எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

Posted on

தலைப்பை பார்த்ததுமே உங்களுக்கு விவேக் காமெடி ஞா வந்திருக்கும். ஒவ்வொரு ட்ராஜடியும் ஒரு காமெடிய ஞா படுத்தியே தீரும். சின்ன வயசுல என் ஃப்ரெண்டு ஒருத்தன் அவன் அப்பனை பத்தி பேசும் போது ” தே.பையன் ! இந்த தீபாவளிக்கு ஒரு ரோல் கேப் வாங்கிக் கொடுத்துட்டு அடுத்த தீபாவளி வரை வெடிக்கசொல்றேன் மச்சான்” என்பான்.கேட்கிறவுகளுக்கு காமெடி.அனுபவிச்சவனுக்கு ட்ராஜடி. ஆக நம்ம எல்லாரிலும் ஒரு வித சாடிசம் இருக்கு.

ஓகே மேட்டருக்கு வரேன். இந்த வெப் சைட்டை க்ரியேட் பண்ணிக்கொடுத்தவரு ஜோதிஷம் தவிர வேறெதையும் இதுல கொண்டுவராதிங்கன்னு சஜஸ்ட் பண்ணியிருக்காரு. அதனால எப்படியோ இருந்த ஒருத்தன் எப்படியோ ஆக அவன் ஜாதகம் எந்த அளவுக்கு காரணம்னும் ஒரு ஓரமா பார்த்துருவம்.

படத்தை பாருங்க. சோமாலியா குடிமகன் கணக்கா எஸ்.ஐ கிட்டே ஜூஸ் வாங்கிக்கற பார்ட்டி சாட்சாத் நான் தேன். 12 நாள் உண்ணாவிரதத்துக்கு பிறகான ஸ்டேஜ் இது. ( சாதாரண நாட்கள்ள மாத்திரம் என்னவாம் கிடைச்சா திங்கலாங்கற நிலைதேன்)


அடுத்த படத்தை பாருங்க. இது உங்க எல்லாத்துக்கும் தெரிஞ்ச முகம். பேசிக்கிட்டிருக்கிற பார்ட்டி பிரபல சைக்காலஜிஸ்ட் பேரு NB.சுதாகர் ரெட்டி. இவர் இப்ப பட்டதாரிகள் தொகுதி எம்.எல்.சியா கன்டெஸ்ட் பண்றாரு. ஜகன் க்ரூப்போட சப்போர்ட்டும் இருக்கிறதா கேள்வி.. வென்யூ: ZP மீட்டிங் ஹால். இன்னொருத்தரு பிரபல நகைக்கடைக்காரர்.கைய கட்டியிருக்கிறவரு மாவட்ட எஸ்.பியையே இன்ஸ்பைர் பண்ணி செமினார்ல இடம் பிடிச்சவரு.( வருஷம்: 2007 க்கு பிறகு)

ரெண்டு படத்தையும் பார்க்கிறவுகளுக்கு மொதல் படம் என்னை ஒரு தோத்தாங்குளியா காட்டும், அடுத்த படத்தோட பேக் கிரவுண்ட்ல ” நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன்”ங்கற லிரிக் கேட்கும்.

என்னை கேட்டிங்கனா என் ஓட்டு மொத படத்துக்குத்தேன்.அப்போ வருசம் 2004. ராஜசேகர் ரெட்டி முதல்வாரன புதுசு. லோக்கல்ல அவரோட ப்ரிய சிஷ்யர் ஹேட்ரிக் எம்.எல்.ஏ சி.கே.பாபு குறைஞ்ச வாக்கு வித்யாசத்துல வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுட்டு வாழ்க்கையில மொதல் முறையா முன்னாளாகி இருக்காரு.( காட்டுத்தீக்கு நடுவுல கட்டி கற்பூரம் மாதிரி ஒரு உண்ணாவிரதப்போர்)

அப்போ ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை சி.எம்.பார்வைக்கு போகவிடாம சி.எம்.அலுவலக அதிகாரிகள் ப்ளாக் அவுட் பண்றாய்ங்கனு சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சேன். (அக்டோபர் 2) அந்த 12 நாளும் நான் அனுபவிச்ச சாந்தி ( பெண் குட்டியோட பேரில்லிங்கோ) இருக்கே அதை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இருந்தாலும் ஒரு சிலவரிகள்.

