முக ராசிங்கறது நெஜம்தானா?

Posted on

அகத்தின் அழகு முகத்தில் தெரியுங்கறாய்ங்க. “எம்.ஜி.ஆர் முகம் காட்டினால் ஆயிரம் ஓட்டுக்கள்”னு அண்ணாவே சொன்னாரு. தளபதின்னு அல்லாரும் தலையில தூக்கி வச்சு கொண்டாடற விஜயை பார்த்தா எனக்கு கடுக்கும்.

(மேட்டர் என்னடானா பார்க்க பையன் மாதிரியும் இருக்காது – ஆம்பளை மாதிரியும் இருக்காது -இதுவாச்சும் பரவால்ல பிரசாந்து பிரசாந்துன்னு ஒரு ஆக்டரு அவர் மூஞ்சி ஆம்பள மாதிரியும் இருக்காது பொம்பள மாதிரியும் இருக்காது.)

மேஷாதி மீனம் வரை 12 ராசியும் தெரியும் அதின்னாபா அது மொகராசின்னு நானும் நிறைய குழம்பியிருக்கேன்.

ஜாதகத்துல லக்னம் தேன் முகத்தை காட்டுது. அங்கன சுபகிரகம் சுபபலமா இருந்தா மொகம் அழகா இருக்கும். ( அரவிந்த் ஸ்வாமிய லேட்டஸ்டா பார்த்தியளா? அன்னைக்கு அழகா வச்சது எது இன்னைக்கு இப்படி ஆக்கினது எது?)

ஒய்.எஸ்.ஆரோட பழைய ஃபோட்டோஸ் பார்த்தா ரவுடி மாதிரிதேன் இருக்கும். ஆனால் பாதயாத்திரை – 2004 தேர்தல்ல வெற்றி – ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆண்டு மாதிரி நலதிட்டம்னு பட்டைய கிளப்பின பிற்பாடு எடுத்த படம் இது. அழகு எங்கருந்து வருது? எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு மட்டுமில்லை. அழகும் அமையுங்கண்ணா!

(லக்னத்துல சுபகிரகம் இருந்து) அழகா இருக்கிறவன்லாம் நல்லவனா? அதிர்ஷ்ட சாலியா? அப்படித்தேன் சாமுத்ரிகா லட்சணம் சொல்லுது. ப்ராக்டிக்கலா பார்க்கும்போது எவன் ஜாதகத்துலயும் எந்த கிரகமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்கிறதே கிடையாது. தேய்மானம், சேதாரம் ,செய்கூலி எல்லாம் போயி 60% நின்னா கிரேட்.அதுக்கே சனம் இந்த ஆட்டம் போட்டுருது.

எப்படி ஒவ்வொரு விளக்குக்கு அடியிலயும்/ பின்னாடியும் இருட்டு இருக்கோ அப்படி ஒவ்வொரு யோகத்துக்கு பின்னாடியும் ஒரு அவயோகம் இருக்கு. கலைஞருக்கு முக முத்து மாதிரி. ( அஞ்சாமிடம்தேன் பேர் புகழை காட்டுது -அதே இடம் தேன் பிள்ளைகளையும் காட்டுது.

முகமும் நல்லாருந்து எண்ணமும் நல்லாருக்கனும்னா அந்த இடம் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்கனும். அப்படி ஒரு ஜாதகத்தை நான் பார்த்த்தே இல்லை .அப்ப முக அழகுக்கும் – எண்ணங்களுக்கும் -முக ராசிக்கும் தொடர்பு இல்லையா?

கிளி மாதிரி ஒரு பொஞ்சாதி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு கூத்தி வேணம்னு ஒரு சொலவடை இருக்கு. ப்ராக்டிக்கலா பார்க்கறச்ச பொஞ்சாதி ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கும்.ஆனால் இவன் நெஜமாலுமே கொரங்கு மாதிரி ஒன்னை வச்சிருப்பான்.

