பெண்ணுக்கு "அந்த" இடம் எதை காட்டுகிறது

Posted on

பெண்ணுக்கு “அந்த” இடம் எதை காட்டுகிறதுங்கற தலைப்பை பார்த்ததுமே உங்க மைண்ட்ல என்னென்னவோ வந்து போயிருக்குமே.

அஸ்கு புஸ்கு! பெண்ணோட ஜாதகத்துல எட்டாமிடம் அவள் மாங்கல்யத்தை காட்டுதா அ அவளோட ஆயுளை காட்டுதாங்கற கேள்வியை தம்பி மணி கண்டன் எழுப்பியிருந்தாரு. அதற்கான பதிலாத்தான் இந்த பதிவு

பெயர்: சு.மணிகண்டன்
( இவர் கச்சா முச்சான்னு கேள்வி மழையே பொழிஞ்சிருக்காரு. அதனால ஹி ஹி தவணையில் பதில்)
வணக்கம் திரு. சித்தூர் முருகேசன் அவர்களே நான் தவறாமல் தங்கள் தளத்தினை
படிக்கும் வழக்கம் உடையவன்.

தங்களது ஜோதிட கட்டுரைகள் மிகவும் எளிமையாக விளையாட்டாக சொல்வது போல
இருந்தாலும் கருத்தாழம் மிக்கவை என்பதை என்னைப் போன்ற ஜோதிடத்தை
தொடர்ந்து படித்து, ஆய்வு செய்து வருகின்றவர்கள் நன்கு உணர்ந்தே உள்ளோம்.

தங்களது தளத்தில் உள்ள கேள்வி பதில் பகுதியை படித்தவுடன் எனக்கிருக்கும்
சில ஐயங்களை தங்களுக்கு எழுதி தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதில் எழுத வேண்டுகிறேன். தங்கள்
பதிவில் விளக்கினாலும் சம்மதமே.

வினா 1. (அ)
ஜோதிடத்தில் பொதுவாக ஆயுள் ஸ்தானமாக குறிப்பிடும் 8-மிடம் பெண்கள்
ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானமாக குறிப்பிடப்படுகிறது அதாவது கணவரது
ஆயுளைக் குறிக்கிறது. இங்கு தீய கிரகங்கள் வலுப்பெற்றால் அவள்
விதவையாவாள் என்பது ஜோதிட விதி அல்லவா.

பெண்களின் ஆயுள் பலத்தை நிர்ணயிக்கும் ஸ்தானமாக 8-ம்மிடத்தை நாம்
கணக்கில் எடுத்துக் கொள்வதா அல்லது கணவரது ஆயுள் பலத்தை காண எடுத்துக்
கொள்வதா என்றொரு ஐயம் எனக்கு ஏற்படுகிறது தயவு செய்து விளக்கவும்.

பதில்:
ஜோதிட விதிகள் தீர்மானிக்கப்பட்ட காலத்தை மனசுல வச்சு ரோசிங்க. அந்த காலத்துல 100% மேல் ஷேவனிஸ்ட் சொசைட்டி. பெண்ணுக்கு கணவனை விட்டா வேற நாதி இல்லை. புருசன் தான் கதி. புருசன் போய் சேர்ந்துட்டா இவ ஸ்க்ராப். இப்படி ஒரு நிலையில மேற்படி விதி ஏற்பட்டிருக்கும். இன்னைக்கு நிலைமை ஓரளவாச்சும் மாறியிருக்கு.

ஆஃபீஸ் கோயர்னு வைங்க இந்த பலன் மாறலாம். ( அதாவது இவிக மாங்கல்யம் – ஐ மீன் இவிக வாழ்வு – கணவனோட ஆயுளோட முடிச்சு போடப்பட்டிருப்பது- அவன் செத்தா இவள் லைஃப் முடிஞ்சு போறது)

அட ..அவிக அப்பா சவுண்ட் பார்ட்டி மகள் பேர்ல ஒரு காலனியே எழுதி வச்சிருக்காருனு வைங்க. இது கூட வேணா புருசன் கவர்ன்மென்ட் சர்வெண்ட் அவன் செத்தா பல்க்கா பெனிஃபிட்ஸ் வரும்னு வைங்க அப்ப புருசனோட ஆயுள் முடிஞ்சு போனா இவ வாழ்க்கை முடிஞ்சுருமா? முடியாது.

