ராகு கேதுக்கள் கில்மா : 2

Posted on Updated on


எச்சரிக்கை:

நமக்குனு அனுபவஜோதிடம்ங்கற பேர்ல ஒரு வெப்சைட் க்ரியேட் ஆயிருச்சுங்கண்ணா . உபயம் திரு.சரண் . கொஞ்ச நாளைக்கு பழக்கதோஷத்துல ப்ளாகராவே தொடரலாம்னு ஒரு எண்ணம். ( ஹி ஹி அதுக்குள்ளாற இங்கன உள்ள சரக்கையெல்லாம் அங்கன அடுக்கி வைக்கனும்ல)

ஜாதகத்துல ராகு கேதுக்கள் சரியில்லைன்னா தாம்பத்யம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்னு சின்ன ட்ரெய்லரை பார்த்தே அரண்டு போயிருப்பிங்க. ஆனாலும் இந்த பதிவை படிக்க வந்த உங்களுக்கு இன்னம் சில க்ளூஸ் தரேன். அதுவே க்ளூக்கோசா உங்களை உற்சாக படுத்தும்.

ஆல்கஹாலிக்ஸ், ட்ரக் அடிக்ட்ஸ், கள்ள காதல்/கள்ள உறவு , சூதாட்ட பைத்தியம்,கள்ளக்கடத்தல் பண்ணி வரிசையா மாட்டி போண்டியாகிறவன் ஜாதகத்துல எல்லாம் நிச்சயமா ராகு கேது சரியிருக்கமாட்டாய்ங்க.
இவிக செக்ஸ் லைஃப் எந்த லட்சணத்துல இருக்கும்னு சொல்லனுமா என்ன?

ஆமாங்கண்ணா குங்குமத்துல டெக்காமெரான் கதைகள்னு கில்மா கதைகள் தொடரா வந்ததை எத்தீனி பேரு ஞா வச்சிருக்கிங்க ( எனக்கு சுத்தமா மறந்து போச்சு) பை தி பை முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது.

சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. இதுக்கு பின்னாடி அனேக காரண காரியங்கள் இருக்கு. ஆனால் இதையெல்லாம் அறியாத பிராமணர்கள் ( முக்கியமா சம கால) இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிக்கிறதை சகிக்க முடியலை.

பாம்புக்கும் ராகு கேதுக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்.

பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இது ஒரு பக்கம்னா பாடில அசிமிலேஷன் ,எலிமினேஷன் ப்ராசஸ்ல கக்கா,மூச்சா, வெளி மூச்சு முழுமையா வெளியேறாம பாடில கேம்ப் அடிச்சுருதுங்க.

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை.

இந்த விஷங்களுக்கான குறியீடுதான் பாம்பு. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும்ங்கறதுதான் விஷயமே.. இதுதான் அசலான சங்கதி.

மேலும் ராகு கேது சரியில்லாதவுகளுகு சர்ப்பத்தின் குணம் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரக் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்து
் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. ( நன்றி : ஓஷோ) பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி “இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க ” என்று ஆரம்பித்த நொடியிலேயே ” ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு” என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது. அதாவது ஜாதகரோட பாடி நேச்சர், வே ஆஃப் திங்கிங் மாறவே மாறாது, அதை மாத்தனும்னா அவிக லைஃப் ஸ்டைலை மாத்திக்கனும். என்விரான்மென்டை மாத்திக்கனும். சர்ப்பதோஷம் என்னெல்லாம் செய்யுமோ அதை வாலண்டியரா நடக்கவிடனும். அதான் உண்மையான பரிகாரம்.

மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.

இத்தீனி இம்சைய வச்சிக்கிட்டு என்னத்தை கண்ணாலம்? என்னத்த தாம்பத்யம்? அதனால மொதல்ல உங்க குடும்ப ஜோசியரை பார்த்து உங்க ஜாதகத்துல ராகு கேது நல்ல இடத்துல இருக்காய்ங்களானு பார்த்துக்கங்க.

