டாப் சீக்ரெட்ஸ்

Posted on

எதையெல்லாம் வெளிப்படுத்தினா நான் சாபத்துக்காளாவேனோ, தரித்திரம் என்னை பிடுங்கி தின்னுமோ அற்பாயுசுல செத்து போயிருவனோ அதையெல்லாம் வெளிப்படுத்திர்ரதா முடிவு பண்ணியிருக்கேன்.

விவேகானந்தர் சொல்வாரு “என் தனிப்பட்ட ஆன்மீக முன்னேற்றம் பாதிக்கப்பட்டாலும் நோ ப்ராப்ளம். ஒட்டு மொத்த மனித குல மேன்மைக்காக என் முயற்சிகள் தொடரும்”

என்னை பை.காரன்னு டிசைட் பண்ணாலும் சரி, நான் சொல்றதுல உள்ள சத்தியத்தை கிரகிச்சு மேலும் மேலும் இந்த சத்தியங்களை வெளிப்படுத்த என் ஆன்ம பலத்தை கூட்ட எனக்காக பிரார்த்தனை பண்ணாலும் சரி. சொல்ல வந்ததை சொல்ல முயற்சி பண்றேன்.

என்னதான் இந்த பதிவு கடவுளுக்கு, படைப்புக்கு எதிரானதா இருந்தாலும் அவன் அருளாலே அவன் தாள் பணிந்துங்கற மாதிரி இதுக்கும் கடவுளோட அருள் தேவைப்படுது.

பாண்டவருங்க பீஷ்மரை கொல்ல அவர்கிட்டேயே க்ளூ கேட்டுக்கலையா அது மாதிரி. இங்கே கடவுளை கொல்றது நம்ம உத்தேசமில்லே. கடவுள் பேரால இங்கன செலாவணில இருக்கிற பிரமைகளை, மூட நம்பிக்கைகளை ஒழிச்சுக்கட்டறதுதான்.

மொதல்ல நம்ம ஜூரிஸ்டிக்சன் (ஜோதிஷம்).அப்பாறம் ஆன்மீகம். ஆன்மீகம்னா கியாபகம் வருது (ரஜினி ஸ்டைல்) நம்ம தனிக்காட்டு ராசா நிர்வாண உண்மைகள் வலைப்பூவில் ராத்திரி கலாச்சாரம்னு ஒரு வில்லங்கமான தலைப்போட விவரமான பதிவு போட்டிருக்காரு.அதை இங்கே அழுத்தி படிச்சுருங்க

நவகிரக பாதிப்பிலிருந்து பூரண விடுதலை பெற ஒரே வழி.. அவை தரும் தீய பலனை எதிர்ப்பின்றி அனுபவிப்பதே. இந்த இணக்க தன்மை பெற ஆன்மீக நூல்கள் படியுங்கள். மாமிசம் தவிருங்கள். காரம் புளி குறையுங்கள். இரு வேளை நீராடுங்கள். தலைக்கு தொப்பி/ ஹெல்மெட் அணியுங்கள். செருப்பு,ஷூ இல்லாது நடந்து பாருங்கள் ( வாய்ப்புள்ள போது )

1.அகந்தையை விடுங்கள். நகராட்சி வரிகளை இன் டைம் கட்டுங்கள். வயசான அப்பா இருந்தா வாரம் ஒரு தினமாச்சும் அவரோட செலவிடுங்க. மலை ஏறுங்க .காலை மாலை வாக் பண்ணுங்க சூரிய பிரபாவம் குறையும்

2.நிறைய தண்ணிர் அருந்தி பாடி ஃப்ளூயிட்டில் உள்ள சமுத்திர தன்மையை குறையுங்கள். பவுர்ணமியில் மூன் லைட் டின்னர் சாப்பிடுங்கள். சமுத்திர ஸ்னானம் செய்யுங்கள் சந்திர பிரபாவம் குறையும். . வயசான அம்மா இருந்தா வாரம் ஒரு தினமாச்சும் அவரோட செலவிடுங்க. நீச்சல் கத்துக்கிடுங்க ( அதர் தேன் விருச்சிக ராசி) ஏதேனும் சேவை நிறுவனத்துக்கு மினரல் வாட்டர் கேன் ஸ்பான்சர் செய்யுங்கள்.ஆத்து புறம்போக்குல வீடு கட்டாதிங்க (அது கருமத்தை தொலைக்கிற இடம் -கருமம்தேன் சுத்திக்கும்)

3.ரத்ததானம் செய்யுங்கள். மூச்சு பயிற்சி செய்ங்க.. மார்ஷல் ஆர்ட்ஸ் ப்ராக்டீஸ் பண்ணுங்க. லாலா,மசாலா அவாய்ட் பண்ணுங்க. எளிதாக செரிக்கும் உணவையே சாப்பிடுங்க. ரத்த சுத்தியை பேணுங்கள் .செவ்வாய் பிரபாவம் குறையும். பகைவனுக்கருள்வாய் நெஞ்சேனு இருங்க. பக்கத்து வீட்டுக்காரனோட நிலத்தை ஆக்கிரமிக்காதிங்க.

4.பிற மொழி கற்றுவாருங்கள், ஈசி மணிக்கு ஆசைப்படாதிங்க. வெளி நாட்டு மோகத்தை அவாய்ட் பண்ணுங்க. அப்பா வழி தாத்தா பாட்டி இருந்தா வாரத்துல ஒரு நாள் அவிகளோட ஸ்பெண்ட் பண்ணுங்க. ராகு பிரபாவம் குறையும்.

5 எலிமென்டரி ஸ்கூல், ஹை ஸ்கூல் வாத்யாருங்க, உங்களுக்கு வித்தை கத்து கொடுத்த குருக்கள் அல்லது ஏழை .பிராமணர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள் குரு பிரபாவம் குறையும்.