அவன் இருந்த காலத்தை விட இறந்த காலத்துல பெட்டராவே ப்ளான் பண்ணி வாழலாமே. புரட்சிகரமா இந்த கருத்தை முன் வச்சாலும் நம்மாளுங்களை ( ஜோதிட விதிகளை நிர்ணயித்தவர்களை) லோ எஸ்டிமேட் பண்றதுக்கில்லை.

ஒரு ஃப்ரெண்டோட 15 நாள் வெளியூர் போய் சுத்திட்டு வர்ரிங்கனு வைங்க. அவனும் நீங்களும் ஒன்னா ஒரே பஸ்ல பயணம் செஞ்சு ஒரே லாட்ஜுல ஒரே ரூம்ல ஒரே பெட்ல படுக்கறிங்க. ஒரே டீக்கடையில தண்ணி சாப்டு , டீ சாப்டு, ஒரே ஓட்டல்ல டிஃபன் சாப்டு ,ஒரே மெஸ்ல லஞ்ச் சாப்பிடறிங்கனு வைங்க.

அப்ப ஒரு கட்டத்துல ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல ஒரே விதமான உணர்வுகள் ஏற்பட ஆரம்பிக்கும் ( அட மூச்சா,கக்காலருந்து ஆரம்பிங்களேன்) .அப்படியிருக்க இரண்டற கலக்கும் கணவன் மனைவியரின் கலப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்னு எப்படி ஜட்ஜ் பண்ணமுடியும்.

அதுலயும் ஜாதக பொருத்தம் , நாடி பொருத்தம் அது இதுன்னு பார்த்து பார்த்து சேர்த்து வச்ச சோடியா இருந்தா ?

60 ஆம் கல்யாண சோடிகளை பார்த்திங்கன்னா ஒரு ஐடியா வரும். தாத்தா ரெம்ப சாஃப்டா மாறியிருப்பார்.பாட்டிக்கு லேசா தாடி கூட வந்திருக்கும். ஆண் பெண்ணா ,பெண் ஆணா மாற அத்தனை வருட தாம்பத்யம் தேவைப்படுது. உடலுறவுங்கறது கொடுக்கறதோ ,எடுக்கறதோ மட்டுமில்லிங்கோ . கொடுக்கல் வாங்கல் ரெண்டுமே நடக்குது.

இந்த கோணத்துல ரோசிச்சா அவளோட மாங்கல்யம் இவனோட ஆயுள் ரெண்டுமே பின்னிப்பிணைஞ்சிருக்கலாம். ஆனால் பல சோடிகளை பார்க்கறச்ச எலி -பூனை கணக்கா இருப்பாய்ங்க.ஒருத்தர் மீதான அடுத்தவரது உள்ளார்ந்த எதிர்ப்பே கூட இந்த ஃபார்முலாவை /விதியை உடைச்சுரலாம்னு தோணுது.

வேணம்னா இப்படி வச்சுக்கலாம் . வள்ளுவர் சொன்னாப்ல வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்ங்கற ஸ்டைல்ல வாழறவிக,

ஈருடல் ஓருயிரா வாழறவிக மேட்டர்ல ஒர்க் அவுட் ஆகலாம். புருசன் ஆன் ட்யூட்டி செத்தா என்ன வரும் .. லீவுல செத்தா என்ன வரும்னு கேட்கிற பதிவிரதைகள் மேட்டர்ல, பொஞ்சாதி பிள்ளை பெத்து உடம்பு நாரா கிழிஞ்சு ஹால்ல படுத்திருக்க நடையில வேலைக்காரிய படுக்கப்போடற பிக்காலிங்க மேட்டர்ல ஒர்க் ஆகாம போயிரலாம்.

