எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்

Posted on

இதென்னா இது புது கூத்துன்னு நினைச்சிராதிங்க. இது நாள் வரை நாம பேசிக்கிட்டதென்ன மன்சன் ..மன்சனாதான் கீறான். கிரகங்கள் அவனை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது.

ஆனா இன்னைக்கு சொல்றேன் ஒவ்வொரு மனிதனும் ஒரு கிரகம்.எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட் மேன் இன்னிட்டு சொம்மா பேச்சுக்கு சொன்னாலும் வுமன் கூட சேர்த்துத்தேன்.

எப்டி எப்டினு கேப்பிக சொல்றேன்.

ஒவ்வொரு ஜாதகத்துலயும் 9 கிரகம் இருக்கு. அதுல எந்தெந்த கிரகம் வலிமையோட இருக்குன்னு பார்க்கனும். ( பொதுவிதிப்படியோ அ சிறப்பு விதிப்படியோ)

அந்த வலிமையான கிரகங்கள்ள எந்த கிரகம் லக்னத்தோட , அல்லது அஞ்சாவது இடத்தோட கனெக்ட் ஆகியிருக்குதுன்னு பார்க்கனும். அப்ப அந்த மனிதன் அந்த கிரகமாவே மாறிர்ரான். லக்னங்கறது அவனோட உடல்,மனம் ரெண்டையும் காட்டும் இடம். குறிப்பிட்ட கிரகம் அவன் லக்னத்தோட கான்டாக்ட் ஆகியிருக்கும்போது அந்த கிரகத்தோட அதிர்வுகளை அவன் பாடி நல்லாவே க்ராஸ்ப் பண்ணிக்கும். அந்த கிரகம் காரகத்வம் வகிக்கும் எல்லா விஷயத்து மேலயும் அவனுக்கு கமாண்ட் வந்துரும்.

அதே போல அஞ்சாமிடங்கறது அவனோட பூர்வ புண்ணியம் -புத்திய காட்டும் இடம். இந்த இடத்தோட அந்த குறிப்பிட்ட வலிமையான கிரகம் கான்டாக்ட் ஆகும்போது இவன் புத்தி அந்த கிரகம் தொடர்பான மேட்டருங்களை பக்குனு பிடிச்சுக்குது. இவன் அந்த மேட்டர்ஸ்ல ஒரு ஆத்தன்டிக்கேட்டட் பர்சனாயிர்ரான்.

சுத்துவட்டாரத்துல எவனுக்கெல்லாம் அந்த கிரகம் நல்ல நிலையில இருக்கோ அவனுக்கெல்லாம் இவனால நல்லது நடக்கும். எவனுக்கெல்லாம் அந்த கிரகம் கெட்ட நிலையில இருக்கோ அவனுக்கெல்லாம் இவனால கெட்டது நடக்கும்.

இப்படியாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கிரகமா மாறிர்ரான். உதாரணத்துக்கு என் ஜாதகத்தையே எடுத்துக்குவம். என் ஜாதகத்துல லக்னம் கடகமாகி அங்கன குரு உச்சமாயிருக்காரு அஞ்சையும் பார்க்கிறாரு. (இதை நான் 116 தடவையா சொல்றேன்னு ஆருனா கணக்கு வச்சிருந்தா அவிக ஜாதகத்துல புதன் உச்சம்னு அர்த்தம்)

ஆருக்கெல்லாம் ஜாதகத்துல / அல்லது கோசாரத்துல குரு அனுகூலமா இருக்காரோ அ 1 -5-7 ல டச் ஆறாரோ அவிக தான் நம்மை கான்டாக்ட் பண்றாய்ங்க.. புதுசா ஏழை ஏன் சேர்த்தேன்னா 7ங்கறது ஃப்ரண்டை கூட காட்டுது.

வாய்ஸ் சாட்ல மாட்டனும்னா குரு 2 ல இருக்கனும். என்னை சிந்திக்கனும்னா குரு அஞ்சுல இருக்கனும், என்னோட நட்பா இருக்கனும்னா குரு 7 ல இருக்கனும்.இருந்த இடத்துல இருந்தபடியே என் உதவியை பெறனும்னா குரு 9 ல இருக்கனும், இலவச ஜோதிட ஆலோசனை பெறனும்னா குரு 11ல இருக்கனும்.

எதிராளிக்கு குரு ஜன்மத்துல இருந்தா என்னால அவிகளுக்கு நிம்மதி பறிபோகும் ( மீனம்) நாம உள்ளதை சொல்லிர்ரமில்லை. குரு 3ல இருந்தா என்னால அவிக மனோ தைரியம் புஸ் ஆயிரும். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

நீங்க எந்த கிரகம்னு தெரிஞ்சிக்கனும்னா சின்ன டெக்னிக் இருக்கு. உங்க உருவம் உங்க சிந்தனை அல்லது உங்க புத்தி எந்த கிரகத்தோட காரகத்வத்தோட இருக்குன்னு பார்க்கனும்.

