குருவும் கில்மாவும்

Posted on

சீ சீ அபிஷ்டு ! அபிஷ்டு ! குருகிரகத்தோட காரகம் என்ன? புராணம்,இதிஹாசம், குரு, குரு உபதேசம், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள்னு ஜோதிஷம் சொல்லுது. அப்படியா கொத்த குருவை போயி கில்மாவோட சேர்க்குதே இந்த ஞான சூனியம்னுட்டு “அவாள்” சீறி எழலாம்.

வெய்ட் அண்ட் சீ ! மொதல்ல குருவோட கதையா சொல்லப்படற கில்மா மேட்டரை பார்ப்போம். குருவோட மனைவிய சந்திரன் தள்ளிட்டு போயிர்ரான். அஜால் குஜால் வேலையெல்லாம் முடிஞ்சு புதனும் பிறந்துர்ரானாம். அப்பவும் குரு கண்ட வாசலை ஏறி மிதிச்சு கெஞ்சி கூத்தாடி மனைவியை “மீட்டுர்ராரு”

ஆக குருவும் ஜொள்ளு பார்ட்டியா தான் இருக்கனும். அட மனுசன்ல இருக்கிறது ஒரே பவருப்பா.அது மேல் நோக்கி பாய்ஞ்சா யோகிக் பவர், கீழ் நோக்கி வடிஞ்சா செக்ஸ் பவர் .

நித்யானந்தா மாதிரி பார்ட்டியெல்லாம் லிஃப்ட்ல போறச்ச அறுந்து விழுந்த கேஸு.

காமி கானி வாடு மோக்ஷ காமி காலேடு.ஆழமான உடலுறவுக்கு பிறகு மனசுல ஒரு வித அமைதி, நன்றி உணர்வு பரவும் – அந்த நன்றி உணர்வு பக்தி உணர்வை கிளப்பும். அதுக்குத்தான் செக்ஸ் எஜுகேஷனுக்கான டெமோ போல கோவில் கோபுரத்துல பலான சிலைகளை வச்சாய்ங்க.

ஆழமான தியானம் அ மனம் குவிந்த ஜெபம், பூஜைக்கு பிறகு ஆட்டோமேட்டிக்கா உடம்புல ஒரு மதமதப்பு வரும். இதெல்லாம் தெய்வீகத்துக்கும் – காமத்துக்கும் உள்ள தொடர்பை காட்டுது. விஸ்வாமித்திரர் இழுத்துக்கட்டிக்கிட்டு ( கோவணத்தை சொன்னேன்) தபஸ் பண்ணாரு .ஆனால் மேனகை வந்ததும் என்னாச்சு? மேனோக்கி பாஞ்ச சக்தி கீழ் நோக்கி வடிஞ்சுருச்சு ( ஊர்த்வமுகம் -அதோமுகம்)

குருவோட காரகத்வத்தை பாருங்கம்: (குருவே சொல்றாரு)

//நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, //

தங்கமிருந்தா கண்ணாலம் நடக்கும். பெண் வீட்டுக்காரன் பத்து சவரன் போட்டா இவிக ரெண்டாச்சும் போடனும்ல.. பைனான்ஸ் இல்லைன்னா தாளி பெண் பார்க்க கூட போக முடியாது. மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள்ள இன்டராக்ட் ஆனா “அடடா.. சார் இன்னம் அன்மேரிடா.. என் ஃப்ரெண்டு மகள் ஒருத்தி டிகிரி முடிச்சுட்டு..” வகையறா தகவல் வெள்ளம் கொட்டும்.

//நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்),//

உங்க ஜாதகத்துல குரு நல்ல இடத்துல இருந்தாதான் பிள்ளைப்பேறுல்லாம் கிடைக்கும். அந்த யோகம் இருந்தாதான் கில்மாவுக்கு லைன் க்ளியராகும். (கண்ணாலமாகியும் வாரிசு கிட்டாதவுக இருக்காய்ங்க. இல்லேங்கலை. அதுக்கு இன்னபிற கிரகங்கள்,பாவங்களோட நிலை காரணமா இருக்கலாம். நான் சொல்ல வர்ரது ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட்)

குருபலத்துக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்பு? சொல்றேன். குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம்.

