உயிரையும் பறிக்கும் சந்திராஷ்டமம்

Posted on

உங்க ராசிக்கு சந்திரன் எட்டுல சஞ்சரிக்கிற ரெண்டே கால் நாளைத்தான் சந்திராஷ்டமம்னு சொல்றாய்ங்க. சந்திரன் எட்டில் (அஷ்டமம்) இருத்தலே சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம்னா எல்லாருக்குமே உள்ளூற டர்ருதேன். ஒரு சிலருக்கு பல்பு வாங்கிய அனுபவமும் இருக்கலாம்.

என்ன ஏதுன்னு தெரியாட்டாலும் “அட விடுப்பா இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம்”னு கழண்டுக்கறவுக நெம்பர் சாஸ்தியாயிருச்சு.

அவிக பயப்படறதுலயும் லாஜிக் இருக்கு. சந்திரன் மனோகாரகன். இவர் நல்ல இடத்துல இருந்தா கையில கால் காசு இல்லின்னாலு மனசுல ஒரு மிதப்பு இருக்கும். இவரே அஷ்டமத்துக்கு போயிட்டா ?

சூசைட் டெண்டன்சி உள்ளவன் தற்கொலையே கூட பண்ணிக்கிடலாம். தண்ணீர் டாங்கர்ல அடிபட்டு சாகலாம். ( சந்திரன் -ஜல காரகன்) . ஏற்கெனவே நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை உள்ளவுகளுக்கு இந்த தினங்கள்ள மேல கீழே ஆயிரலாம்.

அட ஒரு போர் போட்டு தண்ணி வரலின்னா வட்டம் தானே. குழாயடி சண்டையில எத்தனை பேருக்கு மண்டை உடைஞ்சிருக்கு -கொலை நடந்திருக்கு.

இப்படியா கொத்த சந்திரன் 8 லருந்தா மட்டும் தான் ஆபத்தா? ஆறுல இருக்கலாமா? ( சந்திரன் ஆறுல இருக்கறச்ச தமிழ் சினிமா ஹீரோ மாதிரி மனசாட்சி கிட்டேல்லாம் பேசவேண்டி வந்துரும் )

12ல இருந்தா பரவால்லையா? 7ல இருந்தா பரவால்லியா? பத்துல இருந்தா பரவால்லியா?

சந்திரனோட முக்கிய காரகங்கள் :இன்ஸ்டெபிலிட்டி, அன் செர்ட்டினிட்டி, எதிர்பாரா தன்மை, நகர்வு, தண்ணீர், மனம் ,நுரையீரல்,சிறு நீரகம்,

சந்திரன் ஜன்மத்துல இருந்தா மனசு அலைபாயாதா? வேலைக்காரி கூட ஏதோ ஒரு ஆங்கிள்ள அழகா தெரிய மாட்டாளா?

சந்திரன் வாக்குஸ்தானத்துல இருந்தா பேச்சு மாறிடமாட்டமா? ( நாமென்ன அரசியல்வாதியா – அது போன தேர்தல்னு தப்பிச்சுக்கறதுக்கு)

சந்திரன் 3 ஆவது இடத்துல இருந்தா ( தேய் பிறையா இருந்து ) திடீர்னு வீரம் வந்து பேட்டை ரவுடியை சீறிட மாட்டமா?

சந்திரன் 4 ல இருந்தா தூத்தேறி இன்னா ஊடு .. இன்னா வண்டின்னு வித்து தொலைச்சிர மாட்டமா?

சந்திரன் அஞ்சுல இருந்தா …திடீர்னு ஒரு நல்ல எண்ணம் வந்து சம்பள கவரை தூக்கி நடைபாதை பிச்சைக்காரன் தட்டுல போட்டுரமாட்டமா?

சந்திரன் 6 லருந்தா மனம் ,நுரையீரல்,சிறு நீரகம்,தொடர்பான நோய் வராதா? மனத்தாங்கல் வராதா? வாக்கு வாதம் ஏற்படாதா?

