ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி

Posted on

அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட “வீடு வரை உறவு – வீதி வரை மனைவி – காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்”னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல – கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா – அதாங்க ரூ 250)

38 thoughts on “ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி

  Mani said:
  February 26, 2011 at 4:15 pm

  தமிழ்நாட்ல இருக்கிறது இரெண்டே இரண்டு பெரிய கட்சிதான் இது போனால் அது, அது போனால் இது, இதுக்கு மேல இங்க ஏது வழி.

   S Murugesan said:
   February 26, 2011 at 6:21 pm

   நீங்க சொல்றது ஓவராலா கரெக்டுதான். ஆனால் எந்த பெரிய கட்சி வரும்னு சொல்லனுமே. மேலும்
   அம்மா என்னவோ ஆகாச கோட்டை கட்டிக்கிட்டிருக்காய்ங்க. ஆனால் நான் கூட்டணி ஆட்சின்னு சொல்லியிருக்கேன். பாருங்க.

   வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

  சுகுமாரன்.சீ.அ, said:
  February 28, 2011 at 2:54 am

  இருக்கிறநிலையை பார்த்தாலே கலஞர் அல்லது ஜெ யாராவதும் தனியே ஆட்சியமைக்க முடியாது.இருவரில் ஒருவர் கூட்டணிதான்.இதற்கு சோசியம் என்ற ஏமாற்றுத் தேவையா?

   S Murugesan said:
   February 28, 2011 at 4:50 am

   இதை இன்னைக்கு சொன்னா கரீட்டுதான். ஆனால் நாட் நாட்லருந்து நாட்ல இதைத்தான் சொல்லிக்கினு கீறேங்கோ.

    விஜயசேகரன் said:
    March 7, 2011 at 3:19 pm

    தாங்கள் வெளியிட்டுள்ள இந்த பதிவு அம்மையாருக்கு தெரிந்திருக்குமா? அவர்களிடமும் ஒரு வார்த்தை தெரியப்படுத்துங்கள் ராமர் கோயில் சுண்டலுக்காக அல்ல.

    S Murugesan said:
    March 7, 2011 at 3:33 pm

    நமது எம்ஜிஆர் பத்திரிக்கையின் மெயில் முகவரிக்கு பதிவின் தொடுப்பை அனுப்பியுள்ளேன்.
    கண்ணிருப்பவர்கள் காணக்கடவர்

    விஜயசேகரன் said:
    March 8, 2011 at 4:17 am

    தங்களது கணிப்பு எந்த இதழில் பிரசுரம் ஆனாலும் அதனை ஸ்கேன் செய்து தயவுசெய்து இங்கு வெளியிடுங்கள்.

    எதிர்பார்ப்புடன்,
    விஜயசேகரன்

    S Murugesan said:
    March 8, 2011 at 4:30 am

    நிச்சயம் விஜய சேகரன். ஆமா உங்க இயற்பெயரே இதுவா அ விஜய டி.ராஜேந்தர் மாதிரி பேரை கீரை மாத்திக்கிட்டிங்களா?

  சாமி யார்? said:
  March 8, 2011 at 4:39 am

  ஐயா,
  நான் ஒரு ஆஸ்ரமம் (நீங்க நெனைக்கிற ஆசரமம் இல்லீங்க) மூலம் ஜோதிடம் படித்தேன். பல பயனுள்ள ரகசிய தகவல்களை கிடைக்க பெற்றேன்.அதனை தங்கள் தளத்தில் அடிப்படையில் இருந்து பாடமாக வெளியிட விரும்புகிறேன். தங்கள் அனுமதி கிடைக்குமா?

   S Murugesan said:
   March 8, 2011 at 7:28 am

   வாங்க பாஸ்!
   ஒடனே இன்வைட் பண்றேன். கலக்குங்க.

    சாமி யார்? said:
    March 8, 2011 at 12:19 pm

    ஐயா, எனக்கு அனுமதி வழங்கியதற்கு நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்படி பதிவுகளை ஏற்றுவது சொல்லி தாருங்கள். வழக்கமா எல்லாரும் அரைக்கிற மாவ நான் அரைக்க மாட்டேன். கொஞ்சம் வில்லங்கமான சென்சார்ட் பண்ண விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    shaamiyaar@gmail.com

    S Murugesan said:
    March 8, 2011 at 1:01 pm

    சாமி யார் அவர்களே,
    அனுமதினு சொல்லாதிங்க. அழைப்புனு சொல்லுங்க. ஒன்னமில்லை உங்க மெயில் ஐடிக்கு யூசர் பாஸ்வோர்டு வந்திருக்கும்.

