என் சாளரம் வழியே வானம் – sugumarje – பார்வை 3

Posted on

முந்தைய பார்வைகள்

என் சாள்ரம் வழியே வானம் – பார்வை 1
என் சாள்ரம் வழியே வானம் – பார்வை 2

என் சாள்ரம் வழியே வானம் – பார்வை 3

ஒரு குழந்தையின், பிறப்பின் நேரத்தை நேற்றுவரை கணித்தது இருக்கட்டும். இனிமேலாவது திருத்தம் செய்ய விழையலாம். மருத்துவர்களை விடவும், செவிலியர்கள் தான் குழந்தை பிறப்பின் பொழுதுதான நேரத்தில் குறிப்பு எடுத்துக்கொண்டிருப்பார்கள். இந்த கட்டுரைக்குறித்த செய்தியை அவர்கள் அறிந்தால் நமக்கெல்லாம் ஒரு குழந்தை பிறப்பின் நேரம் சரியாக கிடைக்கும்.

ஆனாலும் நேற்றுவரையிலும், இந்தனை குழப்பமான நேரப்பதிவிலும், நீங்களும், நானும் சோதிடங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருப்பது, அதன் பலன்களை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது எல்லாமே ஆச்சிரியமானதுதான். திரு சித்தூர் முருகேசனோடு நானும் ஒத்துப்போகிறேன். அப்படியான பலன்களும் ஏறக்குறைய ஜாதனோடு ஒத்துவருவதும் ஆச்சரியமானதுதான். பொதுவாகவே 30 முதல் 60 சதவிகிதம் பலன்கள் உண்மையாகிறது. அப்படியானால், சரியான நேரம் நமக்கெல்லாம் கிடைக்குமானால்… அற்புதம்தான் இல்லையா?

பழைய ஜாதகங்களை எடுத்துக்கொண்டால் வாக்கியப்படிதான் குறித்திருப்பார்கள். நேரம் முதலான எல்லாமே… இப்பொழுது கணிணி உதவி வந்துவிட்டதால், பொதுவாகவே திருக்கணித பஞ்சாங்க முறையே உபயோகப்படுத்தப்படுகிறது. முந்தைய எழுதும் நிலையில் நிறைய ஜாதகங்கள் ஜாதகன் பிறந்த இடத்திற்குறிய நேரத்தைகூட தெளிவுபடுத்தாமலிருப்பது வேதனை.

வாக்கியம் – திருக்கணிதம் ஆய்வு மிககடினம்… யாரேனும் தகவல் தந்தால் கண்டிப்பாக அறியத்தரலாம். அது பின்வரும் பதிவுகளில் காணலாம்.

பிறப்பின் நேரம் குறித்தலில் இந்திய நேரம் என்பது பொதுவான நேரம். உஜ்ஜயினி என்ற ஊரை மையமாககொண்டே இந்நேரம் கணிக்கப்படுகிறது. அதன் சரியான இடம் பூமியின் குறுக்குக்கோடுகளில் ஆன தீர்க்கரேகை கணக்கில் 82.30 பாகை. கலை என்பதாக உள்ள்து. இந்த நேரம் 1906ம் ஆண்டுமுதல் கொண்டாளபட்டுள்ளது. கால அளவுப்படி சொன்னால் ஒரு பாகைக்கு 4 நிமிடங்கள். எனவே 82.30/4 = 5.00 நிமிடங்கள். உஜ்ஜயினி பாகைக்கு கிழக்கே உள்ள நகரங்களுக்கெல்லாம் கால அளவை கூட்டியும், மேற்கே உள்ள  நகரங்களுக்கெல்லாம் கால அளவை கழித்தும் மிகச்சரியான நேரம் காண இயலும். இந்த கால பரப்பளவு கிட்டதட்ட 100 கிலோமீட்டருக்குள் வியாபித்திருக்கிறது. இதன் தெளிவான அட்டவணை திருக்கணித பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. காண்க…

உதாரணமாக: மதுரைக்கு தீர்க்கரேகை 78.07க்கு உஜ்ஜயினி தீர்க்கரேகை 82.30லிருந்து கழிக்க மீதம் 4.23 ஒரு பாகைக்கு 4 நிமிடம் எனக்கொண்டால் 18 நிமிடம், இந்திய நிலை நேரத்திலிருந்து கழித்துகொள்ள வேண்டும்.

