ஜெ -கலைஞர் – ஒரு ஜோதிட ஒப்பீடு

Posted on

கி.பி.2000 ஆம் வருடம் .அப்ப நான் வாணியம்பாடில இருக்கேன்.தெய்வீக மருத்துவம் இதழுக்கு கோஸ்ட் ரைட்டர் கம் ட்ரான்ஸ்லேட்டர். பேரென்னவோ பெத்த பேரு சப் எடிட்டர். ஆனா மேட்டர் இதான்.

அங்கன டாக்டர் அக்பர் கவுசருக்கு ஆரோ கொடுத்த அன்பளித்த ஜோசிய புஸ்தவம் ஒன்னு கண்ல பட்டுது. மல்ட்டி கலர் ரேப்பர் எல்லாம் போட்டு தூளா இருந்தது . அதுல சோசியர் அல்லார் ஜாதகத்தையும் போட்டு அடுத்த முதல்வர் யாருன்னு அனலைஸ் பண்ணி கலைஞர் தான்னு சொல்லியிருந்தாரு. பாவம் ஆசிரியரோட ஜாதகம் சரியில்லை போல.

அவரு கொடுத்திருந்த அதே ஜாதகத்தை நம்ம ஸ்டைல்ல அனலைஸ் பண்ணி ” நீங்கதான் அடுத்த முதல்வர்”னுட்டு அம்மாவுக்கு கூரியர்ல லெட்டர் போட்டேன். அவிகளும் ராமர் கோவில்ல சுண்டல் மாதிரி ஒரு தேங்ஸ் கார்டு அனுப்பியிருந்தாய்ங்க. இந்த மேட்டரை எல்லாம் ஏற்கெனவே நம்ம நிர்வாண உண்மைகள்ள பதிவா போட்டாச்சுங்கோ. அதை படிக்கணும்னா இங்கே அழுத்துங்க.

அப்பாறம் இந்த வாரம் போட்ட “ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி” பதிவை படிச்சுட்டு மஸ்தா பேரு நான் என்னவோ வி.காந்த் கட்சி கூட்டு சேரட்டும்னு காத்திருந்து பதிவு போட்டாப்ல நினைச்சிருப்பாய்ங்க. ஆக்சுவலா அது பழம் பதிவு. லேசா ரீரைட் பண்ணி போட்டேன்.

உண்மைய சொன்னா மொத கணிப்புக்கப்பாறம் ஜெயாம்மாவோட ஜாதகம் – பர்த் டீட்டெய்ல்ஸ் எதுவும் நம்ம கிட்ட (கிடையாது.இன்னைய தேதிவரை ) கட்டுச் சோத்தை பிரிச்சு பரிமாறின கணக்கா அப்பப்போ அதே மேட்டரை கொஞ்சம் அப்டேட் பண்ணி பதிவு போட்டுக்கிட்டு வந்தேன்.

இன்னைக்கு நம்ம விஜய் சார் ஜெயாவோட உண்மையான ஜாதகம்னு பீதிய கிளப்பினாரு. அலறியடிச்சு போய் பார்த்தா அங்கன அம்மாவோட பிறந்த நாளா: 1946.05.09 ஐ குறிப்பிட்டிருக்காய்ங்க. மேலும்

//அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயிர்திசை சூரியனைக்கொண்டு கணிக்கப்படவேண்டும்.//னு புது விதியெல்லாம் சொல்லியிருந்தாய்ங்க.ஏன்னா சூரியன் ராஜகிரகம்னு ஒரு கணக்கு.

காலம் மாறிப்போச்சுங்கண்ணா .. இன்னைக்கு எவனாச்சும் தலைவனாகனும் , முதல்வராகனும்னா சனியோட பலம் தான் தேவை.ஏன்னா அவர்தான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு காரகர். முக்கியமா ராகு கேது நல்லாருக்கனும்.அப்பத்தான் சாலிடா விழக்கூடிய மைனாரிட்டிகளோட ஓட்டு கிடைக்கும்.

அதனால நாம அம்பேல். ஒரு பார்ட்டி ஜெ ஜாதகமே டுபுக்கு. கலைஞர் ஜாதகம் தூள் ஜாதகம்னு கமெண்ட்ல சொல்லியிருக்கவே ஒரு தாட்டி ரெஃபர் பண்ணிரலாம்னு தான் இந்தபதிவு.

