந்திருப்பாய்ங்க. ரோசிச்சு பாருங்க.

ஆக பேச்சு,எழுத்துங்கற மீடியம் மூலமா நாம செய்றதெல்லாம் கொல்லுதல் அ கொல்லப்படுதல்ங்கற ரெண்டு மேட்டரைத்தான். இந்த மயித்துக்கு இப்படி வரிஞ்சு வரிஞ்சு தள்ளனுமா? அட மேற்படி கொல்லுதல் கொல்லப்படுதல் தான் செக்ஸுல சாத்தியமாகுதுல்லியா அந்த காரியத்தை பார்க்கலாமில்லியா?

மேட்டர் அவ்ள சிம்பிள் இல்லை பாஸ். மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத‌ செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் (க்ரியேட்டிவிட்டி) உண்டு.

க்ரியேஷன் என்றால் படைப்பு. ரீ க்ரியேஷன் என்றால் படைப்பில் உள்ளதை மறுபடி படைப்பது. அது ரெக்ரியேஷன் ஜஸ்ட் பொழுது போக்கு.

ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை .

போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.

எழுத்து என்ப‌தென்ன‌ ? ம‌வுன‌மாக‌ பேசுத‌ல் தானே ! பேச்சை காட்டிலும் இத‌ன் அதிர்வுக‌ள் தான் ஆழ‌மாக‌ இருக்கும்.

என் மாதிரி ஒன்ற‌ரையணா ப‌திவ‌ர்க‌ள் ம‌ட்டுமே அல்ல‌ எழுத்தாள‌ன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த‌‌ விதி பொருந்தும்

நாம ஆஃப்டர் ஆல் ரீ க்ரியேட்டர்சாவே வாழ்ந்து செத்துப்போகலாமா? நாம க்ரியேட்டர்ஸ் ஆகவேணாமா?

நாடு இருக்கும் இழி நிலையில் ரீ க்ரியேஷன் தேவையில்லை. ப‌டைத்துக்காட்டும் செய‌ல்வீர‌ர்க‌ள் தேவை. மேற்ப‌டி செய‌ல்வீர‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளை தூண்டும் எழுத்துக்க‌ளை ம‌ன்னிக்க‌லாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி க‌ணிணி திரையையும் , காகித‌த்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட‌ ஒரு க‌ர்ப‌ம் த‌விர்க்க‌ப்பட்ட‌த‌ற்கு சாட்சியாகிற‌து. இன்ன‌ பிற‌ எழுத்துக்க‌ள் ?

18 thoughts on “தனபாவம் Vs ஆயுள் பாவம்

  ஆகமக்கடல் said:
  March 12, 2011 at 3:41 am

  வணக்கம் சார்,
  உங்களுக்கென ஒரு ஸ்டைலை அமைத்துக்கொன்டு எழுதுவது அருமை.சரி
  இரண்டாமிடத்தில் சுப கிரகமான குரு இருக்கார்,ஆனா அவர் மட்டுமே இருக்கார்.(அந்தணன் தனித்திருந்தால் அவதிகள் மெத்த உண்டாம்,என்கிறது ஒரு பாடல்).இதனால் அவர் வாக்கு,தனம்,குடும்பம் எப்படி???

   S Murugesan said:
   March 12, 2011 at 4:47 am

   வாங்க ஆகமக்கடல்!
   சந்திரன் மர்ச்19 பூமிக்கு ரெம்ப நெருக்கமா வராராம். கடல்,கடல் சார்ந்த இடங்களின் மீது அவரது பிரபாவம் இருக்கும்ங்கறாய்ங்க.

   உசாரய்யா உசாரு. குரு 2லனுட்டா எப்படி? என்ன லக்னம்? குரு எந்த ராசில இருக்காருங்கறத பொருத்து பலன் தலை கீழா மாறும்.

   ஸ்டைலுங்கறிங்களா? இந்த ஸ்டைலு மதுரை பேச்சுத்தமிழுங்கோ.

