சுக்கிரனும் கில்மாவும்

Posted on

ஜோதிஷத்துல கில்மான்னாலே சுக்கிரன் தான். இன உறுப்பு, அதிலான சுரப்பு, விறைப்பு,புடைப்பு செயல்பாடு எல்லாத்துக்கும் இவர் தான் காரகர். வழக்கமா ஒவ்வொரு கிரகத்தோட காரகத்வம் என்னனு சொல்லி அதுக்கும் கில்மாவுக்கு என்ன சம்பந்தம்னு சொல்லி விலாவாரியா பதிவெழுதறது வழக்கம். இதே ரூட்ல நாளைக்கு இன்னொரு பதிவு போட்டா போச்சு காசா பணமா?

இன்னைக்கு ஜாதகத்துல அ கோசாரத்துல சுக்கிரன் யாருக்கு எங்கே யாரோட இருந்தா என்ன பலன்னு பார்ப்போம்.

ஜாதகம் உள்ளவுக அதை பக்கத்துல வச்சிக்கிட்டு படிங்க. லக்னம் முதல் வீடு. எண்ணும்போது க்ளாக் வைஸ் எண்ணுங்க. லக்னத்தோட சேர்த்து எண்ணுங்க.

ஜாதகம் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. டேட் ஆஃப் பர்த் இருந்தா ஆன்லைன்லயே ஃப்ரீயா ஜாதகம் போட்டுக்க நிறைய வெப்சைட்ஸ் இருக்கு. போட்டு வச்சுக்கிட்டு இந்த பதிவை படிங்க.

http:www.astroloka .com

http:www.freehoro .com

http:www.scientificastrology.com

டேட் ஆஃப் பர்த் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. இன்னைக்கு ( நீங்க படிக்கிற தினத்துக்கு) என்ன தேதின்னு பார்த்து மேற்சொன்ன வெப்சைட்ஸ்ல காலை 6 மணி நேரத்துக்கு ஜாதகம் போட்டு பக்கத்துல வச்சிட்டு படிங்க. இதை தற்கால கிரக நிலை, கோசாரம்னு சொல்வாய்ங்க. இதனோட இம்பாக்ட் டெம்ப்ரரி.ஆனா ஆராய்ச்சிக்கு உதவும். உடனடி லாட்டரி மாதிரி ரிசல்ட் தெரியும்.

இதை எல்லாம் அனலைஸ் பண்ண எந்த ராசிக்கு யார் அதிபதின்னு தெரிஞ்சிக்கிடனும். அப்பத்தேன் எந்த ராசிக்கு அதிபதி எங்கன இருக்காருனு பார்க்க உதவியா இருக்கும்.

லெஃப்ட் டாப்ல உள்ள ராசி மீனம் இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மேஷம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி ரிஷபம் இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி மிதுனம் இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி கடகம் இதுக்கு அதிபதி சந்திரன் அடுத்த ராசி சிம்மம் இதுக்கு அதிபதி சூரியன் அடுத்த ராசி கன்னி இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி துலா இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி விருச்சிகம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி தனுசு இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மகரம் இதுக்கு அதிபதி சனி அடுத்த ராசி கும்பம் இதுக்கும் அதிபதி சனிதான்.

இப்ப சுக்கிரனோட பல்வேறு நிலைகளை ,அது தரக்கூடிய பலனை பார்ப்போம்.

இவர் செவ்வாயோட சேர்ந்தாலோ , அ செவ்வாய் வீட்ல ( மேஷம்,விருச்சிகம்) உட்கார்ந்தாலோ, அல்லது சுக்கிரனோட வீடுகள்ள ( ரிஷபம்,துலா) செவ்வாய் உட்கார்ந்தாலோ என்ன நடக்கும்னு பார்ப்போம்.

சுக்கிரனுக்கும், செவ்வாய்க்கும் இடையில் பல முரண்பாடுகள் .
சுக்கிரன், காதல் ,கல்யாணம்,உடலுறவு இத்யாதிக்கு காரகர் – செவ்வாய், கத்தி குத்து,கொலை,விவகாரம் இத்யாதிக்கு காரகர்

சுக்கிரன்: இன உறுப்புக்கு காரகர் – செவ்வாய்: ரத்தக்கசிவிற்கு ,காரகர் ( பெண் விஷயத்தில் இது ஓகே. ஆணுக்கு நேர்ந்தால்? அட பெண்ணுக்கே என்றாலும் உடலுறவின் போது நிகழ்ந்தால்)

