கலைஞர் ஒரு விதவை

Posted on

இன்னாடா இது அக்குறும்பா கீது. ஆம்பளை போய் விதவையாக முடியுமான்னு கேப்பிக. சொல்றேன்.மனைவியை இழந்த ஆணை விதவன் என்று சொல்லும் சம்பிரதாயம் இங்கில்லே.(மேல் சேவனிஸ்ட் சொசைட்டிப்பா). ஆனால் மனைவியை இழந்தவர்களை குறிப்பிட ஒரு வார்த்தை இல்லேன்னாலும் இழந்தது இழந்ததுதானே.

“அவர் ஏங்க கல்யாணம் கட்டிக்கலை?”
“அவர் தன் லட்சியத்தை கண்ணாலம் கட்டிக்கிட்டாருப்பா”

“ஹும்.. உங்களுக்கு மொதல் பெண்டாட்டி உங்க ஆஃபீஸ் – நான் ரெண்டாவதுதான்”

இந்த வசனம்லாம் கேட்டிருப்பிக. கலைஞரும் அப்படித்தான் லட்சியத்தை மணந்து அரசியல் வாழ்க்கைய துவக்கினாரு. ஆனால் அவரோட ஜாதக மகிமை லட்சியம் செத்துப்போச்சு. ஆமாங்கண்ணா அவர் ஜாதகம் கீழே:

கடக லக்னம் -லக்னாதிபதி உச்சம் -இது சந்திரங்கறதாலதான் ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா லைஃப் போகுது. 14 வருஷம் வனவாசத்துக்கும் இதான் காரணம். (வளர்பிறை -தேய் பிறை)

தன,வாக்கு ,குடும்பஸ்தானாதிபதியோட சேர்க்கை – இதனால தான் அவரு குடும்பத்தை பிரிய , அட்லீஸ்ட் விட்டுக்கொடுக்க மறுக்கறாரு. ரெண்டு எட்டுல ராகு கேது ( இதைத்தான் மாங்கலிய தோஷம்ங்கறாய்ங்க- இந்த அமைப்பாலதான் கலைஞரோட லட்சியம் செத்துப்போயி அவரு விதவையாயிட்டாரு)

7,8 க்கு அதிபதியான சனி 4 ஆவது இடத்துல உச்சம். 8ங்கறது மரணத்தை காட்டற இடம் – 4ங்கறது “வீட் மற்றும் தன்னவரை” காட்டற இடம் . கணக்கு டாலி ஆயிருச்சா. ராசா ஒரு தலித். அவரை தன்னவருன்னு சேர்த்ததால சிறைக்குள் பூத்த சின்ன சின்ன மலர்கள் பார்ட் டூ எழுத வச்சிர்ராப்ல இருக்கு. ( சிறைப்படலுக்கு சனியே காரகன்)

6,9க்கு அதிபதியான குரு அஞ்சுல கீறாரு. அஞ்சுன்னா புத்திஸ்தானம், பெயர் புகழை காட்டற இடம். 6ன்னா சத்ரு ரோக ருணங்களை காட்டற இடம். குரு ரோகாதிபதியா வேலை செய்தா “இந்திராவுக்கு பென்ஷன் தரோம்” பாணில வார்த்தைய விட்டு ஆப்பு. அவரு பாக்யாதிபதியா வேலை செய்தா எம்.ஜி.ஆர் உடல் நலம் பாதித்து ப்ரூக்ளின்ல இருந்தா உருக்கமா உடன் பிறப்புக்கு கடிதம்.

ஒரு சமயம் டாப்பு. ஒரு சமயம் பயங்கர ஆப்பு.ரெண்டுத்துக்குமே தலைவரோட புத்தி தான் காரணமாகுது. குருன்னா அவாள். அவிக மேல பாசம்,துவேசம் மாறி மாறி வரவும் இதான் காரணம்.

ஏழுல செவ் உச்சம்.7ங்கறது ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம். செவ்வாய்னா எதிரி. பாவம் தலீவரு ஆரை நண்பர்னு நினைக்கிறாய்ங்களோ அவிகளே ஆப்பு வைக்க இதான் காரணம். அதே போல ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் எல்லாருமே குழி தோண்டவும் இதான் காரணம்.

இவர் 7லருந்து ஜன்மத்தை பார்க்கிறதால சட்டுனு கோவம் வந்துருது. ஆருனா ரிப்போர்ட்டர் வில்லங்கமா கேள்வி கேட்டா ” எந்த பேப்பரு”ன்னு சீறவு இதான் காரணம்.

இந்த ஜாதகத்துக்கு செவ்வாய் தான் யோககாரகன்.இவர் 7ல உட்கார்ந்து உச்சம் பெற்றார். அதனால பெரியா(ரோட)ளுங்களோட சகவாசம் ஏற்பட்டுது. செவ்வாய் சகோதர காரகர் (அண்ணா தம்பி) அதனாலதான் அண்ணா ஒரு லைஃப் கொடுத்தார். உடன்பிறப்புங்க கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. இவர் தான் ஒன்னும் கொடுக்கமாட்டேங்கறாரு.

4/11 க்கு அதிபதி விரயத்துல உட்கார்ந்தாரு. அதாவது வீடு வாசல் எல்லாம் விரயமா போயிரனும். இந்த பாய்ண்டை ஆரோ கிட்னி உள்ள ஜோசியர் கேட்ச் பண்ணி சொன்னதால வீட்டை “தானம்” பண்ணிட்டாரு போல.