அதாவது 10.45 காலை என்று வைத்துக்கொண்டால் 10.45 – 0.18 = 10.27 மணி என்பதே சரியான, மதுரைக்கான நேரம். 10.27 ம்ணி என்பதே குழந்தை பிறந்த மிகச்சரியான உள்ளூர் நேரம்.

இந்த முறையில் சரியான நேரம் கொண்டு ஜாதகம் கணிக்க பழகுங்கள். உண்மையை காணுங்கள்.

ஜாதக்ம் குறித்த சந்தேகங்களே, நீங்கள் ஜோதிட அறிவியலை நேசிப்பதற்கான முதல் படி. அந்த சந்தேகங்கள் தீர வேண்டுமானால் நாம் தான் இறங்கிப்போக வேண்டும். அந்த நிலைக்கு நாம் வரவேண்டும், அப்பொழுதுதான் கிரகங்கள் தங்கள் தன்மையை காட்டும். எல்லாம் சுத்த ஹம்பக் என்கிறீர்களா? நல்லது 🙂

கிரகங்கள் உன்னையும், என்னையும் விட மிக மிகப் பெரியது… உயரமும், பெரியதும், நம் ஒரு இன்ஞ் அகல கண்ணால் பார்த்தால் தானே நம்புவோம். அப்படியே பார்த்து பழகுவோம்… ஆமா. ஒரு இன்ஞ் கண்ணால்… பார்க்கலாமே

உங்கள் குழந்தை வளர்வதை நீங்கள் கவனிக்கவில்லை என்பதற்காக அவர்கள் வளராமிலிருப்பதில்லை. உங்கள் குழந்தை என்பதற்காக உங்களிக்கு அடிபணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் உணவு ஊட்டினீர்கள் என்பதற்காக, உங்கள் மேலாக மறுகடமை உண்டு என்று நிரூபிக்க இயலாது.

தாய்ப்பாலூட்டும் அன்னைக்கு கூட “வரும்காலத்தில் என்னை நல்லா கவனித்துக்கொள்” என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக நான் அறிந்திருக்கிறேன். அதே போல ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்த உயிர், ஆனால் ஒரு காலம் காலமான பிணைப்பு குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் இருக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும் ஒரு கருவி. பெற்று எடுத்த காரணத்தால் அக்குழந்தையை ஆக்கிரமித்தல் என்றும் தகாது. கொஞ்சம் யோசித்துப்பார்… நீ என்ன செய்தாய் இந்த குழந்தை உருவாவதற்கும், பிறப்பதற்கும்? ஒரு பெண்னோடு கலந்தாய் என்பதை தவிர வேறென்ன?

——-

சரி உங்கள் குழந்தை, உங்கள் அப்பனுக்கு அப்பன் என்பது தெரியுமா? அதை அடுத்த சாளரத்தில் பார்ப்போம்.

——-

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் ராஜசுந்தரம் அவர்கள்,  “…அதன் படி, ‘அடிப்படை அறிவுத் தேவை’ என்று கூடச் சொல்ல மாட்டேன், ‘பொதுப்புத்தி’ (common sense) இல்லையென்றாலும் கூடச் ஜோதிஷர் ஆகலாம்….” என்றும், ஜாதகம் படிப்பதற்கு தனி அறிவு தேவை இல்லை என்ன ரீதியிலான விளக்கமிருந்தது. உண்மைதான்,  தனி அறிவு தேவை இல்லைதான், இருக்கிற அறிவே போதுமானது…

ஆனால் ஜோதிட அறிவில் உதார் காட்டுகிற வேலை நடக்காது… போதுமான அறிவு இல்லாமல் ஜாதக பலன் சொல்ல இறங்குவது அந்த மனிதனுக்கு ஒரு வகையான பாதிப்பை, அந்தந்த கிரகங்களே ஏற்படுத்தும்… ஜோதிட விளக்கம் சொல்லுவதே ஒரு சாபம்… அந்த சாபத்தை முறியடிக்க கூடிய தன்மை  கொண்டவந்தான் இதில், ஜாதக விளக்கம், பலன்கள் சொல்லுவதில் இறங்கமுடியும்.