சக பதிவன்பர்களே! வாசக தெய்வங்களே!
கீழ் காணும் கேள்விகளுக்கு தங்களுக்கோ தங்கள் குடும்ப ஜோதிடருக்கோ விடை தெரிந்தால் நீங்களும் பதிலளிக்கலாம். (ஜோதிடரின் பதில் என்றால் அவரது பெயர் விலாசம்,ஃபோன் நெம்பர் அனைத்துக்கும் அனுமதி உண்டு)

(8-ம்மிடம் 7-மிடமான கணவர் ஸ்தானத்திற்கு 2-மிடமாக வருவதால் மாரக
ஸ்தானமாகிறது என்று கொண்டால் அவ்வாறு ஆண்கள் ஜாதக்திலும் 8-மிடத்தை
மனைவியின் மாரக ஸ்தானமாக எடுத்துக் கொண்டு பலன் கூறலாமா என விளக்கவும்)

வினா 2.
ஒரு ஜாதக்ததை பார்த்து அது இறந்தவருடைய ஜாதகம் என்று உடனே கண்டறிய எதாவது
விதிமுறைகள் உள்ளதா அல்லது தசா புத்தி கணக்கிட்டு தான் அவர் உயிருடன்
இல்லை என்று கூற வேண்டுமா? ஆயுளை கணிக்க பல விதிமுறைகள் உள்ளதால் இவ்வாறு
உடனே சரியாக கண்டறிந்து பின்னர் பலன்களை கூற ஜோதிடத்தில் வழிகள் உண்டா
என்ற ஐயம் எழுகிறது. விளக்க வேண்டுகிறேன்.

வினா 3
ஜாதகத்தை பார்த்து ஆண் அல்லது பெண் ஜாதகம் என்று சொல்ல விதிமுறைகள் என்ன?
லக்னத்தில் பெண்கிரகங்கள் வலுத்தாலும் பெண்களது குணாதிசயத்தை உடைய ஆணாக
இருந்தால் எப்படி கண்டறிவது விளக்க முடியுமா. மற்ற விதிகள் எதுவும்
சரியாக வரவில்லை.

வினா 4.
ஜாதகத்தை பார்த்து பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் எண்ணிக்கையை சொல்லும்
விதிமுறைகள் பல சரியாக வருவதில்லை. தங்கள் அனுபவத்தில் ஏதாவது
வழிமுறைகளை கண்டறிந்துள்ளீர்களா என விளக்கவும்.

வினா 5.
ஒரு கிரகம் தனது தசா புத்தியில் எந்த வரிசைப்படி பலன்களை தரும்.

1. தான் நின்ற வீட்டின் ஆதிபத்ய பலன்
2. அக்கிரகத்தின் சொந்த வீட்டிற்குரிய ஆதிபத்ய பலன்
3. அக்கிரகத்தின் காரக பலன்
4. அக்கிரகம் தன்னோடு இணைந்த கிரகத்தின் பலன்
5. அக்கிரகம் பார்த்த வீட்டின் பலன்
6. அக்கிரகத்தை பார்த்த கிரகத்தின் பலன்
7. அக்கிரகம் நின்ற நட்சத்திர அதிபன் நின்ற வீட்டின் பலன்

மேலே கொடுத்துள்ள வரிசையில் திருத்தம் அல்லது ஏதேனும் விடுபட்டு
இருந்தால் சரியாக தர வேண்டுகிறேன்.

வினா 6.
ராகு கேதுக்களின் தசா புக்தி பலன்களை எவ்வாறு நிர்ணயம் செய்வது ராகு
தசாவில் கேது புக்தி என்று வருகிறது இருவரும் தனியாக பாவங்களில் நின்று
தங்களது நட்சத்திரங்களில் மாறி அமர்ந்து உள்ளனர் சரியாக பலன் கூற
முடியவில்லை விளக்க முடியுமா.

வினா 7.
ஒரு கிரகத்தின் தசாவின் சுயபுக்தியில் பலனளிக்காது என்று ஜோதிடத்தில்
கூறப்பட்டுள்ளதே பலருக்கு சுயபுக்தி காலம் வருட கணக்கில் வரும் அந்த
காலகட்டங்களில் ஏற்படும் பலன்களை எவ்வாறு நிர்ணயம் செய்வது.