    அதை யூஸ் பண்ணி ஒங்க சொந்த சைட்ல பதிவு போடறாப்ல போடலாம். மத்தில நான் எதுக்கு நேரடியா நீங்களே உங்க விசயத்தை பகிர்ந்துக்கோங்க.

    டவுசர் பாண்டி said:
    March 8, 2011 at 3:29 pm

    தல, நீ இன்னா லேகியம் சாப்புட்டுக்குனு கீற. ஆசிரியர் குறிப்புல சின்ன பயனாட்டம் போஸ் குடுத்துருக்க. இருவது வயசுல உள்ள படமா.

    S Murugesan said:
    March 8, 2011 at 5:38 pm

    பாஸ்!
    லேகியமுமில்லே ஒரு இழவுமில்லே. 1991 ல இருந்து 2007 வரை (இடையில அப்பப்ப விளம்பர இடைவெளி) ப்ரட் ஹண்டராவே வாழ்ந்தேனா, மூவேளை தின்னா ரோகினு ரெண்டு வேளைதேன் சாப்பிடறேனா ( மனசாட்சி: தூத்தேறி! நிர்வாண உண்மைகள்னு ப்ளாக் நடத்தினவன் பேசற பேச்சா இது மேட்டருக்கு வா)

    ஹி ஹி நம்ம பர்சனல் ஹேர் ட்ரசருக்கு அம்பது ரூபா செலவழிச்சேன் தலை. தட்ஸால்.

    மீசைக்கு டை போட்டா ஒத்து வர்ரதில்லை அதனால தாடி மீசை மட்டும் வெளுத்து கிடக்கும்.. லேட்டஸ்ட் ஸ்டில் உங்களுக்காக இன்னைக்கே

    உங்கள்

  சாமி யார்? said:
  March 8, 2011 at 4:42 am

  ஒரு உறையில் இரண்டு வாள் இருக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் நான் வாள் அல்ல. சிறு கத்திதான். தாங்கள் சம்மத்டிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை

   S Murugesan said:
   March 8, 2011 at 7:28 am

   பாஸ்!
   கடவுள் ஆரையும் ரிஜெக்ட் பண்றதில்லை. கலைஞரை கூட. அந்தாளே ரெகக்னைஸ் பண்ணி வச்சிருக்கிற உங்களுக்கு என் சம்மதம் இல்லாம போயிருமா என்ன? வாங்க பாஸ்! பழகி பார்ப்போம்.பிடிச்சாலும் பிடிக்கலின்னாலும் யுவார் எ மெம்பர் இன் திஸ் ஃபேமிலி. அலப்பறைய ஆரம்பிங்க

  டவுசர் பாண்டி said:
  March 8, 2011 at 4:48 am

  தலீவா, நீ என்னடான்னா இப்புடி சொல்லிக்கினு இருக்க. ஆனா அந்த கஸ்மாலங்கா என்னடான்னா மறுபடியும் ஒன்னு செரப்போரன்னு சொல்றான்வ. என்னப்பா ஒரே பேஜாராகீது. மண்டைல உள்ள மசுரு பிச்சிக்கிடுதுபா.

   S Murugesan said:
   March 8, 2011 at 7:25 am

   அய்யா டவுசரு..
   இந்த ரவுசுல்லாம் கொஞ்ச நாளைக்குத்தேன். சோனியா பிறப்பு எண் 9 . இப்பம் நடக்கிறது எட்டாவது ரவுண்டுல ரெண்டாவது வருசம்.

   பல்பு கியாரண்டி..

  டவுசர் பாண்டி said:
  March 8, 2011 at 5:04 am

  ஒனக்கென்னப்பா. நீ ஆந்திராவுல உக்காந்து கூவிக்குனு இருக்க. இந்த கஷ்மாலங்கள் என்னடான்னா திடீர்னு ராஜினாமா பண்ணப்போறான்னு சொன்னானவ. பொறவு திடீர்னு மறுபரிசீளன பண்ணி அட்ஜச்டு பண்ணப்போரோம்ன்க்ராணுக, இத மாதிரிதான் 2009ளையும் பன்னாணுக.என்னப்பா நடக்குது நாட்டுல. இருக்குறவன புல்லா கேணயனா ஆக்கிட்டு இருக்கானுக. அவனுக கூட்டனிய ரத்து பண்ண அன்னைக்கு எங்கூர்ல பட்டாசு சத்தத்துல காத்து சவ்வே கிழிய பாத்துச்சேப்பா. இப்ப பட்டாசு போட்டவனுகள தெருப்பக்கமே காணோம்பா. ஒரு எழவும் புரியமாட்டேங்கு தல.