இன்னாடா மேட்டருன்னா அழகா இருக்கிற குட்டிங்களுக்கெல்லாம் அந்த குவாலிஃபிகேஷன் ஒன்னே போதுங்கற் நெனப்பு வந்திட்டிருக்கும். இன்னா பண்ணாலும் ‘ நடந்துரும்”ங்கற ஃபீலிங் இருக்கும். இப்படியா கொத்த பொஞ்சாதி கிட்ட மாட்டின புருசன் தெனாலிராமன் புலி மாதிரி ” ங்கொய்யால அழகா இருக்கிறவ எல்லாம் அக்குறும்பு புடிச்ச பன்னாடையாதான் இருக்குங்கற முடிவுக்கு வந்து கொரங்கு மாதிரி ஒரு குட்டிய பிக் அப் பண்ணிர்ரான். அங்கனயும் அவன் சுகப்படுவானாங்கறது கேள்விக்குறிதேன். இவன் சுகப்படனுங்கற எழுத்திருந்தா இங்கனயே சுகப்பட்டிருப்பானே.

என் முடிவு என்னடான்னா : அழகு – நற்குணம் ரெண்டையும் தர்ரது லக்னம். லக்னாதிபதிதேன். இது 100% ஃப்ரூட் ஃபுல்லா இருந்தா டு இன் ஒன். 50 முதல் 40% ஃப்ரூட் ஃபுல்லா இருந்தா எஸ்.எஸ்.சி எக்ஸாம்ல சாய்ஸ்ல விட்ட மாதிரி அழகையோ, நற்குணத்தையோ மறந்துர வேண்டியதுதேன்.

(எந்த பாவமும் ,எந்த பாவாதிபதியும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்க வாய்ப்பே கிடையாது – ரிப்பீட்டு.)

அந்த கிரக பலமோ, பாவ பலமோ அழகை தரலாம் – அ நல்ல குணத்தை தரலாம். அந்த கிரகத்தோட பாவத்தோட தோஷம் அழகை கெடுக்கலாம் அ குணத்தை கெடுக்கலாம்.

இதுலருந்து இன்னா தெரீது அழகா இருக்கிறவ கேப் மாரியாவும் இருக்கலாம். அவலட்சணமா இருக்கிறவ நெல்லவளாவும் இருக்கலாம்.

அதே நேரத்துல அவலட்சணமானவ எல்லாம் நெல்லவன்னு சொல்லிர முடியாது. அங்க லட்சணமுள்ளவ எல்லாம் கெட்டவள்னும் சொல்லிரமுடியாது.

( என்ன மவுஸ் மேல இருந்து கைய எடுக்கிறிங்க -சிண்டை பிச்சிக்கவா?) லைஃப்னா இதான் பாஸ்! எல்லாம் புரியற மாதிரியே இருக்கும். ஒரு ம…ரும் புரிஞ்சிருக்காது. முழுக்க புரிஞ்சிட்டா எல்லாமே தப்பா போயிரும்.

ஜாதகராசிய வச்சு பார்த்தாளே அவ லக்னத்தோட/லக்னாதிபதியோட சுபபலன் நற்குணத்து மேல ஒர்க் அவுட் ஆச்சா – அழகு மேல ஒர்க் அவுட் ஆச்சான்னு தெரிஞ்சிக்கிறதே கஷ்டம். கூடவே பார்ட்டிய ஒரு பார்வை பார்த்துக்கனும்.

மேட்டர் இதான். எனவே வெறுமனே முகராசிங்கறதெல்லாம் ஜல்லி. வேணம்னா ஒரு சின்ன டிப் தரேன். மொத பார்வையில எவனை பார்த்தா நவத்வாரமும் எரியுதோ -எவனோட டீல் பண்ணப்ப மொத டீலே புட்டுக்குச்சோ அவன் பெட்டர் சாய்ஸ்.

இதுக்கு எதிரிடையா நடந்தா மேட்டர் சீரியஸ்னு அர்த்தம் . கழண்டுக்கங்க.

Advertisements

31 thoughts on “முக ராசிங்கறது நெஜம்தானா?

