காதலர் தின ஜோதிட டிப்ஸ்

Posted on

காதலை என்னதான் தெய்வீகம் அது இதுனு தூக்கிப்பிடிச்சாலும் காதலுக்கு அடிப்படை கவர்ச்சிதேன். ஆண் மேல பெண்ணுக்கு கவர்ச்சி ஏற்படனும்னா அந்த ஆணுக்கு கட்டாயம் சனி நல்ல இடத்துல நிக்கனும். சனி பிடிச்சவனை பார்த்தா “ஏம்பா இந்த சூட்கேசை தூக்கிட்டு வரயா”னு தான் கேட்கத்தானே தோனும்.(சனி – லேபர்)

சனியை பொருத்தவரை மன்சாளை ரெண்டு வகையா பிரிக்கலாம். சனி அனுகூலமா உள்ளவுக. சனி பிடிச்சவுக. சனி அனுகூலமா உள்ளவனுக்கு சனிபிடிச்சவன் பயிட்டு தூக்கவேண்டியதுதான்.

ஒரு காதல் ஜோடி பீச்ல உட்கார்ந்திருக்கும். அதுல காதலனோ,காதலியோ ஆரோ ஒருத்தர் தேன் எந்திரிச்சு போய் திங்க எதையாவது வாங்கிட்டு வருவாய்ங்க. அப்படி எந்திரிச்சு போறவன் /வள் ஆரோ அவளுக்கு சனி பிடிச்சிருக்குனு அர்த்தம்.

சனி அனுகூலமா உள்ளவுக நூத்துக்கணக்குல சேர்ந்து ஒரு காரியத்தை செய்யலாம். பிரச்சினை வராது. ஆனால் சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க.

ஆக ஆருக்கெல்லாம் சனி அனுகூலமா இருக்காரோ அவிக மட்டும் லவ்ஸ் பண்றது பெட்டர். அதை விட்டுட்டு ஏழரைல, அர்தாஷ்டமத்துலன்னு சனி பிடிச்ச நேரம் லவ்ஸ் பண்ணா பயந்து பயந்து பண்ணனும் ( இங்கே காதல் வந்தது உங்க சுதந்திரத்தை கொல்ல – இந்த லவ் மேட்டர் ஆருக்கெல்லாம் லீக் ஆகுது அவிகளுக்கெல்லாம் பயந்து சாகனும் – சனி பிடிச்சவன் அடிமையாதான் வாழனும்)

மேலும் சனி பிடிச்ச நேரத்துல லவ்ஸ் பண்றிங்கனு வைங்க ஏற்கெனவே சொன்னாப்ல சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க. இந்த மாதிரி கிராக்கிங்கதான் மத்தில கழண்டுக்கறது ஆசிட் அடிக்கிறது , கத்திக்குத்துக்கெல்லாம் இறங்கிரனும் ( இவன் ஸ்டேஷன்ல போய் கை கட்டி நிக்கனுமே – சனி பிடிச்சா நீங்க விசிட் பண்ணியே ஆகவேண்டிய இடங்கள் சிலது இருக்கு போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு ,சுடுகாடு. டேக் கேர்!)

எதிர்பாலினரோட நெருக்கம், இதம்லாம் கிடைக்கனும்னா சனி பலம் நிச்சயம் தேவை. சனி பலம் இல்லாத சமயம் , இதர கிரகங்களோட பலத்தால (உ.ம் குரு, சுக்கிரன்) மேற்படி நெருக்கம், இதம் கிடைச்சாலும் டிக்கெட் இல்லாம சினிமா பார்த்துக்கிட்டிருக்கிற மாதிரி தான். படக்குனு தியேட்டர்காரன் டார்ச் சகிதம் செக்கிங்குக்கு வந்தான்னா அவமானம் தேன்.

இன்னொரு மேட்டர் , காதல் பிறக்கிற சமயம் சனி அனுகூலமாயிருந்தா போதும்.. அப்பாறம் சனி பிடிச்சாதேன் சிக்கல் வரும் -அந்த சிக்கலை தாங்கி காதல் நின்னாதான் அது உண்மையான காதல் – விவகாரம் கண்ணாலத்துல முடியும். பெண்ணுக்கு சனி பிடிச்சாதான் அவள் ஒழுங்கா குடும்பம் நடத்துவாள். ஆணுக்கு சனி பிடிச்சாதான் பொஞ்சாதி அருமை தெரியும்.

