2011 குரு பெயர்ச்சி பலன்

Posted on

2011,மே 8 முதல் மேஷத்துல சஞ்சரிக்கப்போற குரு எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலனை தரப்போறாருனு பார்ப்பம்.
1.மேஷம் :குரு பெயர்ச்சி பலன் 2011
விரயாதிபதியான குரு ஜன்மத்துக்கு வரப்போறாரு. செலவுகள் கழுத்தை பிடிக்கும். ரோசனை அதிகமாயிரும். கேஸ் ட்ரபுள் வரும். ஞா.மறதி சாஸ்தியாயிரும் டேக் கேர். குருவுக்கு பாக்யாதிபத்யமும் உள்ளதால அப்பா,அப்பா சொத்து தொடர்பான மேட்டர்லயும் பிரச்சினைகள் வரலாம். ஒரு சிலர் பாகப்பிரிவினை,சொத்து விற்பனைக்கு கூட இறங்க வேண்டி வந்துரும். திரைக்கடலோடி திரவியம் தேடுனுட்டு சிலர் தூர தேசம் போகவும் வாய்ப்பிருக்கு. ஆனால் கண்ட கண்ட ட்ராவல் ஏஜெனசி காரன் கிட்டே மாட்டி ஷெட் ஆயிரவும் சான்ஸ் இருக்கு.

2.ரிஷபம் :குரு பெயர்ச்சி பலன் 2011
மேஷம் உங்களுக்கு விரய ஸ்தானம். இவர் 12ல மறையறது ஒரு வகையில நல்லதே. இவருக்கு அஷ்டமாதிபத்யமும் இருக்கிறதால ஆயுள் கூடும். சிலருக்கு பெரிசா வைத்திய செலவு தலையில வந்து விடியலாம். செலவுகள் வரும். இருந்தாலும் சுப செலவுகள் தான். செலவுன்னு நினைச்சதும் பணம் காசு வரும். வாரி விட்டுராதிங்க. அப்பாறம் குரு ஜன்மத்துக்கு வரச்ச ஊரை விட்டு ஓடவேண்டி வரும்..அக்கா,அண்ணாவுக்கு சிக்கல் வரலாம் .அல்லது அவிகளால உங்களுக்கு சிக்கல் வரலாம் .சின்ன கசப்பு உறவையே கூட பிரிச்சுரலாம்.

3.மிதுனம்:குரு பெயர்ச்சி பலன் 2011
இதுக்கு மின்னாடி பத்துல நின்ன குரு பதவிய பறிச்சாரு. அவரே இந்த முறை 11ல வந்திருக்கிறாதால பதவியை தருவாரு.டோன்ட் ஒர்ரி.இவருக்கு சப்தமாதிபத்யமும் இருக்கு. நீங்க அன் மேரீடா இருந்தா கண்ணாலம் அமையலாம். அதுக்கு பின்னாடி நாலுல இருக்கிற சனி உள் நாட்டு யுத்தத்தை தரவும் வாய்ப்பிருக்கு. திருமணமானவர்கள் விஷயத்துல தம்பதிகள் இடையில் ஒற்றுமை பலப்படும். ஒரு சிலர் சின்ன வீடு அது இதுனு கச முசா பண்ணி மாட்டிக்கவும் வாய்ப்பிருக்கு. பார்ட்னர்ஷிப்ல உள்ளவுக மேட்டர்ல பார்ட்னரோட உதவி கிடைக்கும்.

4.கடகம்: குரு பெயர்ச்சிபலன்கள் 2011

இந்த தாட்டி குரு வர்ர மேஷம் உங்களுக்கு ஜீவனஸ்தானம்.பத்துல குரு வந்தா பதவி பறிபோகும்பாய்ங்க. உங்க ராசிக்கே உரிய சஞ்சல ஸ்வபாவம் காரணமா சாதாரணமாவே ஒரு வேலையில நிலைக்கிறது கஷ்டம். இதுல 10 ல குரு வேற .டேக் கேர். அதே சமயம் தர்ம கர்மாதிபதி யோகம் அமையுது. இதனால பேர் புகழோட , வருமானமும் கிடைக்கும்.அப்பா,அப்பா சொத்து,அப்பாவோட ரிலேஷன், தூர பிரயாணங்கள், பப்ளிஷிங், ப்ளாகிங், சேமிப்பு இத்யாதி மேட்டர்ல நஷ்டமடைய வாய்ப்பிருக்கு. இவருக்கு சஷ்டமாதிபத்யமும் இருக்கிறதால மேற்படி விஷயங்கள்ள அப்பப்ப கடன், நோய்,வழக்கு விரோதங்களையும் சந்திக்க வேண்டி வரலாம்.இதுவரை வேலை கிடைக்காதவுகளுக்கு நற்செய்தி பத்துல வந்த தான் பறிக்கவாச்சும் ஒரு பதவியை தருவாரு குரு. வந்தது பறிபோகாம இருக்க இந்த பதிவோட கடைசில கொடுத்த பரிகாரங்களை செய்ங்க.

