சந்திரன் கெட்டால்

Posted on


சந்திரன் கெட்டால் மீன்ஸ்.. நீசமாதல் (விருச்சிகம்) ,ராகு,கேது ,சனி,சேர்க்கை. இவரோட குரு சேர்ந்தா 14 வருசம் நாயடி. ஆனால் சீமான் மாதிரி திருப்பியடிக்க ஆரம்பிச்சா பேயடி ( பட்டாபிசேகமுங்கோ) ,இவரோட சுக்கிரன் சேர்ந்தா செமை கில்மா தான் போல.

எச்சரிக்கை:
இதெல்லாம் பொதுப்பலன் தேன். அப்படியே நம்பி, தேம்பாதிங்க.

சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன உங்கள் புத்தியை மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பொது வாழ்வு உதவாது.செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாவார்.திடீர் பயணங்கள் ஏற்படலாம்.சில சமயம் க்ஷண நேரத்தில் முடிவெடுத்து ஆண்டு கணக்கில் வருந்துவதும் நடக்கலாம்.தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். “என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்”
அடிக்கடி வீடு மாறுதல் அ வீட்டு நிதி நிலை மாறுதலை காட்டும். எல்லா வகையிலும் எவ்ரி டூ இயர்ஸுக்கு பெரும் மாற்றம் தெரியும். வாகன விசயத்திலும் பெரும் ஏற்ற இறக்கம் இருக்கும். சில காலம் சொத்துக்களை விற்று வாழும் நிலையும் ஏற்படலாம். அதே சமயம் திடீர் தனலாபம் ஏற்பட்டு சொத்து வாங்கும் சூழலும் ஏற்படும் இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸ் இருக்கும் சில சமயம் அவை அச்சு அசலாக நிஜமாவதும் உண்டு..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s