சரி ரெம்பவே மொக்கை போட்டாச்சு ஜெ -கலைஞர் – ஒரு ஜோதிட ஒப்பீட்டுக்கு போயிருவமா?

லக்னாதிபதி:
கலைஞர்: இவரோட லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்றிருக்கிறார்தான். இல்லேங்கலை.ஆனால் ரெண்டேகால் நாளைக்கு ராசி மாறிருவாரே .மாசத்துல பாதி நாள் ஓகே (வளர்பிறை நாட்கள்ள) மீதி நாள்? தேர்தல் எப்ப வருமோ? வளர்பிறையோ? தேய் பிறையோ?

மேலும் இது பாதகாதிபதியான சுக்கிரனோட ராசிங்கோ. வாக்கு ஸ்தானாதிபதியான சூரியனோட சேர்ந்தது ஒன்னுதான் பலம்.

ஜெயலலிதா:இவருக்கு புதன் லக்னாதிபதி. இவர் 9 ல உட்கார்ந்தது சூப்பர் யோகம். தைரிய ஸ்தானாதிபதியான சூரியனோட சேர்ந்தது தான் ஆப்பு . ( ஓவர் கான்ஃபிடென்ட் – ஈகோ)

தோஷங்கள்:
கலைஞர்:
தனிமைப்படுத்திவிடக்கூடிய , தன் வலி, துணை வலி எல்லாத்தையும் வெட்டிவிடக்கூடிய பாப கத்திரி யோகம் இருக்கு ( சர்ப்பதோஷம்) 2/8ல ராகு கேது உள்ளதால இவர் பேச்சே இவருக்கு ஆப்பாயிரும்.

செவ் போய் ஏழுல உட்கார்ந்தாரு. அதுவும் உச்சம். சிலர் கடகத்துக்கு செவ் எங்கன இருந்தாலும் தோஷமில்லைன்னு வாதம் பண்ணுவாய்ங்க. ஆனால் கலைஞருக்கு மைனஸே பல காலம் இரு தாரம் , இன்னைக்கு ஸ்பெக்ட் ரம் தானே. மேலும் இது தோழமை கட்சிகளே எதிரிக்கட்சிகளா வேலை பார்க்கக்கூடிய அமைப்பை தருது.

ஜெயலலிதா:
இவிக ஜாதகத்துல கேது அஞ்சுல உட்கார்ந்து புத்திய குழப்பி விடறது. சந்தேக புத்தி . நம்பவேண்டியவுகளை சந்தேகப்பட்டுர்ரது, சந்தேகப்படவேண்டியவுகளை நம்பிர்ரது மாதிரி தீயபலனை தர்ராரு

செவ் 3 ல் உட்கார்ந்ததால எந்த தோஷமுமில்லை

6,8,12 பாவங்கள்:
இவை காலியாயிருக்கனும். அல்லது இந்த பாவாதிபதிகளே ஒருத்தர் வீட்ல இன்னொருத்தர் உட்காரனும்.அப்பத்தான் நல்லது.

கலைஞர்:
குரு ஆறுக்கதிபதி.இவர் அஞ்சுல உட்கார்ந்தார். அஞ்சுன்னா பிள்ளைகள். அந்த காலத்துல ஸ்டாலின் இந்த காலத்துல அழகிரியால ஆப்புத்தானே

சனி எட்டுக்கதிபதி. இவர் நாலாமிடத்துல உட்கார்ந்தாரு. எட்டுன்னா மரணம். நாலுன்னா வீடு. கழகத்தை வீடா நினைச்சாரு அண்ணா, வீட்டையே கழகமா நினைக்கிறாரு கலைஞரு. இதானே ஆப்பு. கடக லக்னம் ராசிச்சக்கரத்துல 4 ஆவது ராசிங்கறதால இவிகளுக்கு வீட்டுலதான் -வீட்டாளுங்களாலத்தான் வெடியே.

