என் சாளரம் வழியே வானம்_ Sugumarje

Posted on

அன்பர்களே, ஜோதிட வல்லுனர்களே, ஆர்வலர்களே உங்களோடு நானும் கலந்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வாய்ப்புக்களுக்காக ஏங்கும் நிலையில், தானகவே என்னையும் ஆசிரியராக ஆக்கிய சித்தூர் முருகேசன் அவர்களுக்கு வணக்கமும், நன்றியும்.

சுகுமார்ஜியான நான் கற்றுக்கொள்ளத்துடிக்கும் ஒரு மாணவன். யாருமே அந்த நிலையில் தான், வாழ்நாள் முழுதும் வாழ்க்கையை பயணிக்க வேண்டிவரும். நான் கற்றுக்கொண்டது என்ன என்பது என் வாழ்க்கைக்குப்பிறகே தெரியவரும், அதன் செய்திகள், உங்களுக்கு மட்டுமேயானது.

பத்திலிருக்கும் கேதுவும், பதினொன்றில் இருக்கும் புதனும் எனக்கு ஜோதிட அறிவியலை தூண்டினர். வீட்டிலிருந்த, தாள்களை மடக்கினாலே ஒடிந்துவிடும் பல தலைப்பிலான நூல்கள் தூபம் இட்டன. ஆர்வமும், அதற்கான கல்வியும் கிடைத்தது. ஆனால் தொழில் முறை ஜோதிடனாக மாறும் எண்ணம் எனக்கில்லை… ஏன்? காரணம்… இரண்டாமிடம்… 🙂 யாராவது கேட்டுக்கொண்டால் மட்டுமே அவர்களுக்கான ஜோதிடம் எழுதுவதும் ( கணிணி உதவியின்றியும் கூட), ஆலோசனைகள் வழங்குவதும் ஆகும். பரிசோதனை செய்ததில் கிட்டதட்ட 60 சதவிகித பலன் ஒத்துப்போவதாக அறியவருகிறேன். ஒவியம், கணிணி வரைகலை, வலைமனை துறையை தொழிலாக கொண்டமையால் சில நேரம் அதிலேயே மூழ்கிவிடுவதும் நடக்கும். அதனாலேயே அவ்வப்பொழுது காணாமல் போவதும் 🙂 சில நேரம் என்னால் சரியாக ஜோதிட பலன் சொல்ல இயலாது என்ற தடுமாற்றமும் எனக்கு வரும்… ஆக எனக்கெல்லாம் தெரியும் என்று சொல்லுவதற்கில்லை.

திரு. சித்தூர் முருகேசனோடு கலக்கும் ஒவ்வொரு சாட்டிலும் கண்டிப்பாக சில சோதிட செய்திகள், கருத்து பரிமாற்றங்கள் இடம் பெறும். இப்பொழுது கூட என் ஜாதகம் அவர் கையிலும், அவர் ஜாதகம் என் கையிலும் இருக்கிறது… அட… உண்மைதாங்க 🙂 முருகேசன் என்றாலும் சுகுமாரன் என்றாலும் அவர் தமிழ் கடவுள் முருகனைத்தான் குறிக்கிறார் என்பது பொது ஒற்றுமை 🙂

வானியலில் ஒரு விளக்கம் காண்போம்.

நம் வானத்தில், நமக்கு அமையும் ஜோதிட அமைப்பு சக்கரம். காண்க… விருச்சிகத்துக்கும், தனுசுக்கும் இடையிலே இன்னொரு ராசி அமைப்பு இருப்பதையும் காணலாம். (ophiuchus) இந்திய புராதன ஜோதிட அறிவியலில் இந்த பதிமூன்றாவதான இல்லம் ஜாதக கணிதத்தில் இல்லை. அந்த கணக்குக்கள் எல்லாம் இன்று வரை தெளிவாகவே இருப்பதால் நாமும் அதை அப்படியே வைத்துக்கொள்ளலாம். புதிதாக சேர்த்துக்கொள்ள நினைப்பவர்கள் குறித்து எனக்கொன்றும் யோசனையில்லை.

பதிவின் தலைப்பு “என் சாளரம் வழியே வானம்” என்பதை நீண்ட யோசனைக்குப்பிறகு முடிவுசெய்தேன். ஆம் நான் இன்னமும் கதவைத்திறந்து வானம் பார்க்கவில்லை. இந்த தலைப்பு எத்தனை பகுதிகள் தரும் என்பதெல்லாம் சொல்லுவதற்கில்லை. எழுதும் ஒவ்வொரு பதிவும் ஒரு பகுதிதான்… இதை நான் எழுதத்துவங்கும் பொழுது துலாராசி கிழக்கு அடிவானில் முடிந்து விருச்சிகராசி எழும்பியிருக்கிறது.