சந்திரன் 7லருந்தா மிலிட்டரி மாமன்,எஸ்.பி சித்தப்பா உள்ள பெண் குட்டி மேல காதலாயிரமாட்டமா?

சந்திரன் எட்டுல இருந்தா ( ஊகூம்.. இதைபத்திதான் பதிவே விலாவாரியா பின்னாடி பார்ப்பம்)

சந்திரன் 9 ல இருந்தா ரெம்ப நாளா தள்ளிப்போன தீர்த்தயாத்திரைக்கு சொல்லாம கொள்ளாம கிளம்பிரமாட்டமா?

சந்திரன் 10 ல இருந்தா ‘தாளி இத்தீனி வருசம் வேலை பார்த்த்து என்னத்த கிழிச்சமுன்னுட்டு கால் கடுதாசு கொடுத்துட்டு வந்துரமாட்டமா?

சந்திரன் 11 ல இருக்கிறச்ச கோயமுத்தூர் பார்ட்டி வகையா மாட்ட ஒன்னுக்கு நாலு வியாபாரத்துல இறங்கிரமாட்டமா?

சந்திரன் விரயத்துல இருக்கிறச்ச மனம் போன போக்குல செலவழிச்சு போண்டியாயிரமாட்டமா? சந்திரன் எங்கருந்தாலும் வில்லங்கம் தானே..பத்தோட பதினொன்னுங்கறா மாதிரி பதினோரு ஆப்ஷனோட இன்னொரு ஆப்ஷன் தான் சந்திராஷ்டமம்.

சந்திராஷ்டமம்னுட்டு மாசத்துக்கு ரெண்டேகால் நாள் லீவ் போட முடியுமா? முடியாதே. பின்ன இதுக்கு என்னதான். பரிகாரம்னுட்டு கேப்பிக சொல்றேன். கடேசில சொல்றேன். ( ஆசை தோசை அப்பளம் வடை)

(ஸ் அப்பாடா எந்த அளவுக்கு டர்ராக்கனுமோ ஆக்கியாச்சு. சனம் இன்னம் இந்த பதிவை விட்டு விலகமாட்டாய்ங்க)

இப்படியெல்லாம் பேதியாக்கினாலும் இன்னொரு மேட்டரையும் சொல்லித்தான் ஆகனும்.

இங்கன ஒவ்வொருத்தரும் தனி. (ஆனால் அல்லாரும் அல்லாரோடவும் இணைக்கப்பட்டும் இருக்கோம் நம்ம ஈகோ அந்த இணைப்பை மழுப்பலாக்கியிருக்கு தட்ஸால் . அதுவேற கதை.)

காலரா வார்டுக்கு போனவுகளுக்கெல்லாம் காலரா வந்துர்ரதில்லை.ஏசிலயே உள்ளவன், மினரல் வாட்டரே குடிக்கிறவனுக்கெல்லாம் காலரா வரவே வராதுன்னு கியாரண்டி இல்லே.

எல்லாமே ராசிப்படி நடந்துரும்னா உலகத்துலயே 12 விதமான வே ஆஃப் லைஃப் தான் இருக்கனும். ஆனால் யதார்த்தம் அப்படியா கீது. இல்லியே.

ஒரு ராமச்சந்திரன் தான் சி.எம். மத்த ராமசந்திரன் எல்லாம் பொஞ்சாதிகிட்ட மத்தடியோ,கடன் காரன் கிட்டே செருப்படியோ பட்டுக்கிட்டுத்தான் இருந்திருப்பாய்ங்க.

ஆக சந்திராஷ்டமம் எல்லா ராசிக்காரவுகளுக்கும் ஒரே மாதிரி வேலை செய்யாது. அதிலயும் ஒரே ராசிக்காரவுகளுக்கும் ஒரே விதமா வேலை செய்யாது.