  டவுசர் பாண்டி said:
  March 10, 2011 at 2:05 am

  இப்பதான் கண்ணு புரியுது, நீ ஏன் இம்புட்டு சோக்கா கிரன்னு. பதிவு சூப்பரா இருக்கு செல்லம். அப்பால சோக்கா கிறவங்களுக்கெல்லாம் நல்ல கெரகம் நல்ல நெலமைல இருக்குன்ற.

  Vinoth said:
  March 10, 2011 at 4:39 am

  டீல் புட்டுகிறவங்க கூட சேர்ந்து என்ன பண்ண ? மொத்த லைப்பும் புட்டுகாதா/?

   S Murugesan said:
   March 10, 2011 at 9:12 am

   வாங்க வினோத்,
   நீங்க சொல்றது நிஜம் தேன்.
   அதுக்குத்தேன் டெஸ்டிங் டோஸ் தந்திருக்கமில்லை. டேக் கேர்

  டவுசர் பாண்டி said:
  March 10, 2011 at 4:40 am

  தல, குருவலயம்னு நீ மாட்டிக்கினு இருக்குற மாரீ நம்ம ரசினி காந்து தம்பியும் கால்ல மாட்டிக்கினு இருக்காருப்பா. அத மாட்டிக்கினு இருந்தா பல்லி, பில்லி, செய்வினை, செயப்பாட்டுவினை, ஊழ்வினை, இப்புடி ஏதும் நெருங்காதாம் தல. ஒரு பொஸ்தத்துல எப்பவோ படிச்சிக்குனேன். மெய்யாலுமே அப்டி உண்டா தல.

   S Murugesan said:
   March 10, 2011 at 9:11 am

   டவுசர் பாண்டி,
   நான் சொன்ன வளையம் ரேகையிலயே அமையும். ஆட்காட்டி விரலுக்கு கீழே இருக்கிற பாகம் தேன் குரு மேடு. இங்கன இருக்கக்கூடிய ஒரு அரை வட்ட ரேகைய குருவளையம்னு சொல்வாய்ங்க.இது இருந்தா அவிகளுக்கு எதிர்காலம் அப்பப்ப ஃப்ளாஷ் ஆகும்னு கணக்கிருக்கு.

   ஸ்தூல வஸ்துக்களை,ஸ்தூலமா எங்கன மாட்டினாலும் அது சூட்சுமத்தை தொடுவது துர்லபம். (சூட்சும சக்திகள் அவற்றிற்குள் செலுத்தப்பட்டிருந்தால் தவிர)

  தனி காட்டு ராஜா said:
  March 10, 2011 at 5:01 am

  ha ha ha ……:)

   S Murugesan said:
   March 10, 2011 at 9:05 am

   வாங்க ராசா,
   ஜோதிஷத்துல நவரசங்களும் உண்டு. ஹாஸ்ய ரசம் விரைவில்.

