சுக்கிர(ல) பலமும் பலான யோகமும்

Posted on

முதல்ல தலைப்பு தர்ர தவறான அர்த்தத்தை நிவர்த்திக்க வேண்டியது என் கடமை. பலான யோகத்தை தர்ரது ஜஸ்ட் சுக்கிரன் மட்டும்னு நினைச்சுரதிங்க. மத்த 8 கிரகங்களோட பலமும் இதுக்கு தேவைப்படுது.

உதாரணமா சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திரபலமும் தேவை. சனி நரம்புகளுக்கு காரகன் என்பதால் சனி பலமும் தேவை. இப்படி கில்மா மேட்டர்ல மத்த 8 கிரகங்களோட பலத்துக்கான அவசியத்தை தொடர்பதிவாவே போட்டாச்சு. ( நீங்க ஊருக்கு புதுசுன்னா பழைய பதிவுகளை தேடிப்படிங்க)

அடுத்து பலான யோகம்னா கண்டவளையெல்லாம் கட்டிலுக்கு கொண்டு வந்துர்ர யோகம்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. ஆக்சுவலா இப்படி காஞ்சான், அலைஞ்சான் ஜாதகத்துல பார்த்திங்கனா சுக்கிரன் கெட்டு குட்டிச்சுவரா போயிருப்பார். க்ளியர் !

உணவுக்கு ருசியை தர்ரது பசி. பெண்ணுக்கு அழகு தர்ரது உங்க ஆண்மை. சுக்கிரன் சுப பலமா இருந்தா “ஐம்பதிலும் ஆசைவரும்” புருசன் பொஞ்சாதி உடம்புல பூரிப்பு வரும். முகத்துல திருப்தி, ஆனந்தம்னு கலந்து கட்டியா ஒரு தெய்வீக களை வரும்.

காளிதாசர் வரி வசூலை பத்தி ராசாவுக்கு இன்னா சொன்னாரு தெரீமா ” வண்டு பூவுல தேன் எடுக்கிற மாதிரி இருக்கனும்”னாராம். விந்து ஊறின பின்பு இயற்கையா ஏற்படும் உந்துதல் உடலுறவுல முடிஞ்சா சுபம். மேட்டர் வேற மாதிரி போச்சுனு வைங்க ( செயற்கை உந்துதல்/ ஈகோ/ காரணமா கோதாவுல இறங்கறது) ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன மாதிரி “கோ ஆப்பரேசனே இல்லிங்க” – ” அவளுக்கு இதுல ஆர்வமே இல்லிங்க”ன்னு குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்கிறது. பொஞ்சாதிய தவிர ஊர்ல கீரவ எல்லாம் உலக அழகியா தெரியறதுனு ஆரம்பிக்கும். அதனாலதான் சொல்றேன். ஆராச்சும் ” அலை பாய்ஞ்சா” அங்கே மேட்டர் சரியில்லைனு அர்த்தம்.

விந்துவை சுக்கிலம்னு சொல்றாய்ங்க. (இந்த பெயர் பொருத்தம் ஆக்சிடென்டலுனு நினைக்கிறிங்களா?).

9 கிரகங்கள்ள செக்ஸுக்கு பொறுப்பா இருக்கிற கிரகம் சுக்கிரன். இன உறுப்பு, அதன் வேலைத்திறன், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு, லூப்ரிகேஷன் எல்லாத்துக்கும் இவர் தான் இன் சார்ஜுங்கற மேட்டரை எல்லாம் கடந்த பதிவுலயே சொல்லியாச்சு. ஞா இருக்கில்லை.

ஜோசியத்தை பத்தி ஓரளவு தெரிஞ்சவுக , ஏன் சில மேதைகள் கூட ஒரு கிரகம் பெட்டரான இடத்துல உட்கார்ந்துட்டா போதும் அது தொடர்பான மேட்டர்ல எல்லாம் ஜாதகர் விளையாடுவாருனு நினைச்சுர்ராய்ங்க. இது தவறு.

என் ஜாதகத்துல ஜன்ம லக்னமான கடகத்துலயே குரு உச்சம். குருன்னா கோல்ட். சாதாரண லாஜிக் படி பார்த்தா என் கிட்டே கிலோ கிலோவா கோல்டிருக்கனும். ஆனா யதார்த்தம் அப்படியில்லை. ஏன்? குரு என் ஜாதகத்துல உச்சமா இருக்கிறதால குரு தொடர்பான தாதுக்கள் நம்ம பாடில பல்க்கா இருக்கோ என்னமோ? கோல்ட் மேல எனக்கு பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் கிடையாது. அது அப்பப்போ வரும். போகும் கண்டுக்கறதில்லை. ஆனா அது வந்துக்கிட்டே தான் இருக்கு. போயிட்டே தான் இருக்கு.