சில ஜோடிகளை பார்த்திங்கனா லவ்ஸ் பண்ணுவாய்ங்க பண்ணுவாய்ங்க பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் படக்குனு ஒரு நாள் சுமுகமா பிரிஞ்சுருவாய்ங்க. இன்னாடா மேட்டருன்னா அவிகளுக்கு காதல் வந்தப்பயும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு. லவ்ஸ் பண்ண காலம்லாமும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு.

சனி அனுகூலமா உள்ளவளுக்கு சனி தொடர்பான வேலைகள் செய்யவேண்டிய அவசியம் கிடையாது ( ஐ மீன் பயந்து நடக்கிறது -மாமனார் மாமியாருக்கு -அடிமையா இருக்கிறது -கணவனுக்கு) ஆனால் எதிர்பாலினனால இதம் கிடைக்கனும். கிடைச்சுருச்சு.

ரெண்டு பேருக்கு சனி அனுகூலமா இருந்தா ஓகே. ரெண்டு பேருக்கும் சனி பிடிச்சிருந்தா நாட் ஓகேன்னு சொன்னேன். ( ஆனால் இந்த காதல் கண்ணாலத்துல முடிஞ்சாதேன் அது உண்மையான காதல்) . ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு சனி அனுகூலமா இருந்து – ஒருத்தருக்கு சனி பிடிச்சிருந்தா என்னாகும்னு கேப்பிக சொல்றேன்.

துஷ்யந்தன்,சகுந்தலை கதை தெரியும்ல. அவரு பாட்டுக்கு அஜால் குஜால் பண்ணிட்டு பூட்டாரு. இவள் மாட்டிக்கிட்டா. அப்ப துஷ்யந்தனுக்கு சனி அனுகூலம், சகுந்தலைக்கு சனி பிடிச்சிருந்திருக்கனும். சனி பிடிச்ச நிலைல லவ்ஸ் பண்ற பெண் குட்டியோட நிலையும் இதான்.

சந்தனு சத்யவதி கதை தெரியும்ல. அவள் பாட்டுக்கு இவர் மனசுல மோகத்தீயை கிளப்பி விட்டுட்டு பூட்டா. இவரு கையேந்த , அவள் கண்டிஷன் போட. சனி பிடிச்ச நிலைல லவ்ஸ் பண்ற ஆணோட நிலையும் இதுதான்.

ஆரை லவ்ஸ் பண்றது?
காதல் என்பது விட்ட குறை தொட்ட குறையாய் வருவதாகும். கர்ம வாசனை என்று யோக நூல்கள் குறிப்பிடும் கடந்த பிறவியின் ஞாபகங்கள் தொடர்ந்து வந்து காதலில் வீழ்த்துகின்றன. நீங்கள் யாரை அடையவேண்டுமோ அவரை காதலித்து விட்டால் வம்புமில்லை,வழக்குமில்லை. தண்ணீர் பள்ளத்தை சென்றடைவது போல் காதல் கை கூடும். கவிஞர்கள் கூறும் ராஜ சுகம் கிடைத்து விடும்.

யதார்தத்தில் பார்க்கும் போது யார் யாரால் நரகத்தை அனுபவிக்கவேண்டுமோ அவரைத்தான் காதலிக்கிறார்கள். தாங்கள் நரகவேதனை அனுபவிப்பதோடு தங்களை சேர்ந்தவர்களையும்நரகத்தில் தள்ளுகிறார்கள்.

சரி யாரை காதலித்தால் ராஜ சுகம் என்று எப்படி அறிவது?அது ரொம்ப ஸிம்பிள்! உங்கள் இயற்கை தத்துவத்தை சமூகம் கற்பித்த அகந்தை மறைத்து நிற்கிறது. அந்த அகந்தை உங்களை தவறான துருவத்துக்கே இழுக்கிறது. இதை புரிந்து கொண்டால் போதும் உங்கள் காதலர்/காதலியை வெகு எளிதாக தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு யாரைப் பார்த்தால் நவத்துவாரங்களும் எரிகிறதோ அவர்களை அடையத்தான் இந்த பிறவியை எடுத்துள்ளீர்கள்.