இயேசு “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை” என்று சொன்னது போலவே கிரகங்களும் நம்மைவிட்டு விலகுவதுமில்லை. ஒரு உயிரின் தனிப்பட்ட ஜாதக அமைப்பு எப்பொழுது உருவாகிறது தெரியுமா?

கவனியுங்கள்…
கிட்டதட்ட நான்கு நிலைகள்… 1) தலைமட்டுமே வெளிவந்த நேரம் 2) தனித்த உயிராக ஆனால் தொப்புள் கொடியுடன் 3) தொப்புள் கொடி வெட்டப்பட்ட நிலை… முற்றிலும் தனித்த உயிர் 4) சுவாசமும், அழுகையும் முதன் முதலாக…

இந்த நிலைகள் எல்லாமே முழுதுமாக, இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள் நிகழும் சாத்தியம் உண்டு. இந்த நிமிடங்களில் எது பிறந்த நேரம்?

அதிகமான நபர்கள் நிலை ஒன்றையே தெரிவு செய்கின்றனர். என் இன்னொரு நண்பரோ அழுகையை குறிக்கிறார். அவர் சொல்வது “இங்கே தானய்யா… மூச்சும், அழுகையும் ஆரம்பமாகிறது”

ஆக நிலை ஒன்றும், நிலை நான்கும் சரியா? இல்லை ஏதாவது ஒன்றா?

என் பரிந்துரை என்னவென்றால்… நிலை மூன்று… ஏன்? அங்கேதான் ஒரு மனித உயிரின் தனி ஆவர்த்தனம் ஆரம்பிக்கிறது.

ஆனால் குழந்தை பிறப்பின் சரியான நேரத்தை அறிவிப்பதில் அருகிலிருந்த செவிலியரையோ, மருத்துவரையோ பொறுத்தது என்றாலும் நிமிடக்கணக்கு தடுமாற்றம் தருவதில்லை. எனக்குத்தெரிந்தவகையில் நிமிடக்கணக்குகளில் தடாலடியாக ராசிமாற்றமோ, நட்சத்திர மாற்றமோ, லக்கின மாற்றமோ எல்லா நேரமும் ஏற்படுவதில்லை… ஆனால் சில விதிவிலக்கு. நட்சத்திர பாதம் மாறலாம், அதன் வழியே ராசியும் மாறலாம். லக்கனம் அப்படியே இருந்தாலும், அதன் பாதமும் மாறலாம். ஆனால் ஒரு வயதிற்குப்பிறகே குழந்தைக்கு ஜாதகம் எழுதும் பழக்கமிருப்பதால், அப்பொதைக்கு ஒரு குறிப்போ, நாள்காட்டியின் அன்றைய தாளோ பதிவாக இருக்கிறது.

குழந்தையின் ஜாதக அமைப்பின்படி கோள்களின் பாதிப்பில் பல, குறிப்பிட்ட வயதுவரை தன் பெற்றோரையே சேருகிறது. கருணை காட்டுகிறார்களோ?

நல்ல ஜாதகம் அமையவேண்டும் என்பதற்காக, நேரம் பார்த்து வயிற்றில் கத்திவைக்கும் வேலையும் அங்கங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது 😦 இதன் பாதிப்பை இன்னொரு பதிவாக பார்க்கலாம்.

வழிவழியாக நமக்கெல்லாம் ஜோதிட அறிவியலை தந்த முன்னோர்களை வாழ்த்தி வணங்கி… அடுத்த பதிவிலும் பேசுவோம்.

Advertisements

13 thoughts on “என் சாளரம் வழியே வானம்_ Sugumarje

  vinoth said:
  February 28, 2011 at 7:00 am

  உண்மையான ஜாதகம் கரு உருவாகும்போது உருவாய்டுது…
  பிறக்கும்போது தல வந்ததா இல்லையாகிறது எல்லாம் எவ்வளவு செல்லும்னு தெரியல..

  இப்படி வெச்சுகலாம்…

  பிறக்கும்போது … தலைக்குபதில்.. கால் வெளியில் வரும் குழந்தைகளும் உண்டு…
  அப்போ எப்படி கணிப்பீங்க… கால் , இடுப்பு, தோள், கடைசியா தலை,.

