கலைஞருக்கு ஒரு டாப் பரிகாரம்

Posted onகலைஞருக்கு டாப் பரிகாரத்தை சொல்றதுக்கு முந்தி இன்னொரு ரகசியத்தை உடைக்கிறேன். இந்த பதிவு நேற்றைய போலி ஜோதிடரை கண்டறிய பதிவோட 2 ஆவது பகுதிதான். (இப்ப மேட்டருக்கு போயிருவம்)

ஒனக்கு இன்னாத்துக்குப்பா இந்த ஆள்காட்டி வேலை. ஏதோ நாலு விஷயத்தை பத்தி எழுதினே. சனம் படிச்சாய்ங்க. இன்ஸ்பைர் ஆயிட்டாய்ங்க. ஏதோ வாரத்துக்கு பத்துபேரு அக்கவுண்ட்ல காசு போட்டு பலன் கேட்டுக்கறாய்ங்க. இப்ப எதுக்கு இந்த லொள்ளுனு கேப்பிக. சொல்றேன்.

நான் அப்பப்ப வில்லங்கமா ஒரு வசனம் விடுவேன். தாளி ஜோசியம் பொய்யாவே இருந்தாலும் சம்பவம்லாம் ஜோசியப்படி தான் நடக்கும்.ஏன்னா நாட்டை, மானிலத்தை வழி நடத்தறவுகளை வழி நடத்தறதே ஜோசியம் தான்.ஜோசியர்கள் தான்.

ஜஸ்ட் ! உங்க கலைஞர்,ஜெயலலிதா,விஜயகாந்துக்கு சரியான ஜோசியர் கிடைச்சு ………..

அந்தாளு ஜோதிஷத்துல உள்ள அசலான மேட்டரை ( அஸ்ட்ராலஜி மீன்ஸ் ஆப்ஷன்ஸ் துரை! ) போட்டு உடைச்சா ……….

ங்கொய்யால உங்களுக்கு என்ன வேணுங்கறிங்களோ அது எந்த கிரகத்தோட காரகத்வம்னு பார்த்து அந்த கிரகத்தோட இதர காரகத்வங்கள்ள அதுக்கு சமமானதை விட்டுத்தொலைச்சா நினைச்சதை பெறலாம்னு சொன்னா.. இதை அவிக ஏத்துக்கிட்டு செயல்பட்டா ஸ்டேட்டே உருப்படும்.

உ.ம் : அரசியல் வெற்றிக்கு குரு தான் முக்கியம். இவர் தான் புத்திர காரகன். இவர் தான் கங்கண காரகன். கலைஞர் இன்னைக்கு ராத்திரி உடன்பிறப்பேன்னு விளிச்சு ஒரு கடிதம் எழுதறாருனு வைங்க.

“தபாருபா.. என் சம்சாரம்,பொண்ணுல்லாம் இந்த மாதிரி செய்வாய்ங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் மனசு உடைஞ்சு போச்சு. இனி அந்த வீடும் மானா ..இந்த வீடும் மானா பிள்ளை,குட்டி, பேரன் (குருதான் பவுத்திர காரகனும் கூட -பவுத்திரன் மீன்ஸ் பேரன் ) ஆரும் மானா. நாளைலருந்து அறிவாலயம் தான் என் வீடு அவிகல்லாம் ஆயிபசங்க. அழகிரி ஸ்டாலினோட பதவிகள் தொடர்ரதை கூட பொதுக்குழு கூடி ரகசிய வாக்கெடுப்பு மூலமா இறுதி செய்யும் “னு அந்த கடிதத்துல எழுதிர்ராரு. மறு நா பெட்டி படுக்கையோட அறிவாலயம் போயிர்ராருனு வைங்க.. எப்படி இருக்கும்?

மத்த எல்லா கட்சியும் ஓரணியில நின்னாலும் (காங்கிரஸ் உட்பட) திமுகவுக்கு 2/3 மெஜாரிட்டி கியாரண்டி.
கலைஞர் அய்யா! தப்பித்தவறி இந்த யோசனைய பின்பற்றி ஜெயிச்சு வந்துட்டா ஒரு ஃபைவ் பாய்ண்ட் ப்ரோக்ராம் மட்டும் அமல்படுத்துங்க போதும்.