இதையே சுக்கிரனுக்கு பொருத்திப்பாருங்க. உங்க ஜாதகத்துல சுக்கிரன் நெஜம்மாவே நல்ல பலத்தோட இருக்காருனு வைங்க. உங்களுக்கு செக்ஸ் மேலயோ, ஆப்போசிட் செக்ஸ் மேலயோ (எதிர்பாலினர்?) பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் இருக்காது. ஆனா அது உங்களை தேடிவரும். வந்தா வரவில் வைப்பிங்க.போனா செலவில் வைப்பிங்க. ஆனா அதை பத்தி ரோசிக்க மாட்டிங்க.

செக்ஸ் மட்டுமில்லை,பணம் மட்டுமில்லை எதை பத்தி வேணம்னாலு சரி நீங்க அதை பத்தி ரோசிக்கிற வரை அது உங்ககிட்டே வராது. ஹவ் லாங் யுவார் ஹேவிங் மணி அட் யுவர் மைண்ட் யு கெனாட் கெட் மணி இன்டு யுவர் பாக்கெட்.

எதுவரை உங்க மைண்ட்ல பணம் இருக்கோ அதுவரை உங்க பாக்கெட்டுக்கு பணம் வராது. இதையே உடைச்சி சொன்னா எதுவரை உங்க மைண்ட்ல செக்ஸ் இருக்கோ அது வரை அது உங்க அவெய்லபிலிட்டிக்கு வராது.

சுக்கிரன் உங்க ஜாதகத்துல உங்களுக்கு சாதகமா இருக்காரா இல்லையானு தெரிஞ்சிக்க சின்ன ட்ரிக் இருக்கு. இந்த பதிவை படிக்கிற வரை செக்ஸ் எனக்கு கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்வியே உங்க மைண்ட்ல இருந்திருக்காது, வந்திருக்காது. விதி வழியே மதி.

ஆக சுக்கிரன் யாரோட ஜாதகத்துல வீக்காயிருக்காரோ அவிகதான் அலைஞ்சு பறை (இசைக்கருவிங்கோ) சாத்துவாய்ங்க. இவிகளுக்கும் கிடைக்கும். எப்படி கிடைக்கும்? நேரம் கெட்ட நேரத்துல, இடம்,பொருள், ஏவல், கால ,தேச,வர்த்தமாங்கள் தவறி கிடைக்கும். பொருந்தா காதல்,கள்ளக்காதல், ஒரு தலை காதல் , சுய இன்பம், ஹோமோ, குத புணர்ச்சி இதெல்லாமே சுக்கிரன் வாரி வழங்க கூடிய தீயபலன்கள்ள
சிலதுதான்.

இதுக்கு காரணம் என்னன்னா.. இவிக மைண்ட் வேணம்னா பெற்றோர்,ஆசிரியர்,சமுதாயம் இத்யாதியினர் காரணமா கரப்ட் ஆகி இயற்கையோட, இயற்கையில் ஒரு பாகமான கிரகங்களோட தொடர்பை இழந்திருக்கலாம். ஆனால் இவிக உடல் ? இது பூமியின் குழந்தை. பூமி சூரியனின் குழந்தை. அதனால இவிக உடலே இவிக ஜாதகத்தை சொல்லிரும். ( கால புருஷ தத்துவம் – உங்க லக்னம் தலை – எட்டாமிடம் தான் மர்மஸ்தானம் – விரயஸ்தானம்தான் கால்)

நிறைகுடம் தளும்பாதுனு கேள்விப்பட்டிருப்பிங்க.இந்த மேட்டர்லயும் அதே ரூல் தேன்.

யாரோட ஜாதகத்துல சுக்கிரன் சுபபலமா இருக்காரோ அவிக உடல்ல எல்லாமே அளவா இருக்கும். பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவா இருக்கும். ஆனால் யாரோட ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்காரோ அவிக உடல்ல எதுவுமே அளவா இருக்காது. பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவுக்கதிகமா இருக்கும்.

ஒரு பால் பாத்திரத்தில வழிய வழிய பாலை ஊத்தி ஸ்டவ் மேல வச்சா ( ஸ்டவ்வை கொளுத்திதான்) அது கொதிக்க ரெம்ப தாமதாமகும். ஆனால் ஒரே ஒரு பாலாடை பாலை ஊத்தி காய வைச்ச உடனே கொதிச்சு உடனே காந்தி ,கருவாடா போயிரும்.