ஆனால் எந்த கிரகங்களும் என்னை அறிந்து கொள்… என் செயல் இப்படித்தான் என்று சொல்லுவதில்லை. அதுபாட்டுக்கு அது.

நீ கிழக்கில் வானில் பார்க்கும்போது தெரியும் சூரியன், வீட்டுக்குள் போனதும் சந்திரனாக மாறப்போவதில்லை. அதற்கு மாலைவரை காத்திருக்கவும் வேண்டும். ஆனால் வெளியே வந்தால் சூரியன் இருக்காதே?

ஜோதிட அறிவு வரவும், கற்றுக்கொள்ளவும், பலன் சொல்லுவதற்கும், அதை கேட்டு பயன் பெறுவதற்கும் ஒரு தனிப்பட்ட கிரக அமைப்பு வேண்டும். யார் வேண்டுமானாலும் என்றெல்லாம் இல்லை. ஜாதகம் பலன் சொல்லுவதாக நடிக்கும் ஒரு திருடனை சந்தேகிக்காதாது உங்கள் தவறு…

தெரியுமா? ஜோதிட விதிகள் அறிந்து உணர்ந்தவன் பயந்துகொண்டுதான் பலன் சொல்ல புறப்படுவான். யாராக இருந்தாலும் அவன் ஒரு துளிதான் அறிந்திருப்பான். இன்னுமிருப்பது கடல். நாங்கள் இன்னமும் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சுயமாக, ஒவ்வொரு ஜாதகங்கள் வழியாக. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் நானே கூட பார்க்கலாமா… என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

அதேபோல ஜோதிட அறிவியலில் தர்க்கமிருந்தது இல்லை… அது பிளக்‌ஷிபிள்… மாற்றுக்கருத்துக்களை தானே வைத்திருக்கும். 2X2 ம் நாலு. 3X3ம் ஒன்பது என்பது ஏன்? விடையை 5ம் 8ம் என்று சொல்லக்கூடாதா? கூடாதய்யா கூடாது. அப்படி சொன்னால உன் மூளையில் பிசகு என்று சொல்லுவார்கள். ஆனால் ஜோதிட அறிவியலில் மாற்றுக்கருத்துக்களை ஜாதகத்தில் சொல்லிக்கொண்டே மையக்கருத்தை விட்டு விலகி ஓரமாக போய்விட்ட ஜோதிடர்கள் பலர்… தயவு செய்து அவர்களை இனம் கண்டு விலகுங்கள்.

பின்னூட்டத்தின் சாரம் சொல்ல நினைப்பது… அவர் ஏமாற்றப்ட்டிருக்கலாம் அல்லது அவரை விட அரைகுறை தூள் கிளப்பிக்கொண்டிருக்கலாம்… புயலும், காற்றுச்சுழலும் பயங்கரமானதுதான், ஆற்றல் மிகுந்தது தான், ஆனால் சிறிது நேரத்தில் இருந்த இடம் இல்லாமல் மறைந்துவிடும்.

எனகொரு சந்தேகம், சுமாராக அல்லது முழுமையாக ஐந்து வருடங்கள் நம்மை ஏமாற்றும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியை சந்தேகிக்க தோன்றவில்லை… ரகிகனின் வியர்வையில் கோடியள்ளும் நடிகனை சந்தேகிக்க தோன்றவில்லை… கூட இருந்தே குழிபறிக்கும் நண்பணாக நடிப்பவனை சந்தேகிக்க தோன்றவில்லை… வியாபார ரீதியாக காலைவாரும் வியாபாரியை சந்தேகிக்க தோன்றவில்லை… எதுவுமே தனியாக செய்யாது, தன் இயல்புப்படி செயல் பட்டுக்கொண்டிருக்கும் கிரகங்களை, அதன் சார்ந்த ஜாதக அறிவை மட்டும் ஏன் இந்த அளவு சந்தேகிக்கிறான்? அதே போல மறுத்துப்பேச வேண்டும் என்றே ஒரு குழு செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

