2011,மே16, ராகு கேது பெயர்ச்சி பலன்

Posted on

அண்ணே வணக்கம்ணே,
என்னடா .. ராசிபலனோட எஃபெக்டே 15 டு 30 பர்சென்ட் தானு சொன்ன முருகேசன் ராசிபலனை வச்சே காலத்தை ஓட்டிர்ராப்ல இருக்குனு நினைச்சிராதிங்க. நம்ம நோக்கம் வெறுமனே பலன் சொல்லிட்டு போறதில்லிங்கோ. அடுத்த ராகு கேது பெயர்ச்சிக்கு நீங்க நம்ம சைட்ல பலன் எழுதற ரேஞ்சுக்கு உங்களை ப்ரிப்பேர் பண்றதுதான் நம்ம நோக்கம். ராகு கேதுவை பத்தி நம்ம ப்ளாக்ல நிறையவே எழுதியிருக்கன். அதையெல்லாம் ஒரு ரவுண்டு படிச்சிங்கனா ஒரு ஐடியா வரும்.

தற்சமயத்துக்கு ராகு கேதுவை பத்தி சின்ன அறிமுகம் கொடுத்துட்டு பலனை பார்க்க போயிருவம். இவிக ஒரு ராசில ஒன்னரை வருச காலம் இருப்பாய்ங்க. ஒருத்தருக்கொருத்தர் 7 ஆவது வீட்ல இருப்பாய்ங்க. மத்த கிரகங்கள் இவிக மத்தில மாட்டினா அது கால சர்ப்பதோஷம். இது கோசாரத்துல எப்ப வருதுனு பாருங்க. கால சர்ப்பதோஷத்தோட ட்ரெய்லரை பார்க்கலாம்.

இவிகளுக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது. தாங்கள் நின்ன ராசி,அதனோட அதிபதி,தங்களோட சேர்ந்த கிரகங்களை பொருத்து பலன் தருவாய்ங்க. இதர கிரகங்களை போலவே இவிகளுக்கு காரகத்வம் எல்லாம் உண்டு. (போர்ட் ஃபோலியோ)

உங்களுக்கு ராகு கேதுக்கள் அனுகூலமா இருந்தா அவிக போர்ட் ஃபோலியோல வெற்றிக்கொடி கட்டலாம் . இல்லைன்னா அவிக போர்ட் ஃபோலியோல இருக்கிற அம்சங்கள் உங்களுக்கு டின் கட்டலாம். மொதல்ல போர்ட் ஃபோலியோவ பார்ப்போம்.

போர்ட் ஃபோலியோ ஆஃப் ராகு: (அவரே சொல்றாருங்கோ)
மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே.
ராகு சரியில்லின்னா செய்யவேண்டிய பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் ‘ட்ராகன்’ (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு ‘பெரிசுக்கு’ ஒரு ‘கட்டிங்’ போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்
கேதுவோட போர்ட் ஃபோலியோ:
நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் ‘நம்மவர்’ என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.
கேது சரியில்லைன்னா செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பி.கு:
ராகு கேதுக்கள் இந்திய அரசியலும் ஊழலும் போல பிரிக்கப்பட முடியாத கிரகங்கள் பாஸ்! அதனால உங்களுக்கு ஒருத்தர் சரியில்லைன்னா கூட ரெண்டு பேரோட பரிகாரங்களையும் செய்யறது பெட்டர். ஒய் பிக்காஸ் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிடறதால ஒருத்தர் நல்லாருந்தாலும்,அடுத்தவர் இவரை பார்க்க இவரே இம்சை பண்ணாலும் பண்ணிருவாரு.

மேலும் கேது சுக்கிரனுடைய ராசியிலும், ராகு செவ்வாயுடைய ராசிலயும் இருக்கிறதால கேது சரியில்லாதவுக சுக்கிரன், ராகு சரியில்லாதவுக செவ்வாய் தொடர்பான பரிகாரங்களையும் செய்துக்கறது பெட்டர். ( நம்ம ப்ளாக்லயே தேடுங்க. கிடைக்கும். தேடவேண்டிய வார்த்தை : ” நவீன பரிகாரங்கள்”

பெண்கள்:
இன்னொரு முக்கியமான மேட்டருங்கண்ணா கீழே ராகு,கேது ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய பெண்களின் அடையாளங்களை தந்திருக்கன்.ராகு பலம்,கேதுபலம் இல்லாத சமயத்துல இவிகளை டீல் பண்ணா பல்பு வாங்கிருவிங்க டேக் கேர்.

ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்

கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
12 ராசிக்காரர்களுக்கான பலன்கள்:

1.மேஷம்:
2ல் கேது,8 ல் ராகு ரெண்டு பேருமே டப்பாசு. ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம்,திருடு போதல்,பிக்பாக்கெட்டுக்கு இலக்காதல் கடன் ஏற்படலாம். குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.

2.ரிஷபம்:

ஜன்மத்துல கேது ,7 ல ராகு.அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக மாறலாம். அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் நடக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி ஏற்படலாம். நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ மாறலாம்.
தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.

3.மிதுனம்;

6ல் ராகு, 12ல் கேது. ராகு ஓகே. ராகு காரகத்வத்துல ஒரு பிடி பிடிக்கலாம். தூள் பண்ணுங்க.12ல உள்ள கேது கொஞ்சம் வீண் விரயம், அல்லல் ,அலைச்சலை தருவாரு. தூக்கக்குறைவு ஏற்படலாம் .மாத்திரை மாயம்லாம் யூஸ்பண்ணாதிங்க .கேதுவுக்குரிய பரிகாரம் செய்ங்க. தூக்கம் தன்னால வரும்.

4.கடகம்:

5ல் ராகு, 11ல் ராகு:
5ல் ராகு மறதி,அவமானம்,பிள்ளைகளுக்கு தீமை, அதிர்ஷ்டகுறைவை தரலாம். 11ல ராகு ஓகே தூள் பண்ணுங்க.

5.சிம்மம்:

4ல் ராகு, 10ல் கேது
வீடல அம்மாவுக்கு முழங்கால் வலி வரும். மரச்சாமானுக்கு செதில் பிடிக்கலாம். தேள் தென்படலாம். மத்தபடி கேது பத்துல உட்கார்ந்து வேலை விஷயத்துல கொஞ்சம் ப்ரஷர் தரலாம்.

6.கன்னி:

3ல் ராகு, 9 ல் கேது. 3ல் ராகு ஓகே. 9ல் கேது அப்பா,அப்பாவழி உறவு,சேமிப்பு ,தூர பிரயாண முயற்சி வகைகளில் அல்லல் அலைச்சல் நஷ்டத்தை தரலாம்.

7.துலா:

2 ல் ராகு, 8ல் கேது. மேஷ ராசிக்காரவுகளுக்கு சொன்ன அதே பலன் ரிப்பீட்டு. தப்பி தவறி மேஷ ராசிக்காரவுகளோட சேர்ந்து ஏதாச்சும் பண்ணிங்க கதை கந்தல்தான் ( மூச்சா போனா கூட பக்கத்துல உள்ளவுக ராசி மேஷமான்னு பார்த்துக்கிருங்க)

8.விருச்சிகம்:
ஜன்ம ராகு 7 ல் கேது .ரிஷப ராசிக்காரவுகளுக்கு சொன்ன அதே பலன் ரிப்பீட்டு. தப்பி தவறி ரிஷப ராசிக்காரவுகளோட சேர்ந்து ஏதாச்சும் பண்ணிங்க கதை கந்தல்தான் ( மூச்சா போனா கூட பக்கத்துல உள்ளவுக ராசி ரிஷபமான்னு பார்த்துக்கிருங்க)

9.தனுசு:

6ல் கேது, 12ல் ராகு . 6ல் கேது ஓகே . சத்ரு ஜெயம்,ருண விமுக்தி ,ரோக நிவர்த்திய கொடுப்பார். வீன் வம்புக்கு போகாதிங்க. 12ல் உள்ள ராகு தன் காரகத்வத்துல (லாட்டரி ? வைன்ஸ்? போன்றவை) விரயத்தை தருவார்.டேக் கேர். தூக்கக்குறைவு ஏற்படலாம் .மாத்திரை மாயம்லாம் யூஸ்பண்ணாதிங்க . ராகுவுக்குரிய பரிகாரம் செய்ங்க. தூக்கம் தன்னால வரும்.