6.நொண்டிகளுக்கு, ஏழை தலித்துக்கு உதவவும். சனி பிரபாவம் குறையும். தினசரி ஒரு மணி நேரமாச்சும் உடலுழைப்புக்கு பழக்கப்படுத்திக்கங்க. சமையலுக்கு நல்லெண்ணெய் உபயோகிங்க. வேலைக்காரவுகளுக்கு ஒழுங்கா இன் டைம் கூலி/சம்பளம் கொடுங்க.சனி பிரபாவம் குறையும்

7.தோல் வியாதி கொண்டவர்க்கு, மாமன் முறை வருவோர்க்கு ( அதில் ஏழைகளுக்கு) உதவவும். விவரம் தெரியாதவர்களுக்கு மெயில் அனுப்ப ,தந்தி இத்யாதி அனுப்ப, ஃபார்ம்ஸ் ஃபில் அப் பண்ண , மனு எழுத உதவவும். ஏழை மாணவர்களுக்கு கல்வி வகையில் உதவுங்கள். புத பிரபாவம் குறையும்.

8..பிற மத கிரந்தங்கள் படியுங்கள். தியானம்,யோகம் தொடர்பான பயிற்சிகள் செய்யுங்கள். கேது பிரபாவம் குறையும்.

9.உப்பு ,சர்க்கரை குறையுங்கள். மெத்தை தலையணை தவிருங்கள் மாதர் போகம் மாதமிருமுறை என்பதை பின் பற்றுங்கள் சுக்கிர பிரபாவம் குறையும்
சிந்தனை தவிருங்கள். (அதிலும் குருட்டு யோசனை) -சிந்தனை,செயலில் சுய நலம் விடுங்கள்.வாக்கு தராதீர்கள், பங்க்சுவலா இருக்காதிங்க, எதையும் ப்ளான் பண்ணாதிங்க. நவ கிரக பிரபாவமே இருக்காது.

சரி இப்ப ஆன்மீகம் ………

நிறைய பேரு என்ன நினைக்கிறாய்ங்கன்னா கடவுளை கும்புட்டா அவரு அத்தை கொடுப்பாரு இத்தை கொடுப்பாருன்னு தான். ( கருணைக்கடல் எட்செட்ரா)

அப்படி ஏதாச்சும் உங்களுக்கு கிடைச்சிருந்தா ஒன்னு நீங்க ஆன்மீகத்தோட டோர் ஸ்டெப்லயே இருந்திருப்பிங்க. அல்லது உங்க பிரார்த்தனைக்கான பலன் உங்க சொந்த இயற்கைலருந்தே வெளிப்பட்டிருக்கும் ( ஆதாரம்: விவேகானந்தர்).

கடவுளை ஹரிங்கறாய்ங்க. ஹரின்னா என்ன அர்த்தம் பிடுங்கறவன். ( பௌராணிகர்கள் உலக துன்பங்களையெல்லாம் பிடுங்கிறவன்னு இட்டு நிரப்பி சொல்வாய்ங்க அதையெல்லாம் நம்பாதிங்க) கடவுள் பிடுங்கறவருதான். உங்க பேர்,புகழ், உடல் வலிமை, மன வலிமை, புத்தி பலம் எல்லாத்தயும் பிடுங்கறவருதான். ஏன் பிடுங்கறாரு?

மேற்படி ஐட்டங்கல்லாம் இருக்கிற வரை உங்களை நீங்க பார்க்கவே முடியாது. உங்களை நீங்க பார்க்க முடிஞ்சா தெரிஞ்சிக்கிடுவிங்க. உங்களை தவிர இந்த படைப்புல ஆருமில்லேன்னு.

யத்பாவம் தத்பவதின்னிட்டு உங்களையும் தன்னை போல மாத்த பிடுங்கறாரு. அவர் அனாமி – பேரில்லாதவர் அதனால உங்க பேரை நாஸ்தி பண்ணிருவாரு. அவர் அசரீரி – உருவமில்லாதவர் அதனால உங்க உருவத்தை குலைச்சுருவாரு. அவருக்கு அப்பா அம்மா அண்ணன் தம்பி பொஞ்சாதி, புள்ளைக்குட்டி யாருமில்லை. உங்களுக்கும் எதுவும் இல்லாம பண்ணிருவாரு.

இதெல்லாம் பிடுங்கப்பட்ட பிறவு இருக்கிற நீங்க தான் உண்மை . இதெல்லாம் சொம்மா கவரிங்.

“அய்.. என் ஃப்ரெண்டு பத்துவருஷமா சாமி கும்பிடறான் . நல்லாருக்கானே”
“அட எங்க சித்தப்பா 25 வருஷமா கோவிலுக்கு போய் வராம பச்ச தண்ணி கூட குடிக்கமாட்டாரு . நல்லாருக்காரே”ன்னெல்லாம் கிராஸ் பண்ணுவிக.

அவிக ஆன்மீக கோட்டையின் அகழியை கூட தாண்டியிருக்கமாட்டாய்ங்க அதனால தான் ஒரு இழவும் நடக்கலை.

ராமகிருஷ்ணர் விவேகானந்தரை ஒரு இடத்துல கேட்கிறார். ” கடவுள் ஒரு அமிர்தம் நிறைஞ்ச பாத்திரம்னு வை நீ எப்படி சாப்பிடுவே?”

அதுக்கு விவேகானந்தர் சொல்றாரு ” பாத்திரத்தோட உதட்டு மேல சாக்கிரதையா நின்னுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா சுவைப்பேன்” விவேகானந்தர் மாதிரி யோகியே உதட்டு மேல நின்னுன்னு சொல்றாரு.

நாம இந்த உலக வாழ்க்கைல ஆன அநியாயம்,அக்குறும்பு எல்லாம் பண்ணிக்கிட்டு நடக்கிற அதர்மத்தையெல்லாம் சகிச்சிக்கிட்டு பாவ மூட்டைய சுமந்துக்கிட்டு கிடக்கோம் நாம என்னான்னு சொல்லனும்? அய்யய்யோ அந்த பக்கம் கூட திரும்ப மாட்டேம்பான்னுதானே சொல்லனும்.