  சாமி யார்? said:
  March 10, 2011 at 5:27 am

  ஐயா வணக்கம், அம்மா வணக்கம். நான்தான் சாமி. நல்லதை எண்ணுபவர்களுக்கு சாமி. வில்லங்கம் பிடித்தவர்களுக்கு ஆசாமி. சரி மேட்டருக்கு வருகிறேன். எங்களது ஊரில் உள்ள பெரும்பான்மையான ஜோதிடர்கள் ஜாதகம் கணிக்கும் பொழுது கிரக பாதசாரங்கள் மாதிரி ஜாதகத்தின் ஊடே எழுதி வைத்து விடுகிறார்கள். இது என்ன என்று பல ஜோதிடர்களிடம் கேட்ட பொழுது ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக கதைகளை கூறினாலும் உண்மையை யாரும் கூற முன்வரவில்லை. இப்பேற்பட்ட சூழ்நிலையில் ஒரு கோவிலில் உட்கார்ந்து சில மந்திரங்களை (பலான மந்திரம்) ஜெபித்துக்கொண்டிருந்த பொழுது தம்பி என்ற அந்த கெஞ்சலுடன் கூடிய சத்தத்தைக் கேட்டு கண் முழித்தேன். கையில் திருவோடு, நெத்தியில் பட்டை, கழுத்தில் கொட்டை, உயரம் குட்டை. என்னய்யா என்றேன். தம்பி தருமம் குடுய்யா என்றார். சில்ற இல்ல தாத்தா, போயிட்டு வாங்க என்றேன். அவரோ நகரவில்லை. தாத்தா நானே நேரம் சரியில்லாம கடவுள்ட்ட பிச்சை கேட்டு இங்க வந்து உக்காந்துருக்கேன். என்றேன். உடனே தள்ளாடிய படி சென்றவர் சிறிது நேரம் கழித்து எனக்கு சற்று தூரம் அமர்ந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தார். எல்லா பன்னாடைகளும் சாபம் குடுத்து விட்டார்கள். இவர் ஏதும் புதிதாக குடுக்கப் போகிறாரா? என்று மெதுவாக கண்ணை திறந்து பார்த்தேன். கஞ்சா மாதிரி எதையோ நன்றாக இழுத்துக் கொண்டிருந்தார். பிறகு சம்ஸ்கிருத வார்த்தைகளை லூசு மாதிரி உளறிக்கொண்டிருந்தார். நான் காசு போடாததினால் வேறு பாஷையில் என்னை அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். என்னிடம் நைசாக பேச்சுக்கொடுத்தார் என்னை தியானம் செய்ய விடாமல். தம்பி எல்லாரும் பிச்சக்காரங்கதாம்பா. நீ ஆண்டவன்ட்ட கேக்க. நான் ஒன்ட்ட கேக்கேன் என்று தெளிவாக பேசுவது போல் பேசினார். அருகில் வந்து அமர்ந்தார். வாடை குடலை திருப்பி போடும் பணியில் ஈடுபட்டது. இருப்பினும் பிராணயாமா பயிற்சியில் மூச்சை வெகு நேரம் அடக்கும் முறையை பழகி இருந்ததால் கை கொடுத்தது. தம்பி கெரகந்தான் எல்லாத்துக்கும் காரணம். அப்படின்னு ஆரம்பிச்சு நோட்ஸ் எடுக்குற அளவுக்கு பலான பலான விஷயங்களாக சொன்னார். அவருடைய வார்த்தைகள் எனக்கு ஜோதிடப்பசியை தூண்டியது. நிறைய விஷயங்களை கூறியவர் என்னிடம் துட்டு ஏதும் வெட்ட சொல்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர் கேட்டதோ காசு பணமல்ல. ஒரு காப்பியும் வடையும்தான்.

   S Murugesan said:
   March 10, 2011 at 9:04 am

   சாமியார்,
   நல்ல அனுபவம். TTD கண்ணால மண்டவ வாசல்ல ராமசாமின்னு ஒரு பிளாட்பார ஜோதிடர்தான் மொதல் ரிசல்ட்டை கொடுத்து பேதியாக வச்சாரு. அப்பாறம் சந்தைப்பேட்டையில ஒரு தாத்தா, நெக்ஸ்ட் ஒரு ஐயங்காரு பிறகு கே.வி.முனி .. யாரும் பெருசா நம்மை எஜுக்கேட் பண்ணலை.

   கத்துக்கறதுக்கு தேவை கத்துக்கற ஆர்வம். கத்துக்கொடுக்கிற பார்ட்டி. ராமசாமினு சொன்னேனே அவரு திடீர்னு சமையல் வேலைக்கு போவாரு .திடீர்னு எந்திரிச்சு நடனமாடி காட்டுவார் ( டப்பாங்குத்து தேன்) வயசு அம்பதுக்கு மேல.

   பாவம்.. எங்கே இருக்காரோ?