5.சிம்மம்:குரு பெயர்ச்சி பலன் 2011
குரு பாக்கியத்துல வர்ராரு. அஷ்டமாதிபதி பாக்கியத்துல வர்ரது அப்பா,அப்பாவழி சொத்து,தூர தேச முயற்சிக்கெல்லாம் நல்லதில்லை.ஆனால் குரு பலம் வர்ரதால டைம் கீப் அப் பண்ணலாம். பெரி மன்சன் எல்லாம் டச் ஆவாய்ங்க.தங்கம், ரொக்கம் வந்து சேரும்.ஒரு மரணமோ அ மெடிக்கல் பில்லோ பட்ஜெட்டை தாறுமாறாக்கிரும்.. குருவுக்கு பஞ்சமாதிபத்யமும் இருக்கிறதால குழந்தை வரம் கிடைக்கலாம். அதிர்ஷ்ட வசமா ஒரு சொத்து உங்க பேர்ல பதிவாகலாம். (பினாமியா இருன்னா ஒத்துக்கிடாதிங்க) உங்க புத்தி கூர்மையால பைசா வரும்.உங்க பேரும் புகழும் ரெம்ப தூரத்துக்கு பரவும் (இதானே உங்க லைஃப் டைம் ப்ராஜெக்டு)

6.கன்னி: குரு பெயர்ச்சிபலன்கள்2011
இந்த தாட்டி குரு வர்ர மேஷம் உங்களுக்கு அஷ்டமஸ்தானம்.இவரு உங்களுக்கு 4,7 க்கு அதிபதி. எட்டுல மாட்டறார். இது தாய், மற்றும் மனைவிக்கு கொஞ்சம் கூட நல்லதே இல்லை. அவிகளை பிரிய வேண்டி வரலாம். வீடு ,வாகன வகையிலயும் சிக்கல்,நஷ்டம் வரலாம்.( வீடு – மாறவேண்டி வரலாம் /ரிப்பேர் பண்றேனு இறங்கி செலவை இழுத்துவிட்டுக்கலாம் -வாகனம் திருடு போகலாம் – யாராவது உங்க வண்டிய தேடிவந்து இடிச்சு சாகவும் வாய்ப்பிருக்கு. பேசாம பஸ்ல போங்க பாஸ். ) மாணவர்களுக்கு படிப்பு தண்ணி காட்டும். காசு,பணம்,ரொக்கம் திருடு போகலாம். சாக்கிரதை. புகைபப்ழக்கம் உள்ளவர்கள் (45க்கு மேல் வயதுள்ளவர்கள்) குறைக்கவும் -முக்கியமா டென்சன் வேலைக்காகாது .விபரீதத்துல கொண்டு விட்டுரப்போகுது.

7. துலா:குரு பெயர்ச்சி பலன் 2011
3,6 க்கு அதிபதியான குரு 7 க்கு வர்ரது வர்ரது நல்லதில்லை. லவர்/வைஃபோட மனத்தாங்கல் வரலாம். அவிகளுக்கு ஹெல்த் ட்ரபுள் கொடுக்கலாம். நிச்சயமான கண்ணாலம் தள்ளிப்போகலாம்/ நின்னுப்போகலாம். மனைவிக்கு அல்லல் அலைச்சல் அதிகமாகும். ஆனால் பொதுவிதிப்படி குரு பலம் உள்ளதால டைம் கீப் அப் பண்ணலாம். பெரி மன்சன் எல்லாம் டச் ஆவாய்ங்க.தங்கம், ரொக்கம் வந்து சேரும். ஏழில் உள்ள குரு ஜன்மத்தை பார்க்கிறதால ரொட்டேஷன் சக்கரவர்த்தியான நீங்களே சேமிக்கத்துவங்கினாலும் துவங்கலாம். உங்க மனைவியோட பொறுமை, நற்குணங்கள் உங்களை ஆச்சரியத்திலாழ்த்தும்.