நீங்க நினைக்கிற மாதிரி கடவுள் கருணைக்கடலெல்லாம் இல்லே. வில்லன் நெம்பர் ஒன். பயங்கர சாடிஸ்ட்.

நீங்க அந்தாள கண்டுக்காத இருக்கிற வரை எல்லாமே உங்க கண்ட் ரோல்ல இருக்கிற மாதிரி ஒரு பிரமையை கொடுத்து வச்சிருப்பாரு. நீங்க அவரை கண்டுக்கனும்ங்கற நேரம் வந்ததும் ( இதை ஃபிக்ஸ் பண்ணதும் நீங்கதான். அப்போ நீங்க ஆன்ம ரூபத்துல இருந்திங்க. கடவுளுக்கு சமமா இருந்திங்க ) எல்லா சர்க்யூட்லயும் புகை வர வச்சிருவாரு. பைத்தியமா அடிப்பாரு.

ஒரு வழியா நீங்க ரூட்டை பிடிச்சு அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வச்சா போதும் மொதல்லஉங்களை கழட்டிவிட எத்தனை வழி இருக்கோ எல்லா வழியையும் பார்ப்பாரு. கோவில்,குளம், தானம்,தர்மம் இப்படி ஏதோ ஒரு ஸ்டாப்ல உங்களை இறக்கி விட்டுருவாரு. நீங்க உங்க டெஸ்டினேஷனை மறந்துட்டு மேற்படி ஐட்டங்க தான் உண்மையான ஆன்மீகம்ங்கற பிரமைல வாழ்க்கையை வீணாக்கிருவிங்க.

ஏன் இப்படி சூ காட்டி விட்டுர்ராருன்னா இந்த பாதையில தொடர்ந்து பயணம் பண்றவனுக்கு மேட்டர் புரிஞ்சு போவுது இந்த வாழ்க்கைங்கற திரைக்கதைக்கு ஆசிரியர் கடவுள் இல்லே. நாமதான். நாம நினைச்சா காட்சிகளை கூட்டலாம் குறைக்கலாம். ஒன் லைனையே மாத்தலாம்.

இது கடவுளுக்கு விருப்பமில்லே போலும். சரிய்யான ஈகோயிஸ்டுப்பா.

( ஆன்மீக பாதையெங்கும் லோட் லோடா ஃபெவிக்கால் கொட்டி வச்சிருக்குங்கோ. காலை வச்சிங்க பச்சக்குனு ஒட்டிக்கும். தாளி ஒரு அடி எடுத்து முன்னே வைக்க முடியாது)

இப்போ என் கேஸையே பாருங்க 1967 முதல் 1984 வரை எனக்குள்ள எந்த வித கேள்வியும் கிடையாது. க்ளாக் வைஸ் லைஃப். 1986ல கூட ஏதோ இந்த செக்ஸ் செல்ஃப் ரெஸ்பெக்டுக்கு பங்கம் விளைவிக்கிறாப்ல இருக்கே இதை ஒரு கை பார்க்கனும்ங்கற எண்ணத்துலதான் சொம்மா வேடிக்கை பார்க்க ஆன்மீகத்துல இறங்கினேன்.

பல்ப் மாட்டிக்கிச்சு. அங்கன இருந்து நாயடி பேயடி கொடுத்து இரும்பு பழுக்க காஞ்சு போச்சு. இன்னம் ஒரே அடிக்கு ஷேப் வந்துருங்கற ஸ்டேஜ்ல 2007 ல சின்ன டர்னிங் பாயிண்ட். அதாவது சூ காட்டி விட்டுர்ரது.

அதுக்கு முந்தி அடுத்த வேளை சோத்துக்கு தவிர வேற எதுக்கும் ஸ்கெச் பண்ணாம சதா சர்வ காலம் அந்த ஆளையே நம்பிகிட்டு அந்தாளையே தியானம் பண்ணிக்கிட்டு நெருப்பு நெருப்பு மாதிரி இருந்தேன்.

என்ன பண்ணாரு தினத்தந்தியை சூ காட்டி டைவர்ட் பண்ணாரு. என்னடா சாக்கு கிடைக்கும்னு தேடி தேடி சாக்கு கிடைச்சதும் நான் அதை உதறித்தள்ளிட்டன். இருந்தாலும் அன்னைக்கு பிடிச்ச சூடு இன்னை வரை ஆறலை. பொருளாதார ரீதியில பெருசா பிரச்சினை இல்லாம ஸ்லோ அண்ட் ஸ்டெடி டெவலப்மென்ட்ஸ்.

சனம் ஏன் இத்தனை மந்தமா இருக்காய்ங்க, பணத்துக்கு ஏன் இத்தனை இம்பார்ட்டன்ஸ் தராய்ங்கன்னு சமீப காலத்துல புரிஞ்சிக்கிட்டேன். பணம் வர வர பல மெல்லிய உணர்வுகள் காணாம போயிருது. பழைய ஞா மந்தப்பட்டு போகுது. மனுஷன் ஒரு கூட்டுக்குள்ள அடங்கிர்ரான்.

பசியா இருக்கிறவன் கண்ணுக்கு இட்லி ஒரு சுத்து பெருசா தெரியறாப்ல பசி தீர்ந்துட்டவன் கண்ணுக்கு அது ஒரு சுத்து சின்னதா, எதிராளியோட பசி சில்லியா தோணும் போல.

நம்முது கடகலக்னம்ங்கறதால பழசை மறக்கறதா இல்லை. கொஞ்சமா முக்கினா ஒட்டு மொத்தமா ஞா வந்துருது.