புதன் விரயாதிபதி.இவர் விரயத்துல போய் பலம்மா உட்கார்ந்தாரு. “தூ…………..ங்க கூடாதில்லை”

ஜெயலலிதா:
இவிக ஜாதகத்துல 6க்கு அதிபதி செவ் 3 ல உட்கார்ந்தாரு. செவ் மீன்ஸ் சகோதர காரகன். 3 மீன்ஸ் சகோதர ஸ்தானம். உடன் பிறவா சகோதிரினால தானே இத்தனை நாளும் ரெஸ்ட்ல இருந்தாய்ங்க. மேலும் இவிக லக்னமான மிதுனம் ராசிச்சக்கரத்துல 3 ஆவது ராசி. இதனால இவிக லைஃப்ல நல்லது கெட்டது எல்லாமே சகோதர ,சகோதிரிகளாலயே நடக்கனும்.

எட்டுக்கதிபதி சனி வாக்குல போய் உட்கார்ந்தாரு ( சனி நீச கிரகம்ங்கறதால திடீர்னு குழாய் சண்டையில பேசறாப்ல பேச ஆரம்பிச்சுர்ராய்ங்க. அங்கன மொக்கையா போயிருது)

விரயாதிபதி சுக்கிரன் 10ல உச்சம். பத்துங்கறது பதவிய காட்டுது. விரயாதிபதி அதுலயும் சுக்கிரன் இங்கன உச்சம் பெற்றதால ஆடம்பரம்,வாகன அணி வகுப்பு , படாடோப கல்யாணம்லாம் சேர்ந்து பதவிய தாரவாந்து விரயமா போக வச்சுருச்சு.

கலைஞர்:
நல்லதை செய்யவேண்டிய கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு . இதுல சூரியன் 11ல கரீட்டா உட்கார்ந்தாரு, சந்திரனும் ஓகே தான். ஆனால் இவரை நம்பி கோதாவுல இறங்கறது உப்புக்குதிரைய நம்பி கடல்ல இறங்கின மாதிரிங்கோ.அடுத்தது செவ்வாய் 7ல உச்சமானாரு. கூட்டு வச்சாதான் வேலைக்காகும். ஆனா கூட்டுவச்ச கட்சியே எதிரியாகி ஆப்பும் வச்சிருமே. அடுத்து குரு .இவருக்கு ரெண்டுவிதமான ஆதிபத்யங்கள் உள்ளதால 50:50 தான் ஒர்க் அவுட் ஆகும். அதுவும் அஞ்சுல இருக்கிறதால ஜாதகரோட புத்தி/புத்திரர்களாலயே நல்லதும் நடக்கும். பொல்லாப்பும் வரும்.

ஜெயலலிதா:
நல்லதை செய்யவேண்டிய கிரகங்கள் புதன்,சனி,சுக்கிரன். புதன் சூரியனோட சேர்ந்து ஆய் பையனாயிட்டாரு. ( ஓவர் கான்ஃபிடென்டாக்கி வலுச்சண்டைக்கு போக வைக்கிறாரு) சனி வாக்குல நின்னு வாக்காலயே சீப்பாக்கிர்ராரு. (இப்பக்கூட பார்த்துத்தானே படிக்கிறாய்ங்க) மிச்சமிருக்கிறது சுக்கிரன். இவர் உச்சமானது நல்லதுதேன்.ஆனால் ஏற்கெனவே சொன்ன மாதிரி படக்குனு லக்சரிக்கு திருப்பி விட்டு ஆப்பு வச்சிர்ராரு.

தசை:
கலைஞர்:
இப்ப கலைஞருக்கு கேது தசை .இவர் எட்டுல இருக்காரு.

ஜெயலலிதா:
இப்ப ராகு தசை இவர் 11ல இருக்காரு.