செவ்வாய்: கோபம்,அடி தடிக்கு காரகர் – சுக்கிரன்:தாபம், மோகம்,இத்யாதிக்கு காரகர்

ஆமா இவிகளுக்கிடையில் ஒற்றுமையே இல்லையா என்று கேட்டால் இருக்கிறது

செவ்வாய்: புரட்சி – சுக்கிரன் : திருமணம் (புரட்சி திருமணங்கள் நடக்கலாம்)

செவ்வாய்: போலீஸ் ஸ்டேஷன் சுக்கிரன்: திருமணம் போலீஸ் ஸ்டேஷன்ல திருமணம் நடக்கலாம் ( இந்த சேர்க்கை ரெம்ப உக்கிரமா இருந்தா தான் அங்கனயே ரேப் எல்லாம் நடந்துர்ரது)

செவ்வாய்: பூமி காரகர் சுக்கிரன் : கிருக (வீடு) காரகர்

செவ்வாய்,சுக்கிரனுக்கு இடையில் தொடர்பு ஏற்பட்டால் ( சேர்ந்தால், அவர் வீட்டில் இவர் இவர் வீட்டில் அவர் இருந்தால்,பார்த்தால் – செவ்வாய்க்கு தான் உள்ள ராசிக்கு 4,7,8 ஆம் ராசியை பார்க்கிற நேச்சர் உண்டு. சுக்கிரன் பாவம் ஒரே பார்வை தான் 7 ஆம் ராசியை பார்ப்பாரு) என்ன நடக்கும்னு பார்ப்போம்.

பெரும் போராட்டத்துக்கு பின் தான் சுகம் கிடைக்கும். சுகங்களுக்கிடையில் யுத்தம் வரும். இவர் திருமணம் கூட அனைவரையும் எதிர்த்துக்கொண்டு செய்யும் காதல் திருமணமாகவோ அ உறவினரில் ஒரு க்ரூப்புக்கு பிடிக்காது செய்த திருமணமாகவோ இருக்கலாம்.

உங்கள் திருமணம் அ காதலுக்கு உங்கள் சகோதரர்கள் வகையில் பெரும் எதிர்ப்பு தோன்றலாம் ( செவ் : சகோதரகாரகன்)

திருமணத்தின் போதே அடிதடிகள் நடக்கலாம். பதற்றம் நிறைந்த சூழலில் முதலிரவு நடக்கலாம். உ.ம் பெருந்தலைவர்கள் சாவு,பந்த்,கர்ஃப்யூ

மனைவியே கூட சில சந்தர்ப்பங்களில் இவருக்கு எதிரியாக திரும்பலாம். அல்லது எதிரி குடும்பத்தில் பிறந்தவராக இருக்கலாம் .அ திருமணத்துக்கு கணவர் தரப்பு உறவினர்கள் அனைவரும் விரோதிகளாகிவிடலாம். இன உறுப்பில் காயம் ஏற்படலாம். உடலுறவின் போது ரத்த கசிவு ஏற்படலாம்.

படுக்கையறையில் விபத்து ஏற்படலாம். மின் கசிவு ஏற்படலாம். தீ விபத்து நடக்கலாம்.

ரத்தம் வரும் அளவுக்கு அடிப்பட்ட நிலையில் உடலுறவு நிகழலாம் (ரேப்). இன உறுப்பில் கட்டிகள் வரலாம் ( சூ….ட்டு கட்டிதான் தலை !) , லூப்ரிகேட் ஆறதுக்கு மிந்தி அவசர திணிப்பால எரிச்சல், காயம் ஏற்படலாம். தோல் சிவக்கலாம். தடிக்கலாம்.

சுக்கிர கேது சேர்க்கை:

எந்த லக்னமானாலும் சரி மிகுந்த கேட்டை தரும் சேர்க்கை இது. சுக்கிரன் எதிர்பாலினர் மீதான கவர்ச்சி,அவர்களுடனான நட்பு,வீடு,வாகனம்,அறுசுவை உணவு,தூக்கம்,உடலுறவு இப்படி மனிதனுக்கு சுகம் தரும் எல்லா விஷயங்களுக்கும் அதிபதி சுக்கிரன். இவருடன் கேது சேருவது மேற்படி சுகங்களுக்கு தடை ஏற்படுத்துவதோடு இளமையில் இவற்றின் மீது அதீத கவர்ச்சியை ஏற்படுத்தி வாழ்வை சிக்கல்மயமாக்கும் வாய்ப்பு அதிகம். கேது என்பவர் சன்யாசத்தை தரும் கிரகமாவார். எனவே தம்பதிகள் (வேலை நிமித்தமோ அல்லது மன வேறுபாடு காரணமாகவோ) பிரிந்து வாழ நேரலாம். வாழ்வின் பிற்பகுதியில் ஏறக்குறைய சன்யாசியை போல் வாழ வேண்டி வரலாம்.

