திருப்பதி -ஒரு ஜோதிட அலசல்

Posted on

என்னங்கடா இது தமிழ் வாரப்பத்திரிக்கைகளை திட்டிதீர்க்கிற முருகேசனாரும் அவிக வழிக்கு போயிட்டாப்ல இருக்கு. சம்பந்தா சம்பந்தமில்லாத படத்தை வச்சிருக்காருனு நினைச்சுராதிங்க. பதிவின் கடைசியல காரணத்தை விளக்கியிருக்கேன்.

தமிழ் நாட்டு சனம் மொட்டையா(?) திருப்பதிங்கறாய்ங்க. ஆனால் இங்கன உள்ள வழக்கு ( பழக்கமுங்கோ) என்னடான்னா கீழே உள்ளதுதான் திருப்பதி. மலை ஏறிட்டா திருமலை. நான் இந்த பதிவுல பேசப்போறது திருமலையை பத்தித்தான்.

நமக்கு இந்த வேதம், இதிகாசம்,புராணம்லாம் ரெண்டாம் பட்சம் தான். நம்ம அளவுகோல் அனுபவம். அங்கன யாரேனும் ஒரு பார்ட்டி இருந்தா அந்தாளு என் கிட்டே பேசனும். என் பேச்சை கேட்கனும் (ஐ மீன் ஃபாலோ பண்றதில்லை -ஹியர் பண்ணனும்) ரெஸ்பாண்ட் ஆகனும். இல்லாட்டி ஆள விடுதேன்.

ஆன்மீகத்துல உள்ள இம்சை என்னடான்னா தன் ஆடையை தொட்டு சொஸ்தமடைந்த பெண்ணுகு ஏசு நாதர் சொன்னாரே “உன் விஸ்வாசம் உன்னை சொஸ்தமாக்கியது”ன்னு அப்படி ஆன்மீகத்துல 2+2ல்லாம் கிடையாது. தாளி ஆளுக்கொரு விடையை கொடுத்து மண்டை காய வச்சுரும்.

ஆனா ஜோதிடப்பார்வையில நவகிரகங்களுக்கும் நைன் இன் ஒன் பரிகாரம் ஏழுமலையான் தரிசனம். எப்படின்னு கேப்பிக.சொல்றேன்.

மலை மேல இருக்கிறதால சூரியனுக்கு. ( ஆனால் நோகாம பஸ்ஸுல போயி இறங்கிட்டா சூரியனுக்குரிய பரிகாரம் ஒர்க் அவுட் ஆகாது. மணிக்கு மணி பெருமாளுக்கு அலங்காரம் மாத்திர்ராய்ங்க.( இன்ஸ்டேபில் பொசிஷனுக்கு அதிபதி சந்திரனுங்கோ நினைச்சப்பல்லாம் கண்ணாலம் (முகூர்த்தகாலத்துக்கு அதிபதி சந்திரனுங்கோ). அப்பாறம் கச்சாமுச்சானு தீர்த்தங்கள் இருக்கு. ( சந்திரன் ஜலகாரகன்) அதுலயெல்லாம் தீர்த்தமாடினா சந்திரனுக்கு பரிகாரம். அங்கன இந்த நிமிசம் பார்த்த முகத்தை அடுத்த நிமிசம் பார்க்கமுடியாது.

நடை பாதையில அப்பப்போ புலி,சிறுத்தை எல்லாம் ஹலோ சொல்லுதாம்.. ( குரூர மிருகங்களுக்கு அதிபதி செவ்) . நீங்க போன தினம் புலி,சிறுத்தை வந்தாலோ வந்து போயிருந்தாலோ செவ்வாய்க்கு பரிகாரம். மேலும் பெருமாளொட கை போஸ்ச்சரை பார்த்து உள்ளாற வேல் இருந்தது.பிடுங்கிட்டானுவ அதனால அது முருகன் தானும் சொல்றாய்ங்க. செவ்வாய்க்குரிய கடவுள் முருகன்.

பிரகார சுவர்ல பார்த்தா சிங்கம்லாம் இருக்கும். அதனால உள்ளாற இருக்கிறது சக்தின்னும் சிலர் அடிச்சு சொல்றாய்ங்க. ராகுவுக்குரிய தேவதை துர்கை. அதனால ராகுவுக்கும் பரிகாரம்.எவனேனும் சினிமாக்காரன் வந்து ப்ரேக் தரிசனம்னுட்டு க்யூ காம்ப்ளெக்ஸ்லயோ,க்யூ லைன்லயோ கூடுதலா ஒரு மணி நேரம் மாட்டிக்கிட்டா இன்னம் கொஞ்சம் காட்டமான பரிகாரம்.

அப்பாறம் இன்னொரு மேட்டர் அழுக்கு போக குளிச்சவனில்லேங்கற மாதிரி திருப்பதி போய் ஏமாறாம வந்தவுக கிடையாது. எந்தளவுக்கு ஏமாந்தா அந்த அளவுக்கு பரிகாரம்.