Advertisements

12 thoughts on “பெண்ணுக்கு "அந்த" இடம் எதை காட்டுகிறது

  MANI said:
  February 27, 2011 at 5:44 pm

  மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். தங்கள் பதிவின் மூலமாக நான் உணர்ந்து கொண்டது என்னவென்றால்

  ஆணும் பெண்ணும் ஈருடல் ஓருயிர் என வாழ்ந்த தம்பதிகளுக்கு ஒருவருக்கு மரணம் என்றாலும் அவர்கள் இருவரும் இறந்தது போலதான் எனவே பெண்களுக்கு 8-ம் இடம் கெட்டால் இருவரது வாழ்வும் பாழ்தான் என்ற முடிவிற்கு வருகிறேன். ஆனால் தற்கால வாழ்க்கை முறைகளுக்கு அவ்வாறு இல்லை

  ஜோதிட விதிகள் அக்கால முனிவர்களால் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு எழுதப்பெற்றிருக்கின்றன. நாம் தான் இக்கால பழக்கவழக்கங்களுக்கு ஏற்றவாறு நமது சமயோசித அறிவால் அவற்றை பொருந்துமாறு விளக்க வேண்டும் என்பது என் முடிவு.

  தங்களது மிகுந்த வேலைபளுகளுக்கு இடையில் எனது கேள்விகளுக்கு பதிலலிக்க முன்வந்தமைக்கு மிக்க நன்றி.

  தங்கள் பதிவில் வெளியிட்டு இருக்கும் எனது மற்ற கேள்விகளுக்கும் யாரேனும் பதில் அளிக்க முன்வந்தாலும் அல்லது தாங்களே பதிலலிப்பதாக இருந்தாலும் கட்டாயம் எனக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் அவற்றை நான் தவற விடக்கூடாது என்பதற்காக கேட்கிறேன்.

  மிக்க நன்றியுடன்
  சு. மணிகண்டன்

  Vijay said:
  February 27, 2011 at 6:02 pm

  தலை வணக்கம்,

  ஜெயலலிதா உண்மையான ஜாதகம்

  விஜய்

  http://sribagavathijodhidam.blogspot.com/2010/12/blog-post_29.html

   S Murugesan said:
   February 27, 2011 at 6:18 pm

   தகவலுக்கு நன்றி. உடனே பார்க்கிறேன்

   S Murugesan said:
   February 27, 2011 at 6:21 pm

   //அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயிர்திசை சூரியனைக்கொண்டு கணிக்கப்படவேண்டும்.இவர் ஜாதகத்தில் சூரியன்,பரணி 4ல் உள்ளார்.இது சுக்கிரதிசையாக கொள்ளவேண்டும். //

   புதுமை! ஆனால் இது குறித்த என் கருத்துக்கள் வேறு. அவற்றை இன்றைய என் பதிவில் தெரிவிக்கிறேன்.

  S Murugesan said:
  February 27, 2011 at 8:55 pm

  மறுமொழிக்கும் தங்கள் புரிதலுக்கும் நன்றி மணி கண்டன் அவர்களே

  Rajasundararajan said:
  February 28, 2011 at 5:31 am

  ஐயா,
  மன்னிக்கவும். ஜாதகத்தைப் பார்த்து, ஜாதகர் ஆணா பெண்ணா என்று அறிவது எப்படி என்னும் வினாவுக்கு என் விடையில் குழப்பம் நேர்ந்துவிட்டது. அது ராசி மாறி ராசி ஆண், பெண் அல்ல; ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பாதம் மாறிப் பாதம் ஆண், பெண் ஆகும். முதற் பாதம் மூன்றாம் பாதத்தில் லக்னம் அமைய அது ஆண்; இரண்டாம் நான்காம் பாதங்களில் அமைய அது பெண்.

  தொடுப்பு விட்டதாலும் வயதாகிப் போனதாலும் வந்த கோளாறு இது. மறுபடியும் மன்னிப்புக் கோருகிறேன்.

   S Murugesan said:
   February 28, 2011 at 5:52 am

   அய்யா,
   நாமெல்லாம் ஆஃப்டர் ஆல் மனுசங்க தானே.. தவறு ஏற்படறது சகஜம். ஒத்துக்கிட்டு திருத்தறிங்களே அதான் பெரிய மனுஷ தனம்.

   ( நான் கூட இப்படித்தான் வி.காந்த் கட்சியோட ஜாதகத்துல சின்னதா கோட்டை விட்டேன். ஒரு தம்பி எடுத்து சொல்ல படக்குனு திருத்திக்கிட்டன்.