  அப்போ. என்ன செய்வீங்க…

  இது ரேர் கேஸ்னு சொல்வீங்க்…

  ஆனா.

  சிசேரியன் வீடியோ பாருங்க… குழந்தைகாலை பிடிச்சு வயத்துல இருந்து தூக்குவாங்க..
  சீசர்ல பிறந்த குழந்தகளூக்கு ஜாதகம் எப்படி செல்லும் ?

  இன்னொரு விஷயம்.. யோனி வாய்க்கு வெளியே குழந்தை வந்தவுடன் தான் கிரக நிலை
  குழந்தையை பாதிக்குமா? பூமிக்கும் மிக பக்கத்தில் ? ( 80000 கிலோமீட்டர்.) இருப்பது சந்திரன், சுரியன் 150 கோடி கிலோ மீட்டர். … இவ்வளவு தூரம் பாய்ந்து.விண்வெளி .காற்று .
  மண்டலம் கட்டிடங்கள் எல்லாவற்றையும் ஊடுறுவி வரும் கிரக கதிர் வீச்சு கருப்பையில் / யோனியில் இருக்கும் குழந்தையை பாதிக்காதா?

  போட்டொ பிலிம் மூடி இருக்கும் வரை எக்ஸ்போஸ் ஆகது ..

  ஆனால் இப்படி பட்ட பலம் வாய்ந்த கதிர் வீச்சு கரூப்பை தாண்டி உள்ளே போகாதா?

  கரு உருவாகும் நேரம் அதை சுமக்கும் பெண்ணுக்கு கூட தெரியாது… எனவே வேறு வழியில்லாம் இந்த பிறப்பு நேரத்தை பயன் படுத்துரோம்…

   sugumarje said:
   February 28, 2011 at 8:55 am

   வினோத் அவர்களே… இந்த விளக்கம் அடுத்த பதில் கிடைக்கும் 🙂 தங்கள் கொஞ்சம் Advance ஆக, ஆரம்பித்து விட்டீர்கள்… வருகைக்கும், மறு மொழிக்கும் வாழ்த்துக்கள்.

    S Murugesan said:
    February 28, 2011 at 9:08 am

    சுகுமார்ஜீ அவர்களே,
    ஒரு காலத்துல கர்ப தான முகூர்த்தம் – அப்பாறம் தலை தெரிஞ்ச காலம் -அப்பால டாக்டர் தலைகீழா தொங்க விட்டு புட்டத்துல அறைய அது அலறின காலம்னு மாறிக்கிட்டே வந்துருச்சு.

    வினோத் போட்ட கேள்விக்கணைகளை பாருங்க. விட்டா பீஷ்மர் கணக்கா படுக்கப்போட்டுருவாரு போல இருக்கு.

    என் வ்யூ என்னன்னா இத்தீனி லூப் ஹோல்ஸ் இருந்தும்.. இன்னைக்கும் 90 முதல் 30 சதவீதம் வரை ஒர்க் அவுட் ஆகுதுன்னா அசலான சப்ஜெட்க்ட் எவ்ள காட்டமா இருந்திருக்கும்ங்கறதுதான்.

    அது கடலுங்கோ.. நம்ம கிட்ட ஏதோ ஒரு டெஸ்ட் ட்யூப் அளவுக்கு கீது. அதுல தர்கம், மனிதம்னு கெமிக்கல்ஸ் மிக்ஸ் பண்ணி ஓட்டிக்கிட்டிருக்கோம்.

    அவிக கிரகங்களோடயே பயணம் செய்தவுக. நாம அவிக பயணக்கதைய படிக்கிறோம். அவிக சொல்ற இடத்துல இருந்த நதி வற்றிப்போயிருக்கலாம்.

    பாலை சோலையாகியிருக்கலாம். அதில்லை முக்கியம். அவிக சாகச பயணம்தேன் முக்கியம்

    sugumarje said:
    February 28, 2011 at 9:34 am

    உண்மைதான் அய்யா… வினோத் அவர்களோட கேள்விகளை நானும் எதிர்பார்த்திருந்தேன் என்பதே உண்மை… பிறந்த நேரத்தின் குழப்பங்கள் தான் எத்தனை? எத்தனை? விளக்கம் தர அடுத்த பதிவில் தயாராகிறேன்… ங்கப்பா, பலமாத்தான்யா மோதுறாங்க 🙂
    அந்தக்கால ரிஷிகளின் தூசுக்கு கூட சமமில்லை நான்… நீங்கள் சொன்னாப்ல அது கடல், நம்ம கிட்ட டெஸ்ட் டுயூப் இல்லை…இங்க் பில்லர் தான் இருக்கு…
    முயற்சிக்கலாம் அய்யா!

