விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும் !

Posted on

அண்ணே வணக்கம்ணே,
2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற திகீர் கணிப்பை தரத்தான் இந்த பதிவை போடறேன்.

என்னடா இது நம்ம ஆற்காட்டார் ஸ்டேட்ல தானே மினிஸ்டர். நம்மாளு சென்ட்ரல்ல மின்சாரத்துறை மந்திரியாயிருவாரோன்னு பய்ப்படாதிங்க.

இந்த நகரங்கள் இருட்ல மூழ்கற மேட்டர்ல ஏன் எதுக்கு எப்படினு நான் பண்ணப்போற ஆராய்ச்சில உங்கள்ள பாதி பேர் சோசியர்களாகவே மாறிடப்போறிங்க. விஷ் யு ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய சந்திராஷ்டமம் பற்றிய பதிவை 945 பேர் படிச்சிருக்கிங்க. நன்றி. ஜோதிஷ சாஸ்திரத்துல சந்திராஷ்டமம்லாம் ஜுஜுபி. பலான பலான மேட்டர் எல்லாம் எடுத்து விட்டா கஸ்டடில எடுத்து விஜாரிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

நமக்கு புகைப்பழக்கம் வேற இருக்கா..தூக்கி உள்ளாற வச்சுட்டு கை.எ போட்டா தான் சிகரட்டுன்னா படக்குனு கை.எ போட்டுத்தொலைச்சுருவமோன்னு தான் அடக்கி வாசிக்கிறேன். ஆனாலும் அதுக்காக நம்ம மம்மிய ஐ மீன் பாரத மாதாவை டீல்ல விட்டுர முடியாதே.

அதனாலதான் இந்த திகீர் பதிவு. தூக்கி உள்ள போட்டுட்டா ஏட்டுக்கு கையூட்டு கொடுத்து ஒரு கட்டு பூபால் பீடி மட்டும் அனுப்பி வச்சுட்டா போதும். (எத்தீனி பேரு ரெடி ..கைய தூக்குங்குண்ணா)

நம்ம இந்திய திரு நாட்டோட ஜாதகம் “அவாளால” எப்படியா கொத்த கேடுகெட்ட ஜாதகமா அமைஞ்சுருச்சுன்னு ஏற்கெனவே விலாவாரியா சொல்லியிருக்கேன்.

சுதந்திர இந்தியாவின் ஜாதகம் :

லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது , ரெண்டுல செவ்( ராணுவ செலவு கழுத்தை நெறிக்க இதுவும் ஒரு காரணம்) 3ஆம் பாவத்துல சுக்கிரன் சூரியன் , சனி ,புதன்,சந்திரன், 6ல குரு,

மேற்படி பதிவை போட 3 காரணங்கள் இருக்கு.

1.ஜாதகத்துலயே 1-7 ல ராகு கேது:
ராகு நின்ற இடத்ததிபதியான சுக்கிரன் சூரியனோட சேர்ந்து மொக்கை. சூரியன் சனியோட சேர்ந்து மொக்கை.

கேது நின்ற இடத்ததிபதி செவ் இவரு ரெண்டுல உட்கார்ந்து எட்டை பார்க்கிறாரு. ( செவ்வாய் மீன்ஸ் யுத்தம் -மின்சாரம்) எட்டு மீன்ஸ்: ஆப்பு.

2. இப்ப நடப்பு சூரியதசை ராகு புக்தி:
இது 03/Nov/2010 ஆம் தேதி ஆரம்பம். இதுவரைக்கும் ஏன் இந்திய நகரங்கள் இருட்ல மூழ்கலைனு கேப்பிக சொல்றேன்.

பாய்ண்ட் நெம்பர் ஒன் , ராகு புக்தியோட செகண்ட் ஹாஃப் தான் ஆக்டிவா ஒர்க் ஆகும். இதனோட மொத்த டென்யூர் 10 மாசம் 24 நாள். ஆக இதனோட செகண்ட் ஹாஃப் 2011 ஏப்ரல் 15 ஆம் தேதிதான் ஆரம்பமாகுது.