   ஃப்ரீயா உடுங்க பாஸ்

  PERUMALSHIVAN.S said:
  February 28, 2011 at 5:42 am

  பெண்களின் ஆயுள் பலத்தை நிர்ணயிக்கும் ஸ்தானமாக 8-ம்மிடத்தை நாம்
  கணக்கில் எடுத்துக் கொள்வதா அல்லது கணவரது ஆயுள் பலத்தை காண எடுத்துக்
  கொள்வதா என்றொரு ஐயம் எனக்கு ஏற்படுகிறது தயவு செய்து விளக்கவும்.????

  ethuthaane avar khetta khelvi
  neenga avaloda maangalyam avanoda aayul -nu pathil thanthullir rendume purusonoda aayul thaane kurikkirathu

  “இந்த கோணத்துல ரோசிச்சா அவளோட மாங்கல்யம் இவனோட ஆயுள் ரெண்டுமே பின்னிப்பிணைஞ்சிருக்கலாம். ”

  pennin jaathagathil 8 aam veedu avalin aayulaa allathu aval purusanin aayulaa ?

  ungal pathivilirunthu anyonyamaay vaazhbavargalukku erandum onrodondru kalanthathu endru purinthukkonden .

  nandri !

  //பெண்களின் ஆயுள் பலத்தை நிர்ணயிக்கும் ஸ்தானமாக 8-ம்மிடத்தை நாம்
  கணக்கில் எடுத்துக் கொள்வதா அல்லது கணவரது ஆயுள் பலத்தை காண எடுத்துக்
  கொள்வதா என்றொரு ஐயம் எனக்கு ஏற்படுகிறது தயவு செய்து விளக்கவும்.????//

  இந்த கேள்விக்கான பதிலை தந்தமாதிரியே தெரியலையே பாஸ்…

  சுற்றி வளைத்து தத்துவார்த்தமாக பதில் சொல்லியிருக்கிறீர்கள் சரி .. ஒரு சோதிடம் பயிலும் மாணவர்களாக நாங்கள் இதை எப்படி அனுகுவது ? எனவே
  இதற்கு சோதிட ரீதியாக பதில் தருமாறு வேண்டுகிறேன். நன்றி …

  அப்புறம் நாங்க கேட்ட பதிவை இன்னும் போடவே இல்லையே பாஸ் ..

   S Murugesan said:
   April 26, 2011 at 5:14 am

   ஜா.ராமன்!
   பெண் ஹவுஸ் வைஃப் / கணவனையே சார்ந்து வாழவேண்டியவர் என்றால் 8 ஆமிடம் ஆயுள்+மாங்கல்யத்தை காட்டும்.

   பெண் ஆஃபீஸ் கோயர் – தனித்து இயங்கும் தன்மை படைததவர் என்றால் 8 ஆமிடமவர் ஆயுளை மட்டுமே காட்டும் (என்று மறுமொழிக்கான பதிலில் சொன்னதா ஞா – அ அடுத்த பதிவிலா? – அந்த பதில் இன்னம் க்ளியரா இருந்தது – இது அவசர அடி)

  piyes said:
  May 17, 2013 at 9:33 am

  ஐய்யா! வணக்கம். இந்த பதிவு நிறையவே குழப்பம் உண்டு பண்ணிவிட்டது. 8ம் இடம் பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்கிற நிலைப்பாடு இன்றைய சூழ்நிலையிலும் பலருக்கும் பொருந்தி வருகிறது. சூழ்நிலை மாற்றத்தால் பெண்ணுக்கு மறுவாழ்வு (முறையானதோ/முறையற்றதோ) கிடைக்கும் வாய்ப்பு இருப்பின் அது ஜாதக அமைப்பில் தெரிய வருமல்லவா?. ஜாதகம் என்பது உண்மையெனில் இன்றைய நாகரீகம் அதை மாற்றும் சக்தி உடையதா?

   sambargaadu responded:
   May 17, 2013 at 4:30 pm

   வாங்க ஐயா !
   கணவனே உலகம் – கணவனே வாழ்க்கை -கணவனன்றி வேறு வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் வாழும் பெண்களுக்கு மட்டுமே எட்டு என்பது மாங்கல்ய ஸ்தானமாக ஒர்க் அவுட் ஆகும். அவ்வாறில்லாத பெண்கள் விஷயத்தில் ஆண்களை போலவே எட்டு ஆயுள் ஸ்தானமாகி தீராத நோய்கள்,விபத்துக்களை தரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s