அடடா.. ஜாதகம் இல்லியா? ஜாதகம் இல்லாமயே உங்க ஜாதகத்துல சர்ப்பதோஷம் இருக்கா இல்லியானு தெரிஞ்சிக்க ஒரு வழி இருக்கு .. டட்ட டாஆஆஆஆஆஆஆஆஆய்ங்க் அது அடுத்த பதிவுல

Advertisements

19 thoughts on “ராகு கேதுக்கள் கில்மா : 2

  மதுரை சரவணன் said:
  February 10, 2011 at 7:10 pm

  pakirvukku nanri… vaalththukkal

  Vinoth said:
  February 11, 2011 at 4:02 am

  நன்றி..

  Thevar said:
  April 26, 2011 at 7:15 pm

  பட்டய கெளப்புற….தம்பி-
  அப்படியே அவுக பொழப்புல கை வைக்கிற.
  நம்ம நோக்கம் விழிப்புனர்வ ஏற்படுத்துவதுதான்.
  பாம்பு- விஷம் எடுக்குறது – இதப் பத்தி நானும் சில
  ஆராய்ச்சி செஞ்சேன்.
  ஏன்னா நமக்கும் 11 -ல் ராகு- அப்படியே காளசர்ப்ப யோகமா- தோஷமா ..
  எதோ ஒன்னு- சரின்னு நான் போயி சரண் அடைஞ்சுட்டேன்-
  சேர்ந்த இடம் சிலுவை.
  தலையைத் தூக்கிப் பார்த்தால் -அங்கே ஆண்டவர் இயேசுவின்
  கால்களுக்குக் கீழே பாம்பின் தலை நசுக்கப் பட்டுக் கெடக்குதுங்கோ!
  பெறகு என்ன- விஷம் இறங்கிப் போயிடுச்சு.
  சின்ன வயுசல தேள்- நட்டுவக் காலி- விரியன்- நல்லபாம்பு
  அப்படின்னு – நம்ம கால்களில், பட்டு செல்வது அதிகம்.
  இரவு என்கூடவே பாம்பு படுத்து இருந்தது.நான் சிலுவையை – இயேசு நாதரை
  சரண் அடஞ்சதக்கு அப்புறம்- பாம்ப டி.வி. அல்லது மிருகக்காட்சி சாலை
  இதுகள்தான் பாக்க வேண்டி இருக்கு.
  இப்போ நான் இருக்கின்ற நாட்டுல பாம்பு கெடையாதுங்கோ.
  உடம்புல விஷம் எடுக்க- DETOXIFICATION is the best way.

   S Murugesan said:
   April 26, 2011 at 7:42 pm

   தேவர் !
   வாங்க . நீங்க என்ன வெறும் தேவரா? சின்னப்ப தேவரா? ( ஹி ஹி ஒரு காமெடிக்கு) பாஸ்! ராகு கேதுக்களை பற்றின உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி,ராகு கேதுக்கள் சரியில்லைன்னா அதுக்குண்டான உண்மையான பரிகாரம் அவிக தரக்கூடிய பலனை நாமே நடத்த்க்கிறதுதான்.

   ராகு கேதுக்கள் ரெட்டை. ஒரு பார்ட்டி 11ல இருக்காருன்னா அடுத்த பார்ட்டி அஞ்சுல இருக்காருன்னு அர்த்தம். நீங்க மட்டும் ஏசுவை நேசிக்காம இருந்திருந்தா பயங்கர பல்பு வாங்கியிருப்பிங்க.

   உங்களை சுத்தி இருக்கிற சனம்லாம் பாம்பா மாறி கொத்தியிருப்பாய்ங்க. ( தூக்கத்துல கூட) இது புத்தி,புத்திர ஸ்தானம்,பெயர் புகழை காட்டற இடம் இந்த மேட்டர்ல எல்லாம் ராகு கேது எஃபெக்ட் கொடுப்பாய்ங்க.

   ஏசுவை மனதில் நிறுத்த வாரிசுகளையும் அதே வழியில் நடத்த பேர் புகழுக்கு ஆசைப்படாது கடமையை செய்தபடி இருந்தா நோ ப்ராப்ஸ்.