1. நான் தப்பு பண்ணலை
2.நான் சரியானதை தான் செய்துக்கிட்டிருக்கேங்கற ஃபீலிங்.
3.அகதியா அலைய விடாம இன்னமும் என்னை சகிச்சிக்கிட்டிருக்கிற தாய் நாட்டுக்கு என் நன்றியை தெரிவிச்சிக்கிட்டிருக்கேங்கற உணர்வு

இப்படி ஒன்னு ரெண்டில்ல.ஆயிரம்.

ஏதோ பேப்பர்ல நியூஸ் வந்திருக்கும். இதெல்லாம் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சனுன்னும் சொல்ல முடியாது. நான் ஒன்னத்தையும் கழட்டறதுக்கு மிந்தியே அரைப்பக்கம்லாம் வந்திருக்கு.(அதையும் இந்த பதிவுல சேர்த்திருக்கேன் பாருங்க- ஆ.இ.திட்டம் -அதன் அமலுக்கான என் முயற்சிகள் பத்தின செய்தி இது)

சரி விஐபிங்க எல்லாம் வந்து கெஞ்சியிருப்பாய்ங்கனு நினைப்பிங்க. அதுவும் கிடையாது. வந்தவுக கூட பர்சனலா என் பேர்ல அக்கறையால வந்தவுகதான். எஸ்.ஐ வந்தது – எஸ்.பி கிட்டே ஃபோன்ல பேச வச்சதெல்லாம் கூட நான் ஒரு ஜர்னலிஸ்ட் – நம்ம பீடி சாரி பாடி ரெம்ப நாளைக்கு தாங்காது-(அப்ப ஆந்திரபிரபா) -எதுக்கு வம்புங்கற காரணத்தால தேன்.

வந்தவுக எல்லாம் ஒரு பாட்டம் என்னை திட்டி தீர்த்துட்டு போனவுகதேன். ( ஒனக்கெங்கய்யா வலிக்குது? உனக்கேன் இந்த வெட்டி வேலைல்லாம்.ஏதோ லெட்டர் போடறே..போட்டுக்கனு இருந்தம். எக்குத்தப்பா எதுனா ஆயிட்டா இந்த பொண்ணும் (மனைவி) குழந்தையும் என்ன ஆகிறது)

ஆனாலும் எனக்கு என் மேல இருந்த மரியாதை உறுதிப்பட்டதோடு ,கூடவும் கூடின தினங்கள் அவை.

ரெண்டாவது படத்தை பாருங்க. ஒரு செமினார். அதுவும் நமக்காகவே கண்டக்ட் பண்ணின செமினார் -எல்லாம் தயிரு – 100% வீடியோ கவரேஜ் – சப்ஜெக்டு மணி சீக்ரெட்ஸ் – ஊர்ல இருக்கிற லட்சாதிபதி எல்லாம் கூட வந்திருந்தாய்ங்க.

நாம எடுத்துவிட்ட வசனத்துக்கெல்லாம் பயங்கர கைத்தட்டல். கட்டக்கடேசில இத்தீனி நாளு நாட்டை ப்ராஸ்பர் ஆக்க பார்த்தேன்.அது மேக்ரோ. இப்ப உங்களை செல்வந்தர்களாக்கத்தேன் இந்த செமினாரு .இது மைக்ரோன்னுட்டு ஆ.இ திட்டத்தோட அஞ்சு பாய்ண்டை அவிழ்த்துவிட்டேன். இந்த ஒரு வேலை செய்யாம இருந்திருந்தா தாளி சூசைட் டெண்டன்சிக்கு நிச்சயமா மேற்படி சைக்காலஜிஸ்டையே போய் பார்த்திருக்கனும்.

செமினார் இடைவேளையில விஷ்ணுபவன்லருந்து லஞ்ச் அரேஞ்ஜ் பண்ணியிருந்தாரு சேட்டு. சனம் விஜாரிக்கிறதென்னா, கைகுலுக்கிறதென்னா, விசிட்டிங் கார்டு வாங்கிக்கறதென்னா.. ஸ்தூலமா இத்தீனி நடந்தாலும் உள்ளுக்குள்ள குற்ற மனப்பான்மைதேன்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு ஒரு ஃப்ளாஷ் நியூஸ் ஓடிக்கிட்டே இருந்தது. சரிங்கண்ணா சரண் சார் கோச்சுக்கப்போறாரு. இந்த வித்யாசத்தை ஜோதிஷ கோணத்துல பார்த்துருவமா?