1. சூரியன்:
கோரைப்புல் மாதிரி முடி -வழுக்கை தலை -பவர் கிளாஸ்- இன்சோம்னியா -தன்னம்பிக்கை – லோக்கல்ல சுத்தி சுத்தி வர்ர வேலை – டீம் லீடர் – அல்லது க்ரூப்ல நெம்பர் ஒன் பொசிஷன்

2.சந்திரன்:
ரெண்டே கால் நாளைக்கொருதரம் கம்ப்ளீட்டா மாறிப்போற மைண்ட் செட் – நெம்பர் டூ பொசிஷன்ல இருக்கறது – சுகமான கற்பனைகள் – எந்த வேலைய எடுத்தாலும் அரைகுறையா விட்டுர்ரது – 14 நாள் மன்மதன் கமல் மாதிரியும் 14 நாள் குணா கமல் மாதிரியும் மாறிப்போற முகம்

இப்படி சொல்லிக்கினே போவலாம். ஒரு பார்ட்டிய பார்த்ததுமே உங்களுக்கு ஒரு கிரகம் ஸ்பார்க் ஆகனும். அப்படி ஆச்சுன்னா அவனோட ஃபிசிக்கை வச்சு அவனோட டோட்டல் சைக்காலஜியை புட்டு புட்டு வைக்கலாம்

அதனாலதான் சொல்றேன் எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட். இதுல இன்னொரு இம்சை இருக்கு வாத்யாரே.. அது இன்னாடான்னா எந்த கிரகத்தோட இன்ஃப்ளுயன்ஸ் உங்க மேல அதிகமா இருக்கோ ..அந்த கிரக காரகத்வத்துல உள்ள மைனஸ் பாய்ண்ட்ஸும் உங்க கிட்டே இருக்கும்.

உதாரணமா என் கேஸ்ல குரு லீடிங் ப்ளேனட்டா இருக்கிறதால ரெம்பவே பழி பாவம் பார்ப்பேன். நான் எம்மாம் பெரீ லக்காடின்னு எனக்கே தெரிஞ்சாலும் (பத்துல ராகு) அய்யயோ சனம் நம்மை நல்லவனு நினைக்குதே நல்லவனாவே இருந்துட்டா என்னன்னு தோணும். இதனால பல நேரம் தமிழ் சினிமா கணக்கா இம்சைய பேர் பண்ணிக்கிட்டே இருப்பேன். க்ளைமேக்ஸ்ல ” ங்கோத்தா இப்போ இன்னான்ட்ரே”ம்பேன். பாவம் சனம் ரெம்ப ஷாக்காயிருவாய்ங்க.

உங்க ஜாதகத்துல லீடிங் ப்ளேனட் செவ்வாய்னு வைங்க. போலீஸ்,மிலிட்டரி மாதிரி ஃபிசிக், செம தில்லு, உற்சாகம் மட்டும் இருக்காது வலுச்சண்டைக்கு இழுக்கிற நேச்சர் இருக்கலாம். எக்ஸஸ் ஆஃப் ஹீட் காரணமா வர்ர நோய்களும் வரலாம்.

பாஸ்! இன்னம் நிறைய ஜாதகத்துக்கு பலன் எழுதவேண்டியதிருக்கு.. மார்ச் 7 வரை ஆரும் பணம் போடாதிங்கன்னு கெஞ்சி கேட்டுகினாலும் அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் பண்ணி டர்ராக்கிட்டாய்ங்க. இன்னம் மஸ்தா மேட்டர் கீது … நாளைக்கு பார்ப்பமா?

பை தி பை நம்ம ப்ளாக்ல பங்காரு அடிகளார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? ன்னுட்டு ஒரு திகீர் பதிவு போட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிச்சுருங்க ராசா!

Advertisements

3 thoughts on “எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்

  sugumarje said:
  March 4, 2011 at 2:00 pm

  //என் ஜாதகத்துல லக்னம் கடகமாகி அங்கன குரு உச்சமாயிருக்காரு அஞ்சையும் பார்க்கிறாரு.//
  எத்தனை தடவைதான் சொல்றீங்கன்னு தான் பார்க்கலாம்…
  //க்ளைமேக்ஸ்ல ” ங்கோத்தா இப்போ இன்னான்ட்ரே”ம்பேன். பாவம் சனம் ரெம்ப ஷாக்காயிருவாய்ங்க.//
  🙂 தாங்கலை அய்யா… சிரிப்பை அடக்க முடியலை 🙂

  மிக அருமையான அனுபவ சோதிட தகவல்

   S Murugesan said:
   March 4, 2011 at 3:57 pm

   சுகுமார்ஜீ அவர்களே நன்றி

  siva c.m. janakiraman said:
  March 5, 2011 at 4:45 pm

  Message

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s