இந்த சுக்கிர கிரகம் சில லக்னங்களுக்கு பாவியாகிறார். மேசம், கடகம்,விருச்சிகம்,தனுசு,மீனம். அப்படியானால் இந்த லக்னக்காரர்களுக்கு செக்ஸ் கிடைக்காதா ? என்று கேட்டுவிடாதீர்கள். கண்ட நேரத்தில் கிடைக்கும். கிடைக்க வேண்டிய நேரத்தில் கிட்டாது ,கிடைக்க வேண்டியவர்களிடம் கிட்டாது, கிடைக்க வேண்டிய வயதில் கிடைக்காது என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை முடிவு செய்ய இன்னும் ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. பாவியான சுக்கிரன் இவர்கள் ஜாதகத்தில் 3,7,10 ஆகிய இடங்களில் அமைந்தாலோ 6 ஆமிடத்தில் அமைந்தாலோ இந்த நிலை மாறும். மேலும் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமித்தல் இத்யாதி நடந்தாலும் ஓகே.

இதர லக்னத்தாருக்கு இந்த சித்தாந்தத்தை அப்படியே உல்டா அடிக்க வேண்டியதுதான். அதாவது ரிஷபம்,மிதுனம், சிம்மம், கன்னி,துலா, மகரம்,கும்ப லக்ன காரவுகளுக்கு சுக்கிரன் 3,7,10ல அமைய கூடாது. 6 ல நிக்க கூடாது. சூரியனோட சேர்ந்து அஸ்தமிக்க கூடாது. அப்படி நடந்தா என்னாகும்னு பார்ப்போம்.

சுக்கிரன் 3:
3ங்கறது தைரிய ஸ்தானம். மொத மொத ஒரு குட்டிய கணக்கு பண்ணும்போது அட்வான்ஸ் ஆக வேண்டியது பையனோட டூட்டி. (இப்ப குட்டிங்கதான் அட்வான்ஸ் ஆகுதுனு கேள்வி).கசமுசா பண்றதுக்கும் ஒரு தில்லு வேணம். சுக்கிரன் பெண்கிரகம்ங்கறதால இந்த அமைப்பு உள்ளவங்களுக்கு தைரியமே வராது.

சுக்கிரன் 7:
7ங்கறது மனைவிய காட்டற இடம். இங்கே களத்திர (மனைவி) காரகனான சுக்கிரன் நின்னா என்ன தப்புன்னு கேப்பிக. குரு புத்திர காரகன். ஆனால் அவரு புத்திர பாவத்துல நிக்க கூடாது. நின்னா ஆண்குழந்தை கிடையாதுனு ஒரு ரூல்.7ங்கறது மனைவிய காட்டற இடம். ஸோ இங்கே களத்திர காரகனான சுக்கிரன் உட்கார கூடாதுங்கறது ரூல். இதனோட பலன் எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னா..

7ஆமிடத்துக்கு காரகத்துவம் வகிக்கும் கிரகம் சுக்கிரன். இவர் காரகத்வம் வகிக்கிற முக்கியமான சமாசாரம் உடலுறவு. ஸோ இந்த பாட்டிங்க ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் யாரா இருந்தாலும் அவிகளை பலான கண்ணோட்டத்துலயே பார்த்து பலான சமாசாரத்தையே மனசுல வச்சி குமைஞ்சிக்கிட்டிருப்பாய்ங்க.

ஒரு விசயத்தை மறுபடி மறுபடி அசை போட்டுக்கிட்டிருந்தா அந்த விசயத்துல தூள் கிளப்பிரலாம்னு நாம நினைக்கிறோம். ஆனால் செக்ஸ் விஷயத்துல எவனொருத்தன் அதை நினைச்சு உளப்பிக்கிறானோ அது அவனுக்கு பின்னடைவைத்தான் தரும்

ஏற்கெனவே பலதடவை சொல்லியிருக்கேன்..7 – 23 இந்த ரெண்டு நெம்பரை கரெக்டா ஞா வச்சுக்கிட்டா உங்க மேட்டர் சூப்பர் டூப்பர் ஹிட்டாயிரும். காரியத்துல இறங்கிற அந்த செகண்ட் வரை மேற்படி எண்ணமே இல்லாம இருந்தா தான் மேற்படி வித்யாசத்துல (16) நாலில் ஒரு பாகமாவது (4) பாலன்ஸ் பண்ண முடியும்.