இப்ப 12 ராசிக்காரவுகளுக்கும் சந்திராஷ்டமம் எப்படி வேலை செய்யும்னு குத்துமதிப்பா பார்ப்பம்.

1.மேஷம்:
இவிகளுக்கு சந்திரன் மாத்ரு பாவாதிபதிங்கறதால தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,
கல்வி,சுகம்,இதயம் வகையில மட்டும் பாதிப்பு ஏற்படும் (மட்டும் அண்டர்லைன்) மத்தவேலைய பார்க்கலாம்.

2.ரிஷபம்:
இவிகளுக்கு சோதராதிபதிங்கறதால சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில் பிரயாணங்கள்,காது,
இசை ஞானம்,புஜங்கள்,தோள் வகையில மட்டும் பாதிப்பு ஏற்படும் (மட்டும் அண்டர்லைன்) மத்தவேலைய பார்க்கலாம்.

3.மிதுனம்:
இவிகளுக்கு சந்திரன் தனாதிபதிங்கறதால த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்

4.கடகம்:
இவிகளுக்குத்தேன் லொள்ளு லக்னாதிபதியே சந்திரன் தேன்.இவிக உள் தாப்பா போட்டுக்கிட்டு வீட்லயே இருந்தாலும் ..குழாய் ஒழுகி மீட்டர் பாக்ஸ்ல இறங்கிரும்.சாக்கிரதை.

5.சிம்மம்:
இவிகளுக்கு விரயாதிபதி எட்டுல மறைஞ்சா நல்லதுதேன். ஆனால் கையில வாட்டர் பாட்டில் வச்சுக்கறது நல்லது .மரண தாகம் எடுக்கும்ங்கோ.

6.கன்னி:
இவிகளுக்கு லாபாதிபதிங்கறதால மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,/தரகு /வியாபார முயற்சிகள்ள மட்டும்

7.துலா:
இவிகளுக்கு ஜீவனாதிபதி. இவர் எட்டுல வந்தா நல்லதே.வேலை வெட்டி பார்க்கலாம். என்ன ஒரு இம்சைன்னா வேலைக்காரவுக மேல சகாக்கள் மேல சள்ளு புள்ளுனு விழுந்துக்கிட்டிருப்பிக.

8.விருச்சிகம்:
இவிகளுக்கு பாக்யாதிபதி இவர் எட்டுல வந்தா த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள் வகையறாவுல ஆப்புதாண்டி.

9.தனுசு:
இவிகளுக்கும் கடக ராசி மாதிரி செம ஆப்பு. அஷ்டமாதிபதி அஷ்டமத்துல ஆட்சி.வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம் பாதிக்கலாம்.

10.மகரம்:
இவிகளுக்கு சப்தமாதிபதிங்கறதால நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள் வகையறாவுல மட்டும் சிக்கல்.பிக்கல்,பிடுங்கல்.

11 கும்பம்: .இவிகளுக்கு சந்திரன் ரோகாதிபதி. இவர் எட்டுல மறைஞ்சா சத்ரு நாசம், ரோக நிவர்த்தி,ருண விமுக்தி

12.மீனம்:
இவிகளுக்கு இவர் பஞ்சமாதிபதிங்கறதால பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம் வகையில பாதிப்பு ஏற்படும்.

ஆக சந்திராஷ்டமம்ங்கறது சிம்மம்,துலா,கும்பம் தவிர மத்த ராசிக்கெல்லாம் நல்லதில்லை. சந்திரன் எந்த ராசில இருந்தாலும் யாருக்கும் நல்லதில்லை. முப்பது நாளும் உசாரய்யா உசாருனு பாடிக்கிட்டு இருக்கமுடியாது.

அப்ப இதுக்கெல்லாம் இன்னாதான் பரிகாரம்?