3.மே 16 முதல் 1-7 ல் கேது ராகு: (கோசாரம்)

இது ஏறக்குறைய சுதந்திர இந்தியாவின் ஜாதகத்துல உள்ள அதே கிரக நிலை. ஜாதகத்துல 1 ல ராகு ஏழுல கேது. இப்ப கோசாரத்துல 1 ல கேது 7ல ராகு.

ஆக மொத்தத்துல 2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்க வாய்ப்பிருக்கு. இருட்டுக்கும் ராகு கேதுக்கும் என்னா லிங்குன்னு கேட்டா நீங்க இந்த பேட்டைக்கு புதுசுன்னு அர்த்தம். ரெண்டு பேருமே கிரகங்கள் கிடையாது. ஜஸ்ட் நிழல்கள். வேணம்னா நிழல் கிரகம்னு சொல்லிக்கலாம்.

இருட்டுன்னா வெறும் இருட்டுத்தானானு சொல்லிரமுடியாது.ராகு கேதுக்கள்னா ஆன்டி சோஷியல் எலிமென்ட்ஸ். ஆன்டி கவன்மென்டல் எலிமென்ட்ஸ். மொத்தத்துல அரசாங்கத்துக்கு எதிரானவுக. மாஃபியா-தீவிரவாதிகள் -முகமூடி கொள்ளையர்கள் -கடத்தல்காரர்கள் இப்படி சொல்லலாம். எஸ்பெஷலி கேதுன்னா சன்னியாசிகளை காட்டும்.

மேற்படி சமயத்துல அரசாங்கம் தன் பிடியை நழுவ விட்டுட்டு கைய பிசைய வேண்டி வந்துரலாம். மேற்படி ஆன்டி சோஷியல் எலிமென்ட்சோட கை ஓங்கிரலாம். அவிக ஆணையிட அரசாங்கம் செயல்பட வேண்டி வரலாம்.

இருட்டுங்கறது துக்கத்தோட ஐடென்டிட்டி. ஸோ நாடே துக்கத்துல மூழ்கலாம். இன்னாபா நீ இபி காரவுக பவர் கட்டுங்கற மாதிரி இஷ்டாத்துக்கு சொல்ட்டு பூட்டா எப்டி எந்த ஏரியா எத்தீனி நாளுனு சொல்லலாமில்லையானு கேப்பிக சொல்றேன்.

பிரச்சினைங்கறது ரிஷபம் + விருச்சிகத்துலதான். ரிஷபம் தெற்கு திசையையும்,விருச்சிகம் வடக்கு திசையையும் காட்டும்.

ராகு கேதுக்களுக்கு ஒரிஜினால்லிட்டி கிடையாதுங்கறதால தாங்கள் நின்ற ராசியாதிபதியின் காரகத்தை பெற்று செயல்படுவாய்ங்க.

ரிஷபத்துக்கு அதிபதி சுக்கிரன் .இவருக்குரிய திசை தென் கிழக்கு
விருச்சிக்கத்துக்கு அதிபதி செவ் இவருக்குரிய திசை தெற்கு

திசைய சொல்ட்டா எந்த நாளுன்னு கேப்பிக .சொல்றேன் ராகு,கேது,சுக்கிரன் அ செவ்வாய்க்குரிய நட்சத்திரங்களில் நடக்கலாம். தேதியோட டோட்டல் 4,7,6,அல்லது 9 வரலாம்.

எங்க பாஸ் கிளம்பிட்டிங்க? கேண்டில் வாங்கவா.. ஓகே உடு ஜூட்

பி.கு:

இதே சூரிய தசையில 27/Sep/2011 =>முதல் 15/Jul/2012 வரையிலான குரு புக்தி டாப்ல கொண்டு போகும். அரசாங்கம் தன் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்று நல்லாட்சி வழங்கும்.