இதனால சதா சர்வ காலம் மனசளவுல அதையே போட்டு உளப்பிக்கிட்டிருக்கிறவன் பெண்ண நெருங்கற சமயத்துல வீரியம் உறுப்பின் அடிபாகம் வரை வந்திட்டிருக்கும். இன்செர்ட் பண்ணதுமே வாந்தி தான். ஆட்டம் க்ளோஸ்.

ஒரு பெண்ணே கூட 24 மணி நேரம் தன்னை பலான கண்ணோட்டத்துலயே பார்க்கிறதுல சகிக்க மாட்டாள். ஆணோ பெண்ணோ இன உறுப்புல தான் வித்யாசம் உண்டே தவிர உணர்வுகள், வலி, ரசனை , மூட் மாற்றம், சில சமயங்களில் தனிமையை விரும்புதல், இப்படி எல்லாம் இரு பாலாருக்கும் பொதுவானது. அவள் தாய் தந்தையருக்கு மகளா, அண்ணனுக்கு தங்கையா, தம்பிக்கு அக்காவா, மாமியார் மாமனாருக்கு மருமகளா இப்படி தசாவதாரம் எடுத்து செயல்பட வேண்டியிர்க்கு. அவளுக்கு தூக்கம்,பசி எல்லாம் உண்டு.

இதனால இப்படி 24 மணி நேரமும் தன்னை பலான கண்ணோட்டத்துல பார்க்கிற அதுவும் செயலில் வீணனான ஆணை வெறுக்க ஆரம்பிச்சுருவாள்.

10ல் சுக்கிரன்:
பத்துங்கறது ஜீவன ஸ்தானம். செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம். நாம செருப்பை சனியன்னு சொல்லலாம். செருப்புகடைக்காரருக்கு? அழுக்கு துணியை தரித்திரம்னு சொல்லலாம் லாண்டரி காரருக்கு? அது தான் லட்சுமி.சுக்கிரங்கறது காதல், காமம்,உடலுறவை காட்டற கிரகம். எப்படிப்பட்ட ஸ்த்ரீ லோலனா இருந்தாலும் குளிக்காம கடைக்கோ, தொழில் செய்ற இடத்துக்கோ போகமாட்டான். ஆனால் பத்தில் சுக்கிரன் உள்ள பார்ட்டிங்க வேலை செய்ற இடத்துலயே பலான வேலையையும் பார்க்க ஆரம்பிச்சுருவாய்ங்க. இதனால என்ன ஆயிரும்னு கேட்கலாம்.

டாக்டர் நர்சை லவ் பண்ண வேண்டி வரலாம். எம்.டி. தன் பி.ஏவை லவ் பண்ண வேண்டி வரலாம். மேஸ்திரி சித்தாளை லவ் பண்ண வேண்டி வரலாம். அப்படி லவ் வரும்போது தொழில்ல கான்சன்ட் ரேசன் அடி வாங்கிரும். தொழில் நொடிச்சு போயிரும். தலைக்கு ஏறின காமம் இறங்கி வரும்போது அவளை பார்த்தா என்ன தோணும். என் அழிவுக்கு இவ தான் காரணம்னு ஒரு எண்ணம் வரும். அப்புறம் அவிக மத்தில எப்படி காதல் வரும்.

ஒர்க் வைல் ஒர்க் ப்ளே வைல் ப்ளேங்கற கட்டுப்பாடு இல்லாததால ரெண்டும் கெட்டான் பேரணாம்பட்டான் மாதிரி ஆயிரும்.

சுக்கிரன்+சூரியன்:
சுக்கிரன் சிற்றின்ப காரகன். சூரியன் ஆத்ம காரகன், சுய மரியாதைக்கு காரகன். அகந்தைக்கு காரகன். பகுத்தறிவுக்கு காரகன். சிற்றின்பத்தில் சுயமரியாதை, அகந்தைகளுக்கு இடம் கிடையாது. திருமணத்துக்கு முன்னான உறவில் ” ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே தடவை “என்பதே காரிய ஜெயம் தரும் மந்திரவார்த்தை.