20 வருஷம் 100 சதம் ஆஸ்திகனா , இறை சக்தியையே நம்பி வாழ்ந்துட்டு கடைசி காலத்துல நாஸ்திகனா மாற விரும்பல்லே. நாம விதைக்கறதுமில்லே அறுக்கறதுமில்லே சேமிக்கிறதுமில்லே.

இது வரை இந்த சப்ஜெக்டுல சனங்க சொல்லி வச்சதெல்லாம் பாதி உண்மைகள் தான். முழு உண்மைய சொன்னா ஜேஜி கோச்சுக்கும்னு சொல்லவே இல்லை பயந்தாகொள்ளிங்க.

நாமதான் தற்கொலைப்படையாச்சே. அதான் போட்டு உடைச்சிக்கிட்டிருக்கோம். உண்மையான ஆன்மீகம் உங்களுக்குள்ள பூக்கனும்னா உங்க உடல்,மன,புத்தி பலங்களால தீர்க்க முடியாத பெரிய பிரச்சினை ஒன்னு வரனும். நீங்க மேற்படி உடல்,மன,புத்தி பலங்களால முழு மூச்சா முட்டி மோதி ஃபெயில் ஆகனும். அப்பத்தான் புது புது கதவுகள் திறக்குது.

அப்படி அந்த கதவுகள் திறந்ததன் விளைவா உங்க லௌகீக வாழ்க்கைல ஒரு சில சவுகரியங்கள் கூடும் அதுகள்ள மதி மயங்கிட்டா திறந்த கதவுகள் படக்குனு மூடிக்கும். இன்னைக்கு நான் எழுதற விஷயங்கள்ள சிலதை பல காலமா சலூன்லயும் டீக்கடையிலும் பல வருஷங்களா சொல்லிக் கிட்டு இருந்திருக்கேன்.இல்லேங்கலை.

ஆனால் இப்போ எழுதிக்கிட்டிருக்கிற பல விஷயங்களோட ஃபார்ம், சாரம், வே ஆஃப் ப்ரசன்டேஷன் எல்லாம் அந்தந்த நொடி ஸ்ட்ரைக் ஆனதுதான்.

ஆன் லைன் ஜோதிட ஆலோசனைக்காக தொடர்பு கொள்றவுகளுக்கு தர்ர பலன்,பரிகாரம் எல்லாமே கடந்த கால சாதனைகளின் பலன். இந்த பலன் எக்ஸாஸ்ட் ஆயிட்டே வந்ததுன்னு வைங்க.. கதை கந்தலாயிரும்.

ஆன் லைன் ஜோதிட ஆலோசனை அறிவிப்பால பணம் வருது இல்லேங்கலை. ஆனா அவிகளுக்கு பலன் அனுப்பறதால என் ஆன்ம சக்தி விரயமாறதை என்னால உணரமுடியுது. இதையெல்லாம் ரீசார்ஜ் பண்ணனும்னா இன்னொரு 20 வருஷம் தேவைப்படுமோ என்னமோ? (அதுக்குத்தேன் இலவச ஆலோசனை ஜோதிட கேள்வி பதில்னு மேனேஜ் பண்ணிக்கிட்டிருக்கேன்)

ஓஷோ என்ன சொல்றாருன்னா சக்தி எங்கருந்து வருதுனு தெரிஞ்சவன் அதை இழக்கறதில்லைங்கறாரு. எங்கன இருந்தோ வருது. அது புரியுது. ஆனால் அம்மா மறைஞ்சிக்கிட்டு குழந்தைய அம்மா எங்கே அம்மா எங்கேங்கறா மாதிரி கண்ணா மூச்சி காட்டுதா அந்த நிமிசத்துல அவா சாபம்(?)லாம் வேலை செய்துருது.

என் அனுபவத்துல இந்த மேட்டர்ல நான் உங்களுக்கு சொல்ல விரும்பறது ஒன்னுதான். நீங்க பார்க்கிற உலகம் வேற . உங்க கண்ணுக்கு தெரியாத இன்னொரு உலகம் இருக்கு. அக உலகம் ,புற உலகம்னு வச்சிக்கலாம்.

புற உலகத்துல நீங்க எதை வளர்ச்சின்னு நினைக்கிறிங்களோ அதெல்லாம் அக உலக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைதான். ஆனால் அக உலக வளர்ச்சி உங்க புற உலக வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு உலக வாழ்க்கைங்கறது பலாப்பழம் மாதிரி. இதை பிளந்து சுளையெடுக்கிறதுக்கு முந்தி ஆன்மீகம்ங்கற விளக்கெண்ணையை பூசிக்கனும். அப்பத்தான் பிசின் ஒட்டாது.

அக உலகுல மட்டுமில்லை , புற உலகுலயும் எல்லாத்தயும் தீர்மானிக்கிறது உங்க எண்ணம் தான்.
அந்த எண்ணம் சுய நலம் கலக்காததா இருந்தா டூ இன் ஒன் கணக்கா தூள் கிளப்பலாம். இல்லேன்னா நாஸ்திதான்.

உதாரணமா பூகம்பம் வராத பிரதேசத்துல வராமயே இருக்கும். (எவனும் அதை கனவுல நினைச்சிருக்கமாட்டான்)

ஒரு ராத்திரி வந்துட்டா அதே ராத்திரி தொடர்ந்து குலுங்கும். ஏன்னா சனம் பேதியாகி இப்ப குலுங்குமோ அஞ்சு நிமிசம் கழிச்சு குலுங்குமோன்னு நினைச்சிட்டே இருக்கிறதுதானோ என்னமோ?

ஆன்மீக முன்னேற்றம்ங்கறது ஏதோ ஃபிக்ஸட் டிப்பாசிட் மாதிரின்னு ஒரு எண்ணமிருக்கு. அது கூட தப்புத்தான். நாம தேனிரும்பு துண்டு மாதிரி இதுல கடவுள் அருள்ங்கற மின்சாரம் பாயற வரைதான் நாம காந்தம். மின்சாரம் பாயலைன்னா ஷெட்டுதான்.

