சனியும் கில்மாவும்

Posted on

அண்ணா வணக்கம்ணா!
எதையும் எதோட வேணம்னா தொடர்பு படுத்தமுடியும் -கேயாஸ் தியரி . ஆனால் நான் கில்மாவுக்கும் கிரகங்களுக்கு கட்டாய கல்யாணம்லாம் பண்ணி வைக்கலிங்கண்ணா (நேரு இப்படித்தான் தெலுங்கானாவுக்கு கட்டாய கண்ணாலம் கட்டி வச்சுட்டு பூட்டாரு. இப்ப இம்சை தாங்க முடியலை)

சனிக்கு காரி, மந்தன்(ஸ்லோ), முடவன்னு ( நொண்டி) பல பேர் உண்டு. காரியும் காரிகையும் (பெண்) – மந்தனும் மங்கையரும் – முடவனும் மடமாதரும்னெல்லாம் தலைப்பு வைக்கலாம் தான் ஆனால் தம்பிமாருங்களுக்கு புரியாதோ என்னமோனு வைக்கலிங்கண்ணா.

தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் வேட்டூரி சுந்தர ராமமூர்த்தி தெரியுங்களா? நம்ம வாலி எதுகை மோனைக்காக ரெம்ப சுத்தியடிச்சு இம்சை படுவாரு. ஆனா வேட்டூரி வரிக்கு வரி மட்டுமில்லிங்கண்ணா வார்த்தைக்கு வார்த்தை எதுகை மோனை வராப்ல கூட எழுதுவாருங்கண்ணா.

ஒரு பாட்டு வரிய பார்ப்போம்:

இந்துவதன -குந்தரதன -மந்தகமன -மதுர வசன -ககன ஜகன -சொகசு லலனவே. (தெலுங்கு குட்டிகளை மிரட்ட இதை உபயோகிச்சுக்கலாம் – தாளி இன்னைக்கு கான்வென்ட் படிப்பு படிக்கிற குட்டிகளுக்கு சுட்டுப்போட்டாலும் திருப்பிவராது).

மேற்படி பாட்டுவரில 3 ஆவது வார்த்தைய பாருங்க. “,மந்த கமன” மந்த – ஸ்லோ , கமனா – நடக்கிறது. ( நாம அன்ன நடைங்கறோமே அது மாதிரி)

மேற்படி பாட்டு ஒரு சூப்பர் ஃபிகரை வர்ணிக்குது அதுல இந்த வார்த்தை வருது. சாலு மாலை( பெண்குட்டிதேங் -சுஜாதாவோட வார்த்தை பிரயோகம்)

“மந்த கமனாங்கறாரு. இதே வார்த்தை 100% சனிக்கும் சூட் ஆகுது பாருங்க. மேலும் மந்தன்னு பேரே இருக்கு. ( அவர் ஒரு ராசிய கடக்க ரெண்டரை வருசம் ஆகுதுங்கண்ணா. ரெம்ப ஸ்லோ)

இப்ப சனியுடைய காரகங்களை பார்ப்போம். அதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னும் பார்ப்போம்.

ஆசனம்:
Anel sex பத்தி கேள்விப்பட்டிருப்பிக.குழந்தையை மொதல்ல கவர்ரது அதனோட ஆசனம்தான். காலப்போக்குல அதனோட ஆர்வம் இன உறுப்புக்கு மாறும் . மாறாதவன் “பின்பக்க ஆசாமியா” மாறிர்ரான்.

மேலும் ஆசனங்கறது வண்டிக்கு சைலன்சர் மாதிரி. பெட்ரோல்ல கலப்படம் இருந்தா சைலன்சர் புகையை கக்கும். இஞ்சின் நாசமா போயிரும். மைலேஜும் வராது. அதே மாதிரிதான் நாம எடுத்துக்கற உணவு சரியில்லின்னா அது சரியா செரிக்காது -சக்தியை கொடுக்காது – புகைய (?) கக்கும் – மைலேஜ் வராது ஐ மீன் செக்ஸ் பவர் குறைஞ்சுரும்.

சனி நம்ம பாடில இருக்கிற டோட்டல் நெர்வஸ் சிஸ்டத்துக்கு அதிபதி. சனி நல்லாருந்தா நெர்வஸ் சிஸ்டம் ஸ்ட்ராங்கா இருக்கும். உணர்ச்சிவசப்படறதுக்கெல்லாம் சான்சே இல்லை. ரெம்ப கூலா திங்க் பண்ணுவாய்ங்க. கூல் திங்கிங் நரம்பு மண்டலத்தை இன்னம் கொஞ்சம் வலுவாக்கும்.

பொறுமைங்கறது சனியோட கிஃப்ட். நம்ம தாத்தா கூட 13 வருஷம் பொறுமையா இருந்ததால தான் மறுபடி ஒரு லைஃப் கிடைச்சது.