Advertisements

15 thoughts on “விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும் !

  டவுசர் பாண்டி said:
  March 9, 2011 at 1:51 am

  ஏம்ப்பா, நீ நல்லா யோசிச்சுக்கினுதான பதிவ போட்டுக்குனு இருக்குற. இன்னாத்துக்கு கேக்கென்னா, ஒன்னால எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்குப்பா. நீ நாஷ்டிரடேமஸ் கணக்கா ஒவ்வொன்னா நல்லா சொல்லிக்கினு இருக்க. நாங்க அத எங்கூர்ல நண்பர்கள்ட்ட பரப்பிக்கினு இருக்கொம்பா. அல்லாத்தோட பாராட்டும் ஒனக்குத்தேன். ஆனா அல்லார்க்கிட்டையும் கிழிமானம் வாங்கி குடுத்துராத கண்ணு. நீ நம்மூரு பக்கத்துல இருந்துக்குனா எங்களுக்கு வஸ்தியா இருக்கும். ஆனா நீ எங்கயோ ஒரு மூலைல உக்காந்துக்குனு இருக்குற. சரி விடு மாமு. நீ போடுற பதிவுகள படிச்சிக்குனு இருக்குன ஆளுங்கச்சி காரனுகளுக்கு டவுசர் கழண்டுருக்கும்பா. மாமு, அல்லாருமே ஒன்னே பத்தி அள்ளி வுடுராங்கன்னு தப்பா கிப்பா பதிவுகளை போட்றாத கண்ணு. ஒன்னோட வெப்சைட்ட காலங்காத்தாலேயே எந்திச்சி படிக்கிறதுக்குன்னு ஒரு கூட்டம் (நாங்கதேன்) இருக்குங்குறத மறந்துறாத கண்ணு. அம்புட்டுதேன்.

   S Murugesan said:
   March 9, 2011 at 4:51 am

   டியர் டவுசர் பாண்டி !

   டவுசருங்கற நிக் நேம் எனக்குள்ள ஆயிரம் நினைவுகளை தூண்டி விட்டுருச்சு. ஊருக்கு ஒரு ஆளு இப்படி டவுசரோடயே வாழ்ந்துர்ராய்ங்க. எங்க ஊர்ல நீலகண்டன்னு ஒரு ஆளு.

   ஒரு பெரிய ட்ராமா கம்பெனி நெம்பர் ஆஃப் ட்ரூப்ஸ் ஃபார்ம் பண்ணி ஒரே விதமான பாத்திரங்களை கொண்ட ஒரே நாடகத்தை ஊர் ஊரா, ஒரே ஷெட்யூல்ட் டைமல நடத்துனா எப்டி இருக்குமோ அப்படித்தேன் உலக வாழ்க்கை இருக்கு.

   வடிவேலுவோட காமெடி இந்த அளவுக்கு க்ளிக் ஆக அந்த மாதிரி கேரக்டர் ஒவ்வொரு ஊர்லயும் இருக்கு. ஏன் ஒவ்வொரு க்ரூப்லயும் இருக்கு. கொஞ்சம் தம் கட்டி ரோசிச்சா ஒவ்வொரு மன்சன்லயும் இருக்கு.

   பாண்டியோட இன்றைய மறுமொழிகளை பார்ப்போம்

   //அல்லாருக்கும் வவுத்துல புளிய கரைக்குற மாதிரி பதிவ போட்டுக்குனு, நீ இப்புடி கும்புட்டுக்குனு போசு குடுக்குறியே//

   குவிச்ச கைகளுக்குள்ளத்தேன் மேட்டரே இருக்கு. ( அட கைரேகைய சொன்னேன் பாஸ்!) . இதுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கு தலை.