1.படிப்படியா மதுவிலக்கு 2. தில்லிக்கு காவடி தூக்கறதை விட்டுட்டு ஈழத்தமிழர்கள் நிலைய மாத்த உண்மையிலயே எதுனா செய்ங்க. 3.இலவச திட்டம்லாம் உண்மையிலயே நிர்கதியா உள்ளவுகளுக்கு மட்டும் அமலாகிறாப்ல செய்ங்க. மக்களுக்கு வேலை வெட்டி இருந்தா மார்க்கெட் ரேட்டுக்கு அரிசி வாங்கி /பொங்கல் தள்ளுபடில கலர் டிவி வாங்கிப்பாய்ங்க 4.அரசோட மொத்த சக்தியையும் தமிழ் நாட்டு நதிகளை இணைக்க திருப்பி விடுங்க 5.விவசாயத்து மேல கான்சன்ட்ரேட் பண்ணுங்க. சொட்டு நீர்பாசனம் , இயற்கை விவசாயம்னு என்னென்னமோ இருக்கு.

ஓகே ஓவர் டு யு.

வாழ்க்கையில ஒன்னை இழந்தாதான் ஒன்னை பெற முடியும். இதான் கிரகம் சொல்ற நீதியும். ஜெயலலிதாவுக்கு பிள்ளை குட்டி கிடையாது ( ஐ மீன் ஆஸ் பெர் ரிக்கார்ட்). அரசியல்ல தூள் கிளப்பினாய்ங்க.அவிக போதாத நேரம் தத்து எடுத்தாய்ங்க. பல்பு வாங்கிட்டாய்ங்க.எம்.ஜி.ஆருக்கு பிள்ளை குட்டி கிடையாது .அரசியல்ல சக்கை போடு போட்டாரு. காமராசரும் இதே கேட்டகிரிதான். அரசியலுக்கும் – பிள்ளை குட்டிக்கும் உள்ள தொடர்பு என்னானு புரிஞ்சுதா? புரியாட்டா என்ன நிதானமா புரிஞ்சிக்கிடலாம்.
சோசியருங்களுக்கே புரியறதில்லைங்கறதுதான் சோகம்..

ஜோதிஷம் ஆன்மீகப்பயணத்தின் முதல் படி.. கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். அட கர்த்தருக்கு பயப்படலைன்னாலும் இயற்கைக்கு – இயற்கையிலான நிலையற்ற தன்மைக்கு -ஒரு ஒழுங்கற்ற ஒழுங்குக்கு பயந்தா போதுங்கண்ணா ஞானம் ஆரம்பிச்சுரும்.அதை தர்ரது ஜோதிஷம்.

நம்ம வாழ்க்கையே ஒரு ஓட்டை படகு ( எவன் ஜாதகத்துலயும் எந்த கிரகமும் 100% சுபபலமா இருக்கிறதில்லை) கையில கூப்பன் இருக்கேன்னு (கிரகபலம்) கண்டதையும் வாங்கி குவிக்க ஆரம்பிச்சா படகு சீக்கிரம் மூழ்கிப்போயிரும்.

வீட்டுக்கு எப்படி பேசேஜ் விடறோமோ அந்த மாதிரி கிரகபலத்தை கூட ஓவரா எக்ஸ்ப்ளாய்ட் பண்ணாம இருக்க கத்துக்கனும். வர்ரதுல இதுவரட்டும் – இது வேணாங்கற மென்டாலிட்டி இருக்கனும். கொஞ்சம் பேசேஜ் விடனும்.அப்பத்தான் புதுசா எதுனா வரணும்னா வரும். கண்டதையும் போட்டு திணிச்சு வச்சிருந்தா ஒன்னு வரப்ப ஒன்னு போயிட்டே இருக்கும்.

சரிங்கண்ணா போலி ஜோதிடரை கண்டறிய டிப்ஸ் தரேன்னுட்டு இஷ்டத்துக்கு மொக்கை போட்டுட்டன். பாய்ண்டுக்கு வந்துர்ரன்.

6.டைம் சென்ஸ் – நேரம் தவறாமை:
ஒரு ஜோசியர் நேரத்தை குறிப்பிட்டு உங்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கறாருன்னா அவருக்கு
” நேரத்து” மேலே நம்பிக்கையில்லேனு அர்த்தம்

7.உங்க எதிர்காலமே என் பாக்கெட்ல என்ற ஓவர் கான்ஃபிடன்ஸ்:

ஏற்கெனவே ஒரு பதிவுல சொல்லியிருக்கேன். ஒரே கிரகஸ்திதி எந்த இருவருக்கு ஒரே மாதிரியான பலனை தருவதில்லை.இந்த மேட்டரில் பூர்வ புண்ணியம், கடவுள் கருணை, அப்பா அம்மா நல்வினை, வாஸ்து இப்படி நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது. நாம் ரெசிப்டிவாக மாறும்போது பிரச்சினை குறைகிறது. ரெபல் ஆகும்போது அது பல மடங்காகிறது.