இருக்குதுங்கண்ணா .. சந்திரன் ஜலகாரகன். ஜலம் நதிகள்ள இருக்கும். நதிகளை இணைச்சுட்டா இந்தியாவே ஸ்வர்கமாயிரும்.இதுல ஆருக்கும் அப்ஜக்சன் இல்லை. இளவரசரை தவிர. அவிகளுக்கென்ன குடிக்க தண்ணியில்லன்னா ஃப்ளைட் பிடிச்சு இத்தாலி போய் குடிச்சுட்டு வந்துருவாய்ங்க.

நாம தானே சாகனும். அதனால 12 ராசிக்காரவுகளும் கடேசில தந்திருக்கிற பத்துவரிகளை இனி தினசரி ஒரு நண்பருக்காச்சும் மெயில் பண்ணுங்க. தோஷம் போயே போச்.

நீங்க காப்பி பேஸ்ட் பண்ணி மெயில் அனுப்பவேண்டிய மேட்டர்:
____________________________
அன்புடையீர்,
நம்ம நாடு வல்லரசாகனும்னா – இந்தியன் மானத்தோட வாழனும்னா – நதிகள் இணைக்கப்படனும் – இதே நோக்கத்தோடு என் நண்பர் சித்தூர் எஸ்.முருகேசன் என்பவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்று ஒரு புரட்சி கரமான திட்டத்தை தீட்டி இதன் பிரச்சாரத்துக்கும் – அமலுக்கும் 1986 முதல் கடந்த 25 வருடங்களாக உழைத்து வருகிறார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

சொல்ல மறந்தேன். மேற்படி சி.முருகேசன் ஒரு ஜோதிட ஆய்வாளரும் கூட. நவகிரகங்களில் சந்திரன் எந்த ராசியில் நிற்க பிறந்தாலும் – கோசாரத்தில் எங்கே நின்றாலும் தீமைதான். சந்திரன் ஜல கிரகம் என்பதால்.. நதி நீர் இணைப்புக்காக இந்த மெயிலை தினசரி ஒரு அன்பருக்கு மெயில் மூலம் அனுப்பி வந்தால் முப்பது நாளும் சந்திர தோஷமின்றி நல்ல மன நிலையுடன் -ஆரோக்கியமான நுரையீரல் -ஆரோக்கியமான கிட்னியுடன் வாழலாம் என்று உறுதி கூறுகிறார்.

எனவே நீங்களும் இந்த மெயிலை தினசரி ஒரு அன்பருக்கு ஃபார்வார்ட் செய்து தோஷ நிவர்த்தி பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.

மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் தொடுப்பை க்ளிக் செய்து முருகேசன் தமது அனுபவ ஜோதிடம் டாட்காமில் வெளியிட்டிருக்கும் விஞ்ஞான பூர்வமான இந்த ஆய்வுகட்டுரையை படிக்கவும்

http://anubavajothidam.com/moon-fun/

________________

இல்லை முருகேசன் இதெல்லாம் வில்லங்கமா இருக்கு. பாரதமாதாவுது நாறிக்கிட்டு இருந்தா என்ன என்னோடத மட்டும் க்ளீன் பண்ணிக்கறேன்னா கீழ் காணும் பரிகாரங்களை தினசரி செய்ங்க.

பரிகாரங்கள்
1.அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி “பார்க்கலாம்” “பார்க்கலாம்” என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.

Advertisements

22 thoughts on “உயிரையும் பறிக்கும் சந்திராஷ்டமம்

  krishnamoorthy said:
  March 8, 2011 at 5:00 am

  மிக ஆபத்தான ஜோதிட உண்மைபற்றி, அழகான பதிவு .
  மறைக்கப்பட்ட ரகசியங்களை எளிய விளக்கங்களில் பதிவு செய்வது அற்புதம் .
  நன்றி

  என்றென்றும் அன்புடன் ,
  சுகி …

   S Murugesan said:
   March 8, 2011 at 7:24 am

   பாராட்டுக்கு நன்றி கி.மூ அவர்களே,

   கோச்சுக்காதிங்க. டாக்டர் பென்சிலின் ஊசி போட்டு காப்பாத்தினா அவரை பாராட்டுவிங்களா? பென்சிலின் கண்டுபிடிச்ச அலெக்ஸாண்டர் ஃப்ளமிங்கை பாராட்டுவிங்களா?