   ” நித்யானந்தா மாதிரி ஆளுங்களை வளர்த்துவிடற உங்க மீடியாவுக்கும் ஆன்மீகத்துக்கு ஒரு நமஸ்காரம் – சர்ப்பதோச பார்ட்டிகளையெல்லாம் ஷேர் மார்க்கெட்ல இழுத்துவிட்டு திவாலாக்கிற உங்க சந்தை பொருளாதாரத்துக்கு ஒரு நமஸ்காரம். 500 சிசி,க்ரெடிட் கார்டு,மைனர் செயின்,கரன்சிய பார்த்து வர்ர உங்க லவ்வுக்கு ஒரு நமஸ்காரம். 63க்கும் ஒத்துக்கிட்டு தில்லி கல்லில (தெரு) பொதுக்கழிவறை சுவர்கள்ள பல்லியா ஒட்டிக்கிடக்கிற உங்க அரசியலுக்கு நமஸ்காரம். உங்க பாராளுமன்ற ஜன நாயகத்துக்கு ஒரு நமஸ்காரம், தேர்தல் முறைகளுக்கு நமஸ்காரம்”

   என்ன ஸ்..ஆங்கறிங்க? காரம் சாஸ்தியாயிருச்சுல்ல.

   //போட்டாவுல பாக்கும்போது தயிர்சாதம் சாப்புடுற ஆள் மாரி கீர. ஆனா ஒன்னோட பதிவுகள படிக்கும்போது காடை, கவுதாரி பிரியாணி சாப்புடுறவன் கணக்கா இருக்குப்பா//

   சன்மத்துல குரு உச்சத்துல நின்னதால தயிர் சாத பர்சனாலிட்டி.தைரிய ஸ்தானமான மூன்றாமிடத்தை . செவ் +சனி கூட்டா பார்க்கிறாய்ங்க. அதனாலதான் இந்த தில்லு. இதய ஸ்தானத்துல செவ்வாயும் கேதுவும் சேர்ந்ததால ஃபிலசாஃபிக்கல் ரெவல்யூஷன் ( தத்துவார்த்த புரட்சி?) பத்துல ராகு நல்லது நடக்க “எதையும்”. பண்ண சித்தமாயிருக்கமில்லை.

   //தல, அல்லாருமே போட்டோக்கு போசு குடுக்கும்போது சிரிச்சிக்கினு இருப்பாங்க. நீ மட்டும் இன்னா அரசியல்வாதிங்க மாதிரி கையெடுத்து கும்புட்டுக்குனு இருக்குற.//

   என்ன பாண்டி ! நாட்டு நிலைமை -விக்கிற விலைவாசிக்கு சிரிக்கிற மாதிரியா இருக்கு? சனங்க பொழப்பே சிரிப்பா சிரிச்சிக்கிட்டிருக்கு

   //இப்பவே ஓட்டு கேக்க ஆரம்பிச்சிட்டியா//
   ஆமா ஆனா ஒரே ஒரு கண்டிஷன் பாண்டி! தாளி நேரிடை ஜன நாயகம் வரனும். இல்லியா கிடைச்ச ஓட்டு சதவீதத்தோட ரேஷோல நம்ம கேண்டிடெட்ஸை பார்லிமெண்டுக்கு நாமினேட் பண்ணனும். இப்படி ஒரு நிலை வந்தா கொலைவெறியோட களம் காண தயார். அதுவரை எல்லாத்துக்கும் கும்புடு.

   ஏதோ திண்ணையில தாத்தா மாதிரி ஒக்கார்ந்துக்கிட்டு பார்த்து போங்கடான்னிட்டிருக்க வேண்டியது தேன்.