இவிக பழக்க வழக்கங்களை வச்சும் சுக்கிரன் சுபபலமா இருக்காரா , பலவீனமா இருக்காரானு தெரிஞ்சிக்கிடலாம். சுக்கிரன்னா வெறுமனே செக்ஸுக்கு மட்டும் அதிபதி இல்லே.

அவர் லக்சரி, ஃபேன்சி, ஃபேன்டசி,காஸ்மெடிக்ஸ், டூர், ட்ராவல், நொறுக்கு தீனி விருந்து , பார்ட்டி, கெட் டு கெதர், வீடு,வாகனம்,தூக்கம் எல்லாத்துக்கும் அதிபதியா இருக்கார். சுக்கிரன் சுபபலமா இருக்கிற பார்ட்டிங்களுக்கு இது மேல எல்லாம் பெரிசா ஆர்வமிருக்காது. ஆனால் இதெல்லாம் தேடிவரும். தேடிவந்தாலும் அதை அளவாதான் ஏத்துப்பாய்ங்க.ஏன்னா மேற்சொன்ன எல்லாமே உங்க செக்ஸ் பவரை குறைக்கக்கூடிய மேட்டருங்க தான். இவிக உடலே இதை எல்லாம் ப்ரொட்டெஸ்ட் பண்ணும். ( என்னமோப்பா சோஃபால உட்கார்ரதை விட வெறும் நாற்காலில உட்கார்ந்தாதான் வசதியா இருக்குனு பேசுவாங்க)

யார் ஜாதகத்துல சுக்கிரன் பலவீனமா இருக்காரோ அவிக உடல் கொய்ட் ஆப்போசிட்டா ரியாக்ட் ஆகும். மேற்சொன்ன லக்சரி முதலாக வாகனம் தூக்கம் வரை எல்லாத்தையும் அளவுக்கதிகமா கேட்கும் அனுபவிக்கும். அப்பத்தானே பேட்டரி வீக்காயிரும். அதெப்படி வீக்காயிரும்னு கேட்கறிங்க அப்படித்தானே.. சின்ன உதாரணம் :

வாகனம்,பயணங்களோட எஃபெக்ட்:

மனித உடலோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி இதுல விதையில் உள்ள உயிரணுக்கள் உயிர் வாழ முடியாதுனு தான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளியில் படைச்சிருக்கு. நீங்க எதிர்பாலினரை கவரனும்னு நினைச்சா நிறைய நேரம்
அல்ட்ரா மாடர்னா பேண்ட் சட்டைல இருக்கனும். பேண்ட் அணியனும்னா அண்டர்வேர் அணியனும். கண்டவளை கண்ட நேரத்துல பிக் அப் பண்ணனும்னா டூ வீலர்ல மணிக்கணக்கா பயணிக்கனும். இதனால விதைக்கு கிடைக்க வேண்டிய கூல் எஃபெக்ட் கிடைக்காம உயிரணுக்களோட அசையும் திறன் குறைஞ்சுரலாம், கவுண்ட் குறைஞ்சிரலாம். இதுவல்லாம மலச்சிக்கல்ல துவங்கி, பைல்ஸ் வரை அனேக வியாதிகள் வந்து ந்நா ………..றிப்போகலாம்.

நொறுக்கு தீனியோட எஃபெக்ட்:
குழந்தை ஆசனப்பருவத்தை தாண்டி இன உறுப்பை தீண்டி விளையாடற ஸ்டேஜ்ல பெற்றோர் கண்டிப்பால அது மறுபடி ஆசனப்பருவத்துக்கே போகுது. டீன் ஏஜ்ல இதுக்கு வாய்ப்பு குறைஞ்சி போகுது . அதனால டீன் ஏஜன் ஆசனத்தோட ஆரம்பமான வாய் மேல கான்சன்ட்ரேட் பண்றான். வீண் பேச்சு, நொறுக்கு தீனி, சிக்லைட் மெல்றது, பான்,பீடா,பான் பராக் எல்லாத்துக்கும் இதுவு கூட ஒரு காரணம்.

பசியிருந்தா தான் சாப்பாட்டை தின்ன முடியும். நொறுக்கு தீனி அப்படி கிடையாது. பசியே இல்லைன்னாலும் திங்கலாம். ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்.
உடலிலான இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யும் போது , ஜீரண மண்டலம் வேலை செய்யாது. ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. நொறுக்கு தீனி அதிகரிக்க அதிகரிக்க ஜீரண மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் ( ஒரு ஸ்டேஜ் வரை) அதிகரிக்கும். இனப்பெருக்க மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் எல்லாமே படிப்படியா குறைஞ்சுரும்.