ஒரு கிரகம் நான் இந்த ஒரு பலனை தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. காம்பவுண்டுக்குள்ள குதிச்ச திருடன் சிச்சுவேஷனை பொருத்து பாய்லர் மூடியையாவது தூக்கிக்கிட்டு போறாப்ல தன் ஜூரிஸ்டிக்சனில் (காரகத்வம்) ஏதோ ஒன்றை அடித்து தூள் கிளப்பி விடுகிறது. அதே போல் தான் நின்ற பாவ காரகத்வத்தில் ஏதோ ஒன்றை நாறடித்து விடுகிறது. ( நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ்) .

மேலும் உங்கள் அடுத்த கணம் இந்த கணத்திலான உங்கள் செயலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன் மனிதனை சுதந்திரமாக வாழும்படி சபித்துள்ளான். ஃபைனல் கோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே தவிர தினசரி நிகழ்ச்சி நிரல் எல்லாம் நாட் ஃபிக்ஸ்ட்.

எங்கயோ படிச்சேன் ” ஜோதிடன் பலனை சொல்லலாம் . ஆனால் பலனை தர்ரது இறைவன்” ஜோதிஷங்கறதே கடவுள் கையில இருக்கிற அஜெண்டாவோட 999 ஆவது கார்பன் காப்பி மாதிரி. தேசலாதான் தெரியும்.

இதையெல்லாம் தெ(பு)ரிஞ்சிக்காம “அடிச்சு சொல்றேன் ..அடிச்சு சொல்றேன்”னு பீத்திக்கிட்டா பார்ட்டி நிச்சயம் டகுலாத்தான் இருக்கும்.

8.ஜோதிடம் சொல்வதையே முழு நேரத்தொழிலாய் கொண்டு சமூகத்துடனான இன்டராக்சன் ஜீரோ லெவலுக்கு போய்விடுவது:

உண்மையான அக்கறையோட -ஆத்மார்த்தமா சொன்னா ஒரு நாளைக்கு – ஒரு ஜாதகத்துக்கு பலன் சொன்னாலே மனசு -உடம்பு -புத்தி -ஆத்மா எல்லாம் சோர்ந்து போயிரும். ரவுண்ட் தி க்ளாக் ஒரு ஆளு இதையே செய்றாருன்னா ஒன்னு அவரோட தேஜஸ் உச்சத்துல இருக்கனும். இல்லை அந்தாளு ஜஸ்ட் “ஏதோ” சொல்றானு அர்த்தம்.

9.ஆணவம்:
ஜோதிஷத்துல ஏபிசிடி தெரிஞ்சாலே டர்ராயிருவம். ( அந்த அளவுக்கு கிரகங்கள் லைஃப்ல இன்ஸ்டெபிலிட்டிய ஏற்படுத்தும் – அந்த அளவுக்கு ஏற்ற இறக்கத்தை தரும். இதை புரிஞ்சிக்கிட்டா ஆணவம் கீணவம்லாம் எகிப்து அதிபர் மாதிரி ஓடியே போயிரும் )

ரீமோட் சிக்னலுக்கேத்தாப்ல சானலை மாத்தவேண்டிய டிவிக்கு ஆணவம் இருக்கலாமோ? நாமளும் அதே கேட்டகிரிதான். என்ன ஒரு வித்யாசம்னா ” என்னங்கடா இது படக்குனு சானல் மாறுது”ன்னு ரோசிக்கறோம். டிவி ரோசிக்காது.

( இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்குங்கண்ணா.. டட்டடாய்ங் அடுத்த பதிவுல பார்ப்பம்)

Advertisements

12 thoughts on “கலைஞருக்கு ஒரு டாப் பரிகாரம்

  தனி காட்டு ராஜா said:
  February 23, 2011 at 3:52 am

  //இறைவன் மனிதனை சுதந்திரமாக வாழும்படி சபித்துள்ளான். ஃபைனல் கோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே தவிர தினசரி நிகழ்ச்சி நிரல் எல்லாம் நாட் ஃபிக்ஸ்ட்.//

  Good one 🙂

   S Murugesan said:
   February 23, 2011 at 4:29 am

   வாங்க ராசா!

   நம்ம கட்சிக்கும் ( தரப்பை சொன்னேன்) ஆதரவானு புல்லரிச்சு போயிட்டன்

  shakthi. said:
  February 23, 2011 at 3:55 am

  pakutharivu pagalavanukke parikarama…
  super sir.