   All of your compliments redirected to the noble men who founded Astrology.

  ravi said:
  March 8, 2011 at 8:28 am

  சந்திராஷ்டமம் பற்றிய விளக்கம் மிக அருமை. இது அறிவியல் பூர்வமாகவும், வானவியல் பூர்வமாகவும் இருப்பதோடு நம் அன்றாட வாழ்வின் யதார்த்தத்தோடு வழங்கியமைக்கு மிக்க நன்றி.

  மேலும் தங்களுடைய பழைய பதிவுகளை இன்னமும் படித்துக் கொண்டிருக்கின்றேன். மிக சுவாரசியமாக இருக்கின்றன. தங்களுடைய சமூக சிந்தனையும், எழுத்தாளுமையும், எண்ணங்களை பட்டவர்த்தனமாக சொல்வதிலும் தங்களுடைய கருத்துகள் எழுத்தாளர், பேச்சாளர், சமூக சினந்தனையாளர் திரு. பாமரன் அவர்களின் செயல்பாடுகளோடு மிகுந்த ஒற்றுமை கொண்டனவாக இருக்கின்றன என்பது எனது கருத்து. இந்த ஒப்புமைக்காக என்னை மன்னிக்கவும். திரு பாமரன் அவர்களோடு எப்பொழுதாவது அளவளாவிய வாய்ப்புகள் கிடைத்ததுண்டா?

  ம.க.பா. இரவிச்சந்திரன்
  சென்னை.

   S Murugesan said:
   March 8, 2011 at 9:41 am

   நன்றி ரவி அவர்களே.

  டவுசர் பாண்டி said:
  March 8, 2011 at 12:34 pm

  இன்னா தல, நீ பிரீயா கேள்வி கேக்கலாம்னு சொல்லிக்கிற, ஆனா நீ குடுத்த அட்ரஸ டைப் பண்ணிக்குனா அது என்னடான்னா “பேமானி இல்லாத ஒன்ன எதுக்கு டைப் பண்ணிக்கினு இருக்குரன்னு” ஓயாம சொல்லுதுப்பா. இந்த அட்ட்ரசான்னு மாத்துப்பா. http://www.ganeshaspeaks.com/

   S Murugesan said:
   March 8, 2011 at 12:51 pm

   டவுசர் பாண்டி!
   சாரி அண்ட் தேங்க்ஸ். இலவச ஜாதகம் போட உதவும் வெப்சைட்ஸோட அட்ரசை நினைவிலிருந்து தந்ததால் இப்படி ஆனாப்ல இருக்கு. பதிவுலயும் திருத்திர்ரன்

  sugumarje said:
  March 9, 2011 at 12:25 pm

  //நீங்க காப்பி பேஸ்ட் பண்ணி மெயில் அனுப்பவேண்டிய மேட்டர்://
  சூப்பர் பரிகாரமுங்கோ 🙂
  //பாரதமாதாவுது நாறிக்கிட்டு இருந்தா என்ன என்னோடத மட்டும் க்ளீன் பண்ணிக்கறேன்னா கீழ் காணும் பரிகாரங்களை தினசரி செய்ங்க//
  இதுக்கு அப்புறமும் மின்னஞ்சல் அனுப்பாம இருப்பாங்களா? கண்டிப்பா செய்வாங்க அய்யா.

  syed said:
  March 10, 2011 at 10:57 pm

  pls read my jadagam & tell me abt my wife and children
  can i get back them ?
  or this is the time of my second marriage?
  pls help me
  thank u