நான் பணம்,பவிசுக்கெல்லாம் எதிரி கிடையாது. அது எஸ்.பி அக்கவுண்ட்லருந்து ட்ரா பண்ண மாதிரி இருந்தா ஓகே. ஆனால் நிறைய பேர் விஷயத்துல அது கரண்ட் அக்கவுண்ட்ல வாங்கின ஓவர் ட்ராஃப்ட் மாதிரி இருக்கிறதுதான் இம்சை.

வெற்றி தீமை செய்யற கிரகங்களோட வேக்குவத்தை அதிகரிக்கும். தோல்வி அதுகளோட வேக்குவத்தை குறைக்கும் . வெற்றி கருமத்தை கூட்டுது. தோல்வி அதை தொலைக்குது. இந்த படைப்புல இருந்து தன்னை வேறா நினைக்கிறவன், சுய நலத்தோட செயல் படறவன் கிரகங்கள் காலடில பந்து. இந்த படைப்புல தன்னை பிரிக்க முடியாத பாகமா நினைக்கிறவன் பொது நலத்தோட செயல்படறவன் சுதந்திரன்.

வாழ்க்கையில எதை இழந்தும் காப்பாத்திக்க வேண்டிய அம்சம் சுதந்திரம். எதுக்காகவும் இழக்கக்கூடாததும் சுதந்திரமே. கடவுளோட கட்டுப்பாட்டுலருந்து விடுபடனும்னா அதுக்கு ஒரே வழி அவரை பர்ஃபெக்டா புரிஞ்சுக்கறதுதான்.

அவர் தன்னை இயற்கையா வெளிப்படுத்தியிருக்காரு. இயற்கைய புரிஞ்சிக்கங்க. இயற்கையோட இயைந்து வாழும் வாழ்வை மேற்கொள்ளுங்க. சூரியனோடவே விழித்தெழவும், சூரியனோடவே கூட்டிலடங்கவும் பழகுங்க.

காற்றுக்கும்,மழைக்கும், வெயிலுக்கும் உங்க உடலை ஒளிக்காதிங்க. உங்க பாடியே ஒரு செல் ஆண்டெனா மாதிரி. அது அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதத்துல நனைய விடுங்க. காய விடுங்க. காத்தாட விடுங்க.

காப்பவன் இழப்பான். இழந்தவன் பெறுவான். மரிப்பவன் பிறப்பான். தேடுபவன் தவற விடுவான். தவற விட்டவன் பிடிப்பான். என்ன.. ஒரு இழவும் புரியலையா? ஹும் நானும் ஏழேழு ஜன்மமா இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்களும் கேட்டுக்கிட்டுதான் இருக்கிங்க இதை அப்போ தவற விட்டுட்டு கடைசியா இன்னொரு தாட்டி கேட்கத்தான் பிறவியெடுத்து வந்திங்க.இருந்தாலும் ருசிக்கலை . நான் என்ன பண்ண?

அதுக்குத்தான் இஸ்லாம் கடவுளை மாகிர் ங்குது. மாகிர்னா சதிகாரர்களுக்கு சதிகாரன்னு அர்த்தமாம். பின்லாடனை கூட பிடிச்சுரலாம். கடவுளை தவற விடவே அதிகம் வாய்ப்புண்டு.

அந்தாளு உங்களுக்கு கடன் பட்டிருந்தாலும் நீங்க நவதுவாரத்துலயும் புகை வந்துக்கிட்டு கடிச்சு குதறிர்ர மூட்ல இருப்பிங்க பாரு அப்பத்தான் இந்த மாதிரி பதிவை கண்ல பட வச்சு தூத்தேரிக்க ஒரு இழவும் புரியலைன்னு ஆல்ட் எஃப் ஃபோரை அழுத்த வச்சிருவாரு.

வீட்டு நிறைய கடவுள் படங்களை மாட்டி வச்சுட்டா ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி கிடைக்கும்னு நினைக்கிறாய்ங்க. ஆனால் அதெல்லாம் ப்ளாக் ஹோல் மாதிரி உங்க சக்தியை எல்லாம் உறிஞ்சுக்கும். அப்பால உங்க கிட்ட இருந்து கிரகிச்சுக்கிட்ட சக்தியை வச்சே உங்கள்ள மிச்சம் மீதி இருக்கிற சக்தியையும் உறிஞ்சும். அப்பத்தான் அசலான உங்களை உங்களுக்கு அடையாளம் தெரியும்.

(சொம்மா ஷோவுக்கு வச்சிருந்தா நோ ப்ராப்ளம் – பை மிஸ்டேக் பக்தியோட வணங்கறது தியானிக்கிறதுன்னு இருந்திங்கனா மட்டும் கதை கந்தல்தான்)

ஃப்ரீயா உடு மாமேங்கறாப்ல நடப்பதை – நடக்க உள்ளதை எதையும் கட்டுப்படுத்த நினைக்காம ஆத்தோட போகனும் எல்லாமே நாம கொடுத்த ப்ளூ ப்ரிண்ட் படித்தான் நடக்குதுனு புரிஞ்சிக்கிடனும். ஜாதகம்,கிரகம்லாம் ரெம்ப சின்ன விஷயம். ஒரு சின்ன புரிதல் உங்களை வெளிய கொண்டு வந்து விட்டுரும்.

Advertisements

24 thoughts on “டாப் சீக்ரெட்ஸ்

  Amal said:
  March 2, 2011 at 7:05 pm

  What you have written here is absolutely correct, I believe!

   S Murugesan said:
   March 3, 2011 at 2:26 am

   அமல் !