இப்படி ஒவ்வொரு பாயிண்டுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்குது பாஸு.

சுக்கிரன் வீக்கா இருக்கிற ஜாதகர்களுக்கு அடிக்கடி தங்கள் ஆண்மைல சந்தேகம் வந்துரும் . உடனே அதை சோதிக்க களத்துல இறங்கிருவாய்ங்க. ( சில சமயம் ஆசிரியர்கள் மாணவிகள் மேல, தாத்தாக்கள் குழந்தைகள் மேல சோதிக்கறச்ச தந்தில செய்தியாயிர்ராய்ங்க).

மேலும் இவிக விந்து நீர்த்திருக்கும். நீர்த்த விந்து அடிக்கடி புரள ஆரம்பிக்கும். வெளியேற துடிக்கும். சீக்கிரம் ஸ்கலிதமாயிரும். இதனால் ஒன்ஸ் மோர். பல்வேறு காரணங்களால எண்ணிக்கை அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உடலுறவின் ஆழம் -காலம் குறையும். ஆழம் குறைஞ்சா செக்ஸால கிடைக்க வேண்டிய மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல ரீசெட் பட்டனை அழுத்தின எஃபெக்ட் ,ரிலாக்சேஷன் எதுவுமே பெரிசா கிடைக்காது.

இதுவரை ஜாதகம் இல்லாமயே, உங்க செக்ஸ் மற்றும் இதர பழக்க வழக்கங்களைக்கொண்டே உங்க ஜாதகத்துல சுக்கிரன வீக்கா ஸ்ட்ராங்கானு தெரிஞ்சிக்க சில வழிமுறைகளை சொன்னேன். இதுவே போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா?

வேண்டு கோள்:

நிறையப்பேரு “இதென்னங்க கண்டதுலயும் கில்மாவ கலந்து டீக்கடை பெஞ்சு மாதிரி ஒரு எழுத்து நடை”னு கேட்கிறாய்ங்க ( அதை விட நிறைய பேரு தூள் மா ..சூப்பர்மாங்கறாய்ங்க அது வேற கதை).

ஜோசியம்னா அது வயசாளிங்க சப்ஜெக்டுனு ஒரு இமேஜ் இருக்கு. அது தப்பு. வயசாளிங்க விஷயத்துல ஜோசியம் பார்க்கிறதுன்னா அது ஏற்கக்குறைய போஸ்ட் மார்ட்டம் பண்ற மாதிரி. ஆனால் “பசங்க” மேட்டர்ல டாய்க்னசிஸ் மாதிரி. ரெம்பவே யூஸ் ஃபுல். அதனால இளந்தாரிகளை இழுத்துப்போடத்தேன் இந்த சாக்லெட் பூச்சு.

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க? கமெண்ட் ப்ளீஸ்!

Advertisements

5 thoughts on “சுக்கிர(ல) பலமும் பலான யோகமும்

  vinoth said:
  February 18, 2011 at 10:54 am

  சோதிடம், சட்டம் மருத்துவம் இது மூணுமே பள்ளீ பாடமாக ஆகணும்..

   murugesan said:
   February 19, 2011 at 12:42 pm

   எதை பத்தியாவது மாணவர்களுக்கு வெறுப்பு வரணும்னா அதை பள்ளிப்பாடமாக்கிரனும்ங்கறது என் யோசனை.

   ஞானி சார் எழுதின பாலியல் தொடரை மத்திய ,மானில அரசுகள் மொழி பெயர்த்து இலவச வினியோகம் பண்ணா போதும்.

   படிக்காதவுகளுக்காக ஆடியோ வீடியோ. இதுக்கு போய் பள்ளி..பாடம்லாம் வேண்டாத வேலை பாஸ்!

  Sudharsan said:
  April 24, 2011 at 7:34 pm

  Excellent article.Everyone should read this.Hats off to your knowledge in astrology

   S Murugesan said:
   April 24, 2011 at 8:04 pm

   Sudharsan Sir,
   If you feel that it is excellent share it to your friends.Thank you for your compliments

  THEVAR said:
  May 1, 2011 at 8:20 pm

  அவர் லக்சரி, ஃபேன்சி, ஃபேன்டசி,காஸ்மெடிக்ஸ், டூர், ட்ராவல், நொறுக்கு தீனி விருந்து , பார்ட்டி, கெட் டு கெதர், வீடு,வாகனம்,தூக்கம்
  yes, volunteerly got a lot.
  some times I enjoyed.
  Travel and sleep I llike.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s