8.விருச்சிகம் : குரு பெயர்ச்சிபலன்கள் 2011
இந்த தாட்டி குரு வந்து உட்கார்ர மேஷ ராசி உங்களுக்கு ஆறாவது இடம். 2/5 க்கு அதிபதியான குரு ஆறாவது இடத்துக்கு வர்ரது தனம்,வாக்கு ,குடும்பம் , கண்கள் வகையில நஷ்டம்,சிக்கல்,கலகம், நோய் ஆகியவற்றை தரலாம். பேசிக்கலாவே காரியம் பெரிசா வீரியம் பெரிசான்னா வீரியம் தான் பெருசுங்கற பார்ட்டி நீங்க இதுல வாக்குஸ்தானாதிபதியான குரு வேற ஆறுல வர்ராரு. வீண் பேச்சு வேண்டாம். விரோதம் வரும். எல்லாரையும் எதிர்த்து வாதம் பண்ண ஆரம்பிச்சுருவிங்க. கடன் வாங்க வேண்டி வரலாம். குழந்தைகளின் போக்கில் அதிர்ச்சிகர மாற்றம் தெரியும்.

9.தனுசு:குரு பெயர்ச்சி பலன் 2011
உங்களுக்கு லக்னாதிபதியான குரு புத்தி,பெயர்,புகழ் ,பிள்ளைகள் ஆகியவற்றை காட்டும் அஞ்சாமிடத்துக்கு வர்ரதால புத்தி Topaz ப்ளேட் மாதிரி வேலை செய்யும். ரெம்ப அறுக்காதிங்க.சுப கிரகமான குரு பெயரையும் புகழையும் தானே தருவாரு. அவசரப்பட்டு அதை தேடி நீங்க போயிராதிங்க. பிள்ளைகளுக்கும் காலா காலத்துல நடக்கவேண்டியதெல்லாம் நல்லபடி நடக்கும். டைம் கீப் அப் பண்ணலாம். பெரி மன்சன் எல்லாம் டச் ஆவாய்ங்க.தங்கம், ரொக்கம் வந்து சேரும். பூர்வ ஜன்மத்து புண்ணியம்லாம் வந்து ஒர்க் அவுட் ஆகும்ங்கற போது வாரா கடன் ஒன்னு வசூலாகிறது பெரிய விஷயமா என்ன? வாடகை வீடாவே இருந்தாலு பெட்டர் ஃபெசிலிட்டீஸ் கிடைக்கும். சிலர் சொந்த வீடும் கட்டலாம்.

10.மகரம்:குரு பெயர்ச்சி பலன் 2011
3,12 க்கு அதிபதியான குரு 4ல வராரு. நாலுன்னா தாய்,வீடு,வாகனம்,கல்வி . இந்த வகையில எல்லாம் அல்லல் அலைச்சல், செலவுகள் வரும்.இவரு ராஜ கிரகங்கறதால அரசால கூட சிக்கல் வரலாம்.தங்கச்சி தம்பிக்கு சிக்கல் வரலாம் .அல்லது அவிகளால உங்களுக்கு சிக்கல் வரலாம் .சின்ன கசப்பு உறவையே கூட பிரிச்சுரலாம்.வீடு மாறவேண்டி வந்தா மாறிடுங்க. ரென்ட் கண்ட்ரோலருக்கு கம்ப்ளெயின் பண்றதெல்லாம் வேணா. ட்ராஃபிக் கான்ஸ்டபிள் கிட்டே மாட்டினா ஃபைன கட்டித்தொலைங்க. ஒரு விபத்து தவிர்க்கப்படும். இதயத்துல படபடப்பு அதிகமாகும். பிராணயாமம் பண்ணுங்க. ரெம்ப அலட்டிக்காதிங்க. சாதாரணமா நீங்க அவ்ள சீக்கிரம் ரெஸ்பாண்ட் ஆகமாட்டிங்க. அதையே ஃபாலோ பண்ணிருங்க.

11.கும்பம்: குரு பெயர்ச்சி பலன் 2011

உங்களுக்கு குரு 2/11 க்கு அதிபதி இவர் 3ல வர்ரது நல்லதில்லை.இவரு பிராமண கிரகம்ங்கறதால மனசுல கோழைத்தனம் சாஸ்தியாயிரும். உடன் பிறப்புகள் காரணமா செலவு கூடலாம்.அவிகளோட பிரச்சினை வரலாம். குறைந்த தூர பிரயாணங்கள்ள அல்லல் அலைச்சல் அதிகரிக்கும். மனசுல இனம் புரியாத பயம் வந்துரும். இவருக்கு லாபாதிபத்யமும் உள்ளதால திகில் ,டர்ரு டபுளாகும். டைம் கீப் அப் பண்ணமுடியாது. காசு பணம் நேரத்துக்கு கிடைக்காது. இதையெல்லாம் முன் கூட்டியே சொல்றதால அதுக்கேத்தாப்ல ப்ளான் பண்ணுங்க. பிரச்சினை அதிகமா இருந்தா இந்த பதிவின் கடைசில சொல்லியிருக்கிற பரிகாரங்களை செய்ங்க.