என் பிறந்த தேதி: 7/8/1967 நேரம்: காலை: 6.10 ஊர்: சித்தூர்

லக்னம் :கடகம் ராசி: சிம்மம் லக்னத்துல: புத,சூரியன்,குரு(உச்சம்) , ரெண்டுல :சந்திர சுக்கிர , நாலுல: செவ், கேது, 9ல சனி வக்கிரம். பத்துல ராகு.

2004 அக்டோபர் 2 சமயத்துல தசா புக்தி:

19/Jul/2003 => முதல் 18/Feb/2005 வரை சந்திர தசை சனி புக்தி. சந்திரன் சனி சம்பந்தப்படும்போது ப்ளாக் மெயிலிங் வருது. நம்ம கேஸ்ல சந்திரன் லக்னாதிபதி சனி : அஷ்டமாதிபதி (தற்கொலை முயற்சி பண்ணனும்போல- நம்ம எண்ணம் நல்ல எண்ணம்ங்கறதால பகவான் மனசை இப்படி திருப்பி விட்டுட்டாரு போல) சனிக்கு களத்ராதிபத்யமும் இருக்கிறதால மனைவிக்கும் இம்சை தானே.சனின்னா ஏழ்மை. மக்கள் ஆதரவுக்கு சந்திரன் தான் முக்கியம். அவரு சூரியனோட பரிவர்த்தனமாகி இருக்கிறதால சூரியனால(லோக்கல் லீடர்ஷிப்) பிரச்சினை வரலை. கிட்னி சட்னியாயிராம சேவ் ஆச்சு.

2007 ன் போது தசாபுக்தி:

18/Feb/2007 => முதல் 18/Oct/2008 வரை சந்திர தசையில சுக்கிர புக்தி.

அதுக்கு மிந்தி கேது புக்தி. ஏதோ சனம் சன்னியாசியை கூப்பிடறாப்ல சாமி சாமினு கூப்பிடறாதாலயும் – மணி மேனேஜ் மெண்ட்ல புது கோர்ஸே டிசைன் பண்ற ரேஞ்சுக்கு அறிவிருந்தாலும் ஷிர்டி பாபா மாதிரி அன்னன்னிக்கி டிஸ்பர்ஸ் பண்ணிர்ரதாலயும் பெருசா இம்சை இல்லாம தப்பிச்சேன்ங்கறது வேற விஷயம்.

சுக்கிரன் கடகலக்னத்துக்கு பாதகாதிபதி. ஜாதகத்துல லக்னாதிபதியோட சேர்ந்திருக்காரு. சாதாரண பார்ட்டியா இருந்திருந்தா தந்தில செய்தியா வந்திருப்பாய்ங்க “பெண்ணிடம் குறும்பு -தர்ம அடி” எட்செட் ரா.

நம்ம மேட்டர்ல இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாம போனதுக்கு என்ன காரணம்னா நாம ஜூனியர் மாத்ரு பூதம் கணக்கா செக்ஸாலஜியையும், ஜூனியர் ருத்ரன் கணக்கா சைக்காலஜியையும் நோண்டி நுங்கெடுத்து சாக்ரடீஸ் மாதிரி ஸ்பீச் கொடுத்துக்கிட்டிருந்தமில்லை. போதாததுக்கு ப்ளாக்லயும் அனேக பதிவுகள் இதைபத்தி தான் இருக்கும்.

சந்திரன் மீன்ஸ் சைக்காலஜி சுக்கிரன் மீன்ஸ் செக்ஸாலஜி வாக்குஸ்தானத்துலதான இருக்காய்ங்க. சரி கெட்டது நடக்கலை ஓகே. அதெப்படி ஷைன் ஆயிட்டேனு கேப்பிக. சொல்றேன்.