பாடில ரெண்டு விங் இருக்கு. டைஜசன் விங் – பலான விங் ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. அதனாலதான் கரப்பான் பூச்சி மொதல்ல அஜால் குஜால்னுட்டு அப்பாறம் தான் உணவு தேடவே போகுதாம்.அதனாலதான் அதுக்கு ஆவிசி ( ஆயுள்) சாஸ்தினு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.

ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும். ஸ்தூல நிலை வேறயா ( ஏழ்மை – பசி -பட்டினி ) இருந்தாலும் உற்சாகமா சந்தோஷமா இருப்பிக. சந்தோஷம் சகம் பலம்.

அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க “முன்னேற்ற பாதையில மனசு வச்சு” ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சுருவிங்க.

ஞாபகசக்தி,ஆட்சி மொழி மேல கமாண்ட் , நிர்வாகம், அரசு, அரசு தரும் வீட்டு வசதி, முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் குரு நல்லா இருந்தாதான் சாத்தியம், இந்த குண நலன், திறமைகள் எல்லாம் இருந்தா முன்னேர்ரதா கஷ்டம். ஒடனே எவனாச்சும் சவுண்ட் பார்ட்டி பையனுக்கு நல்ல டேலன்ட் இருக்கு -எதிர்காலம் இருக்குனு கெஸ் பண்ணி பொண்ணை கட்டி வச்சு வீட்டோட மாப்பிள்ளையாக்கிருவான்.

சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான். சந்தோஷமா உள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக. குரு ஆட்சி உச்சம்னு உட்கார்ந்திருந்தா அரசியல் வாழ்வும் கியாரண்டி. ( ஒன்னுக்கு ரெண்டா வச்சிக்கலாமில்லை – சொம்மா தமாசு வாத்யாரே)

குருன்னா டூ குட்.( Too good/ do good) . திணை விதித்தவன் திணையறுப்பான். வினை விதைத்தவன்? ( ஆருப்பா அது அரசியல் வாதியாவாங்கறது ..சைலன்ஸ் ப்ளீஸ்)

குருங்கறது பிராமண கிரகம். குருவோட பலத்தை பொருத்து உங்கள்ள பிராமண லட்சணங்கள் டெவலப் ஆக ஆரம்பிக்கும். ஐ மீன் ஒழுங்கா படிக்கிறது – ஜீன்ஸ் -மொபைல் -ஐபாட் எல்லாம் சோறு போடாது – லவ் – பப் -பீருனு போனா படிப்பு டைவர்ட் ஆயிரும்ங்கற எண்ணம் – எவன் தங்கையையோ எவனோ இழுத்தா -ஸ் அப்பாடா என் தங்கை ஹங்கேரில இருக்கானு பெருமூச்சு விடறதுமாதிரி லட்சணங்கள் வந்துரும். அப்பாறம் வெற்றிக்கு என்ன குறை. காலாகாலத்துல கண்ணாலம்- கில்மாவோ கில்மாதான்.

ஒரு ஜாதகத்துல குரு எவ்ள முக்கியமோ சுக்கிரன் கூட அவ்ள முக்கியம். ரெண்டு பேரும் பேலன்ஸ்டா இருக்கனும். சுக்கிர பலத்தை விட குரு பலம் கூடிப்போச்சுன்னா பலான மேட்டர்ல ஆர்வம் குறைஞ்சுரும். குரு பலத்தை விட சுக்கிர பலம் கூடிப்போச்சுன்னா பலான மேட்டர்ல ஆர்வம் அதிகரிச்சுரும்.

ஆனா ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா குருபலம் உள்ளவுக சுக்கிரனோட லைன்லயும் ( அதாங்க காதல் – கருமாந்திரம்) சுக்கிரபலம் உள்ளவுக பூஜை புனஸ்காரம்னும் போவாய்ங்க. கரீட்டா ஒரு ஸ்டேஜ்ல தங்களோட சுய ரூபத்தை வெளிப்படுத்துவாய்ங்க. சுக்கிரனை பத்தி நிறைய பேசனும். அவரோட பேட்டைக்கு போறச்ச பேசிப்போம்.

( படத்தில் இருக்கும் நடிகர் என்.டி.ஆர் – பிரம்ம ரிஷி விஸ்வாமித்ரா பட ஸ்டில் இது)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s