   பி.கு: மொத்தத்துல என் முன்னாடி கொசுவர்த்திய சுத்தி ஃப்ளாஷ் பேக் போக வச்சிட்டிங்க. நன்றி

  சாமி யார்? said:
  March 10, 2011 at 5:30 am

  அந்த பிட்சைக்கார நிலையிலுள்ள சாமியாரிடம், சரி நான் கெளம்புறேன் என்று விடை பெற்று சென்று மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை அந்த கோவிலில் சந்திப்பதற்காக சென்றேன். தேடினேன். தேடினேன். இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

   S Murugesan said:
   March 10, 2011 at 9:00 am

   நம்ம மேட்டர்ல ஜோதிடத்துல நமக்கு ஒன்னு அரை காட்டிக்கொடுத்தவுக அல்லாரும் டிக்கெட்டே வாங்கிட்டாய்ங்க. ஒரே ஒரு பார்ட்டி மிச்சம் இருக்கு. அது எப்பயாச்சும் எச்சக்கைய உதறினா பொறுக்கிக்கலாம். அம்புட்டுதேன்.

  swami said:
  March 10, 2011 at 5:40 am

  very interesting.

   S Murugesan said:
   March 10, 2011 at 8:58 am

   நன்றி ஸ்வாமி அவர்களே.

  சாமி யார்? said:
  March 10, 2011 at 5:47 am

  நண்பர்களே, நீங்கள் ஜாதகம் பார்க்க போகும் பொழுது, நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது, அந்த ஜோதிடர் உண்மையானவரா? கரிகீடா சொல்லுவாரா என்று கண்டறிய நீங்கள் அவரிடம் கேட்கும் கேள்விகளில் ஒன்று. இந்த ஜாதகத்துல உள்ளவருக்கு கூட பொறந்தவங்கள பத்தி சொல்லுங்க? என்று. இதன் மூலம் அந்த ஜோதிடர் சரியாக சொல்லிவிட்டால், அடுத்து அவர் என்ன சொன்னாலும் நம் காதுகளுக்கு வேதவாக்காகத்தன் கேட்கும். அதென்ன உடன் பிறந்தவர்களை பற்றி துல்லியமாக சொல்லும் முறை என்று உங்களுக்கு தோன்றலாம். இந்த மேட்டேரெல்லாம் ஜாதகத்துல சகோதர பாவங்கள ஆராய்ச்சி பண்ணி அம்சம், த்ரக்கோணம், அஷ்டவர்கம்லாம் போட்டுக்கிட்டு இருந்தாலும் கண்டறிய முடியாது. இதெல்லாம் பண்டைய காலத்து மக்களோடு சரி. நமக்கு சரிப்பட்டு வராது. ஏனெனில் அக்கால மக்கள் குழந்தைகளை சகட்டு மேனிக்கு படைத்தார்கள். பின்னர் வந்தவர்கள் நாமிருவர் நமக்கிருவர் என்றனர். பின்னர் நாமிருவர் நமக்கொருவர் என்றாகி இறுதியில் நாமிருவர் நமக்கேன் ஒருவர் என்றாகியது. இன்றைய சூழ்நிலையில் இரண்டுக்கு மேல் பெரும்பாலும் பெறுவதற்கு பெண்கள் விரும்புவதில்லை. அதனால் ஜோதிடர்கள் மேற்கண்ட பாவங்களை அலசி கூறிக்கொண்டிருந்தால் அவர்களின் நிலை கேலிக்குரியதாக்கி விடும். அப்ப என்னதான் வழி? வழி இருக்கு? சொல்றேன்.

   S Murugesan said:
   March 10, 2011 at 8:58 am

   சாமியார் அவர்களே,
   என் அனுபவ சாரம் – எனது அனுபவஜோதிடத்தின் அடிப்படை இது:

   ஒரே கிரகஸ்திதி எந்த இருவருக்கு ஒரே மாதிரியான பலனை தருவதில்லை.இந்த மேட்டரில் பூர்வ புண்ணியம், கடவுள் கருணை, அப்பா அம்மா நல்வினை, வாஸ்து இப்படி நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது. நாம் ரெசிப்டிவாக மாறும்போது பிரச்சினை குறைகிறது. ரெபல் ஆகும்போது அது பல மடங்காகிறது.
   ஒரு கிரகம் நான் இந்த ஒரு பலனை தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. காம்பவுண்டுக்குள்ள குதிச்ச திருடன் சிச்சுவேஷனை பொருத்து பாய்லர் மூடியையாவது தூக்கிக்கிட்டு போறாப்ல தன் ஜூரிஸ்டிக்சனில் (காரகத்வம்) ஏதோ ஒன்றை அடித்து தூள் கிளப்பி விடுகிறது. அதே போல் தான் நின்ற பாவ காரகத்வத்தில் ஏதோ ஒன்றை நாறடித்து விடுகிறது. ( நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ்) .
   மேலும் உங்கள் அடுத்த கணம் இந்த கணத்திலான உங்கள் செயலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன் மனிதனை சுதந்திரமாக வாழும்படி சபித்துள்ளான். ஃபைனல் கோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே தவிர தினசரி நிகழ்ச்சி நிரல் எல்லாம் நாட் ஃபிக்ஸ்ட்.

   இந்த அண்ணா, தம்பி பிசினெஸ் எல்லாம் கிம்மிக்ஸ். நாம ஏத்தக்குறைச்சலா சொல்லிட்டா குடும்பத்துல வில்லங்கமாயிருமில்லை. அதனால நான் இந்த”உள்ளே வெளிய ‘விளையாட்டுக்கெல்லாம் போறதில்லை.

   நீங்க ஏதொ சொல்லவரிங்க.சொல்லி முடிங்க .பார்ப்போம். ஒர்க் அவுட் ஆகுதுன்னு சனம் சொன்னா நானும் ஏத்துக்கிடறேன்.

   சகோதரங்களோட எண்ணிக்கை ஜாதகருக்கே தெரியுமே அதை சொல்ல ஒரு ஜோதிடர் தேவையாங்கறது என் கொள்கை.

  Naresh kumar said:
  March 10, 2011 at 10:33 am

  லக்கிணத்தில் சந்திரனும் எழில் குருவும் இருப்பவர்கள் அழகா இருப்பார்கள் என்பது உண்மையா? முருகேசன் சார்

   S Murugesan said:
   March 10, 2011 at 11:21 am

   நரேஷ் குமார்,
   லக்னத்துக்கு குரு சந்திரன் ரெண்டு பேரும் சுபர்களா இருக்கனும்.அவிக நின்னராசில அவிகளுக்கு பலம் இருக்கனும் உ. ம் சந்திரன் ரிஷபம் அ கடகத்துல

  டவுசர் பாண்டி said:
  March 10, 2011 at 1:20 pm

  //////….சகோதரங்களோட எண்ணிக்கை ஜாதகருக்கே தெரியுமே அதை சொல்ல ஒரு ஜோதிடர் தேவையாங்கறது என் கொள்கை.////

  ஆமா தல, கரீட்டா சொல்லிக்கிற.

   டவுசர் பாண்டி said:
   March 10, 2011 at 1:46 pm

   ஐயா டவுசரு,
   தமிழ்நாட்டுல இதனை பற்றி தாங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை படத்துடன் விளக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். முருகேசன் சார் இமேஜ்ஐ இன்செர்ட் செய்யலாமா?

   S Murugesan said:
   March 10, 2011 at 3:33 pm

   வாங்க டவுசர் பாண்டி ,
   வருகைக்கும் -மறுமொழிக்கும் நன்றி. ஒரு மேட்டரை இன்டர் நெட்ல வச்சுட்டோம்னு வைங்க. அத சனம் என்ன வேணா பண்ணுவாய்ங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணி வச்ச மாதிரிதான்.

   அம்மன் வேஷத்துல எல்லாம் தூள் பறத்தின கே ஆர் விஜயா அம்மாவோட படத்தை அம்மணமாக்கி வச்சிருக்காய்ங்க.

   என் படம் எல்லாம் ஒரு கணக்கா?

    Mani said:
    March 10, 2011 at 4:59 pm

    என்ன தலைவரே உங்க படத்தையும் உல்டா பண்ணிருவாய்ங்கன்னு பயமா இருக்கா.

    S Murugesan said:
    March 10, 2011 at 5:38 pm

    பண்ணா நாமும் ஒரு விஐபினு அர்த்தம்.