கோச்சாரம்;

கலைஞர்:
ரிஷபத்துக்கு அஞ்சுல சனி. சோத்துக்கில்லாதவுகளோட சொத்து சீப்பா சேரலாம் ( அடங்கொய்யால ஸ்பெக்ட்ரம்லாம் ப்ரூவ் ஆகாதா? கோவிந்தாவா?) ஆனால் அவர் அஞ்சுல இருக்கிறதால 30 வருசத்துக்கு முந்தின காலத்துல நடந்த அவமானம் இப்பமும் நடக்கும். கேது , ராகு மே 16 ஆம் தேதி 1-7 க்கு வரப்போறாய்ங்க. இது 3 மாசம் முன்னாடியே வேலை செய்யனும். காங்கிரஸு ஆப்பு வைக்கிறது நிச்சயம்டி!
குரு மே8 வரை 11 ல் அதற்கு மேல் விரயம். (ஆட்சி கோவிந்தா) சனி டிசம்பர் 12க்கு 6 க்கு வரார். இது 6 மாசம் முன்னாடி வேலை செய்யனும். அதாவது ஜூன் 12 முதலே. 6ல சனி வந்தா எதிராளிக்கு பேதியாகனும். இதை எதிர்கட்சி தலைவரா ரெம்ப நல்லா செய்வாரு தலைவரு.

ஜெயலலிதா:
சிம்மத்துக்கு 2 ல சனி. பேசக்கூடாததை பேசி கோர்ட், வழக்கு,விவகாரம் வரலாம் (ஓட்டும் மஸ்தா வரும்லே) ராகு – கேது 6-12க்கு வராய்ங்க. போன ஒன்னரை வருசம் 5-11 ல இருந்ததோட ஒப்பிட்டா தூள். இது 3 மாசம் முன்னாடியே வேலை செய்யனும்.மே8 வரை குரு 8 ல , அதுக்கப்பாறம் 9க்குவரார். (சின்னதா விபத்து நடக்கலாம் தட்ஸால் -அனுதாப ஓட்டு வரும்ல) இது 2 மாசம் முந்தி வேலை செய்யனும்

அம்மாவுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான். தப்பு செய்யாதிங்கனு சொல்லமாட்டேன். அரசியல்ல அது அசாத்தியம். பழைய தப்புகளை மீண்டும் பண்ணாதிங்க. (புலி தடை எட்செட்ரா – தமிழகமே கொதிச்சுக்கிடக்கு -உங்க ஸ்டைல்ல அந்த மக்களுக்கு – நம்ம தொப்புள் கொடி சொந்தங்களுக்கு எதுனா செய்ங்க. புதுசா எதுனா தப்பு பண்ணுங்க. அப்படியே ஜெயேந்திர சரஸ்வதி மேட்டரை கொஞ்சம் தூசு தட்டுங்க.

Advertisements

14 thoughts on “ஜெ -கலைஞர் – ஒரு ஜோதிட ஒப்பீடு

  தனி காட்டு ராஜா said:
  February 28, 2011 at 4:37 am

  அப்படியே விஜய காந்த் ஜாதகத்த அலசி சொல்லுங்க தல

   S Murugesan said:
   February 28, 2011 at 4:43 am

   செய்துட்டா போச்சு. காசா பணமா? வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

  Anbarasu said:
  February 28, 2011 at 5:24 am

  Also make a detailed post about Rajinikant. Tell whether he will enter politics or give voices like earlier, or just acting.

  Anbarasu

   S Murugesan said:
   February 28, 2011 at 5:27 am

   ரஜினி காந்தா? அது ஒரு உருப்படாத ஜாதகம்.. சரி அது ஏன் உருப்படாத போயிருச்சுன்னாச்சும் சனம் தெரிஞ்சிக்கிட்டமே ..போட்டாபோச்சு

  vinoth said:
  February 28, 2011 at 5:37 am

  கலைஞர், செயலலிதா ரொண்டு பேருக்கும் இந்த இலவச சோதிட ஆலோசனை கொடுக்கிறீங்க..
  சரி…

  உங்க கிளையன்ட்டுக்கும் இதே போல் கிரக நிலை, யோகம், தோஷம், கோட்சாரம் எல்லாதையும் பார்த்து சொல்வீங்களா?

   S Murugesan said:
   February 28, 2011 at 5:55 am

   நீங்க இலவச சோதிட ஆலோசனை பத்தி கேக்கறிங்கனு நினைக்கிறேன்.