   கால சர்ப்பதோஷம்/யோகம்னா எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களுக்கிடையில சிக்கியிருக்கிறது. இவிகளோட வேறு கிரகம் ஒன்னு சேர்ந்திருநதாலும், ஒரு கிரகம் வெளிப்படிருந்தாலும் தோஷம் பரிகாரமாயிட்டாப்லதான்.

   இதன் பலன் 45 வயசு வரை தீராத குறை ஒன்னு இருந்துட்டே இருக்கும்.

    kandhan said:
    April 27, 2011 at 4:28 am

    தல, 3, 6, 11, 12 புரியுது. 4, 10 எப்டி?

    S Murugesan said:
    April 27, 2011 at 6:58 am

    கந்தன்,
    ராகுவொ,கேதுவோ 4,10 லருந்தா தோஷமில்லேன்னு அர்த்தம்.

  Thevar said:
  April 26, 2011 at 7:48 pm

  wonderful & nice reply.
  May God bless you.

  superrsyed said:
  April 26, 2011 at 8:09 pm

  தேவருக்கு எனக்கு தெரிந்த எக்ஷ்ட்ரா டிப்ஷ்
  5 இல் கேது இருந்தா 2 மனைவிய ஒரே நெரத்துல சன்டை பிரச்சனை இல்லாம சமாலிச்சு காலத்த ஓட்டமுடியும்னு ஒரு இங்கிலீஷ் ஜோதிட பதிவுல படிச்சதா நாபகம்

   THEVAR said:
   April 29, 2011 at 9:03 pm

   நல்ல வேளை. என் மனைவி இந்த ப்ளாக் சமாசாரம் எல்லாம் பாக்குறதில்ல.
   ஒரு வாலிப வயுசுல்ல இந்த நாத்தம் எல்லாம் புடிச்சிருந்தது.ஜாதிக்கு ஒன்னு பாக்கனும்னு….
   பாத்ததுக்கப்புறம்- சீனா, கொரியா,ஜப்பான், ர்சஷ்யா, ஸ்பானிஷ், என்று கொஞ்சம் அலை பாஞ்சது.
   கடிசியா கண்ணதாசன் சொன்னதுதான் சரி-
   எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
   மது அத்தனையும் சுவை ஒன்றேதான்-
   சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை
   உந்தன் சிந்தயிலேதான் பேதமடா.

   இந்த உடம்பு அனுபவிக்கிறதே இப்படின்னா-
   ஆன்மா அனுபவிக்கிறது – எப்படி இருக்கும்?

   சின்னக் கோடு பக்கத்துல – பெரிய கோடு போட்டமாதிரி.

   சின்ன வயுசல- தேடி அலைஞ்சோம்.
   இப்போ கையிலேயே இருக்கு.ஆனா தேடல் வேறுவிதமா இருக்குல்ல.

   செய்து அபுதாகிர், என்னுடைய நண்பன் எவனும் தன்னோட
   கல்யாணத்துக்கு என்ன அழைக்கல. இதைவிட வேதனை வேறு என்ன வேணும்?
   அப்படின்னா நான் கல்லூரியில் எப்படி இருந்திருப்பேன்னு புரிஞ்சுக்கோங்க.

   ஆனா இப்போ நெலமையே வேற-
   ஆன்ம சுகம் அனுபவிக்க – ஒரு மனிதன் உடல் சுகத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
   எல்லாவற்றையும்விட – ஒத்துக்கொள்ளும் தைரியம் வேண்டும்.
   அந்த நேர்மையை -மனிதர்கள் வெறுக்கலாம்.
   இறைவன் நேசிக்கின்றான்.

   “To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.”