12.மீனம் : குரு பெயர்ச்சி பலன் 2011
லக்ன, ஜீவனாதிபதி தனபாவத்துல வர்ரது நெல்லதுதான் பாஸ். இதனால எம்.ஜி.ஆர் ரேஞ்சுல முகம் காட்டினால் ஆயிரம் ஓட்டுக்கள் கணக்கா வேலைங்க ஆகும். தொழிலும் உங்க வாக்குவன்மையால டெவலப் ஆகும். சாதாரணமா எம்.ஜிஆர் வேலைகள் சாஸ்தி செய்விக. இந்த குரு நீங்க பிரதிபலன் எதிர்பார்க்காம செய்யற வேலைகளுக்கு கூட உரிய கூலியை கொடுத்துருவாருன்னா பாருங்களேன். வருமானம் சாஸ்தியாகும்,குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கொடுத்த வாக்கை நிறைவேத்தற சந்தர்ப்பம் வரும். .உங்க பேச்சுக்கு சனம் அப்படியே மயங்கும். நல்ல பலன் அதிகரிக்க வியாழக்கிழமை எவரேனும் குருவுக்கு விரதமிருங்க.

குருவோட காரக்த்வம்: ( குருவோட பேட்டை)

ஆருக்கெல்லாம் குரு அனுகூலமா இருக்காரோ அவிக இந்த பேட்டையில புகுந்து விளையாடலாம். ஆருக்கெல்லாம் குரு சரியில்லையோ அவிக இந்த பக்கம் ஒதுங்காம இருக்கிறது நல்லது.

(குருவே சொல்றாருங்கோ.. ) நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

குருவுக்குரிய பரிகாரங்கள்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

Advertisements

21 thoughts on “2011 குரு பெயர்ச்சி பலன்

  Kannan said:
  February 15, 2011 at 1:52 am

  Your blog id good.

   S Murugesan said:
   February 15, 2011 at 8:16 am

   கண்ணன் அவர்களே,
   பாராட்டுக்கு நன்றி. லைஃப் ஈஸ் ஆக்சிடெண்ட் இதுல எல்லாமே ஆக்சிடெண்டலா அமையறதுதானே

  வீரப்பன் said:
  February 16, 2011 at 8:55 pm

  //5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்// ஏன் மற்ற சாதி நண்பர்களுக்கு போட்டா குரு பரிகாரம் ஆகாதா?
  அனுபவம் பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடசொல்லுதோ?
  பிராமணன் தான் குருவாக இருப்பான் என்ற பழைய கருத்தாக்கத்தின் படி பிராமணர்களால் இது சொல்லப்பட்டிருக்கலாம். அனுபவ சோதிடமும் அப்படி சொல்லலாமா? பிராமணர்கள் தான் குரு என்பதை அனுபவ சோதிடம் சொல்கிறதா?

   S Murugesan said:
   February 17, 2011 at 2:00 am

   அண்ணா,
   வணக்கங்கண்ணா..ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு சாதி இருக்குங்கண்ணா. எந்த கிரகம் சரியில்லையோ அந்த சாதிக்காரனுக்கு சாப்பாடு போடலாங்கண்ணா. ஆனா “அவாள்” எந்த கிரகம் சரியில்லின்னாலும் எனக்கே அரிசி கொடு , வேட்டி கொடு, என் பொஞ்சாதிக்கு புடவை கொடுன்னிட்டிருந்தாங்கண்ணா அதை மாத்தி சனி சரியில்லன்னா தலித், புதன் சரியில்லின்னா வைசியனுக்கு கொடுனு மாத்தினோங்கண்ணா. நீங்க சொல்றதும் கரீட்டுதாங்கண்ணா

   இனி வாத்தியாருக்கு /வித்தை கத்துக்கொடுத்த குருவுக்குனு மாத்திரலாங்கண்ணா

  balajikannan said:
  February 18, 2011 at 1:12 pm

  இனி வாத்தியாருக்கு /வித்தை கத்துக்கொடுத்த குருவுக்குனு மாத்திரலாங்கண்ணா i accept your honour

   S Murugesan said:
   February 18, 2011 at 3:03 pm

   பாலாஜி கண்ணன் !
   வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

  syed said:
  March 21, 2011 at 6:47 pm

  oru chinna kulappam naan virchiga lagam , danusu raasi
  rendukkum guru peyarchi different type palangal pottirukku
  naan enda palanai kanakku panrudu?