யாரைக் கண்டதும் சுவர்க வாசம் சாத்தியம் என்று தோன்றுகிறதோ அவர் தான் உங்கள் நரகத்துக்கான நுழை வாயில். (உபயம்: ஓஷோ + சுயானுபவம்)

காதலில் வெற்றிக்கு முதல் வழி ஜாதகம், பொருத்தம் பார்த்து காதலிப்பதுதான். காதல் திருமணங்களை கந்தர்வ மணம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. இவ்வகை திருமணங்களுக்கு பொருத்தம் பார்க்க தேவையில்லை என்றும் கூறுகிறது.

ஆனால் இன்றைய காதல் திருமணங்கள் விட்டகுறை தொட்ட குறையாக போன ஜென்ம பந்தங்களின் தொடர்ச்சியாக ஏற்பட்டால் இவ்விதி பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால் இப்போதைய காதல்களில் 99.9 சதவீதம் இனக்கவர்ச்சி, காதலன்/காதலியின் பொருளாதார வளர்ச்சி கருதியே ஏற்படுகின்றன. எனவே இவற்றிற்கு கூட பொருத்தம் பார்த்து மணப்பதே நல்லது.

சொந்தத்தில் திருமணம் குதிரும்போது பொருத்தம் பார்க்க தேவையில்லை என்றொரு பிரச்சாரமும் உள்ளது. (ஏண்ணே சொந்த அத்தை/மாமன்/அக்கா பொண்ணு விஷம் வச்சா சாகமாட்டோமா?) அது தவறு. பொருத்தம் பார்த்தே ஆகவேண்டும்.

திருமண பொருத்தம் என்பது ஜாதகங்களை வைத்துத்தான் பார்க்கப்படவேண்டும் .

காதலை ப்ரப்போஸ் பண்ணுவதற்கு முன்பே அவன்/அவள் ஜாதகத்தை பொறுத்து அவரவர்க்கு வர வேண்டிய வாழ்க்கை துணையை பற்றிய அம்சங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.(7)

முதலில் தோஷங்கள் உள்ளனவா (செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம் இத்யாதி),குரு,சுக்கிரன் நிலை என்ன? மறுமண யோகம் (7 ,11 ஆமிடம்) ஏதும் உள்ளதா? இதை எல்லாம் பார்த்தாக வேண்டும். தோஷமிருந்தால் இருவருக்கும் ஒரே அளவில் இருக்க வேண்டும் (அ) சுத்த ஜாதகங்களாக இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனை மணவாழ்வுக்கு மினிமம் கியாரண்டியை தரக்கூடியதாகும்.

ஜாதகங்களுக்கு ஃபவுண்டேஷன் போன்ற லக்னம்,லக்னாதிபதி நிலைகளை பார்க்கவேண்டும்.

பிறகு இருவருக்கும் போதுமான ஆயுள்(8 ஆமிடம்) உள்ளதா உறுதி செய்து கொள்ளவேண்டும்

இதையடுத்து அவன்/அவள் ஜாதகப்படி வாழ்க்கை துணைக்கு இருக்க கூடிய லட்சணங்களாக குறித்து வைத்த மேற்சொன்ன அம்சங்கள் தற்போது வந்துள்ள வரனுக்கு உள்ளதா என்று ஒப்பிடவேண்டும்.

ஜாதகங்கள் பொருந்திய பிறகே ஜன்ம நட்சத்திரங்களை வைத்து பொருத்தம் பார்க்கவேண்டும். இதில் பத்து பொருத்தம் பார்க்கப்பட்டாலும் ரஜ்ஜு, நாடி எனும் இரண்டு பொருத்தங்களே ரொம்ப முக்கியமானவை.

ஜாதகங்கள் நன்கு பொருந்திய பின்பு இந்த இரண்டு பொருத்தங்கள் மட்டுமே இருந்தாலும் தைரியமாக காதலை ப்ரப்போஸ் செய்யலாம்.ஜாதகங்கள் பொருந்தாது இந்த பொருத்தங்கள் பத்துக்கு எட்டு,ஆறு வந்தாலும் வீண் தான்.

