கத்தோலிக்க பெரியார்

Posted on

தமிழ் கத்தோலிக்கன் என்ற வ்லைப்பூவுக்கு சொந்தக்காரர் தாமென்னவோ ஈ.வெ.ரா என்ற நினைப்பில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.ஏதோ ஹிட்ஸை கூட்டிக்க இப்படி ஒரு பதிவை போட்டிருந்தா ஓகே. ( நாமளும் இந்த கேஸ்தானே சுஜாதாவையே கிழிச்சிருக்கன் -ஆனால் அவரோட எழுத்தை படிச்சுத்தேன் எழுத்து மேலயே ஒரு கவுரதை வந்துது -இதையும் மறைச்சதில்லை)

ஆனால் பாவம் ..தான் எழுதினதையெல்லாம் அவர் முழுக்க நம்பி பதிவு போட்டிருந்தா மட்டும் கஷ்டம். தவளை எங்கனா கத்திக்கிடலாம். பாம்பு கண்டுக்கிடாது. பாம்புக்கு மஸ்தா வேலை கீறப்ப, அது ஏதோ தன் வேலைய தான் பார்த்துக்கிட்டிருக்கிறப்ப “மணலுள் புதைந்து வாழ் நுணலெல்லாம்” கத்த ஆரம்பிச்சா அதுவும் ஊர் பேர் எல்லாம் மென்ஷன் பண்ணி சவால் கேட்டா விடாது பாம்பு.

இப்படித்தேன் ஒரு பார்ட்டி திருஷ்டி சுத்தி போட்ட லெமன்ல தான் ஜூஸ் போட்டு குடிப்பேன்னு அடம் பிடிச்சது .நம்ம கிட்டே மோதறச்ச ட்ராயிங் டீச்சர். நமக்கு வெட்டிப்பேச்செல்லாம் பிடிக்காதுங்கோ. உடனே ஒரு கால் காயிதம் எடுத்து 5 பாய்ண்ட் எழுதிக்கொடுத்தேன். 6 மாசம் கழிச்சு பேசிக்கலாம்னேன்.கால் காயிதத்துல நாம எழுதிக்கொடுத்தமாதிரி சாக்கடை ஓரமாவே டப்பாவ பிடிச்சுக்கிட்டு பொழப்ப ஓட்டவேண்டியதாயிருச்சு.

ஆரோ ஒரு ஜோசியரை(?) -ஊர் பேர் போட்டு புள்ளிவிவரம் கொடுத்திருக்காரு. இந்த மாதிரி உபகதையெல்லாம் ஞானும் நிறைய எழுதியிருக்கன். ஆனால் ஊர் பேர் எல்லாம் போடக்கூடாது. தமிழ் கத்தோலிக்கருக்கு என் அறிவுரை இதான். பை தி பை பெரியாரோட வாழ்க்கையில ஒரு சம்பவம். யாரோ வந்து விபூதி நீட்டறாய்ங்க. ( வச்சு விடறாய்ங்களா என்ன ஞா இல்லை) ஸ்பாட்ல எதிர்பார்ட்டி இருக்கிற வரை அதை துடைக்கலை. ஏன்னா விபூதி கொடுத்தவரோட மனசை காயப்படுத்தக்கூடாதுங்கற பெரியமனுஷத்தனம்.

பெரியாருக்கு வமிசா வழியா வந்த கோவில் தர்ம கர்த்தா பொறுப்பை கடைசிவரை நிறைவேத்திக்கிட்டிருந்த கதை தெரியுமா? சாமி பேரை சொல்ல ஊரை ஏமாத்தற சங்கராச்சாரி, நித்யானந்தா மாதிரி சாமிகளை விட ஈ.வெ.ராம சாமி தேன் உண்மையான துறவிங்கறது என் முடிபு.

ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா – இது உண்மையான ஆன்மீகம். ” மானவ சேவே மாதவ சேவா -இது உண்மையான ஆத்தீகம். இது ரெண்டுத்துக்கும் நடுவுல பூந்தா அது அமாவாசை இருட்டு பெருச்சாளினு அர்த்தம்.

பார்ட்டியோட தர்ம சந்தேகம்(?) என்னடான்னா “ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?”
ஏன்யா டாக்டருக்கு பன்றிக்காய்ச்சல் வருவது தெரீமானு கூட கேப்பிக போல. பேசிக்கலா ஜோசியரும் ஒரு மனுஷ ஜன்மம் தேன். அவருக்கும் கக்கா,மூச்சா, நல்ல நேரம்,கெட்ட நேரம் எல்லாம் வரும். அவரு தன்னைப்பத்தியே 24 மணி நேரம் ,365 நாள் நினைச்சிட்டிருந்தா மக்களுக்கு என்னத்த சொல்லமுடியும்.
அப்படியே அவரு தன் ஜாதகத்தை வச்சுக்கிட்டு பார்த்தாலும் அது அவரோட ஜாதகம்னாலும் சனி -செவ் சேர்க்கைக்கு கூட எங்கனா ரிலாக்சேஷன் இருக்கான்னுதான் பார்ப்பாரு. (இதுவே ஊரான் ஜாதகம்னா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு)

ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியணும் தான். அவிக ஈகோ ,தன்னோடதுங்கற எண்ணம் முழுக்க தெரிய விடறதில்லை. அதுக்காவ அது பெரிய டிஸ்குவாலிஃபிகேஷன் ஆயிருமா என்ன?