   S Murugesan said:
   March 11, 2011 at 4:42 am

   சையத் சார்,
   ஜாதகம்/ பர்த் டீட்டெய்ல்ஸ் மெயில்ல அனுப்பியிருந்தா ஓகே. நிச்சயம் சொல்றேன்

   S Murugesan said:
   March 11, 2011 at 5:46 am

   சையத் அவர்களே,
   உங்க ஜாதகத்துல 7 ஆவது இடம் ரெம்ப டேமேஜுக்குள்ளாகியிருக்கு.என் மேல நம்பிக்கை வச்சு காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனத்தை தினசரி 10 நிமிடம் வாட்ச் பண்ணுங்க. உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணி ஒரு தடவை ரத்ததானம் பண்ணுங்க.

   குரான்ல சூரியன், பாம்பு,ஆயுதம் பற்றி வர்ர ஆயத்துக்களை தொடர்ந்து ஓதுங்க.

   ஒரு நாலு நாள் ஏதாச்சும் மசூதி அ தர்காவுல ஃபகீர்களோட ஹால்ட் பண்னுங்க.

   உங்க மனைவியார் ஜாதகம் பெட்டராவே இருக்கு. வீட்டு ஹால்லயும், பெட் ரூம்லயும் போர்க்கள காட்சி எதையாவது சீனரி போல வைங்க.

   அவிக வந்து சேர்ந்தா சின்னதா நாலு பேருக்கு நான் வெஜ் டின்னர் வைக்கிறதா கமிட் பண்ணிக்கங்க

   அவிகளுக்கு லேசா புத்தில குழப்பம் தட்ஸால்.அவிகளுக்காகவும் பிரார்த்தனை பண்ணுங்க

   நல்லது நடக்கலாம்

  syed said:
  March 11, 2011 at 5:55 pm

  thank you very much thalaiva en vayithula paala vartha madiri unga badil irukku
  avanga thirumba kedaicha kandippa neenga sandosappadura maadiri waittttta ungala gavanikkiren

  ippodaikku neenga sonna parigarangala thavaraama seyyirren

  thankkkkkkkkkkk you

   S Murugesan said:
   March 11, 2011 at 6:09 pm

   சையத் சாப்!
   ரெம்ப உ.வ படாதிங்க. வேணம்னா அப்போ இலவச ஆலோசனைக்கு பதிலா கட்டண சேவைக்கு வாங்க.
   வெய்ட்டா எதிர்பார்க்க நான் என்ன அரசியல் வாதியா? ஆள விடுங்க

  syed said:
  March 11, 2011 at 6:34 pm

  sorry thalaiva
  naan kattana sevaikku varugiren

  2 or 3 days la panam anuppuren

   S Murugesan said:
   March 11, 2011 at 7:53 pm

   சையத் பாய்!
   ஏன் அவசரப்படறிங்க. மொதல்ல பரிகாரம்லாம் செய்ங்க. நல்லது நடக்கட்டும். அப்பாறம் வரலாம் கட்டண சேவைக்கு

  Thevar said:
  April 27, 2011 at 8:59 pm

  மழையைத் தடுக்கமுடியாது- குடைபிடிக்கலாம்.
  இங்கு குடை பிடிப்பது பரிகாரம் எனப்படுகின்றது.

  1 -கோள்களைத் தன் கைகளில், கோலிக் குண்டுகளாக உருட்டிவிளையாடும்
  இறைவனை சரணாகதி அடைவதுதான் சிறந்த பரிகாரம்.

  “அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகின்ற்றவர்-
  இராஜாக்களைத் தள்ளி இராஜாக்களை ஏற்படுத்துகின்ற்றவர்”
  என்று தானியேல் தீர்க்கதரிசி சொல்கின்றான்.

  2 -அன்னதானம் அடுத்தது.
  3 – ஆடை இல்லாதவர்களுக்கு- புத்தாடை வழங்குதல்.