    S Murugesan said:
    April 30, 2011 at 1:44 am

    தேவர்!
    //ஆன்ம சுகம் அனுபவிக்க – ஒரு மனிதன் உடல் சுகத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்.// – நல்லது. காமி கானி வாடு மோட்ச காமி காலேடு

    கிருஷ்ணா said:
    August 30, 2011 at 12:34 pm

    /////ஆன்ம சுகம் அனுபவிக்க – ஒரு மனிதன் உடல் சுகத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
    எல்லாவற்றையும்விட – ஒத்துக்கொள்ளும் தைரியம் வேண்டும்.
    அந்த நேர்மையை -மனிதர்கள் வெறுக்கலாம்.
    இறைவன் நேசிக்கின்றான்./////

    1000% True 🙂

   கிருஷ்ணா said:
   August 30, 2011 at 12:02 pm

   //5 இல் கேது இருந்தா 2 மனைவிய ஒரே நெரத்துல சன்டை பிரச்சனை இல்லாம சமாலிச்சு காலத்த ஓட்டமுடியும்னு ஒரு இங்கிலீஷ் ஜோதிட பதிவுல படிச்சதா நாபகம்//

   நமக்கு 5 -ல் சுக்கிரன் கேது சாரம் வேறு …
   இதுவரிக்கும் 100 க்கு மேற்பட்ட பெண்களை பார்த்தாச்சு….இதில் சிலர் தோழிகள் மாதிரி…..
   ம்….கேரளா ,ஆந்திரா, கர்நாடகா ,பெங்காளி,ஆங்கிலோ இந்தியன் உட்பட….

   அடுத்த கட்டமா தாய்லாந்து போலாமுன்னு எண்ணம்…

   இதுக்கு இடையில் ஒரு பெண் தோழியாகி…மனைவி மாதிரி..ஆனால் தோழி

   அட இந்த பெத்தவங்க வேற சும்மாவா இருக்கறாங்க…..
   கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்…(எதுக்கு பொண்டாட்டி…என்னை சுத்தி ….) 🙂

   அட இந்த சுய புராணம் எல்லாம் இப்ப எங்ககிட்ட ஏன் சொல்லுற நு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது 🙂

   அதாவது கிரக நிலை எவ்வளவு துல்லியமாக செயல் படுகிறது என்பதை என் அனுபவத்தின் வாயிலாக சொல்ல தான்….

   மத்த படி ..இதை எல்லாம் நான் பெருமையாக ..சுய தம்பட்டமாக நினைக்கவில்லை….
   ஏனா ..அடுத்த ஆட்டதுள்ள…தாய்லாந்து …முடிஞ்சா USA எல்லாம் பார்க்கணும்…..

   அட ….நாளைக்கு இந்த உடம்ப உதறிவிட்டு …மேல சிவ லோகம் போனா…..அங்க போய் பெண்ணாசை வந்துரகுடாது பாருங்க அதான் …..

   அப்புறம் …நாம கண்ணை மூடி தவம் செய்யும் போது…மன்மதன் மாதிரி காலி பயல்கள் அம்பு விட்டா….மன்மதனை எரிக்க வேண்டும் ..அதுக்கு பதிலா மன்மதனோட கூட ஓடி போய்ட கூடாது 🙂

   அதுக்கு அனுபவம் ரொம்ப ரொம்ப முக்கியம் 🙂

    S Murugesan said:
    August 30, 2011 at 12:11 pm

    கிருஷ்ணா !
    அஞ்சுல கேதுவுக்கு இந்தமாதிரி கில்மா அனுபவங்கள் தேன் கிடைக்கும்னு சனம் நினைச்சுரப்போறாய்ங்க. இந்த கில்மா அனுபவங்கள் தரப்பட்டதுக்கு காரணமே விரக்தி ஏற்படனும்னுதேன்.

    மத்தபடி மறதி -சந்தேகபுத்தி- புத்திகுழப்பம் – அவமானம் -குறை பிரசவம் -சந்தானமின்மை- பெண் சந்தானம் – சந்தானங்களுக்கு வைத்தியர்களுக்கும் புலனாகாத வியாதிகள் ஆகிய பலன்களை தான் சொல்லனும்.