தானம்னா என்ன ? தாரை வார்த்து கொடுத்துட்டு துண்டை உதறி தோள்ள போட்டுக்கிட்டு இறங்கிரனும்.அதான் தானம். அதை விட்டுட்டு…………….( வேணம்பா பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கெதுக்கு -சென்னை டு சித்தூர் எவ்ள நேரம் ஆயிரப்போவுது)

அப்பாறம் பாருங்க சோதரஸ்தானாதிபதியான புதன் விரயத்துல போய் பவர் ஃபுல்லா இருக்காரு. எம்.ஜி.ஆரையும் சகோதரர்னு தானே விளிச்சிட்டிருந்தார் ( பேச்சு -எழுத்துல) புதனுக்குரிய கடவுள் விஷ்ணு. ராம -சந்திரன்னா அது வைஷ்ணவ நாமம்தானே. அதான் பாவம் வாத்யாருகிட்டே செமர்த்தியா வாங்கி கட்டிக்கினாரு.

கம்யூனிகேஷன்ஸுக்கு அதிபதியான புதன் பலம் பெற்றார். இதனால தான் ஒரு பக்க வசன காலம் முதல் ஒரு வார்த்தை வசனம் வரை குப்பை கொட்டறாரு.அந்த புதன் விரயத்துல உள்ளதால தன் பக்க வாதத்தை எடுத்து வைக்கிறப்ப மாத்திரம் மொக்கையாயிருது. (லேட்டஸ்ட் உதாரணம்: ஸ்பெக்ட்ரம் ஜி).
அதே போல டாக்டர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் யாராலயும் உபயோகமில்லாம போக இதான் காரணம்.

அது சரிங்கண்ணா ஏன் சோனியா அம்மா இப்படி இம்சை பண்றாய்ங்கனு கேப்பிக.சொல்றேன். கடகலக்னத்துக்கு வுமன் தான் எமன். (ஜெயலலிதா கதை ஆச்சு.இப்ப சோனியா ) ராகுன்னா விதவைய காட்டற கிரகம்.

நம்ம தலீவருக்கு ராகு கேது பாப கத்திரி யோகத்தை தந்திருக்காய்ங்க. அதாவது ஒரு விதவையால தனம்,சொல் வாக்கு,செல்வாக்கு, குடும்பம் எல்லாமே பறிபோகனும். ராகு எட்டை பார்க்கிறதால (வேணாங்கண்ணா ஓவரா போயிரும்) அதுவும் போகனும்.

ஆடு ஆரை நம்புது? கசாப்புக்காரனைத்தானே நம்புது. சரி இந்த கேது தசையில தாத்தாவுக்கு ஆப்புதானான்னு கேப்பிக சொல்றேன்.

இன் ஜெனரல் கேது தசை/புக்தி யாருக்குமே ஒர்க் அவுட் ஆவதில்லை. காரணம் கேது ஞான காரகன். இவர் ஞானத்தை தான் தருவார். துன்பங்கள் மூலம் தான் ஞானம் பாசிபிள். ஒரு வேளை நீங்கள் ஆராய்ச்சி துறையிலோ , தியானம், சன்னியாச வாழ்விலோ இருந்தாலன்றி கேது கொஞ்சமேனும் தீய பலனை தராது விட மாட்டார். தினசரி ஒரு மணி நேரமேனும் காவி வேட்டி அணியவும். மாதம் ஒரு கோவிலில் ரா தங்கவும்னு சொல்லலாம். ஆனால் தலீவர் கோச்சுக்குவார்.

வேணம்னா ஒன்னு பண்ணலாம் கேது ராகு சமசப்தகத்துல இருக்கிறதால மஞ்ச சால்வைய தூக்கிப்போட்டுட்டு மேற்சொன்ன ஒரு மணி நேரம் கருப்பு சால்வை அணியலாம். பெரியார் சம்பந்தப்பட்ட இடத்துல ராத்தங்கலாம்..

என்னைக்கேட்டா அல்டிமேட் பரிகாரம்:

அந்த காலத்து வானப்ரஸ்தம் மாதிரி தாளி என் சொச்ச வாழ்க்கைய பெரியார் கொள்கைய பரப்ப உபயோகிக்கப்போறேன்னுட்டு கருப்பு சால்வையோட ரோட்ல இறங்கிர்ரதான். அழகிரியா ஸ்டாலினாங்கறதை தொண்டர்கள் முடிவு செய்யட்டுமே.

ஜாதக உதவி: வகுப்பறை http://classroom2007.blogspot.com/2007/03/blog-post_21.html

Advertisements

3 thoughts on “கலைஞர் ஒரு விதவை

  vinoth said:
  February 25, 2011 at 4:03 am

  போலி ஜோதிடர் தொடர தொடருங்கொ…

   S Murugesan said:
   February 25, 2011 at 7:14 am

   பாஸ்,
   தலைப்புத்தான் வேறே.மேட்டர் ஒன்னேதான் கவனிங்க. (அடுத்தது ஜெ ஜாதகம்தானேனு கேப்பிக பார்ப்போம்)

  ponvigneshwar said:
  April 9, 2011 at 11:18 am

  manaivi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s