   ஐ பிலீவ்ங்கற போது அது நம்பிக்கை சார்ந்ததா போயிருது. நம்பிக்கை மாறக்கூடியது. ” எக்ஸ்பீரியன்ஸ்ட் ” என்று சொல்லும் நிலைக்கு நான் வந்துட்டன்.

   தெனாலி கமல் மாதிரி எதை பார்த்தாலும் பயம் பயமா இருக்கு ( ஐ மீன் கருமம் சுத்திக்குமோ?ங்கற பயம்)

  தனி காட்டு ராஜா said:
  March 3, 2011 at 5:33 am

  //வாக்கு தராதீர்கள், பங்க்சுவலா இருக்காதிங்க, எதையும் ப்ளான் பண்ணாதிங்க. நவ கிரக பிரபாவமே இருக்காது.//

  உண்மை தான் தல …நானும் இதை உணர்ந்து உள்ளேன் …

  //கோவில்,குளம், தானம்,தர்மம் இப்படி ஏதோ ஒரு ஸ்டாப்ல உங்களை இறக்கி விட்டுருவாரு. நீங்க உங்க டெஸ்டினேஷனை மறந்துட்டு மேற்படி ஐட்டங்க தான் உண்மையான ஆன்மீகம்ங்கற பிரமைல வாழ்க்கையை வீணாக்கிருவிங்க.//

  உணமை தல …

  //ஏன் இப்படி சூ காட்டி விட்டுர்ராருன்னா இந்த பாதையில தொடர்ந்து பயணம் பண்றவனுக்கு மேட்டர் புரிஞ்சு போவுது இந்த வாழ்க்கைங்கற திரைக்கதைக்கு ஆசிரியர் கடவுள் இல்லே. நாமதான். நாம நினைச்சா காட்சிகளை கூட்டலாம் குறைக்கலாம். ஒன் லைனையே மாத்தலாம். //

  உன் வாழ்க்கை உன் கையில் 🙂

  //பணம் வர வர பல மெல்லிய உணர்வுகள் காணாம போயிருது. பழைய ஞா மந்தப்பட்டு போகுது. மனுஷன் ஒரு கூட்டுக்குள்ள அடங்கிர்ரான்.//

  பணம் பத்தும் செய்யும் ..பத்தாத பணம் ஒன்னும் செய்யாது …:)

  //பசியா இருக்கிறவன் கண்ணுக்கு இட்லி ஒரு சுத்து பெருசா தெரியறாப்ல பசி தீர்ந்துட்டவன் கண்ணுக்கு அது ஒரு சுத்து சின்னதா, எதிராளியோட பசி சில்லியா தோணும் போல.//

  ம்…மனம் பணத்தை கொண்டு மாறி விடுகிறது …

  //கொஞ்சமா முக்கினா ஒட்டு மொத்தமா ஞா வந்துருது.//

  :)) ரொம்ப முக்கிராதீங்க ..போன ஜென்மத்து ஞா வந்துற போகுது ….

  //புற உலகத்துல நீங்க எதை வளர்ச்சின்னு நினைக்கிறிங்களோ அதெல்லாம் அக உலக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைதான். ஆனால் அக உலக வளர்ச்சி உங்க புற உலக வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும்.//

  //வெற்றி கருமத்தை கூட்டுது. தோல்வி அதை தொலைக்குது. இந்த படைப்புல இருந்து தன்னை வேறா நினைக்கிறவன், சுய நலத்தோட செயல் படறவன் கிரகங்கள் காலடில பந்து. இந்த படைப்புல தன்னை பிரிக்க முடியாத பாகமா நினைக்கிறவன் பொது நலத்தோட செயல்படறவன் சுதந்திரன்.//

  நான் இது வரை படித்த உங்கள் பதிவுகளில் மிக சிறந்த பதிவு இது ….கல்வெட்டில் பொறிக்க பட வேண்டிய சத்தியமான உண்மைகள் 🙂

  //( ஐ மீன் கருமம் சுத்திக்குமோ?ங்கற பயம்)//

  பயமே ஒரு கருமம் தானே :))

   S Murugesan said:
   March 3, 2011 at 7:09 am

   மணி அவர்களே,
   பாராட்டுக்கு நன்றி. எனக்குள்ள இருந்து நான் நகர்ந்துக்கிட்டேன். ஓஷோ சொல்றாப்ல இருத்தலியல் என் மூலம் பேசுது போல. பை தி பை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லைங்கறது பைபிள் வசனம். கில்மாங்கறது ஷுகர் கோட். உள்ளாற இருக்கிற மருந்துதான் நம்ம டார்கெட்.

   கலிகாலமுங்கோ .. நெல்ல மேட்டரை கூட படு கெட்ட மேட்டரா கொடுத்தாத்தேன் மஸ்தா பேருக்கு சேரும்.

   S Murugesan said:
   March 3, 2011 at 7:14 am

   தனிக்காட்டு ராசா அவர்களே,

   நாம எல்லாருமே ஏசு மாதிரி பரம பிதாவின் மைந்தர்கள் தான். அவர் உணர்ந்து அறிவித்தார். ஜீவித்தார். நாம உணரலை. அறிவிக்க முடியலை. பிணமா வாழறோம்.

   நாம எல்லாருமே (பரலோக) ராஜ்ஜியத்தின் வாரிசுகள் தான். ஆனால் உண்மை நிலை மறந்து முக முத்து மாதிரி கிடக்கோம். தகப்பன் மனசென்னவோ கலைஞர் மனசு மாதிரி அடிச்சிக்கிட்டே தான் இருக்கு. தூக்கி விட.

  MANI said:
  March 3, 2011 at 6:37 am

  தலைவரே!! எம்மாம் பெரிய விஷயத்த ரொம்ப ஈசியா போட்டு உடைச்சிட்டீங்க. இவ்வளவு நேரம் நீங்க எழுதிய விஷயங்கள தான் அவாள் கடவுள், புராணம், அது இதுன்னு கதைவிட்டுகிட்டுருந்தா.