அதே மாதிரி அய்யருங்க கிட்ட ஏமாந்தாலோ , அரசியல் வாதிகள்,மந்திரிகள் காரணமா காத்திருப்பு அதிகமானாலோ குருவுக்கு பரிகாரம். உள்ளாற உள்ளது சக்திங்கறாய்ங்க. சக்தி வேறே சிவம் வேறேன்னு இல்லை.அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணுன்னு கேள்விப்பட்டிருப்பிங்க. குருவுக்குரிய கடவுள் ஷிவா . ஆக திருப்பதி போறது குருவுக்கும் பரிகாரம்

சனின்னா அடிமைப்படல்,சிறைப்படல் ( க்யூகாம்ப்ளெக்ஸ்ல இதான் நடக்குது) மொட்டைபோடற இடத்துல , பொதுக்கழிவறையில டாக்சி ட்ரைவர்கிட்டேல்லாம் ஏமாந்தா சனிக்கு பரிகாரம். மேலும் பெருமாளே ஒரு க்டனாளி (குபேரன் கிட்டே கடன் வாங்கின கதை தெரியுமில்லே) ஒரு கடனாளி ( நாம) இன்னொரு கடனாளியை போய் வணங்கறது எவ்ள பெரிய அவமானம் அதனால இது சனிக்கு பரிகாரம்.(கடன் பட்டவன்னாலே சனிதேன் -அவனை பிழிஞ்சு எடுத்து வட்டி வாங்கறவன் அவனை பெரிய சனி)

புதன்னா கடைத்தெரு. திருப்பதி போய் ஷாப்பிங் பண்ணா மொட்டைதேன் (இது ரெண்டாவது) அப்படி ஏமாந்தா புதனுக்கு பரிகாரம். உணர்ச்சி வசப்பட்டு தேவஸ்தானம் பப்ளிகேஷன்ஸ்ல புக்ஸ் வாங்கினா இன்னம் டபுள் ஸ்ட்ராங் பரிகாரம்.

யதேஷ்டமா சில்லறை,க்ரெடிட் கார்டு, புதுசா வாங்கின காரு, சொந்த தொகுதி எம்.எல்.ஏவோட லெட்டர், தரிசனம் கம் தங்குமிடத்துக்கான ஆன்லைன் புக்கிங், 30 நாட்களில் தெலுங்கு புஸ்தவம்லாம் இல்லாம போனா தாளி பிளாட்ஃபாரம்தேன்.(சுமார் சுத்தமா இருக்கும்.பயந்துக்காதிங்க) அப்படி பிளாட்ஃபாரத்துல படுத்து இமிசை பட்டு தரிசனம் பண்ணா கேதுக்குரிய பரிகாரம்.

உணவு,உடை,இருப்பிடத்துக்கு சுக்கிரன் தான் காரகம்.மேற்சொன்ன சில்லறை முதல் 30 நாட்களில் தெலுங்கு புஸ்தவம்லாம் இல்லாம போனா எல்லாத்துக்கும் அல்லாடவேண்டியதுதான். இதெல்லாம் சுக்கிரனுக்கு பரிகாரம். சுக்கிரனுக்குரிய தேவதை லட்சுமி. இந்த பார்ட்டி பெருமாள் மார்லயே இருக்கிறதா ஐதீகம். ஆக பெருமாளை தரிசனம் பண்ணா லட்சுமியையும் கரெக்ட் பண்ணமாதிரிதேன்.

ஆக திருப்பதி போறது -ஏழுமலையானை தரிசனம் பண்றதுங்கறது 9கிரகத்துக்கும் நைன் இன் பரிகாரமுங்கோ. நகை நட்டுல்லாம் இல்லாம, ஏதோ காட்டன் புடவை, வேட்டி அரைக்கை சட்டைன்னு புறப்பட்டு பஸ்ஸுல போய் பஸ்ஸுல வாங்க. 9கிரகமும் 9 வாரத்துக்கு வேலை செய்யாதுன்னா பார்த்துக்கங்க.

இந்த பதிவை எழுத இன்ஸ்பிரேஷன் தமிழ் ஓவியாவோட பதிவுதான். எதையும் எதோடவும் தொடர்பு படுத்தமுடியும்.(கேயாஸ் தியரி) ஆனால் நாம அந்த வேலைக்கெல்லாம் போறதில்லை.

உள்ளதை இன்டர்பிரிட்டேட் பண்றோம். தட்ஸால். தமிழ் ஓவியாவோட பதிவைஅவசியம் படிங்க. .உண்மையில இந்த பதிவு அவிக போடவேண்டிய பதிவே இல்லை.ஒரு “இறையன்பர்” அதிலும் “பெருமாள் பக்தர்” போடவேண்டிய பதிவு. ஆனால் தமிழ் ஓவியா போட்டிருக்காய்ங்க.இங்கனதான் பெருமாள் நிக்கறாரு.

தமிழ் ஓவியா அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அவரது வலைப்பூவுக்கு ஒரு ஹெடரை டிசைன் பண்ணவச்சேன் அதைத்தான் இந்த பதிவுக்கு படமா வச்சிருக்கேன். படத்தை மெயில் மூலம் அனுப்பறேன். அதுக்குள்ளாற் இங்கேக்ளிக் பண்ணி அவிக போட்ட பதிவை படிங்களேன்.

One thought on “திருப்பதி -ஒரு ஜோதிட அலசல்

    vinoth said:
    February 21, 2011 at 4:24 am

    sir, the previous post about vikadan, astro q a, and tiruppathi, link not working in anubavajothidam.com pls check
    thank you
    vinoth

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s