ரஜ்ஜுப்பொருத்தம்:
ஆண்,பெண்ணுக்கு வேறு வேறு ரஜ்ஜுவரவேண்டும். ஏக ரஜ்ஜு வரக்கூடாது. மொத்தம் 5 வித ரஜ்ஜுக்கள் உள்ளன. இதில் எந்தெந்த ரஜ்ஜு ஏக ரஜ்ஜுவானால் என்ன பலன் என்று ஜோதிடம் குறிப்பிட்டு கூறுகிறது. அதன் விவரம் வருமாறு:
1.சிரோ ரஜ்ஜு-கணவன் மரணம்2.கண்ட ரஜ்ஜு-பெண் மரணம்3.உதர ரஜ்ஜு-புத்திர தோஷம்4.தொடை ரஜ்ஜு -பண நஷ்டம்5.பாதரஜ்ஜு-பிரயாணத்தில் தீமை

நாடி பொருத்தம்;
இதுவும் வேறு வேறு நாடி வரவேண்டும். ஒரே நாடி வந்தால் உடல் நலம் பாதிக்கும்.

யாருக்கு/யார் வசியம்:
மேஷத்துக்கு சிம்ம,விருச்சிக ராசியினர் வசியம். எனவே மேஷ ராசியினர் சிம்மம் அல்லது விருச்சிக ராசிக்காரரை காதலிக்கலாம். இதே போல் ரிஷப ராசியினர் கடகம் அல்லது துலா ராசியினரையும்,மிதுனராசிக்காரர் க்ன்னி ராசிக்காரரையும்,கடக ராசிக்காரர் விருச்சிக ,தனுசு ராசிக்காரரையும்,சிம்ம ராசிக்காரர், துலா அல்லது மகர ராசிக்காரரையும் காதலிக்கலாம். இதே போல் கன்னி‍க்கு மீன,மிதுன‌ம் வசியம், துலாத்துக்கு மகரம்,கன்னி வசியம். விருச்சிகத்துக்கு கடகம்,தனுசுக்கு மீனம்,மகரத்துக்கு கும்பம்,கும்பத்துக்கு மீனம், மீனத்துக்கு மகரம் வசியம்.

( இது பத்து பொருத்தத்துல ஒரு பொருத்தம் தேன் . இதையே சேங்சன் ஆர்டரா எடுத்துகிடாதிங்க.

மேலும் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பது கவிஞர் வாக்கு. எனவே உங்கள் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும். இதே போல் தங்கள் காதலர் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும்.

மேலும் உங்கள் ராசிக்கு குருபலம் உள்ளதா பார்த்துக் கொள்ள வேண்டும். குருபலம் இருந்தால் தான் உங்கள் கவர்ச்சி பெருகும், வசிய ராசிக்காரரானாலும் உங்களுக்கு குருபலம் இருந்தால் தான் உங்களை நாடுவார்.

ஜாத‌க‌மே இல்லாது தங்களுக்கோ, த‌ங்க‌ள் காத‌ல‌ருக்கோ செவ்வாய் தோஷ‌ம் உள்ள‌தா என்ப‌தை அறிய‌ வ‌ழியிருக்கிற‌து.

மேலும் காத‌லில் வெற்றிக்கு சுக்கிர‌ ப‌ல‌ம் முக்கிய‌ம். ஜாத‌க‌த்தையே பார்க்காது உங்க‌ள் ஜாத‌க‌த்தில் சுக்கிர‌ ப‌ல‌ம் உள்ள‌தா இல்லையா என்ப‌தை அறிய‌வும் வ‌ழியுண்டு. ( அஸ்கு புஸ்கு இதையெல்லாம் ப்ளாக்ல எழுதிட்டா எப்படி..?)

காதலும் சனியும்:

சித்தாளை மேஸ்திரி , நர்சை டாக்டரு , ரிசப்ஷனிஸ்டை மேனேஜரு கண்ணாலம் கட்டிக்கிட்ட கதையெல்லாம் மஸ்தா கேட்டிருப்பிங்க வாத்யாரே!

இந்த மேட்டர்ல வேலை செஞ்சது சனினு நிறைய பேருக்க் தெரியாது.( லவ்வுன்னா ஜோசியம் தெரியாதவுகளுக்கு கூட சுக்கிரன் தான் ஞா வருவார். சுக்கிரனை -வீனசை-தான் காதல் தேவதைனு மஸ்தா பேரு நினைச்சிட்டிருக்காய்ங்க.