நான் மீண்டும், மீண்டும் வழியுறுத்துவது இதுதான், “கிரகங்கள் ஆளுமை செய்வதில்லை… தூண்டுகின்றன”

என் கட்டுரைகள் வழியாக ஆரோக்யமான செய்திகள் பரிமாறப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். என் ஆசான், கல்லூரி துறைத்தலைவர் சொன்னதுபோல “வகுப்புமுடிந்து மாணவர்கள் அமைதியாக இருந்தால் இரண்டே சாய்ஸ்… ஒன்று – எல்லாமே புரிந்து விட்டது, இரண்டு – எதுவுமே புரியல்ல”

நீங்க எப்படி?

நோ. விதண்டாவாதம்… சரியா?

பின்குறிப்பு: என்னைப்பற்றி

7 thoughts on “என் சாளரம் வழியே வானம் – sugumarje – பார்வை 3

  தனி காட்டு ராஜா said:
  March 11, 2011 at 1:16 pm

  //நான் மீண்டும், மீண்டும் வழியுறுத்துவது இதுதான், “கிரகங்கள் ஆளுமை செய்வதில்லை… தூண்டுகின்றன”//

  I also agree with this 🙂

   S Murugesan said:
   March 11, 2011 at 1:22 pm

   //நான் மீண்டும், மீண்டும் வழியுறுத்துவது இதுதான், “கிரகங்கள் ஆளுமை செய்வதில்லை… தூண்டுகின்றன”//

   கரீட்டு.. 7 ஆவது மாடி பாரபட் வால் மேல ஏறி நில்லுன்னு கிரகம் சொல்லும். நீங்க ‘உகூம் நான் மாத்தேன்”னு சொல்லிரலாம். அதுக்குண்டான அதிகாரம் உங்களுக்கு தரப்பட்டிருக்கு.

   என்னடா சோகம்னா அந்த அதிகாரத்தை உபயோகிச்சுக்கிற ஸ்டஃப், தாக்கத் உங்க ஜாதகத்துல இருக்கனும்

   ஆனால்

   S Murugesan said:
   March 11, 2011 at 1:24 pm

   ராசா,
   நான் உ.வசப்பட்டு சொல்றேனா நெஜம்தானானு நீங்கதேன் டிசைட் பண்ணனும். நம்ம சுகுமார்ஜியோட நடை கண்ணதாசனை நினைவுப்படுத்துதுனு நான் நினைக்கிறேன் நீங்க?

  krishnamoorthy said:
  March 11, 2011 at 3:51 pm

  பொறுமையான நடையில் மிக தீர்க்கமான அதே சமயம் மிக சரியான அர்த்தங்களில் பதிவு வெளிவந்து இருக்கிறது .அருமை .இந்த நடைதான் ஜோதிஷத்தில் உள்ளவர்களையும் புதியவர்களையும் ஈர்க்கும் என்பது என் தாழ்மையான கருத்து .
  என்றென்றும் அன்புடன் ,
  சுகி …

  PERUMALSHIVAN.S said:
  March 12, 2011 at 6:30 am

  pathivu nandraga ullathu
  nandri !

  Vinoth said:
  March 14, 2011 at 4:06 am

  //….கிரகங்களை, அதன் சார்ந்த ஜாதக அறிவை மட்டும் ஏன் இந்த அளவு சந்தேகிக்கிறான்? //

  ஒரு வேளை நீங்க சொன்ன மாதிரி, அரசியல் வாதி, நடிகன், வியாபாரி , இவங்களை சந்தேகபட்டு பேசினா கூட இருக்கிறவங்க டின் கட்டிடுவாங்க…
  கிரகங்களை சோதிடத்தை சந்தேகப்பட்டு பேசின கொஞ்சம் விளம்பரம் கிடைக்கும்.
  கிரகங்கள் வந்து கேட்கவா போகுது ?

   S Murugesan said:
   March 14, 2011 at 6:12 am

   வாங்க வினோத்!
   நெத்தியடி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s