   //ஏம்ப்பா, நீ நல்லா யோசிச்சுக்கினுதான பதிவ போட்டுக்குனு இருக்குற//

   இல்லிங்கண்ணா. நம்முது கடக லக்னம் அதனால ஏதோ ஒன்னு ஸ்பார்க் ஆகும் .படக்குனு பதிவுதேன். குருவேற உச்சமா? கையில வேற சாலமன் ரிங் (குருவளையம்) இருக்கா ஜஸ்ட் ஒரு இன்ட்யூஷன் வரும்.ஒடனே பதிவுதேன்

   //இன்னாத்துக்கு கேக்கென்னா, ஒன்னால எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்குப்பா. நீ நாஷ்டிரடேமஸ் கணக்கா ஒவ்வொன்னா நல்லா சொல்லிக்கினு இருக்க. நாங்க அத எங்கூர்ல நண்பர்கள்ட்ட பரப்பிக்கினு இருக்கொம்பா. அல்லாத்தோட பாராட்டும் ஒனக்குத்தேன்.//

   டாக்டர்! பென்சிலின் போட்டு காப்பாத்தினா டாக்டரையா பாராட்டுவிக? அதை கண்டுபிடிச்ச அலெக்சாண்டர் ஃப்ளமிங் என்ன ஆகிறதாம்? இன் தி சேம் வே.. எல்லா பாராட்டு ஜோதிஷ விதிகளை ஏற்படுத்தின நம்ம ரிஷிகள் மகரிஷிகளுக்குத்தேன் போகனும்

   //ஆனா அல்லார்க்கிட்டையும் கிழிமானம் வாங்கி குடுத்துராத கண்ணு.//

   எனி சென்டர் எனி சவுக். வரேன். அய்யா .. ஜோதிஷத்தை ஒரு இனமே பல காலம் ஆசனத்துல செருகி வச்சிருந்தாய்ங்க. எங்களுக்கு கிடைச்ச துண்டு துக்கடாவ வச்சித்தான் மேனேஜ் பண்ணிக்கிட்டிருக்கோம். நடந்தா ஜோதிஷத்தோட பெருமை. இல்லாட்டி நான் எங்கயோ கோட்டை விட்டுட்டனு அர்த்தம்னு விலாவாரியா சொல்லிவச்சிரலாம்ல.

   //நீ நம்மூரு பக்கத்துல இருந்துக்குனா எங்களுக்கு வஸ்தியா இருக்கும். ஆனா நீ எங்கயோ ஒரு மூலைல உக்காந்துக்குனு இருக்குற.//

   காஷ்மீர்ல இருக்கிற மொபைலை-கன்னியாகுமாரில இருக்கிற மொபைல் காண்டாக்ட் பண்றாப்ல நாம எங்கிருந்தாலும் ஒரு லிங்க் கீது துரை.. நீ மனசுல நினைச்சுக்க. ஒடனே வந்து நிக்கறேன்.

   //சரி விடு மாமு. நீ போடுற பதிவுகள படிச்சிக்குனு இருக்குன ஆளுங்கச்சி காரனுகளுக்கு டவுசர் கழண்டுருக்கும்பா. மாமு, அல்லாருமே ஒன்னே பத்தி அள்ளி வுடுராங்கன்னு தப்பா கிப்பா பதிவுகளை போட்றாத கண்ணு.//

   பாண்டி! நாம ஒரு நோபடி. எனக்குள்ள எல்லாம் ப்ளாங்கா இருக்கும். ஓஷோ சொல்வாரே நான் என்ன சொல்றேன்னு நீங்க கேட்கிறாப்ல நானும் கேட்கறேனு அதே ரேஞ்சுதான் நம்முதும். விருப்பு வெறுப்பெல்லாம் கடியாது. சித்தன் போக்கு சிவன் போக்கு. எதிர்காலத்தை நான் வெளிப்படுத்தறேனு ஏன் நினைக்கிறிங்க.எதிர்காலம் தன்னை என் மூலமா வெளிப்படுத்திக்குது

   //ஒன்னோட வெப்சைட்ட காலங்காத்தாலேயே எந்திச்சி படிக்கிறதுக்குன்னு ஒரு கூட்டம் (நாங்கதேன்) இருக்குங்குறத மறந்துறாத கண்ணு. அம்புட்டுதேன்.//