சனின்னா வேலையாள்.சில விஐபி ஃபேமிலீஸ்ல ஆன்டிங்க ட்ரைவரோட ஓடிப்போயிருவாய்ங்க. இன்னாடா மேட்டருன்னா சனிதேன்.

உங்க ஜாதகத்துல சனி தூளான இடத்துல இருந்தா 4 பேரை வச்சு வேலை வாங்கற நிலையில இருப்பிங்க. அதே சமயம் அவரு ஏழாமிடத்தோடயோ, ஏழாம் இடத்து அதிபதியோடயோ தொடர்பு கொண்டிருந்தா அந்த 4 பேர்ல ஒருத்தரை கண்ணாலம் பண்ணிக்கவேண்டி வந்துரலாம்.

இப்படி ஸ்டாஃபை கண்ணாலம் கட்டி க்ளிக் ஆனவுக நிறைய பேர் உண்டு. அதே சமயம் ஸ்டாஃபோட லவ்ஸ்ல மூழ்கி அசல் வேலைய கோட்டை விட்டவுகளும் உண்டு. இதுக்கு சனி உங்க ஜாதகத்துக்கு சுபனா பாபியானு பார்க்கனும். சுபனா இருந்து கெட்டிருந்தா கதை கந்தல். பாபியா இருந்து கெட்டிருந்தா தூள்.

பாஸை கண்ணாலம் கட்டி நல்லா இருக்கிறவுகளும் உண்டு. பாஸுக்கு இவிக மேல இருக்கிற கவர்ச்சி குறைஞ்சு அவரு இன்னொரு ஸ்டாஃபை கணக்கு பண்ண ஆரம்பிக்க நாறிப்போனவுகளும் உண்டு.

(ஸ் அப்பாடா.. இது கவர் ஆகாத விஷயங்கள் -உங்க சந்தேகங்கள் -கருத்துக்கள் -அனுபவங்களை மறுமொழியாக இட்டால் நிச்சயம் பதிலளிக்கப்படும்)

6 thoughts on “காதலர் தின ஜோதிட டிப்ஸ்

  Saran said:
  February 14, 2011 at 2:54 pm

  சனி அனுகூலம்னா, சனி எங்க நிக்கனும், சரியில்லைன்னா எங்க நிக்கனும்னு சொல்லவேயில்லையே?

   S Murugesan said:
   February 14, 2011 at 6:35 pm

   சரண் அவர்களே,
   வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
   கோசாரத்துல சனி 3,6,10,11லருந்தா நல்லது. (இதெல்லாம் பொதுவிதிதான். சிறப்பு விதிகள் அனேகம்) ஜாதகத்துலனு வரும்போது ஒவ்வொரு லக்னத்துக்கும் தனி தனியா சொல்லவேண்டியதுதான். ஜாதகம் இல்லாதவுக மண்டை காயணும்.

   ஆனால் கோசாரத்துக்கும் ஒர்க் அவுட் ஆகிற மாதிரி சீக்கிரமே தனிப்பதிவு போட்டுருவம்.

  Thevar said:
  April 27, 2011 at 8:17 pm

  Interesting.
  ஏழாம் இடத்து அதிபதியே சனிதான்.
  ஆட்சி- கும்பம்.
  கோட்சாரப்படி- 11 -ம இடம்.
  இப்போ சொல்லுங்க – நான் நர்சு கூட எப்படி?
  அல்லது- வேறு ஏதாவது கில்மா!
  இன்னொரு விஷயம்- சுக்கிரனும் ஆட்சிதான்.
  அதாவது 10 -ல் செவ்வாயுடன்.
  இப்போ- உங்களுக்கு ஒரு கேள்வி வரும்-
  குரு எங்கே?
  ஓடிப்போன்னவனுக்கு………..சந்திரனோட!
  உங்க ஆராய்ச்சிக்கு ரொம்ப உதவும்.

  Thevar said:
  May 11, 2011 at 8:49 pm

  sh…………………….mmmmmmmmmmmmmmmmmmm.

  Raja said:
  December 5, 2011 at 5:29 am

  i’m reading your blog and became of your fan. Could you please analyse my horoscope if i send you in email?

   S Murugesan said:
   December 5, 2011 at 12:43 pm

   வாங்க ராஜா !
   தாராளமா அனுப்புங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s