  ரொம்ப ஈசியான விஷயம் தான் ம்ம் எத்தனை பேரு கடைபிடிக்கப் போறாங்க.

  அப்புறம் ஒரு வரி நான் படிச்சதிலே ரொம்ப டச் ஆகியிருச்சு.

  //நாம விதைக்கறதுமில்லே அறுக்கறதுமில்லே சேமிக்கிறதுமில்லே.//

  இந்த வரிகள் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

  மிக அருமையான பதிவு. தலைவரே இவ்வளவு விஷயம் இருக்கும் போது அப்புறம் ஏன் கில்மா அது இதுன்னு பதிவ போடறீங்க. என்னை கேட்டால் கில்மால்லாம் சாப்படறது தூங்கறது மாதிரி அதுவும் ஒன்னு அதுகெல்லாம் ரொம்ப அலட்டிக்க கூடாது சரியா.

  மிக்க நன்றி
  சு. மணிகண்டன்.

  Naresh Kumar said:
  March 3, 2011 at 9:24 am

  கருத்து ஒவ்வொன்றும் நெற்றி பொட்டில் அடிப்பது போல் உள்ளது.
  தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

  நன்றி

   S Murugesan said:
   March 3, 2011 at 12:18 pm

   பாஸ்!
   எனக்கு ஏன் நன்றி சொல்றிங்க. நீங்க எதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டா நல்லாருக்கும்னு நினைக்கிறிங்களோ அந்த நினைவு தான் என்னை எழுத வைக்குது.

  sugumarje said:
  March 3, 2011 at 1:45 pm

  சூப்பர்னு நான் சொன்னாத்தானா? அதான் சொல்லிடாங்களே…

  //காப்பவன் இழப்பான். இழந்தவன் பெறுவான். மரிப்பவன் பிறப்பான். தேடுபவன் தவற விடுவான். தவற விட்டவன் பிடிப்பான். என்ன.. ஒரு இழவும் புரியலையா? ஹும் நானும் ஏழேழு ஜன்மமா இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்களும் கேட்டுக்கிட்டுதான் இருக்கிங்க இதை அப்போ தவற விட்டுட்டு கடைசியா இன்னொரு தாட்டி கேட்கத்தான் பிறவியெடுத்து வந்திங்க.இருந்தாலும் ருசிக்கலை . நான் என்ன பண்ண?//

  அருமை, அருமை…

   S Murugesan said:
   March 3, 2011 at 3:37 pm

   பாஸ்!
   இதையெல்லாம் ஏதோ என்னோட டயலாகுனு நினைச்சு என்னை பாராட்டிராதிங்க. இதெல்லாம் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறான் என்பது மாதிரி நித்திய சத்தியங்கள். எனக்கும் மூளை 364 நாள் உங்களை மாதிரி பஜ் னுதான் இருக்கும். நம்முது கடகலக்னம்ங்கறதால படக்குனு பல்பு எரியும்.

   இந்த பதிவுக்கான காப்பிரைட் நம்முது கிடையாதுங்கோ.. நம்ம ஸ்டைல்ல சொன்னா ” அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்”

  vinoth said:
  March 4, 2011 at 5:49 am

  //..இந்த பதிவுக்கான காப்பிரைட் நம்முது கிடையாதுங்கோ.. நம்ம ஸ்டைல்ல சொன்னா ” அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்”..//

  அப்ப நான் ஒரு பிளாக் ஆரம்பித்துஉங்க பிளாகை காப்பி பேஸ்ட் பண்ணி 1 பில்லியன் ஹிட்ஸ் தேத்திரட்டா ?

   S Murugesan said:
   March 4, 2011 at 6:29 am

   தாராளமா. ஆனா நீங்களும் அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம். யார் வேணா காப்பி பேஸ்ட் பண்ணிக்கலாம்னு அறிவிச்சிரனும். ( சேட்டைக்கார புள்ளை)

  vinoth said:
  March 4, 2011 at 6:35 am

  //..எதையெல்லாம் வெளிப்படுத்தினா நான் சாபத்துக்காளாவேனோ, தரித்திரம் என்னை பிடுங்கி தின்னுமோ அற்பாயுசுல செத்து போயிருவனோ அதையெல்லாம் வெளிப்படுத்திர்ரதா முடிவு பண்ணியிருக்கேன்…//

  தல உண்மையை சொல்ரதுக்கும் , வறுமை, அல்பாயுசுக்கும் என்ன சம்பந்தம் ?

  ///..உண்மையான ஆன்மீகம் உங்களுக்குள்ள பூக்கனும்னா உங்க உடல்,மன,புத்தி பலங்களால தீர்க்க முடியாத பெரிய பிரச்சினை ஒன்னு வரனும். நீங்க மேற்படி உடல்,மன,புத்தி பலங்களால முழு மூச்சா முட்டி மோதி ஃபெயில் ஆகனும். அப்பத்தான் புது புது கதவுகள் திறக்குது. ..//
  புத்தர் நிர்வாணமடைந்தார். அரச குல வாரிசா பிறந்தார். அவருக்கு என்ன தீர்க்க முடியாத பிரச்சனை வந்த்தது…?எப்படி அடைஞ்சார்? கொஞ்சம் பார்த்து சொல்லுங்க…தல

   S Murugesan said:
   March 4, 2011 at 7:00 am

   வினோத்!
   கடவுள் அமெரிக்கா மாதிரி. அவரு பண்ணாத அக்குறும்பே கிடையாது. நம்ம புத்தியையெல்லாம் ஆணவத்திரை கொண்டு மறைச்சு நாறடிச்சிக்கினு கீறாரு. நல்லதெல்லாம் கெட்டதா தெரியுது. கெட்டதெல்லாம் நல்லதா தெரியுது. தியாகய்யர் “தெர தீயக ராதா”ன்னு கெஞ்சி கூத்தாடினாலும் கடே….சில போனா போவுதுன்னு தான் விலக்கினாரு.