   பாஸ்! ஐம் ஜஸ்ட் எ மவுத் பீஸ் ஆஃப் யுவர் சப்கான்ஷியஸ் மைண்ட்ஸ். நீங்க நினைக்கிறதைதான் நான் எழுதிக்கிட்டிருக்கேன்.இதெல்லாம் யூனிவர்சல் மைண்டோட விளையாட்டு.

  siva c.m. janakiraman said:
  March 9, 2011 at 3:18 am

  ஆசிரியர் ஐயா அவர்களுக்கு. வணக்கங்கள் பல …
  பொதுவாக தங்கள் வலைப்பூவிற்கு வரும் அன்பர்களை யாரும் வரவேற்பது
  கிடையாது ( வகுப்பறையை தவிர ) தாங்கள் அப்படியில்லாமல் வரவேற்றிருப்பது தங்களது பண்பாட்டை காட்டுகிறது, அதற்கு முதற்கண் நன்றி,

  2 வேண்டுகோள்கள் –

  1, நல்ல தமிழில் எழுதலாமே ?
  2, தங்களது சோதிட பாடங்களை ஆரம்பத்தில் இருந்து படிக்க ஒரு வரிசை முறை இருக்கிறதா ?

  அன்பன்.
  சிவ. சி.மா. ஜானகிராமன்

   S Murugesan said:
   March 9, 2011 at 3:40 am

   சிவா சி.எம் ஜானகிராமன் அவர்களுக்கு,
   பாஸ் ! பக்தர்களுக்காக தான் கடவுள். பக்தர்கள் “போடாங்கொய்யால”ன்னிட்டாய்ங்கனு வைங்க க்டவுள் கூட வந்து ப்ளாக் எழுதவேண்டியதுதேன். ஏழுமலையானுக்கு ஏன் இவ்ளோ மவுசு. சனம் அம்முதே அதான் மவுசு. ரஜினி காந்த் என்ன பிறவி நடிகனா? சிம்மக்குரலோனா? அவருக்கு ஏன் இம்மாம் மவுசு சனம் ரசிக்கிறதால. ரஜினி முக்கியமில்லை. அவரை தூக்கி விட்ட ரசிகர்கள் தேன் முக்கியம். ரசிகன் கழண்டுக்கினா இதே சங்கர், கலாநிதி எல்லாம் ரஜினிய சீண்டுவாய்ங்களா? இந்த ரூட்ல ..

   படிக்கிறவுகளுக்காகத்தேன் பதிவு. படிக்கவே படாத ப்ளாக்ஸ் லட்சக்கணக்குல கீது. வந்தவுகளையும் வரவேற்கலைன்னா ஊத்தி மூடிக்கும். பண்பாடு அது இதுன்னு ஏன் தூக்கறிங்க. சர்வைவல் ப்ராப்ளம்.

   நல்ல தமிழ்? ( சரண் சார்! உங்களுக்கு ஆதரவா ஒரு ஓட்டு) 200 ஜூலை31 முதல் 2007 மே வரை நூல் விட்டு தோத்த கேசு. ஆனாலும் என்ன ட்ரை பண்ணுவம்.

   சோதிடப்பாடம்? இது வகுப்பறை இல்லை தலைவா.. அலப்பறை . ஐ மீன் இங்கன கட்சிமா நாடு மாதிரி கவர்ச்சி நடனம் -கொள்கை முழக்கம்லாம் கலந்து கட்டி வரும்.

   அஜீஸ் பண்ணிக்கங்க. பாடம்லாம் ஏற்கெனவே மஸ்தா கீது.. நாம தரவேண்டியது இன்டர்ப்ரிட்டேஷன்ஸ் தேன்.

   அதையும் கிழிப்பம். வெயிட் அண்ட் சீ

  Anbarasu said:
  March 9, 2011 at 3:22 am

  There is no need to predict this, already it is happening in India in the form of green hunt. Maoists will surely attack government for the injustice given to people in north and north east states.

   S Murugesan said:
   March 9, 2011 at 4:55 am

   Anbarasu!