   எல்லாத்தயும் விரிவா தர ஆசைதான் பாஸ்! நேரம் இருந்தா செய்யறதுண்டு. இல்லின்னா சுருக்கமா பதில்.

  vinoth said:
  February 28, 2011 at 5:40 am

  என்னா தல… ரஜினி 1000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து இருக்கார்னு சொல்றாங்க.. அவர் ஜாதகத்தை உருப்படாத ஜாதகம்னு சொல்றிங்க…

   S Murugesan said:
   February 28, 2011 at 5:50 am

   எட்டி பழுத்தென்ன ….வாழ்ந்தென்னனு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?

   அவிக புத்ரிகா ரத்தினம் பண்ண கடனுக்கு ஜப்தி வாரெண்ட் வந்த கதை தெரியுமா?

   (இவர் கிட்டே பைசா இருந்தென்னா புண்ணியம்?)

   பாப்பாவுக்கு மண்டோதரின்னு பேரை வச்சு படக்குனு மாத்திட்ட கதை தெரீமா?

   வேணாம் பாஸ்! வ.எரிச்சலை கிளப்பாதிங்க

  vinoth said:
  February 28, 2011 at 6:47 am

  இலவச ஆலோசனை இல்லை , கட்டண அலோசனை பற்றி தான் கேட்டேன் தல.

   S Murugesan said:
   February 28, 2011 at 9:03 am

   கட்டண ஆலோசனையா ? அய்யோ அய்யோ..
   ( வடிவேலு பாணியில் படிக்கவும்) நான் எந்த அளவுக்கு விரிவா எழுதி நாக்கு தள்ளியிருந்தா மார்ச் 7 வரை ஹவுஸ்ஃபுல்னு போர்டு வச்சிருப்பேன்.

   நமக்கு அரை வேலை பிடிக்காது பாஸ்! நோண்டி நுங்கெடுத்துருவம் இல்லை

  Suresh Ramamoorthy said:
  February 28, 2011 at 10:37 am

  Rahu and Kethu comes to 4-10 for Jaya not 6-12. thx

  YOGA.S said:
  February 28, 2011 at 6:52 pm

  கலக்கிட்டீங்க!இனக்கு ஒரு டவுட்டு.மெஜாரிட்டி கெடைக்குமா?இல்ல வேற ஆராச்சும் புட்டுக்கிட்டு(அங்கேயிருந்து)வந்து “அம்மா” ஆட்சி அமைப்பாங்களா?மத்தது,ஈழத் தமிழங்களுக்கெல்லாம் ஒண்ணுமே பண்ண வேண்டியதில்ல,வாய மூடிக்கிட்டிருந்தாலே கோடி புண்ணியம்!(அம்மா அப்பப்பொ பிளேட்ட திருப்பி போடுறதால ஒரு ஈழத் தமிழனா சொல்லுறேன்!அம்புட்டுத்தேன்:)

   S Murugesan said:
   February 28, 2011 at 8:29 pm

   அய்யா,
   என் கணக்குப்படி அம்மாவுக்கு ராகு தசை சந்திர புக்தி. சந்திர சம்பந்த தசா புக்தில இதான் நடக்கும்னு சொல்ல முடியாது. “எது”வேணம்னா நடக்கலாம்.

   உங்களுக்கு அம்மாவோட சைக்காலஜி புரியலைனு நினைக்கிறேன். கண்ணால வீடுன்னா மாப்ளை, இழவு வீடுன்னா பிணங்கற பழமொழி தெரியுமில்லை.

   அவிக ப்ளேட்ட திருப்பி போட்டதுக்கெல்லாம் காரணம் அவிக முக்கியத்துவம் குறைஞ்சு போனதாலதான். அவரை மட்டுமே நம்பினா தூள் கிளப்புவாய்ங்க.

   தாத்தா மாதிரி நம்ப வச்சு கழுத்தறுக்கிற பார்ட்டி இல்லை.

  YOGA.S said:
  March 1, 2011 at 7:13 am

  ///தாத்தா மாதிரி நம்ப வச்சு கழுத்தறுக்கிற பார்ட்டி இல்லை.///கடேசில சொன்னீங்களே பாஸ்,கரீக்டு!நம்ப வச்சு”கழுத்தறுக்க” மாட்டாங்க! தன்னம்பிக்கங்கிறது நெறயவே அவுக கிட்ட இருக்கு தான்!அதுலயும் “நெனச்சத” சாதிக்கிறது!கேக்கவே வேணாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s