   அமெரிக்காவோட அழிச்சாட்டியத்தை வெளிப்படுத்தினா நமக்கும் விக்கிலீக்ஸ் கதிதான். இங்கன உள்ளவுக ஆயிரமாயிரம் ஜென்மமெடுத்து தெரிஞ்சிக்க வேண்டிய மேட்டரை அசால்ட்டா போட்டு உடைச்சா “அந்த ஆளுக்கு” பொறுக்காது.

   உடனே ஜெ மாதிரி நமக்கு கட்டம் கட்டிருவாரு. (அப்ல்பாயுசு- வறுமைல்லாம் ஜுஜுபி) அவரை மாதிரி ஒரு ஹிப்பாக்ரட் வேற கிடையாது.

   ஞானம் பெற /வர ரெண்டு மார்கம் இருக்கிறதை என் அனுபவத்துல குன்சா தெரிஞ்சிக்கிட்டன். பிரச்சினைங்கறது ஒரு மார்கம்.

   இன்னொரு மார்கம் என்னடான்னா உடல்,மனம்,புத்தி எல்லாம் ஆனந்தத்துல மிதக்கனும். அப்படி மிதக்கும்போது உள்ளாற சோகத்தால அழுத்தப்பட்டு கிடக்கிற ஆத்மா மொதந்து மேல வரும்.

   ஆத்மா -பரமாத்மா ரெண்டு இழவும் ஒன்னுதேன். இதை அனுபவப்பூர்வமா தெரிஞ்சிக்கிடறதுதான் ஞானம்.

   இன்னா வாத்யாரே வவுறு ரொம்புச்சா

  vinoth said:
  March 4, 2011 at 8:03 am

  //..இன்னொரு மார்கம் என்னடான்னா உடல்,மனம்,புத்தி எல்லாம் ஆனந்தத்துல மிதக்கனும். அப்படி மிதக்கும்போது உள்ளாற சோகத்தால அழுத்தப்பட்டு கிடக்கிற ஆத்மா மொதந்து மேல வரும்.//

  ஆனந்தத்துல மிதக்க என்ன பண்ணனும் ? பிரச்சனையை விட இது சுலபம .. இருக்கு இல்ல அதான் கேட்டேன்..

   S Murugesan said:
   March 4, 2011 at 10:31 am

   வினோத் சார்,
   இது கலைஞரிடம் கேட்க வேண்டிய கேள்வி. ( ஆசை தோசை அப்பளம் வடை)

  vinoth said:
  March 4, 2011 at 12:13 pm

  இது வரை இந்த சப்ஜெக்டுல சனங்க சொல்லி வச்சதெல்லாம் பாதி உண்மைகள் தான். முழு உண்மைய சொன்னா ஜேஜி கோச்சுக்கும்னு சொல்லவே இல்லை பயந்தாகொள்ளிங்க.

  அது யார் ஜேஜி

   S Murugesan said:
   March 4, 2011 at 1:00 pm

   மம்மு, மூச்சா, கக்கால்லாம் தெரியாதா? அந்த கேட்டகிரி வொக்காபிலரி இது. ஜேஜின்னா கடவுளுங்கோ

  P.A.Kumar said:
  March 7, 2011 at 6:01 pm

  தலிவரியி, பல்புநா இன்னா. அடிக்கடி வாங்கினா அல்லாம் சரியா பூடுமா. நீ அடிக்கிரதுல போதை(அதாம்பா ஈகோ) பூடும்போல கீது.

   S Murugesan said:
   March 7, 2011 at 6:36 pm

   போலீஸ் காரவுக கிட்ட வசம்மா சிக்கினா ( ஃபோன் போட கவுன்சிலர் ஆரும் தெரியாம இருந்தா) ஒரு சைக்கிள் ட்யூப்ல மணலை கொட்டிக்கினு வாங்கு வாங்குனு வாங்குவாய்ங்களாம் . தப்பித்தவறி விதை மேல பட்டுட்டா அது பல்பு கணக்கா வீங்கிருமாம். இதைத்தான் பல்புங்கறாய்ங்க.

   ஈகோ தான் உண்மைய பார்க்கவோ,உணரவோ,பேசவோ, புரிஞ்சிக்கவோ முடியாம பண்ணுது. அதை தூக்கி கடாசு வாத்யாரே.

   ஒலகமே புச்சா தெரியும். இந்த ஒலகத்துல நம்மை மாதிரி தக்கை ,மொக்கை எவனும் கடியாது – ஏதோ ஒரு சக்தி பரிதாபப்பட்டு விட்டு வச்சிருக்கு – கரையேத்தி விட்டுக்கிட்டிருக்குன்னு ஸ்ட்ரைக் ஆகும்.

   அதான் ஞானமுங்கோ

  kandhan said:
  April 6, 2011 at 9:02 am

  அனுபவ அத்வைதம். புட்டு புட்டு (குழாய் இல்லை) வச்சிருக்கீங்க.

   S Murugesan said:
   April 6, 2011 at 9:19 am

   வாங்க கந்தன்,
   நாரத பக்தி சூத்திரத்துல நாரதர் சொல்றாராம். எத்தீனி மன்சங்க கீறாய்ங்களோ அத்தீனி டைப் ஆஃப் பக்தி ஆன்மீகம் இருக்காம்.

   உங்க டைப் என்னனு ஒரு பதிவா போடலாம்ல..

  kandhan said:
  April 8, 2011 at 8:51 am

  நானும் நீங்க இருக்ற குட்டை தான்.

   kandhan said:
   April 8, 2011 at 11:59 am

   அதாவது நானும் உங்க எண்ண ஓட்டதொட ஒத்து போறேன்னு சொல்ல வந்தேன். வேற மாதிரி வந்திரிச்சு. கொசிகாதீங்க. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s