   கேட்டுப்பழகினதுதேன். ( உபயம்: திருவிளையாடல்ல விறகு வெட்டி சிவாஜி, இப்பத்துல வடிவேலு)

  Vinoth said:
  March 12, 2011 at 4:10 am

  பார்க்க:
  http://tinyurl.com/6c9txf5

   S Murugesan said:
   March 12, 2011 at 4:44 am

   நன்றி வினோத்.இந்த க்ரீம்கள் மேல் எனக்கு நம்பிக்கையே கிடையாது. அட அல்லாபத்தி மெடிசின் மேலயே நம்பிக்கை கிடையாது. ஏன்னா இதெல்லாம் ஸ்தூல அடையாளங்கள் மேல ஏவிவிடப்படற மொன்னை அம்புகள்.

   எல்லாரும் ஊழல் பத்தி வாய் கிழிய பேசறச்ச நான் தேர்தல் முறைய மாத்த ரோசிச்சவன். ஊழல் தேர்தல் முறையின் அடையாளம்/விளைவு.

   ஒரு பெண் மேலுதட்டில் இருந்த பூனை ரோமத்தை நீக்க ஒரு க்ரிம் உபயோகிக்க அது கருகி அந்த காலத்து எம்.ஜி.ஆர் மீசை மாதிரி நிரந்தரமாயிருச்சு.

   தேவையா இதெல்லாம்

  veera said:
  March 12, 2011 at 5:42 am

  கடக லக்னத்துக்கு குருவும் செவ்வாயும் இரண்டுல இருக்கறது எப்டிங்கண்ணா? ஓகே வா இல்ல மிக்செட் ரிசல்ட்டா?

   S Murugesan said:
   March 12, 2011 at 6:00 am

   வீரா அவர்களே,
   இது சூப்பருங்கண்ணா. என்ன வீட்லயும் ரிங் மாஸ்டர் -மிலிட்டரி கமாண்டர் மாதிரி இருப்பாய்ங்க. எரிச்சு போட்டாப்ல பணத்தை செலவழிப்பாய்ங்க. அதுக்கேத்தாப்ல வருங்கோ.
   பேச்சு கட் அண்ட் ரைட்டா வரும். எதிராளி ஃபீல் பண்ணுவான்.

    veera said:
    March 12, 2011 at 6:26 am

    Aha, perfect. Thank you.

    S Murugesan said:
    March 12, 2011 at 8:42 am

    நன்றி வீரா அவர்களே,
    பெருமாள் சிவனுக்கு தந்த பதிலை பாருங்கள். உங்கள் நன்றியும் மேற்படி பார்ட்டிகளுக்கு திருப்பிவிடப்படுகிறது.

  c.m. janakiraman said:
  March 12, 2011 at 6:08 am

  சூப்பர்னா .. 2 ஐயும் 8 ஐயும் சோதிட சித்தாந்த ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் இணைத்திருப்பது அருமை .. வாழ்த்துக்கள் ,, அண்ணாச்சி நாங்க
  கேட்ட டவுட்டுக்கு ரிசல்ட் காணமே ? கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க அணணே

   S Murugesan said:
   March 12, 2011 at 8:44 am

   ஜா.ராமன் சார் !
   என் கையில ஒன்னுமில்லை. அந்தந்த வேளை வரும்போது அந்தந்த மேட்டர் தானா கொட்டும். நான் சொம்மா கீ போர்டு முன்னாடி உட்கார்ந்து வெயிட் பண்றேன் .தட்ஸால்

  PERUMALSHIVAN.S said:
  March 12, 2011 at 6:38 am

  velippadaiyaga unmaiyai sollum ungal ezhuththukkum karuththukkum endrum en vanakkangal .

   S Murugesan said:
   March 12, 2011 at 8:41 am

   பெருமாள் சிவன் அவர்களே,
   தங்கள் வணக்கங்கள் இறைவனுக்கும்,இறையருளாலோ அ இறை தடையை மீறியோ எதிர்கால இருண்மையை பிளந்த அன்றைய ரிஷிகள் மகரிஷிகளுக்கும் உரித்தாகட்டும்.