நம்ம ஜாதகத்துல சூரிய சந்திரர்கள் பரிவர்த்தனம். சூரிய தசையில சந்திரன் -சந்திர தசையில சூரியன்னு கச்சா முச்சானு வேலை செய்ய அதிகாரமிருக்கில்லா. அறிவிப்புகளுக்கு சூரியன் காரகன். நாளிதழ்களுக்கு சந்திரன் காரகன். மேலும் பாக்யத்துல சனி வக்கிரம். தந்திங்கற வார்த்தையே மரணத்தை குறிக்கிற மாதிரிதான் இருக்கும். எப்படியோ தினத்தந்தில ஃபிட் ஆனேன். தந்திலயும் சுக்கிரனுக்கு இடமுண்டே. கள்ளக்காதல் எதிரொலி எட்செட் ரா.

சுக்கிரன் லக்சரிக்கு காரகர். நமக்கும் அதுக்கும் ரெம்ப தூரம். சுக்கிரன்னா கிருக காரகன். அப்ப நம்ம வீட்டுக்கு பவரே கிடையாது.(இயற்கையோட ஒத்துவாழனும்னு ஒரு வீம்புல பவர் கனெக்சனே வாங்காம இருந்தன் -காசு பணம் இருந்தும்) அடுத்தது என்ன கில்மா.

சனங்க நக்கலடிக்கிற ஆழமான – நீண்ட உடலுறவு காரணமா மாசத்துல ரெண்டு தாட்டிக்கு மேல அந்த ஞா மே வர்ரதில்லைங்கோ.

Advertisements

10 thoughts on “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

  Vinoth said:
  March 7, 2011 at 6:56 am
   S Murugesan said:
   March 7, 2011 at 7:24 am

   வினோத் சார்,
   சந்துரு ரெம்ப விவரமா எழுதியிருக்காருங்க. நமக்கு வயசு பத்தாது.

  Vinoth said:
  March 7, 2011 at 7:34 am

  மரணத்தை பற்றியும் எழுதியிருக்கர் பருங்க..

   S Murugesan said:
   March 7, 2011 at 7:39 am

   //அந்தத் தற்கொலைகள் ஜீனில் பதிந்து, கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்து தற்கொலைக்கும் இறவாமைக்கும் சராசரி போட்டு ஆயுளை ஒரு 100 வருடம் என காலப் போக்கில் நமது ஜீன்கள் தீர்மானித்து முடிவு செய்து விட்டதோ?.//

   சூப்பர் பாய்ண்டு! ஆமா ஏன் ப்ளாகோட லே அவுட் பேக் கிரவுண்ட் எல்லாம் எரிச்சலூட்டறாப்ல வச்சிருக்காரு. ஒரு கமெண்ட் போடலாம்னா கூட தடுமாற்றமா இருக்கே

    sugumarje said:
    March 7, 2011 at 11:33 am

    அய்யா, அதுக்கும் அவரே விளக்கம் கொடுத்துட்டாரு… கருப்பு கலர் மானிட்டரில்… அட கணிணி மானிட்டருங்கோ… இருந்தா மின்சார சிக்கனம் கிடைக்குறதாம்… “ஏதோ என்னாலான சிறு உதவி, என் பார்வையாளர்களுக்கு” அவர் சொன்னதுதான்…
    தளம் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றல்லவா நினைத்திருந்தேன் 😦

    S Murugesan said:
    March 7, 2011 at 2:33 pm

    பாஸ்!
    நான் என்ன திருவிளையாடல் சிவாஜியா “அனைத்தும்” அறிந்திருக்க. எல்லாம் நாலு பேர் மூலமா தெரிஞ்சிக்கிடறதுதேன்

  Vinoth said:
  March 7, 2011 at 8:19 am

  நானும் இன்றுதான் அவர் பிளாகை முதலாக படித்தேன்.

  அவர் சுனாமி/நில நடுக்கத்தை முன்னறிவிப்பது, பற்றிய வால் பையன் பிளாகில் போட்ட கமெண்டுக்க பார்க்கும்போது தான் அவர் பிளாகை பார்த்தேன்.

   S Murugesan said:
   March 7, 2011 at 9:02 am

   உங்க தயவுல நானும்தேன்

  Mani said:
  March 7, 2011 at 9:46 am

  வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உங்களது கோட்பாடு அருமை. ரசிக்கும் , படிக்கும் வண்ணம் உள்ளது உங்களது பதிவு.

  ஒரு சந்தேகம் கரி நாளில் திருமணம் செய்யலாமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s