   S Murugesan said:
   March 8, 2011 at 7:23 am

   பாண்டி அண்ணே,
   நாம தோக்கற நேரம் வந்தா அல்லா பன்னாடையையும் பின்னாடி வச்சுக்கிட்டே தான் தோத்துப்போறம் ( 2009ல சந்திரபாபு மாதிரி.

   ஜெயிக்கிற நேரமா இருந்தா ஒண்டியா நின்னாலும் எதிரிங்க கூட்டமா வந்தாலும் ட்ராயரை உருவிர்ரம். அதான் நேரம் ..அதான் காலம் .. கால நேரம்னா இதான்.

   டோன்ட் ஒர்ரி..

  டவுசர் பாண்டி said:
  March 8, 2011 at 5:28 am

  தல நீ சொன்னது மட்டும் நடக்கலன்னு வையேன். ஒன்ன குனிய விட்டு நல்ல குண்டி அடிச்சிருவோம் பாத்துக்க.

   S Murugesan said:
   March 8, 2011 at 7:21 am

   நடந்துட்டா? வேணாம் பாஸ்! அப்பாறம் வயாக்ரா அது இதுன்னு அலையனும். நமக்குத்தேன் செலவு. நீ கவலைப்படாத துரை..

   ஒங்க ஊர்லயே 2000 ஆம் வருடம் ஜெ தான் முதல்வருன்னு ப்ளாஸ்ட் பண்ணேன் .பாஸ் ஆயிருச்சு.

   எங்க ஊர்ல 2004 தேர்தல்ல சந்திரபாபு மூத்திரம் வைட் பெட் ரோல் கணக்கா எரிஞ்சிக்கிட்டிருந்தப்ப “சங்கு”ன்னு சொன்னேன். ஊதிட்டாய்ங்க.

   2009ல டாக்டர் .ஒய்.எஸ்.ஆருக்கு எதிரா சிரஞ்சீவிய வச்சு சூப்பற ஸ்டாரு ,சுப்ரீம் ஸ்டாருன்னு பூச்சி
   காட்டினாய்ங்க. நான் இருபதுலருந்து முப்பது வந்தா சாஸ்தின்னேன். மெகா கூட்டணியில்ல திகார் கூட்டணியில்லை ஒய்.எஸ்தான் முதல்வருன்னு அடிச்சு சொன்னேன்.

   ஒர்க் அவுட் ஆச்சு.

   கவலைப்படாதே சகோதரா!

  Mani said:
  March 8, 2011 at 5:31 am

  துட்ட சுண்டிவிட்டா ஒன்னு தல விழும் அல்லது பூ விழும் அத மாதிரி திமுக போன அல்லது அதிமுக.

   S Murugesan said:
   March 8, 2011 at 7:17 am

   மணி சார்,
   சோசியத்தை ரெம்பவே அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டிங்க. இப்ப இருக்கிற திமுக காங்கிரஸ் எதிர்ப்பு அலைக்கு அம்மா ஸ்வீப் பண்ணிருவாய்ங்கனு ஒரு நினைப்பிருக்கு. நான் தலைப்புலயே என்ன சொல்லியிருக்கன் பார்த்திங்கல்ல..

   ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி.

  டவுசர் பாண்டி said:
  March 8, 2011 at 12:12 pm

  தலைவா, நான் ஒன்ன ஏசி பாத்தேன். நீ இன்னாடான்னா என்னோட கமென்ட நீக்காம அதுக்கு பதில் சொல்லிக்கினு இருக்க. நாலுபேரு பாத்தா ஏதும் நெனைக்க மாட்டாங்களா தல. நீ ஒரு பொறுமைசாலிதான் கண்ணு.

   S Murugesan said:
   March 8, 2011 at 1:11 pm

   பாண்டி!
   நான் பொறுமை சாலின்னு ஓம்கார் ஸ்வாமிகள்/ஸ்மார்ட் மாதிரி பார்ட்டிங்க கிட்டே சொல்லிரப்போறிங்க. என்னை பொருத்த வரை என்ன சொல்றாய்ங்கங்கறது முக்கியம் கிடையாது. எந்த உணர்வோட சொல்றாய்ங்கங்கறதுதான் முக்கியம்.