10.மகரம்:

5ல் கேது, 11ல் ராகு. 5ல் கேது மறதி,அவமானம்,பிள்ளைகளுக்கு தீமை, அதிர்ஷ்டகுறைவை தரலாம். 11ல கேது ஓகே தூள் பண்ணுங்க.ஆன்மீகத்துல சாதனையே படைக்கலாம்.

11.கும்பம்:

4ல் கேது, 10ல் ராகு.வீடல அம்மாவுக்கு விரக்தி,மனவேதனை வரும். எளிய வாழ்வு வாழவேண்டி வரலாம். தேள் தென்படலாம். மத்தபடி ராகு பத்துல உட்கார்ந்து வேலை விஷயத்துல கொஞ்சம் ப்ரஷர் தரலாம். மத்தபடி ரெண்டு கையில சம்பாதிப்பிங்க.

12.மீனம்:
3ல் கேது, 9ல் ராகு. 3ல் கேது ஓகே. ரெம்ப ஃபோன் பேசாதிங்க – ஹெட் ஃபோன்ல மியூசிக் கேட்காதிங்க. 9ல் ராகு அப்பா,அப்பாவழி உறவுக்கு குந்தகம் விளைவிச்சாலும் ,சேமிப்புவகையில வியத்தை கொடுத்தாலும் ,தூர பிரயாண முயற்சி வகைகளில் திடீர் அதிர்ஷ்டம் அடிக்கலாம். (முக்கியமா வெளி நாடு) இருந்தாலும் அது போன்ற பயணங்களில் பெட்டி படுக்கை ,போக வேண்டிய விலாசம் சாக்கிரதை .

Advertisements

4 thoughts on “2011,மே16, ராகு கேது பெயர்ச்சி பலன்

  vinoth said:
  February 19, 2011 at 4:34 am

  கமண்டுல சொல்லுர பிரச்சனையை உடனே சால்வ் பண்ணிரீங்க…
  பேசாம உங்களையே பிரதமரக்கிரலாம் போல இருக்கு…

   murugesan said:
   February 19, 2011 at 12:39 pm

   வாங்க வினோத்,
   ரஜினி காந்த் மாதிரி மேனோக்கி கை காட்டினா அது கேணத்தனம். சென்னையை நோக்கித்தான் காட்டனும்.

   அங்கனதான் திரு.சரண் இருக்கிறார்.அவர்தான் சால்வ் பண்ணியிருக்கனும்.

   எல்லா புகழும் அவருக்கே!
   நாம பிரதமாரக வேண்டியதில்லிங்க. காந்தி தாத்தா மாதிரி ( நித்யானந்தா மாதிரி இல்லே) நாம ஒரு ஆசிரமத்துல ப்ளாக் போஸ்ட் அடிச்சிட்டிருக்கிறச்ச பிரதமர் அப்பப்ப வந்து போயிட்டிருந்தா போதும்.

   வல்லரசு கனவெல்லாம் ஜுஜுபி

  kandhan said:
  April 7, 2011 at 6:44 pm

  சிலருக்கு சந்தரன் ரெண்டு ராசிக்கு நடுவில் இருக்கெ. அப்பொ என்ன பலன் எடுத்க்கலாம்.

   S Murugesan said:
   April 8, 2011 at 2:38 am

   கந்தன்,
   நீங்க கேட்கிறது “சந்தி”யை பற்றின ஜோதிட விதினு நினைக்கிறேன். அது கிடக்கு கச்சா முச்சான்னு.

   ( சந்திரனொரு ராசியில 29 ஆவது டிகிரியிலயோ அ 1 ஆவது டிகிரியிலயோ இருந்தா என்னபண்றதுங்கறதுதானே உங்க கேள்வி.)

   நம்ம அனுபஜோதிடத்துல ரெண்டு ராசியில எந்த ராசியோட குண நலன் ஜாதகருக்கு பொருந்துதுனு பார்த்து டிசைட் பண்றோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s