கால படுக்கையிலிருந்து எழுந்து செல்லும் போது மனைவி (அந்த காலத்துலங்கண்ணா) கணவனின் காலை தொட்டு கும்பிட்டுவிட்டு போவாளாம். காரணம் என்னன்னா பலான மேட்டர்ல இவள் கால் அவன் தலை மேல பட்டிருக்கலாம், மார் மேல பட்டிருக்கலாம் (எப்படி பட்டிருக்கும்னு ரோசிச்சி பாருங்கண்ணா) அதுக்காக சொல்ற சாரி தான் கால தொட்டு வணங்கறது.

இதை எதுக்கு சொல்றேன்னா செக்சுல செல்ஃப் ரெஸ்பெக்டு வெங்காயத்துக்கெல்லாம் இடமே கிடையாது. தன்னை தான் தொலைக்கத்தான் செக்ஸ். ஆனால் இந்த சுக்கிர சூரிய சேர்க்கை கொண்ட பார்ட்டிகள் “அவளா கூப்பிடட்டும்னு இருக்கிறதோ, கெஞ்ச வேண்டிய நேரத்தில போடி ங்கொய்யாலனு எந்திரிச்சு போயிர்ரதோ கூட நடக்கும்.

இதுக்கு காரணம் என்னன்னா (லக்னம் துலா,ரிஷபமா இருந்தா இதுக்கு வாய்ப்பு அதிகம்) விந்து வறண்டிருக்கும். நீர் சத்து குறைவா இருக்கும். வறண்டு இருக்கிற விந்து பெருஸா அதை வெளி யேற்றனுங்கற உந்துதலை தராது. இதனால வந்தா வாடி வராக்காட்டி போடினு விட்டுருவாய்ங்க. இது படிப்படியா தாம்பத்ய உறவை மட்டுமில்லாம , கணவன் மனைவிங்கற ரிலேஷனுக்கும் ஆப்பு வச்சிரும். இதுக்கெல்லாம் பரிகாரம்:

கிரக‌ங்களுடன் சேரும்போது:
சூரியனுடன் சேர்ந்தால் விந்து ஊறாது. சந்திரனுடன் சேர்ந்தால் முன் கூட்டி ஸ்கலிதமாகும். ஸ்வப்ன ஸ்கலிதத்துக்கு சந்திரனே காரகர். செவ்வாயுடன் சேரும்போது பிறப்புறுப்பில் கொப்புளம்,எரிச்சல்,காயம் ஏற்படலாம். புதனுடன் சேரும்போது அரிப்பு, ராகு ,கேதுவுடன் சேரும்போது விஷப்பூச்சிகளால் பிறப்புறுப்பில் பாதிப்பு ஏற்படும்

குருவுடன் சேரும்போது மதிப்பிற்குரிய பெண்களிடம் வாலை ஆட்டச்செய்து வாங்கி கட்டிக்கொள்ளும்படி செய்வார். சனியுடன் சேர்ந்தால் நொண்டி ,முடம், வீட்டு வேலைக்காரியுடன் சரசமாடச்செய்வார்.

நவதுவாரங்கள் தான் நவகிரகங்கள். சுக்கிரன் ஜன்மேந்திரியத்துக்கு காரகர். இளமையில் சுக்கிர தசை வந்தால் பிஞ்சில் பழுத்து ஜாதகன் நாசமாவான். எனவே தான் குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் என்று ஜோதிட பழமொழி கூறுகிறது.

சுய இன்பத்துக்கு காரணம் : சுக்கிரன் லக்கினாதிபதியுடன்(ஜாதகரை காட்டுமிடம்) சேர்வது,1+12,1+7 போன்ற காம்பினேஷன் கள் காரணமாகும்

பரஸ்த்ரீ மோகம்:
1,7 ல் அநேக கிரகங்கள் இருப்பது. சுக்கிரனுடன் அல்லது சப்தமாதிபதி,அல்லது சுக்கிர‌ன் நின்ற இடத்ததிபதியுடன் அநேக கிரகங்கள் சேருவதும் பரஸ்த்ரீ மோகத்துக்கு கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்

3 thoughts on “சுக்கிரனும் கில்மாவும்

  shakthi. said:
  February 16, 2011 at 3:12 am

  kalakkitinga sir…..

  vishva said:
  June 23, 2011 at 12:30 pm

  this details exactly correct, and thanks 4 you, please send more detail about lagna dhanush.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s