   உங்க மறுமொழில இருந்தது தமிழகம் -அதன் எதிர்காலம் – தமிழர்கள் மீதான அக்கறை. இதெல்லாம் உள்ளவுக ஏசினாலும் அவிக உணர்வு ஏசி கணக்கா என்னை கூல் பண்ணீரும்.

  shaamiyaar said:
  March 8, 2011 at 3:05 pm

  சார்,
  லாகின் பண்ணி உள்ள போனா ஏகப்பட்ட கேள்விகள் கேக்குது சார். பயமா இருக்கு. எனக்கு ஆங்கிலப்புலமை கிடையாது. பேசாமா என்னோட ஐடிய கேன்ஸல் பண்ணிருங்க சார். தனியா ப்ளாக் எழுதி மேனேஜ் பண்றதுக்கு எனக்கு நிர்வாகத்திறமை காணாது சார். நான் உபய ராசியான மீனலக்னத்துக்காரன். லக்னாதிபதி கன்னில குத்த வச்சி பாத்துக்கிட்டு இருக்குறதால வண்டி ஓடுது. நான் பழைய காலத்துல உள்ள புத்தகங்களில் உள்ள அரிய தகவல்களை சேகரித்து வச்சிருந்தேன். அதுக எனக்கு யூசான மாதிரி நாலு பேருக்கு பயன்படட்டுமேன்னு தளத்துல ஏத்தலாம்னு வந்தேன். நீங்க என்னை சாருன்னு தயவுசெய்து கூப்புடாதீங்க. எனக்கு தங்கள் வயதில் பாதிதான் ஆகிறது. பிஞ்சில பழுத்தவன். ஜோதிடம், யோகாசனம், ஹிப்னாட்டிசம், வசியம், மெஸ் மெரிசம், பிராணயாமா, மந்திரம், மை வித்தை, தியானம், போன்ற வில்லங்கமான கலைகள் பத்தி பிஞ்சிலேயே படிச்சி படிச்சி நாசமா போய்ட்டுருக்கேன். கால சர்ப்ப தோசத்துல மாட்டிக்கிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கேன். மூலாதாரத்துல கொறட்ட விட்டுக்கிட்டு இருக்கிற நாகராஜா சமீபத்துல முழிச்சிக்கிட்டு தொந்தரவு கொடுத்துக்கிட்டு இருக்கிறார். என் வாழ்க்கை வரலாறைக் கேட்டால் காறி துப்புர மாதிரிதான் இருக்கும். பொறுத்துக்கோங்க. எனக்கு கொஞ்ச காண்டு இன்டியூசன் பவர் உண்டு.

   S Murugesan said:
   March 8, 2011 at 5:41 pm

   ஹய்யோ ஹய்யோ! ( வடிவேலு ஸ்டைல்ல படிங்க)
   அதுலயே லேங்குவேஜ் கூட மாத்திக்கலாம் ஷாமீ! ஒரு தாட்டி தம் கட்டி பூந்துருங்க.. பதிவை கமெண்டா போட்டா நல்லாருக்காது.

   சரி ..ரெம்ப கஸ்டமா இருந்தா எனக்கு மெயில்ல அனுப்புங்க நான் பார்த்து பப்ளிஷ் பண்ணிர்ரன்

  shaamiyaar said:
  March 8, 2011 at 3:12 pm

  சார்,
  டேட் ஆப் பெர்த்த வச்சி பஞ்சாங்கம் எதுவும் இல்லாம மனக்கணக்கா ராசி, நட்சத்திரம் கண்டுபிடிக்கிற ஒரு சூத்திரம் ஒன்னு படிச்சேன் சார். அது போக உடன்பிறப்புக்களை கண்டுபிடிக்கிற சூத்திரங்கள் போன்ற குறுக்குசால் ஓட்ற மெத்தட அப்படியே தளத்துல ஏத்த விரும்புறேன். ஏதும் பிரச்சினை வருமா சார். ஜோசியக்காரங்க சண்டைக்கு வந்துருவாங்களோ? நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல. ஓரளவுக்கு படிச்சி தெரிஞ்சவன். அவ்வளவுதான்

   S Murugesan said:
   March 8, 2011 at 5:40 pm

   ஷாமி.. ( இன்னா ப்ரனவுன்சேஷன் இது .. நரிக்குறவுக மாதிரி) உங்கிட்டே இன்னா கீதோ அதை டைரக்டா மக்கள் மன்றத்துல வச்சிருங்க.