  “நான் பசியை இருந்தேன் -ஆகாரம் கொடுத்தீர்கள்-
  நான் நிர்வாணியாய் இருந்தேன் ஆடை கொடுத்தீர்கள்
  நான் காவலில் இருந்தேன் என்னைக் கானவன்தீர்கள்”
  என்று இறைவன் மோட்சத்தில் நம்மைப் பார்த்து சொல்வான்.
  இதை எல்லாம் எப்பொழுது நாங்கள் செய்தோம் என்று கேட்டால்-
  இந்த சிறியவர்களுக்கு எதைச் செய்தீர்களோ –
  அதை எனக்கே செய்தீர்கள் என்பான் இறைவன்.

  4 – மரம் நடுதல்.
  5 – படிக்க வசதியில்லாத ஏழை ஒருவனுக்கு
  உதவிசெய்தல் மிகச் சிறந்த பரிகாரம்.

  ஏழைகளுக்கு இரங்குகிறவன் இறைவனுக்குக் கடன் கொடுக்கின்றான்.

  ஒவ்வொரு இராசிக்கும் ஏற்ற பரிகாரங்கள் உண்டு-
  அவை எல்லாமே அன்பின் நிமித்தம் சக மனிதர்களுக்கு
  செய்யும் தொண்டு-சேவை. மட்டுமே.

   kandhan said:
   April 28, 2011 at 4:29 am

   “ஒவ்வொரு இராசிக்கும் ஏற்ற பரிகாரங்கள் உண்டு” இதபத்தி இன்னும் கொஞ்ஜம் சொல்லுங்களென்.

    S Murugesan said:
    April 28, 2011 at 7:37 am

    கந்தன்!
    நிச்சயமா சொல்றேன். மே 3 க்கு பிறகு

  yoghi said:
  April 27, 2011 at 10:03 pm

  ம்ம்ம் என்னமோ நடக்குது////// மர்மமா இருக்குது///// இதுக்கு நம்ம குரு என்ன சொல்ராருன்னு பாக்கவென்டியதுதான்;;;

   S Murugesan said:
   April 28, 2011 at 7:40 am

   யோகி சார்,
   யாருக்கும் யாரும் குரு கிடையாது. கத்துக்கற கப்பாசிட்டி இருந்தா ஈ ,எறும்பு,கொசு எல்லாமே குரு தான். அது இல்லாதவன் குரு முகத்துல ஒரு மருவாயிருவான்.

   ஆமா இன்னா மேட்டரு? குருன்னது நம்மையா? இல்லை ஓஷோ சொல்றாப்ல நான் என்ன எழுதப்பட்டிருக்கோ அதை புரிஞ்சிக்கலியா?

  yoghi said:
  April 28, 2011 at 8:43 am

  thiru s.முருகேசன் அவர்களும் அனுபவ ஜோதிடமும் தான் என்னுடைய குரு

  நீஙக நமக்கு பாடம் நடத்தலைன்னாலும் உங்க பதிவுகல்ல இருந்து மேட்டர கேட்ச் பன்னிக்குவோம்ல‌

   S Murugesan said:
   April 28, 2011 at 10:16 am

   யோகி சார்,
   சூரிய ஒளி பேத பாவமில்லாம எல்லா பொருள் மேலயும் விழுது. சோலார் பவர் யூனிட் மட்டும் தானே அதுலருந்து மின்சாரம் தயாரிக்குது.

   இதுல சூரியன் கிரேட்டா? சோலார் பவர் யூனிட் கிரேட்டா?

   கத்துக்கிட்ட நீங்க தேன் கிரேட்டு. நான் யாருக்கும் குரு இல்லை. ஸ்டில் நான் ஒரு சீடன். ஆளை விடுங்க

  minnalmarutuu said:
  May 7, 2012 at 2:34 pm

  MAY 3 OVER for the reply of kandhan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s