லாயருக்கு தண்டனை கிடைக்காதா? தாளி தீர்ப்பு சொல்ற நீதிபதிக்கு , சட்டத்தை வடிவமைக்கிற எம்.எல்.ஏ,எம்.பிக்கே தண்டனை கிடைக்குது. ஆனானப்பட்ட இந்திராகாந்திக்கே கைவிலங்கு போட்டாய்ங்க. அவிகளையும் நம்ம கத்தோலிக்க பெரியார் கூண்ட்ல் ஏத்திருவாரு போல.

“கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” கர்த்தர் வேற கர்த்தரோட படைப்பு வேற இல்லை. கோள்களும் படைப்பின் ஒரு பாகமே. நான் கர்த்தாவுக்கு மட்டும் பயப்படுவேன் அவரோட படைப்புக்கு பயப்படமாட்டேன்னா அது அவிக ஞானத்துக்கு சம்பந்தப்பட்ட மேட்டர். நாம அம்பேல்.

//நாம் எல்லோருமே எப்போதாவது ஜோசியர்களை சந்தித்திருப்போம். நம் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகுது என தெரிந்து கொள்ள. இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என புட்டு புட்டு வைக்கும் இவர்களின் எதிர்காலத்தில், என்ன நடக்கும் என, இவர்களுக்கு தெரியுமா? என்னும் சந்தேகம் நீண்ட நாட்களாகவே எனக்கு இருக்கிறது//

பாஸ்! உங்களுக்கு அந்த சந்தேகமே வேணா.. உங்களை மாதிரி பார்ட்டிகளோட சந்தேகத்தை நிவர்த்திக்கத்தான் கடவுள் சூப்பர் டூப்பர் யோக ஜாதகத்துல என்ன மாதிரி ஒரு அராத்தை படைச்சு – உங்களை மாதிரியெல்லாம் பேச வச்சு -ஸ்டெப் பை ஸ்டெப்பா தேத்தி வச்சிருக்காரு.

உங்களுக்கொரு ரகசியத்தை சொல்லவா? என்னோட ஜாதகம் யோகஜாதகம்னு ஜோதிடம் கன்ஃபார்ம் பண்ணாம இருந்திருந்தா தாளி ..நானும் உங்க பக்கம் இருந்துக்கிட்டு உங்களை மாதிரியே வெட்டிப்பதிவு போட்டுக்கிட்டிருந்திருப்பேன்.

//என் ஊரிலுள்ள ஒரு ஜோசியருக்கு நடந்த சம்பவம்தான்.//

ஒரு ஜோசியருக்கே இல்லை. ஜோதிடத்தை ஜஸ்ட் ஒரு சோர்ஸ் ஆஃப் இன்கம்மா பார்த்து “தொழில்” நடத்தற எல்லா பிக்காலிகளுக்கும் இப்படித்தேன் நடக்கும். மேட்டர் ரெம்ப பர்சனலா போறதால நான் ஜகா வாங்கிக்கறேன் பாஸ்!

//இப்போ நம்ம ஜோஷிய திலகங்கள் சதீஷ் குமார், சித்தூர் முருகேசன் இன்னும் சிலர் பிரபல பதிவர்களாக இருப்பதால் இதை கேட்டு விட்டால் போச்சு என தோன்றியது. அதுதான் இந்த பதிவு.//

பதில் கொடுத்தாச்சு . வவுறு ரெம்பி போச்சா.(தொண்டை வரை வந்திருக்கனுமே ) உங்க நல்ல நேரம் சதீஷ் பார்வைக்கு உங்க பதிவு போகலை போல.அவரும் பரிமாறினாருன்னு வைங்க .. அஜீரணம்தான்

//இந்த ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?//
100% தெரியும் வாத்யாரே.. இப்ப நமக்கு செவ் தசையில குரு புக்தி நடக்கு. குரு 6/9 க்கு அதிபதி. மொதல்ல ஒரு வழக்கோ, கைதோ நடக்கும். அப்பாறம் லைம் லைட்டுதேன்.( நம்முது கடக லக்னம் -லக்னத்துல குரு உச்சம்)

தனி மனிதர்களை வைத்து முடிவெடுக்காதிங்க..அப்பாறம் எந்தெந்த பாதிரியெல்லாம் அஜால் குஜால் பண்ணினாய்ங்கனு லிஸ்ட் போடவேண்டிவந்துரும். கிறிஸ்தவம் புனிதமானது – யாரோ ஒரு பாதிரியார் வேணம்னா அராத்தா இருக்கலாம். அதே மாதிரி ஜோதிடம் புனிதமானது. யாரோ ஒரு ஜோதிடர் வேணம்னா டுபுக்கா இருக்கலாம்

பி.கு: தங்கள் உத்தேசம் ஜஸ்ட் ஒரு பரபரப்பை கிளப்புவது மட்டுமேயானால் என் பதிவில் இத்தனை காட்டம் தேவையில்லை. ஆனா என்ன பண்றது நமக்கு வாக்குஸ்தானத்துல சனி. பதிவு உங்க மனசை புண்படுத்தியிருந்தா சாரி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s