  Mani said:
  March 10, 2011 at 5:17 pm

  இன்னிக்கு சாயங்காலம் நல்ல முக அமைப்பு உள்ளவுங்களுக்கு எல்லாம் ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருக்க வாய்ப்பு இருக்கலாம்ன்னு நினைச்சிக்கிட்டு இதபத்தி ஒரு பதிவு என் தளத்தில் எழுதலாம்ன்னு நினைச்சுகிட்டே வீட்டுக்கு வந்தேன். சும்மா ஒரு எட்டு நீங்க இன்னிக்கு எதாச்சும் எழுதியிருக்கீங்களான்னு படிக்க வந்தா நான் நினைச்சத அப்படியே நீங்க பதிவுல போட்டிருக்கீங்க. எப்படி தலைவரே! நமக்குள்ள எதாச்சும் கனெக்ஷன் கினெக்ஷன் வந்திருச்சா. இததான் டெலிபதின்னு சொல்வாய்ங்களோ. சும்மா சொல்லக்கூடாது நான் எழுதியிருந்தாலும் இத்தனை நல்லா வந்திருக்காது. நீங்க எழுதினது சூப்பரோ சூப்பர்.

  நன்றி
  சு. மணிகண்டன்

   S Murugesan said:
   March 10, 2011 at 5:37 pm

   சு.மணி கண்டன் அவர்களே,
   நானும் சு.முருகேசன் தேன் ( அப்பா பேரு சுந்தரேசன்) கனெக்சன் நமக்குள்ள மட்டுமில்லை பாஸ் ! எல்லா உயிர்களுக்கு மத்தியிலும் இது உண்டு. அதை ஜஸ்ட் நம்ம ஈகோ மறைக்குது.

   ஒரு திமிர் காரணமா – விட்டா என்னதான் நடக்குதுபார்க்கலாங்கற க்யூரியாசிட்டி காரணமா நான் அதை விட்டேன். விட்டதால லோகாயத வாழ்விலும் நல்ல லாபம். ஆன்மீக வாழ்வுல அற்புதமே நடந்துருச்சு.

   அதுக்குத்தேன் நான் சமீபத்துல கூட சொன்னேன். நான் என்ன எழுதனும்னு சொம்மா நினைங்க / நீங்க நினைச்சதையே நான் எழுதறேன். என்னை எழுதவைக்கிறது நீங்கதேன்

   ஏதோ ஒன்று எழுதப்பட காத்திருக்கு. தனக்குரிய மீடியத்தை தேடிப்பிடிக்குது. காரியத்தை முடிச்சுக்கிது. தட்ஸால்.

   நீங்க எழுதியிருந்தாலும் சூப்பராதான் வந்திருக்கும். மேட்டர் தான் நம்முது இல்லியே. ஆரோ டிக்டேட் பண்றாய்ங்க. நாம எழுதறோம்

  டவுசர் பாண்டி said:
  March 10, 2011 at 6:32 pm

  தல, வெக்கப்படாத தல, புச்சாருக்குனு பயப்படாத, கொஞ்சம் இந்த பக்கம் வந்துகுனு போ.
  http://www.singaporejunction.com/eserv/ta/pub/astrology/CelebrityHoroscopes.asp

  அல்லாமே ஒனக்குத்தேன். எப்புடிருக்குன்னு நம்ம கைல சொல்லு மாமு

   S Murugesan said:
   March 11, 2011 at 4:40 am

   டவுசர் பாண்டி,
   இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல. வெட்கப்படாதே கூச்சப்படாதேனு ஏகபில்டப் கொடுக்கவே ஏதொ “வயசான காலத்துல” கில்மா,அஜால்குஜால் சைட்டை பாக்கிற யோகம் வந்தாப்ல இருக்கேனு ஜொள்ளு விட்டு காலர் எல்லாம் நனைஞ்சு போச்சு.

   எனிவே சூப்பர் சைட்டும்மா..ஒரு வாரத்துக்கு பயமில்லை.