   உங்க ஸ்கூல் வேற – என் ஸ்கூல் வேற. நான் ஜோதிட விதிகளின் படி கணிக்கிறேன். நீங்க ப்ராக்டிக்கலா கெஸ் பண்றிங்க.

   ரெண்டும் தேவைதான். அரசாங்கங்கள் இப்பவாச்சும் வேக் அப் ஆகி “யதார்த்தத்தை” புரிஞ்சி நடந்தா சரி. ஒரு ஆப்ஷனை விட்டுட்டன்.

   மேற்படி காலகட்டத்துல கொத்து கொத்தா பாம்புகள் கூட சிட்டிக்குள்ள என்ட்ரி கொடுக்கலாம். (ராகு கேதுன்னா விஷம்) அல்லது பன்றிக்காச்சலுக்கு தாத்தாவா ஒரு வியாதி பரவலாம் ( ராகு கேதுன்னா விஷ கிருமிகள்)

  தனி காட்டு ராஜா said:
  March 9, 2011 at 4:31 am

  Let Us C (See)..

  veera said:
  March 9, 2011 at 8:53 am

  சூப்பரா எழுதுறீங்க முருகேசன். All the Very Best.

   S Murugesan said:
   March 9, 2011 at 9:40 am

   நன்றி வீரா அவர்களே!

  sugumarje said:
  March 9, 2011 at 12:35 pm

  //சோதிடப்பாடம்? இது வகுப்பறை இல்லை தலைவா.. அலப்பறை . ஐ மீன் இங்கன கட்சிமா நாடு மாதிரி கவர்ச்சி நடனம் -கொள்கை முழக்கம்லாம் கலந்து கட்டி வரும்//
  அதான… அப்படிப்போடு 🙂

  சரவணன் said:
  March 10, 2011 at 2:43 am

  டியர் சார்,
  ஜாதகம் கணிப்பதற்கு இந்த முகவரியும் பயனுள்ளதாக இருந்தால், இத்தனையும் அங்கு லிங்க் பண்ணும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  http://www.singaporejunction.com

   S Murugesan said:
   March 10, 2011 at 4:16 am

   நன்றி சரவணன்,
   இப்போதே இந்த லிங்கை சேர்க்கிறேன்

  ராஜா said:
  April 3, 2011 at 2:34 pm

  அருமையான பதிப்புகள், இப்போதான் உங்க வெப்சைட் பாக்க ஆரமிசுருக்கேன், சும்மா பல தளங்கள்ள புகுந்து விளையாடறிங்க, பாராட்டுக்கள். தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். அப்டியே ஸ்டாலின் அழகிரி இவங்க ஜாதகம் இருந்து கணிச்சு போட்டிங்கன்னா நல்லாருக்கும்.

  நன்றி,
  ராஜா

   S Murugesan said:
   April 3, 2011 at 4:04 pm

   ராஜா சார் வாங்க!
   அழகிரி,ஸ்டாலின் தானே. பர்த் டீட்டெய்ல்ஸ் ப்ளீஸ். மேலும் ஆராச்சும் ஒரு பதிவு போட்டாத்தேன் நாம பதிவு போடமுடியும். வெய்ட் ப்ளீஸ்

  Mohamed Ismail said:
  May 21, 2011 at 10:58 am

  அண்ணே எதோ இடிக்குது. நீங்க சொன்னது உண்மையாகும் நேரம் வந்துடுச்சு போல. இன்று நக்கீரன் வெப்சைட்டில் படித்த நியூஸ்:

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=54375

  ///மும்பை தாக்குதல் போல் இந்தியாவில் மீண்டும்
  தாக்குதல் நடத்த திட்டமா?

  பதவி விலக இருக்கும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ஜெ.ரோமர் சிகாகோ சென்று உள்ளார். அங்கு நடந்த வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
  அப்போது அவர், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில் ஒரு சிறிய வன்முறை சம்பவம் நடந்தால்கூட இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
  ஏனெனில் மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுபோன்று நடந்தால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்படும். ////

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s