   இதுல என் பங்கென்ன பாஸ். நான் ஜஸ்ட் ஒரு மீடியம்.தட்ஸால்

  தனி காட்டு ராஜா said:
  March 12, 2011 at 9:46 am

  //க்ரியேஷன் என்றால் படைப்பு. ரீ க்ரியேஷன் என்றால் படைப்பில் உள்ளதை மறுபடி படைப்பது. அது ரெக்ரியேஷன் ஜஸ்ட் பொழுது போக்கு.

  ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை .

  போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.

  எழுத்து என்ப‌தென்ன‌ ? ம‌வுன‌மாக‌ பேசுத‌ல் தானே ! பேச்சை காட்டிலும் இத‌ன் அதிர்வுக‌ள் தான் ஆழ‌மாக‌ இருக்கும்.

  என் மாதிரி ஒன்ற‌ரையணா ப‌திவ‌ர்க‌ள் ம‌ட்டுமே அல்ல‌ எழுத்தாள‌ன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த‌‌ விதி பொருந்தும்//

  பதிவுலகம் என்பதே சுய இன்பம் போல சில சமயம் தோன்றுகிறது 🙂
  என்ன செய்வது ….இது ஒரு மாற்று வழி….தெருவில் இறங்கி போராட முடியாத நாம் சுய இன்பம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம் :))

   S Murugesan said:
   March 12, 2011 at 9:59 am

   வாங்க ராசா,
   சில நேரங்கள்ள சுய இன்பம் கூட மனச்சிதைவை தடுக்கிற மன நல மருத்துவன் கணக்கா உதவுது. ஒரு கற்பழிப்பை தடுக்குது. சனத்தொகை பெருக்கத்தை தடுக்குது. ஓகே. ஆனால் இதுவே போதுமா? வளரவேணாமா? வளரனும் பாஸ்! எதாச்சும் செய்யனும்.

   இந்த சுய இன்ப வார்த்தை பிரயோகத்தை ஏற்கெனவே என் பதிவு ஒன்றில் எழுதி கோவி.கண்ணன் அவர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டது ஞா வருகிறது. எனி ஹவ்.. வைஸ் மென் திங்க் அலைக்.

   தேங்க்யு ஃபார் யுவர் கமெண்ட்.

   எப்பவரும் கமிட்மெண்ட்? லெட் அஸ் வெய்ட் அண்ட் சீ !

  S Murugesan said:
  March 16, 2011 at 5:22 pm

  ராசாவின் நண்பர் சாதிக்கின் மரணம் தனபாவம் + ஆயுள் பாவத்துக்கிடையிலான உறவுக்கு லேட்டஸ் ட் உதாரணம்

  k subraa said:
  March 18, 2011 at 7:43 am

  எனக்கு கும்ப லக்னம் இரண்டில் சனி +செவ்வாய் +சூரியன் +ராகு, எட்டில் சந்திரன் + கேது , லக்னத்தில் புதன் + சுக்ரன் , எழில் குரு (வக்கிரம்), எப்படி இருக்கும் ?
  BIRTH : 16-03-1968, 5.15 AM, PUDUKKOTTAI

   S Murugesan said:
   March 18, 2011 at 9:19 am

   கே .சுப்ரா அவர்களே,
   பதில் ரெம்ப பர்சனலா போகுமே .. மெயில் பண்றேனே

    kl subra said:
    August 16, 2011 at 9:41 am

    எனக்கு கும்ப லக்னம் இரண்டில் சனி +செவ்வாய் +சூரியன் +ராகு, எட்டில் சந்திரன் + கேது , லக்னத்தில் புதன் + சுக்ரன் , எழில் குரு (வக்கிரம்), எப்படி இருக்கும் ?
    BIRTH : 16-03-1968, 5.15 AM, PUDUKKOTTAI
    ksubramanian08@yahoo.com

    S Murugesan
    March 18, 2011
    Reply
    கே .சுப்ரா அவர்களே,
    பதில் ரெம்ப பர்சனலா போகுமே .. மெயில் பண்றேனே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s