   அப்பாறம் பாத்துக்கலாம்.

  டவுசர் பாண்டி said:
  March 9, 2011 at 2:07 am

  தல, அல்லாருமே போட்டோக்கு போசு குடுக்கும்போது சிரிச்சிக்கினு இருப்பாங்க. நீ மட்டும் இன்னா அரசியல்வாதிங்க மாதிரி கையெடுத்து கும்புட்டுக்குனு இருக்குற. இப்பவே ஓட்டு கேக்க ஆரம்பிச்சிட்டியா

  டவுசர் பாண்டி said:
  March 9, 2011 at 2:13 am

  அல்லாருக்கும் வவுத்துல புளிய கரைக்குற மாதிரி பதிவ போட்டுக்குனு, நீ இப்புடி கும்புட்டுக்குனு போசு குடுக்குறியே. போட்டாவுல பாக்கும்போது தயிர்சாதம் சாப்புடுற ஆள் மாரி கீர. ஆனா ஒன்னோட பதிவுகள படிக்கும்போது காடை, கவுதாரி பிரியாணி சாப்புடுறவன் கணக்கா இருக்குப்பா. நெசமாலுமே ஒன்நோடதான தல.

  siva c.m. janakiraman said:
  March 9, 2011 at 3:35 am

  ஆகா ,,, அம்மா கிட்டேயும் Fees ஆ ? ( 25000 பைசா – அதாங்க ரூ 250)
  ஆனாலும் அநியாயத்துக்கு அவங்ககிட்டே கம்மியா கேட்டிருக்கீக ,,
  கவலையே படாதீக .. அம்மா ஜெயிக்கிறாக ,,, உங்களுக்கு 25000 ( இருபத்தி அஞ்சாயிரமே தருவாக )
  சூப்பரபு ( உங்க பாஸையிலேயே பேச கத்துக்கறேன் )

   S Murugesan said:
   March 9, 2011 at 6:06 am

   ஜானகி ராமன்,

   நமக்குண்டானது நமக்கு கிடைக்காட்டாலும் பரவால்லை. கடவுள் அதை ஃபிக்ஸடா ட்ரீட் பண்ணி அப்பாறம் டபுளா தருவாரு. அதிகமா கிடைச்சதுனு வைங்க.அது கந்து வட்டிக்கு வாங்கின கடன் மாதிரி. நமக்கு வேணாம் பாஸ்!

   நாம சொன்னாலும் சொல்லாட்டாலும் ந்டக்கவேண்டியதை நடந்தே தீரும். 25000 பைசா டிமாண்ட் பண்ணது கூட ஒரு காமெடி எஃபெக்டுக்குத்தேன்

   இந்த நாதாறி வாய வச்சு சொல்லுச்சு.. இப்ப நாங்க நாறிக்கிட்டிருக்கோம்னு சனங்க நம்மை சபிக்காதபடி ஆண்டு அனுபவிச்சா ( பேர் புகழை) அதுவே நமக்கு போதும்ங்க

  மாயாண்டி said:
  March 13, 2011 at 1:27 pm

  டியர் சார்,

  ப்ளீஸ் விசிட் http://sribagavathijodhidam.blogspot.com/2010/12/blog-post_29.html

   S Murugesan said:
   March 13, 2011 at 2:39 pm

   மாயாண்டி சார்,
   இந்த பதிவை ஆல்ரெடி வினோத் சார் கோட் பண்ணாரு .பார்த்தேன் .என் கருத்தையும் தெளிவா சொல்லியிருந்தேன். ( கமெண்ட்லயே)

   S Murugesan said:
   March 13, 2011 at 2:38 pm

   மாயாண்டி அவர்களே,
   தாங்கள் சுட்டியதை கண்டேன். தகவலுக்கு நன்றி.
   //கலைஞருக்கு அடுத்த் ஆட்சிக்கு யோகம் இருக்கிறது. அம்மாவிற்கு அந்த யோகம் இல்லை. இனிமேல் அம்மாவிற்கு ஆட்சியோகம் கிடையவே கிடையாது என்றார். //

   பாவம் ! அந்த ஜோதிட நண்பருக்கு தேர்தலுக்கப்பாறம் ஜோசியம் சொல்ற யோகமில்லை போலிருக்கு.

   //எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய ஜாதக அமைப்புக் கொண்டவர் சோனியா காந்தி. அவரை எதிர்ப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்றுச் சொன்னார். //

   இன்னைக்கு நம்ம வெர்சனை பதிவா போடறேன். படிங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s