ஜோதிடம் விஞ்ஞானமே – மும்பை ஹைகோர்ட் தீர்ப்பு

Posted on

ஆமாங்கண்ணா ஜோசியம் ஒரு மூட நம்பிக்கை இதை தடை பண்ணனும்னு ஜன ஹித் மஞ்ச் என்ற அமைப்பின் சார்ப்பா  ஒரு வழக்கு மும்பை ஹைகோர்ட்டுல தாக்கலாச்சு.

இதை விசாரிச்ச நீதிமன்றம் 2004 ல சுப்ரீம் கோர்ட் ஜோதிஷம்+ பரிகார பூஜைகளை பத்தி  கொடுத்த தீர்ப்பை (?) அடிப்படையா கொண்டு தீர்ப்பளிச்சிருக்கு. ஜோதிடம் வாஸ்துல்லாம் 4000 வருஷம் சீனியாரிட்டி உள்ள சைன்ஸு, காலத்தின் சோதனைகளை தாண்டி வந்த சப்ஜெக்ட்ஸு னு மத்திய அரசு அஃபிடவிட் தாக்கல் பண்ணியிருக்குங்கோ.நீதிபதி இதை தம் தீர்ப்புல பிரஸ்தாபிச்சிருக்காரு.

ஜோசியம் சைன்ஸுங்கறாய்ங்க. ஓகே தான். ஆனால் அதுலயே நிறைய அன் சைன்டிஃபிக் சமாசாரம்லாம் இருக்கே ( நாம அதையெல்லாம் வடிகட்டியாச்சு பாஸ்) பரிகார பூஜையையும் சுப்ரீம் ஓகே பண்ணியிருக்கிறதுதான் நெருடலா இருக்கு.

ஒவ்வொரு கிரகத்துக்கு ஒவ்வொரு சாதி கொடுத்திருக்காய்ங்க. குறிப்பிட்ட கிரகம் சரியில்லன்னா அந்த கிரகத்துக்குரிய சாதிக்காரவுகளுக்கு தானம் கொடுக்கலாம்ங்கறாய்ங்க.இது ஓகே. குரு=பிராமணர்கள் குரு சரியில்லன்னா ஐயருக்கு வேட்டி,ஐயரம்மாவுக்கு புடவை கொடுங்கனு நானே சொல்றேன்.

ஆனால் எந்த கிரகம் சரியில்லைன்னாலும் அய்யருக்கே தானம் பண்ணனுங்கறாய்ங்களே இது சைன்டிஃபிக்கா? சனி சரியில்லைன்னா தலித்,புதன் சரியில்லின்னா வைசியன் இப்படி சமமா தானம் பண்றதுதானே சைன்டிஃபிக்

செவ் சரியில்லைன்னா யாகம் பண்றேங்கறாய்ங்க. ( நெருப்புல ஜாமானை தூக்கிப்போடறது – செவ் நெருப்புக்கு காரகர் கணக்கு ஓகே). இதைவிட அந்த பொருட்களை கை,கால் அறுபட்டவுக/மேஜர் ஆப்பரேஷன் நடந்தவுக/  பெரிய விபத்து/தீவிபத்துல சிக்கினவுகளுக்கு தரலாமே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s