  Rajasundararajan said:
  February 28, 2011 at 9:46 am

  வராஹமிகிரரைச் சம்பந்தப் படுத்தி ஒரு கதை இருக்கிறது:

  அரசன் தன் மனைவிகளில் ஒருத்தி குழந்தை பெறும் போது கவனித்து, பிள்ளைக்கு ஜாதகம் கணிக்கும்படி நாட்டில் அன்று பேர்பெற்றுத் திகழ்ந்த ஜோஷ்யர்களைப் பணித்தானாம். (1) தலை வெளியே வந்த, (2) உடல் வெளிவந்த, (3) கொப்பூழ்க்கொடி அறுக்கப்பட்ட நேரத்துக்கெல்லாம் ஓரொரு எலுமிசம்பழம் பேறுகால அறைக்குள் இருந்து கதவுக்குத் தாழே கூடி, தாதியரால் உருட்டிவிடப்பட்டதாம்.

  பிறந்தது ஆண்குழந்தை. ‘அவன் ஆஹா ஓஹோன்னு இருப்பான்’ என்றே எல்லா ஜோஷ்யர்களும் கணித்து இருந்தார்களாம். ஆனால் வராஹமிகிரர் மட்டும், ‘பையன் 12 வயதில் பாம்பு கடித்துச் செத்துப் போய்விடுவான்’ என்று கணித்துச் சொன்னாராம்.

  அரசன் சினம்கொண்டு வராஹமிகிரரை நாடுகடத்தினானாம். இருந்தாலும் பையனுக்குப் பன்னிரண்டாம் வயது தொடங்கியபோது, அவனைப் பாம்புகளே இல்லாத ஒரு தீவில் கொண்டுபோய் வைத்துப் பாதுகாத்தானாம். ஒரு கழுகால் வான்வழியே வவ்விச் செல்லப்பட்டதொரு பாம்பு பிடிநழுவி அத் தீவில் விழுந்து இளவரசனைக் கடிக்க நேர்ந்ததில் அவன் செத்துவிட்டானாம். (இக் கதையின் ஒரு மாற்று வடிவம், பல இந்தியக் கதைகளாலும் ஆன, ‘1001 இரவுகள்’ நூலில் உண்டு).

  அரசன் தன் புத்திர சோகத்துக்கு இடையிலும் வராஹமிகிரரைத் தேடிக் கொணர்ந்து தன் அரசவை ஜோதிடராய் ஆக்கினானாம். “அன்று நீர் லக்னம் குறித்ததின் அடிப்படை எது?” என்று வினவியதற்கு வராஹமிகிரர் சொன்னாராம், “குழந்தை அழுகுரல் கேட்ட நிமித்தத்தை லக்னமாகக் குறித்தேன். அழாத குழந்தை அப்போதே இறந்துபோய்விடும், அதற்கு ஜாதகம் குறித்து என்ன பயன்?”

  என் (ஒருக்கால்) மனைவி ஒரு MD (OG). அவளுக்கு, குழந்தைகளின் பிறந்த நேரம் பதிய, இக் கதையினைக் கூறினேன். இதில் உள்ள அறிவியல் ஏற்புடையதாக இன்றும் பின்பற்றி வருகிறாள்

  vinoth said:
  February 28, 2011 at 10:02 am

  //…“அன்று நீர் லக்னம் குறித்ததின் அடிப்படை எது?” என்று வினவியதற்கு வராஹமிகிரர் சொன்னாராம், “குழந்தை அழுகுரல் கேட்ட நிமித்தத்தை லக்னமாகக் குறித்தேன். அழாத குழந்தை அப்போதே இறந்துபோய்விடும், அதற்கு ஜாதகம் குறித்து என்ன பயன்?”…//

  நான் படித்த அளவில்… அவர்கள் எலுமிச்சம்பழம் விழுந்த நேரத்தை கொண்டு கணித்தனர்.
  நான் எழுமிச்சம்பழம் போடப்பட்ட நேரத்தை வைத்து கணித்தேன் என்றாராம்.

  இதைவைத்து பார்த்தா…
  சுகுமார்ஜீ … தியரிக்கு கொஞ்சம் பிரச்சனை தான்.