   S Murugesan said:
   February 23, 2011 at 4:26 am

   ஷக்தி சார்!
   அவரை போயி ஏங்க ப.பன்னு சொல்லிக்கிட்டு.. மஞ்ச சால்வை என்ன? பவழக்கல் மோதிரம் என்ன? வாஸ்து மீனுக்கு இரை போடறது என்ன? ( அதுவும் பிரதமர் விசிட்டுக்கு டும்மா அடிச்சிட்டு)

  vinoth said:
  February 23, 2011 at 4:33 am

  ராகு – செவ்வாய் – மின்சாரம் பற்றி எழுதறதா சொன்னீங்க .. எழுதுங்க…

   S Murugesan said:
   February 23, 2011 at 6:14 am

   ச்சோ சிம்பிள். மின்சாரம் கண்ணுக்கு தெரியாம ஒயர்ல போற வரை ராகு.

   டாப் கியர்ல பாடில பாஞ்சு தீப்புண்ணுக்கு வழி செய்தா செவ்வா ஓகேவா

  Naresh Kumar said:
  February 23, 2011 at 6:42 am

  நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்.
  //வாழ்க்கையில ஒன்னை இழந்தாதான் ஒன்னை பெற முடியும். இதான் கிரகம் சொல்ற நீதியும்// – நடப்பதும் அதுதான். ஒன்றை இழந்தாதான் ஒன்னை பெற முடிகிறது.

   S Murugesan said:
   February 23, 2011 at 9:40 am

   நரேஷ் குமார் அவர்களே,
   வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

  velu said:
  February 23, 2011 at 9:34 am

  \ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு// ithu ethanaperukku theriyum swami

   S Murugesan said:
   February 23, 2011 at 9:38 am

   வேலு அவர்களே,

   இதை அவிகளே ஒழுங்கு மரியாதையா தெரிஞ்சிக்கிட்டா லைஃப் அசால்டா இருக்கும்.

   இல்லைனா காலம் கத்துக்கொடுக்கும். அப்ப ரெம்ப வலிக்கும்.

  MANI said:
  February 23, 2011 at 5:42 pm

  இன்னா தலீவரே மஞ்சதுண்டுக்கே ஜோசியம் சொல்லி பெரிய ஆளு ஆகலாம்ன்னு நினைக்கறீங்களா. இந்தாளாவது குடும்பத்தை விட்டுட்டு அறிவாலயத்துக்கு வர்றதாவது. இது கூட பரவாயில்லை நீங்க சொன்னீங்களே 5 அம்ச திட்டம் அதெல்லாம் அவருக்கு தெரியாதா என்ன ஏதோ அரசியலுக்கு வந்தோமா இலவசம்ன்னு எதாவது பிச்சை போட்டோமா மீதியை நாம சுருட்டினோமான்னு போற மனுசனைப் போயி நல்லது செய்ய சொன்னா நடக்குமா. அதெல்லாம் திருந்தாத கேசு தலைவா இத்தனை வருஷம் ஆகியும் திருந்தாதெல்லாம் இனிமே தானா நீங்க சொல்லி திருந்த போவுது. வீட்டுக்கு வீடு டிவி தந்து ஓட்டு வாங்கிடுச்சு, இன்னும் என்ன கொடுத்தா ஓட்டு போடுவானுங்கன்னு கணக்கு பண்ணிகிட்டு இருக்கு, தடுக்கி விழுந்தா டாஸ்மாக் கடையில தான் விழனும் போல தமிழ்நாடே சாராய ஆறாக ஓடுது நாங்கலெல்லாம் செய்த பாவம் போல இதெல்லாம் எங்களுக்கு தலைவராக வந்து எங்களை சீரழிக்கனும்னு எங்கள் ஜாதகத்தில இருந்தா அத யாரால மாத்த முடியும் போங்க. விட்டு தள்ளுங்க.

   S Murugesan said:
   February 24, 2011 at 4:29 am

   பாஸ்,
   எனக்கு எதையுமே சின்னதா ரோசிச்சு பழக்கமில்லே.

   நம்ம மாதிரி சாமானியங்க என்ன நினைச்சாலும் நடக்காதுங்கறப்ப தாளி பெருசாவே நினைச்சுருவமே. அதனால எப்பவுமே நான் பெரியாளுதேன்.

   அறிவாலயத்துல உட்கார்ந்து இதையெல்லாம் சொல்ல முடியுமா?

   நான் இங்கனயே இருக்கேனே ( அஸ்கு புஸ்கு)

   தலீவருக்கு இதெல்லாம் தெரியாதுனு இல்லை.ஏதோ வந்து மறைச்சுருச்சு (குடும்ப பாசம்?)

   தலீவருக்கு தான் மறைச்சுருச்சு அவருக்கு
   சோசியம் சொல்ற அவாளுக்கென்னாச்சு.?

   இவரோ வினை அவிகளுக்கு மறைச்சுருச்சா. இல்லே சூத்திரனுக்கு வந்த வாழ்வ பாரு. இவன் கெட்டழியனும்னு இருக்காளா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s