   அல்லா வி.ஐபியையும் ஜாதகத்தை வச்சு டர்ராக்கிரலாம்

    டவுசர் பாண்டி said:
    March 11, 2011 at 4:21 pm

    தல, நீ கோச்சிக்கினு சொல்லிருக்கியான்னு பயமாருக்குமா. நீ எழுதுனத திரும்ப திரும்ப படிச்சி பாத்தேன். உள்குத்து ஏதும் இருக்கான்னு பாத்தேன். ஒன்னும் இந்த மரமண்டைல ஏறல. ஒனக்கு கோவத்த உண்டாக்கிருந்தா மன்னிச்சிரு தல. நான் சின்னபயந்தேன். நீ வயசுலயும், ஜோதிடத்துலயும், எம்புட்டு பெரிய ஆள்னு ஊருக்கே ஒலகத்துக்கே தெரியும் மாமு. எனக்கு தெரியாம இருக்குமா? எனக்கு எதிரி வேற இந்த ஒலகத்துல யாரும் கெடயாது? என்னோட நாக்குதான் எனக்கு மொத எதிரின்னு படிக்கிற காலத்துலேயே ஒனர்ந்தேன். என் நாக்கு புல்லா பாசி புடிச்ச மாறி கருப்பா இருக்கும். போன ஜென்மத்துல பண்ண பாவத்துக்கு இப்ப அனுபவிக்கிரதுக்குன்னு பொறக்கும்போதே கடவுள் நாக்கு புல்லா கருப்பு கலர்ல ஆக்கி அனுப்பிட்டாரு. இன்னொன்னு ஒனக்கு தெரியுமா? என்ன எங்க வீட்டுல யாருக்குமே புடிக்காது? நான் வூட்டுல யாருட்டயும் கலகலன்னு இருக்காமாட்டேன் தல. படிப்ப தவிர வேற ஒன்னும் சொல்லிக்கிற மாறி என்ட கெடையாது தல. பேருக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டண்டா வேல பாக்கேன். சாரி தல கோச்சுக்காத? அம்புட்டுதேன்.

    S Murugesan said:
    March 11, 2011 at 5:00 pm

    டியர் டவுசர் பாண்டி,
    உங்களை பத்தி நீங்க சொல்ட்டிங்க. என்னப்பத்தி சொல்லவேண்டிய வேலையே இல்லாம பண்ணிட்டிங்க . நானும் உங்கள மாதிரி கேசுதேன்.

    நான் எழுதினதென்னவோ ஒங்கள இறுக கட்டி அணைச்சுக்கனுங்கற எண்ணத்தோடத்தேன். அது எங்கன ராங் கனெக்சன் ஆச்சுனு தெரியலை.

    ஒரு வேளை நம்ம ராசிக்கு (சிம்மம்) ரெண்டுல உள்ள சனி வேலை காட்டிட்டாரா என்ன புரியலை. என் மனசு வெள்ளை. என் மனசை நீங்க அடிச்சிட்டிங்க கொள்ளை. இதைத்தேன் நான் மாஞ்சி மாஞ்சி சொன்னேன்.

  டவுசர் பாண்டி said:
  March 11, 2011 at 2:03 am

  தல, கொஞ்சம் இந்த பக்கம் வந்துட்டு போ.

  http://www.singaporejunction.com/eserv/ta/pub/astrology/CelebrityHoroscopes.asp

  Vinoth said:
  March 11, 2011 at 6:10 am

  கொஞ்சம் அதிகமா டர்ரக்க மரணத்தை பற்றி எழுதுங்க…

  எந்த ராசி எந்த லக்னத்துக்கு எப்ப எப்படி மரணம் வரும்னு சொன்னா …
  மரணத்தொட மொத்த ஜாதகம் எப்படி சம்பந்தப்டுது…( கில்மாவுக்கு சொன்ன படி எழுதுனா.

  எல்லாரும் டர்ரய் தான் ஆகணும்..

   S Murugesan said:
   March 11, 2011 at 6:22 am

   வினோத் சார் !
   சூப்பர் லீட். தூள் பண்ணிரலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s