  //….எனக்குத்தெரிந்தவகையில் நிமிடக்கணக்குகளில் தடாலடியாக ராசிமாற்றமோ, நட்சத்திர மாற்றமோ, லக்கின மாற்றமோ எல்லா நேரமும் ஏற்படுவதில்லை…..//

  மொத்த பலனுமே மாறுதே..?

  இதை வைத்து பார்த்தால்…

  vinoth said:
  February 28, 2011 at 10:42 am
  PERUMALSHIVAN.S said:
  February 28, 2011 at 12:15 pm

  ahaa !!! namma website soodu pidichidichi eni kalakkalthan .

  ennaipporuththavarai oru uyirukkaana pirappu nheram kooda atharkku vithikkappatta thalaiyezhuththuppadithaan kurikkappadugirathu !
  athu thavaraaga kurikkappattirunthaal kooda athuthaan antha uyirukkaana vithi (jathagam ).
  ………….kaadhalshivan .5.45pm

  Mani said:
  February 28, 2011 at 5:40 pm

  வணக்கம் சுகுமார்ஜீ, நான் உங்களை கணிணி வரைகலை நிபுணர் என்றல்லவா நினைத்திருந்தேன். தாங்களும் ஜோதிடர் என்பது எனக்கு புதிய செய்தி. மிக்க நன்றி.

  தாங்கள் எழுதியிருப்பதிலிருந்து ஒரு குழந்தை அழ ஆரம்பித்த நேரம்தான் மிகச் சரியான லக்னத்தை குறிக்க எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து அப்போது தான் வெளியுலக கிரக கதிர்வீச்சு காற்று குழந்தையின் உள்ளே செல்ல ஆரம்பிக்கிறது.

  அது சரி சரியான நேரம் எல்லாம் குறித்தாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம் இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால் எது சரியான பஞ்சாங்கம் என்பது தான் என்கிறேன் நான்.

  ஏனெனில் வாக்கிய பஞ்சாங்கப்படி தான் நாம் முற்காலம் முதல் பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் கொண்டாடி வருகிறோம் எனவே வாக்கியம் தான் சரி என ஒரு குரூப் சொல்லிக் கொண்டிருக்க இல்லை திருக்கணிதம் தான் சரி என இன்னோரு கூட்டம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. சரி கணிணியில் கணிக்கலாம் என்றால் அது ஒரு கட்டம் காட்டுகிறது இதில் எது சரி என்று தலையை பிய்த்து கொள்ளாத குறைதான்.

  பஞ்சாங்கம் குறித்து உங்கள் அனுபவம் என்ன சுகுமார்ஜீ நீங்கள் எந்த முறையில் கணித்து அனுபவ ரீதியாக சரியான பலனை அறிந்தீர்கள் என்று கூறுங்கள்.

  தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
  சு. மணிகண்டன்

   sugumarje said:
   March 1, 2011 at 1:00 pm

   வருகைக்கு நன்றி மணி அவர்களே… ஒவ்வோரு பதிவாகவே இதைக்காணலாம்… காத்திருங்கள்

  krishnamoorthy said:
  March 4, 2011 at 8:26 am

  வணக்கம் வாத்தியரே ,
  மன்னிக்கவும் சுகுமார் சார் ,
  பதிவின்போதாவது தங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறதே .நன்றி .
  நட்பைக்கூட தூக்கிவீசிவிட்டு முழு நேர அர்ப்பணிப்பை கண்ணினிக்கு தந்துவிட்டீர்கள் .நன்றி .அதுதானே கேள்விகேட்க்காது .
  “என் சாளரம் வழியே வானம்”(கதவு வழியே காணாமல் போனவர்கள் இருக்கும்போது சாரளம் வழியே உங்கள் வானம் விரியட்டும் )
  ஆரம்பம் மிக அழகான ஆபத்து .நிறைய கேள்விகளை உங்கள் எழுத்து நடையே விதைக்கும் என நம்புகிறான் (கமல் பாணியில் சொன்னால் வேகமாக போவது மோசமான கேள்வியாலர்களை உருவாக்கிவிடும் எச்சரிக்கை .
  என்றென்றும் அன்புடன் ,
  சுகி .

  s naina mohammed said:
  March 11, 2011 at 9:25 am

  rahu kethu gilma 2 eppo balance ezhuthuveenga. parthu parthu emandhu poren.

   S Murugesan said:
   March 11, 2011 at 9:58 am

   வாங்க நைனா முகமது!
   எழுதினா போச்சு. இன்னைக்கே ஒரு ஷெட்யூல் ப்ரிப்பேர் பண்றேன். கலக்கிருவம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s