    கிருஷ்ணா said:
    August 30, 2011 at 12:27 pm

    தல …நீங்க சொல்லும் பலன் உண்மை…..
    கேது மேல் நோக்கிய சக்தியை குறிப்பதால்….யோக தன்மையை அதிகரித்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறேன்…
    யோகம் அதிகரிக்க பாவம் குறையும்

    நம்ம அரவிந்த சாமிய பார்த்திங்களா …
    எது யோகமாக செயல் பட்டதோ …அது பாவமாக மாறி விட்டது…..
    இதையே ரிவர்சா நான் சொல்லுறேன் 🙂

    கிருஷ்ணா said:
    August 30, 2011 at 12:20 pm

    அப்புறம் கேது 5 -இல் இருந்தால் …விழிப்புணர்வை அதிக படுத்தி கொண்டால்…. யோகம் கை கூட வேண்டும் ..அது மேல் நோக்கிய யோகம்….

    இல்லை எனில் கில்மா யோகம்….

    குரு+கேது =ராஜ யோகம்
    சனி +கேது =கர்ம யோகம்
    சுக்கிரன் +கேது=தந்திரா யோகம்
    புதன்+கேது=ஞான யோகம்
    செவ்வாய் /சந்திரன் +கேது=பக்தி யோகம்

    எல்லாம் வருங்கால தலைமுறைக்கு உதவியாய் இருக்கட்டுமே என்று தான் 🙂

    நமக்கு பொண்டாட்டி முக்கியம் இல்லை….யோகம் தான் முக்கியம் …ஆயிரம் பேர் வருவார்கள்… போவார்கள்…..ஆயிரம் பிறவிகள் வரும் போகும்
    .
    யோக வாழ்கையை தேர்ந்து எடுக்க வில்லை எனில் அப்புறம் அரவிந்தசாமி மாதிரி (http://kavithai07.blogspot.com/2011/08/blog-post_30.html) ஆகி விட நேரும்….. ஹி..ஹி 🙂

  Sudharsan said:
  April 29, 2011 at 8:03 pm

  what is the effect of of ketu in 9th house?.I have ketu in 9th house( my lagnam is kadagam and rasi is also kadagam)

   yoghi said:
   April 29, 2011 at 8:41 pm

   9ம் இடத்துல கேது நெரைய செல்வ செழிப்ப குடுப்பாரு வேலையில அடிக்கடி மாற்றங்கள் வரும் தாய்மாம‌னுக்கு நல்லது இல்ல ஜாதகருடைய ஆன் வாரிசுக்கும் நல்லது இல்ல இது பொது பலன்க்ள்தான் மற்ற கிரகங்கல் அமர்வு பார்வை சேர்க்கை இதெல்லாம் பொருத்து பலன்கள் மாறுபடும் நல்ல ஜோதிடரா போயி பாருங்க‌

  snr.DEVADASS said:
  July 27, 2012 at 3:32 pm

  நண்பரே தங்களிடம் ஏதோ விசயம் இருப்பது போலத் தெரிகிறது.இன்னும் தங்களது பதிவுகளைப் படித்து விட்டு எனது முழுமையான மதிப்பீட்டைத் தருகிறேன்.அதற்காக நான் ஒன்றும் ISI முத்தரை இல்லை.எனக்கு ஒரு பழக்கம்.நல்லது என்றால் வலிய பாராட்டுவேன் தவறு என்றால் அதையும் சொல்லிவிடுவேன்.வாழ்க வளமுடன்.

   S Murugesan said:
   July 27, 2012 at 3:49 pm

   வாங்க தேவதாஸ் !
   //நண்பரே தங்களிடம் ஏதோ விசயம் இருப்பது போலத் தெரிகிறது//

   இது நிஜமாக வாழ்த்துக்கள்

   //இன்னும் தங்களது பதிவுகளைப் படித்து விட்டு எனது முழுமையான மதிப்பீட்டைத் தருகிறேன்//

   காத்திருக்கிறேன்

   //.அதற்காக நான் ஒன்றும் ISI முத்தரை இல்லை.//
   அடக்கம் அமரருள் உய்க்கும்

   //எனக்கு ஒரு பழக்கம்.நல்லது என்றால் வலிய பாராட்டுவேன் தவறு என்றால் அதையும் சொல்லிவிடுவேன்.வாழ்க வளமுடன்.//

   நல்ல பழக்கம். கீப் இட் அப்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s