ராகு -கேதுக்களும் கில்மாவும்

Posted on Updated on


இன்னாபா நீ அல்லாத்தையும் கில்மாவோட முடிச்சு போடறேனு அலுத்துக்கிடாதிங்க. நம்ம எல்லா செயல்களுக்கும் பின்னாடி உள்ள விருப்பங்கள் ரெண்டே (அது என்னான்னு இத்தீனி பதிவுக்கப்பாறமும் சொன்னா நான் உங்களை அறிவாளினு மதிக்கலைனு அர்த்தம்) அந்த ரெண்டு விருப்பமும் செக்ஸுல தான் நிறைவேறுது. இதுக்கு ஒரு ஆல்ட்டர் நேட்டிவ் தான் பணம். பணம் வருங்கறதுக்காக பதவி, கில்மா கிடைக்குங்கறதுக்காகத்தேன் பணம்,பதவினு அலையறது. ஆக இந்த லோகத்துல கில்மாவுக்கு தொடர்பில்லாத மேட்டரே கிடையாதுங்கோ ..

கில்மாவுக்கு ராகு – கேதுக்கள் எப்படி சப்போர்ட் தர்ராய்ங்க – ராகு கேது பலம் இல்லைன்னா கில்மா என்னாகும்னு இந்த பதிவுல பார்த்துரலாம்.

ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் உங்களுக்கு ராகு கேது பலமில்லேனு அருத்தம். இதான் சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாட்டா இம்சைதானு ஜோதிடம் சொல்லுது.

தோஷத்தை தோஷம் மணந்தா தோஷத்தை காக்காயா தூக்கிட்டு போவும். ஒரு ம..ரும் கிடையாது. சுத்த ஜாதகர்களோட பொழப்பு கெடக்கூடாது + இனம் இனத்தோட சேர்ந்தா பெருசா அதிர்ச்சி , நிராசை ஏற்படாது . கெட்டு அழிஞ்சாலும் ஒழியட்டும்னுதேன் இந்த விதி.

சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தோஷம் ஏற்பட்டிருக்கும், எனவே பாம்பு கடித்து மரணம் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நம்மையும் அறியாமல் மூளையில் மின்னும். இதெல்லாம் ஒரு வகையில நிஜமா கூட இருக்கலாம். இல்லேங்கலை. ஆனால் இதெல்லாம் கட்டுச்சோற்று சித்தாந்தங்கள். கொஞ்சம் முக்கினா நிறைய மேட்டர் வெளியவருமுங்கோ.. வெய்ட் அண்ட் சீ.

என்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன்.

உதாரணமா 1-7 ல் ராகு கேது:
இந்த அமைப்பு அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதையை தருது . ( என்னதான் காதலுக்கு கண்ணில்லேன்னாலும் அந்த மாதிரி ஒரு “குருட்டு” காதலி/காதலன் இந்த மாதிரி பார்ட்டிகளுக்கு வர்ரதுக்குள்ள கிடைக்கிறதுக்குள்ள பயங்கர டீலாயிருவாய்ங்க
சந்தேக புத்தி:
இது காதல்,காமத்துக்கு மட்டுமே இல்லை. நட்புக்கு கூட ஒதகாத சமாசாரம்.
அனைவரையும் நம்பி மோசம் போவது:
பக்கத்து வீட்டு பையனை ஒரு நாள் ஆணியடிக்க கூப்டா பரவாயில்லை. தினம்தினம் கூப்டா
ஈஸி மணி மீது கவர்ச்சி:
இன்னைக்கு பங்கு மார்க்கெட் தூக்கறதும் விழறதுமா இருக்கு. ஒவ்வொரு தாட்டி விழும்போதும் லட்சக்கணக்கான பார்ட்டிங்க ரங்க நாதன் தெரு நடைபாதையில கர்சீஃப் விக்கிற ஸ்டேஜுக்கு வந்துர்ராய்ங்க. அவிக செக்ஸ் லைஃப் என்ன கதியாகும் ரோசிங்க. குரோஸ் கணக்கா வயாக்ரா உபயோகிச்சாலும் காரியம் நடக்காது.
நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டறது:
தெனாலி ராமன் பூனைக்கு பால் வச்ச கதை தெரியும்ல – அட சூடுகண்ட பூனைங்கற பழமொழியாச்சும் தெரியும்ல. இதே கதை தான் இவிகளோடதும்.ஒரு தாட்டி பிரச்சினைல மாட்டினாலே ( முக்கியமா சென்சிட்டிவ் பார்ட்டிங்களுக்கு ) எல்லாமே ஒடுங்கி போயிரும்.
மனைவி /கணவர் நோயாளியாகவோ, உங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம்:
ஜவஹர்லால் நேரு ஹோமோ செக்ஸுனு ஒரு புஸ்தவத்துல படிச்சேன். கமலா நேருவோட ஹெல்த் கண்டி
ன் அப்படி..

மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு:
எண்ணங்களுக்கு சக்தி அதிகம். ஓஷோ சொல்வாரு .. நீ சாகப்போறேனு ஒருத்தனுக்கு சொல்ட்டா சில மாசத்துல அவனோட ஆயுள் ரேகையில வெட்டு விழுந்துருமாம். “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”னு சொம்மாவா சொன்னாய்ங்க.

தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் – இதரரின் சந்தேகத்திற்கு ஆளாதல்:
புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.

பிரச்சினைனு வந்தாலே அது மொதல்ல தன்னோட எஃபெக்ட் காட்டறது பேட்டரிமேல தான்.

2ல் ராகு 8ல்கேது :
ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.

இந்த மாதிரி தின்னது ஃபெவிகாலையே கலந்து குடிச்சாலும் பாடில ஒட்டுமா? ரத்தம் விருத்தியாகுமா? பலான இடத்துக்கு பாயுமா? அப்பாறம் எங்கத்து கில்மா?

பெண் ஜாதத்துல இதை மாங்கல்ய தோஷம்ங்கறாய்ங்க கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
ஆத்துக்காரருக்கு டிக்கெட் கொடுத்த ராகு கேது இத்தோட விட்டா பரவாயில்லை – இதர கிரகங்கள்+பாவங்களும் கெட்டிருந்தா அவரு ஆவி ரூபத்துல ” பட்டுவண்ண ரோசாவாம் -பார்த்த கண்ணு மூடாதாம் .. பச்சை மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாய்ங்க”னு பாடவேண்டி வந்துரும்.
பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள்:
என்ன தான் மாற்றுத்திறனாளிகள்னு தலையில வச்சு கொண்டாடினாலும் அவிகளோட செக்ஸ் லைஃப் பத்தி ஆராச்சும் ரோசிச்சமா?
சதா சர்வ காலம் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல்:
தம்பதியில ஆரோ ஒருத்தரு இந்த மாதிரி கேரக்டரா அமைஞ்சுட்டா அவிக லைஃப் என்னாகும்? ஆகே பீச்சே புண்ணாகும்.
குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம்:
கடன் உடன் பகைனு மொட்டையா போடறாய்ங்க. கடன் கில்மாவுக்கு உடன் பகைனு போடனும்ங்கோ..
குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்:
இந்த கலகச்சூழல்ல கில்மா சாத்தியமா?
அண்ணே ! இதெல்லாம் ஜஸ்ட் ட்ரெயிலருதேன். இன்னம் பலான பலான மேட்டர்லாம் மஸ்தா கீது. முக்கியமா “அவாள்”. இந்த பாய்ண்டை வச்சு எப்படியெல்லாம் கேஷ் பண்ராய்ங்க – பொழப்பை கெடுக்கிறாய்ங்கங்கற மேட்டர் எல்லாம் அடுத்த பதிவில பார்ப்போம்..

Advertisements

6 thoughts on “ராகு -கேதுக்களும் கில்மாவும்

  Thevar said:
  April 26, 2011 at 6:07 pm

  soooooooper……explanation.

  S.Sivakumar said:
  August 29, 2012 at 11:29 pm

  If Rahu & kethu is placed 7 and 1 from rasi is sarppadosham or not?

   S Murugesan said:
   August 30, 2012 at 1:34 am

   வாங்க சிவா !
   லக்னாதிபதி பலம் இழந்து ராசி நாதன் மட்டும் பலம் பெற்றிருந்தா இட் மே அக்கர்.

  S.Sivakumar said:
  August 30, 2012 at 5:38 pm

  லக்னாதிபதி பலத்துடன் இருக்கிறாரா பலமிழந்து பல்பு வாங்கிட்டாரான்னு எப்படி கண்டுபிடிக்கறது அய்யா? ஜோதிடத்துல பால பாடம்கூட தெரியாது. உங்க தலமே ஒரு மாசமாத்தான் தெரியும்

   S Murugesan said:
   August 30, 2012 at 8:18 pm

   சிவா(ய) சார் !
   http://www.scientificastrology.com ,
   http//:freehoro.com,
   அல்லது

   http://www.ganeshaspeaks.com/

   போன்ற வலைதளங்களில் தங்கள் பர்த் டீட்டெய்ல்ஸ் கொடுத்து ஜாதகம் எடுத்து அதை ஆன்லைன் ஸ்டோரேஜ்ல வச்சுட்டு அதனோட லிங்கை கமெண்ட்ல கொடுங்க பார்க்கலாம்.

  p.jeyabalan said:
  December 16, 2012 at 2:33 pm

  my birth date (03/10/1986)
  time(12:30:15)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s