ஜாதகத்துல சனி சரியில்லைன்னா நெர்வஸ் சிஸ்டம் டவுனாகும். இது டவுனானா அறிவு வழி சிந்தனை குறைஞ்சு உணர்ச்சிவசப்படறது அதிகரிக்கும். இப்படிப்பட்ட பாடில எந்த ஃபங்க்சனிங்கும் கரீட்டா நடக்காது. அகால போஜனம்,அகால நித்திரை ,கடுமையான மலச்சிக்கள் (இது பைல்ஸ்ல கூட கொண்டு போய் சேர்த்துரும்.

அது சரிங்கண்ணா இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக .சொல்றேன்.

ஹ்யூமன் பாடில ஜீரண மண்டலமும் இனப்பெருக்க மண்டலமும் வேற வேற டிப்பார்ட்மென்ட். ஒன்னு வேலை செய்யும் போது அடுத்தது வேலை செய்யாது. பை பாஸ் ஆயிரும். ஜாதகத்துல சனி சரியில்லைன்னா ஜீரண மண்டலத்தின் முடிவு பாகத்துல பிரச்சினை வரனும். இது உடலுழைப்பு இன்மையில ( உடலால உழைக்கவும் ஒரு யோகம் இருக்கனும் வாத்யாரே) துவங்கி அஜீரணம், மலச்சிகல்னு டெவலப் ஆகிட்டே இருக்கும். ஜீரண மண்டலம் ஓவர் டைம் பண்ண வேண்டி வரும்.

ஏற்கெனவே சொன்னாப்ல ஜீரண மண்டலம் வேலை செய்யும்போது இனப்பெருக்க மண்டலம் நியூட்ரல் ஆயிருது.

இப்படி ஒரு விஷ வளையத்துல மாட்டிக்கிட்டா சனியோட காரகங்களான //ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள்// எல்லாம் நாளாவட்டத்துல அமைஞ்சுரும். இதையெல்லாம் ஆளுயர கண்ணாடில பார்த்தா ஆண்மை பொங்குமா?

இல்லே இப்படிப்பட்ட சாமுத்ரிகா லட்சணத்தை பார்க்கிற பெண் குட்டிகளுக்குள்ளதான் காதல் உணர்வு பொங்குமா?

//நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில்// களுக்கெல்லாமும் சனியே காரகன். இப்படிப்பட்ட தொழில்கள்ள ஈடுபடறச்ச ஒரு கட்டத்துல உலகத்தையே மறந்து ஈடுபடவேண்டி வரும். வெற்றிக்கு பிறகு உலகம் பக்கமா பார்வைய திருப்பறச்ச உலகமே புதுசா இருக்கும்.

பொஞ்சாதி/காதலி உலக அழகி மாதிரி காட்சி தருவாள்.,

சனி எண்ணெய்,எண்ணெய் வித்துக்களுக்கும் காரகரா இருக்காரு. ஒரு ” வைத்தியனுக்கு கொடுக்கிறதை வாணியனுக்கு கொடு”ன்னு ஒரு பழமொழியே உண்டு.

//தலித் இன மக்கள், தொழிலாளர்கள்// இவிகளுக்கும் சனி தான் காரகன். இவிக உடலுழைப்புக்கு அஞ்ச மாட்டாய்ங்க. உழைப்பே நல்ல வலிமையையும், ஆரோக்கியத்தையும் தந்திருக்கும். இந்த க்ரூப் ஆஃப் பீப்பிள்ஸ்ல ஆண்மைக்குறைவு இத்யாதியெல்லாம் ரெம்ப ரெம்ப குறைவு.

உங்க ஜாதகத்துல சனி நல்லாயிருந்தா இவிகளோட நல்ல கம்யூனிகேஷன் ஏற்படும்.இவிகளோட சேர்ந்து வேலை செய்யற யோகம் இருக்கும். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்ற மாதிரி பழக்க தோஷத்தால இவிக வே ஆஃப் லைஃப், வே ஆஃப் திங்கிங், உணவு முறை உங்களுக்கும் பழக்கமாகலாம். இவிகளோட உடலுழைப்பை பார்த்து நாமும் உடலால உழைக்கனுங்கற இன்ஸ்பிரேஷன் வரும். இதெல்லாம் உங்களுக்கு தரக்கூடிய குட் ஹெல்த். குட் ஸ்டேமினா. கில்மாவுக்கு இதுகளை விட வேற என்ன வேணம் பாஸ்.

எச்சரிக்கை:
காரணம் என்னனு புரியலை . மைண்டோட வேகத்துக்கு கையும்,கண்ணும் ஒத்துழைக்கமாட்டேங்குது.
( வாக்குல சனி?) இந்த சப்ஜெக்டுல நான் டச்சே பண்ணாத மேட்டர் மஸ்தா கீது . இன்னொரு சந்தர்ப்பத்துல அப்டேட் பண்ணிருவம்ல..

Advertisements

2 thoughts on “சனியும் கில்மாவும்

  PERUMALSHIVAN.S said:
  February 14, 2011 at 6:55 am

  your new web site is very nice .

   S Murugesan said:
   February 14, 2011 at 9:24 am

   வாங்க, வணக்கம். மொதல் கமெண்ட் உங்களோடதுதான். பாராட்டுக்கு நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s