   S Murugesan said:
   March 21, 2011 at 8:16 pm

   சையத்,
   லக்னம் உடலை காட்டும். ராசி மனதை காட்டும். 30 வயசுக்கு முந்தி உடம்பு ஆதிக்கம் செலுத்தும்.அப்பாறம் மனசு. இது ஒரு விதி.

   ஆனால் இது மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.

   60 வயசுல ரேப் பண்ற பார்ட்டியெல்லாம் இருக்கே. அவிக லக்னத்தைதான் பார்க்கனும். மத்தவுக 30க்கு மேல ராசிய பார்த்துக்கலாம்.

   இன்னொரு விதி லக்னாதிபதி வலுப்பெற்றாரா? ராசியாதிபதி வலுப்பெற்றாரா பாருங்க. யார் வலுப்பெற்றிருந்தா அவரோட இன்ஃப்ளுயன்ஸ் தான் அதிகமா இருக்கும்.

  Thalabathy Nagaraj said:
  March 24, 2011 at 5:19 pm

  En rasi mesham. Lgnam Thulam. Date of birth : 05-06-1956.

  Indha Guru Peyarchi Eppadi Irukkum?

   S Murugesan said:
   March 25, 2011 at 2:27 am

   த. நாகராஜ்,
   மே 8 வரை சுப செலவுகள். பிறகு இடமாற்றம்.

  Thalabathy Nagaraj said:
  March 24, 2011 at 5:21 pm

  How to type in tamil?

   S Murugesan said:
   March 25, 2011 at 2:24 am

   த. நாகராஜ்,
   இது தொடர்பாக நம்ம வினோத் இதே வலை தளத்தில்
   தனிப்பதிவே போட்டிருக்கார்.பாருங்க

  muthu said:
  April 27, 2011 at 2:56 pm

  நீங்க சிம்ப்ள சூப்பரா எழுதிருக்கிங்க … வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்… உங்கள் சேவை தொடரட்டும் …

  🙂

  Ganapathy said:
  April 28, 2011 at 3:41 pm

  என் ராசி தனுசு. லக்னம் கும்பம். பிறந்தநாள்: 30 – 05 – 1964 .

  இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் ?

   S Murugesan said:
   April 28, 2011 at 6:02 pm

   கணபதி சார்,
   ரிசர்வ் பேங்க் கவர்னர் கிட்டே சில்லறையா அம்பது கை மாத்து கேட்டாப்ல இருக்கு உங்க கேள்வி. முதலும் க்டைசியுமா பதில் சொல்லிர்ரன். நல்லாவே இருக்கும். அறிவு மிகும் – வாரிசுகள் தோன்றுவர்/ நல்ல நிலைக்கு உயர்வர்/அதிர்ஷ்டம் கதவை தட்டும்/பொன்,பொருள் சேரும்/பேர் புகழ் வரும்.

   வேண்டு கோள்:
   நம்ம சைட் ஒரு லேப் மாதிரி இங்கன சொந்த ஜாதகம் பற்றிய கேள்விகளை கேட்பதை தவிர்த்தால் நல்லாருக்கும்னு நினைக்கிறேன். சுகுமார்ஜி, கிருமி, புரட்சிமணி , கந்தன்,வினோத்,ஷக்தி எல்லாம் என்ன நினைக்காய்ங்க தெரியலை

  Name said:
  May 11, 2011 at 1:20 pm

  intha mathiri kevalamana tamil unala mattum than pesa mudium.thayavu seithu guru peyarchi nu solli makala emathathe,unoda ganippu padu mattama erruku. neeyellam oru allu nu onkite poi jathagam kekuranga chiii.

  sakthi said:
  May 14, 2011 at 9:05 am

  hai you are very good predictor
  Thank you

  sakthivel said:
  May 14, 2011 at 9:08 am

  hai my rasi is meenam, star revathi, lagnam mithunam i am a bcs graduate can i get government job?

   S Murugesan said:
   May 14, 2011 at 12:49 pm

   சக்திவேல்,
   உங்க முழு ஜாதகத்தை பார்த்தா ஓரளவு சொல்லமுடியும். ஒர்க் அவுட் பண்ணி அதனோட லிங்கை சபையில வைங்க. ஆருனா சொல்லிருவாய்ங்க.

  Namekannappa said:
  May 20, 2011 at 10:31 am

  Message yen jathakaththil guru Lagnaththukku(kadakam) 7 il neesam -yenna palan kidaikalam barigaram yenna seailam please

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s