செவ்வாயும் கில்மாவும்

Posted on Updated on

இன்னாபா இது யுத்தகிரகத்தை போயி கில்மாவோட அநியாயத்துக்கு சேர்க்கிறேனு உ.வ பட்டுராதிங்க. பல யுத்தங்கள் வரதுக்கு கில்மாதான் காரணமா இருந்திருக்கு. யுத்தத்துல வேற்றி கிடைச்சாச்சுன்னா கில்மாவுக்கு குறைவே இருக்காது.

செவ்வாய்னா ரத்தம். பலான இடத்துக்கு ரேப்பிட் ஃபோர்ஸ் மாதிரி ரத்தம் பாயலைன்னா அதை அல்பசங்கியைக்கு மட்டும் தான் உபயோகிக்கமுடியும்.

ஆண்,பெண்கள் சுய இன்பம் இத்யாதியில் இறங்காம, பெண்கள் சாகசங்கள் புரியாம இருந்தா முதல் உறவின் போது கருமுத்துக்களை பார்க்கலாம். ( இது எல்லாருக்கும் கட்டாயமில்லிங்கோ) சிவப்புதுளிகள் ஜீரோ வாட்ஸ்ல கரு முத்தாதான் தெரியும்.

பெண்கள் விசயத்துல ஒவ்வொரு மாதவிலக்குக்கப்பாறம் தான் புதிய எக் செல் ஓவரிலருந்து புறப்பட்டு வந்து கருப்பையில தன் காத்திருப்பை துவங்குது . அப்பத்தேன் அவிக “உணர்ச்சிகள்” தீட்டப்பட்டிருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்துல சிவந்திருக்க வேண்டிய இடங்கள்னு ஒரு லிஸ்டே இருக்கு. இதனோட அடிப்படை என்ன? ரத்த ஓட்டம் கரீட்டா நடக்குதா இல்லியாங்கறதுதேன்.

(ஜாதகததை வைத்து உடல் அமைப்பை சொல்வது போல் (உ.ம் : லக்னம் = தலை,முகம்) உடல் அமைப்பை வைத்து சாதகம் சொல்லமுடியாதா என்பதே சாமுத்ரிகா லட்சணத்தின் அடிப்படை போலும். ஆனால் பாவகிரகங்கள் ஜஸ்ட் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மனதையும் பாதிக்கின்றன.

சிலர் விஷயத்தில் பாவ கிரகங்கள் உடலை பாதிக்காது (இவர்கள் பார்க்க சுந்தர புருஷர்களாய் இருப்பர்) ஆனால் மனதை கோரமாக பாதித்திருக்கும். ( சாடிஸ்டிக் சார்மிங் வில்லனாக இருப்பார்கள்)

எச்சரிக்கை: இதெல்லாம் என் கருத்து /ஊகம்/அனுபவம் மட்டுமே

இவ்ளோ டீட்டெயில்டா போவானேன் செவ்…….வாய்ங்கற பேரை பாருங்க. ஒடனே சால்னா கடையில நமீதா கணக்கா ஒரு கேரக்டர். வெற்றிலை போட்டு சிவந்த வாய் ஞா வரலை. மத்த கிரகங்கள் செரியில்லைன்னா அது சரியில்லை இது சரியில்லைனு தான் சொல்வாய்ங்க. இவரு சரியில்லைன்னா மட்டும் ( லக்னம் முதற்கொண்டு 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருத்தல்) செவ் தோஷம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.

இன்னாபா இது அக்குறும்புனு பொங்கி எழுந்துராதிங்க. மேட்டர் கீது வாத்யாரே. மன்சனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர்ரது வெள்ளயணுக்கள். அது உற்பத்தியாகிறது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜையில. அந்த மஜ்ஜைக்கு காரகன் செவ்வாய். தாளி நோ.எ.ச இல்லாத பார்ட்டிக்கு எந்த ரோகம் தான் வராது?

மேலும் செவ் சரியில்லின்னா ரத்த சுத்தி சரியா இருக்காது. சொறி சிரங்கு கட்டி எல்லாம் வரும். இப்படி காட்பாடியா போன பாடி கொண்டவன் பலவீனனாதான் இருப்பான். கோபத்துக்கு காரணம் இயலாமை. பலவீனனுக்கு இயலாமை அதிகம். கோபமும் அதிகம்.

இப்ப கில்மாவுலயே பாருங்க. எத்தினியோ சந்தர்ப்பத்துல விட்டுக்கொடுக்கவேண்டி வரும். ” விளக்கை அணை” “அம்மா தூங்கட்டும் – ஆட்டுக்குட்டி தூங்கட்டும்” செவ் தோஷமுள்ளவன் சீக்கிரத்துல கோபப்படுவான். கோபப்பட்டவனுக்கு காரியம் நடக்காது.

செவ்வாய் காரகத்தின் கீழ் வரும் அம்சங்களையும் அதனால கில்மாவுக்கு வரக்கூடிய ஆப்பையும் இப்ப பார்ப்போம்.
வயதில் இளையவர்கள்:
ஜாதகத்துல செவ் நல்ல இடத்துல உட்கார்ந்தா ஆண்டொன்று கூடுமே தவிர வயதொன்று கூடவே கூடாது. பார்ட்டி சொம்மா நச்சுனு இருப்பாப்டி. சப்போஸ் பார்ட்டி ஜாதகத்துல செவ் சரியில்லைனு வைங்க. சின்னப்பசங்களை எல்லாம் தனக்கு போட்டியா நினைக்கிற சைக்காலஜி வந்துரு
். டிஷ் பையன், பால் பாக்கெட் போடற பையன் மேல கூட சந்தேகம் வரும்.( காரணம் உற்சாகத்தை தர்ரது செவ். உற்சாகம் குறைஞ்சிக்கிடக்கறச்ச துடியா இருக்கிற பசங்களை பார்த்தா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வருமா வராதா?)
போலீஸ், மிலிட்டரி, ரயில்வே:
செவ் நல்ல இடத்துல இருந்தா இந்த மாதிரி டிப்பார்ட்மென்ட்ல வேலை கிடைக்கும். ( செவ் சரியில்லாத ஜாதகத்துல பிறந்து லஞ்சம் கொடுத்து இந்த வேலையெல்லாம் வாங்கினா செவ்வாயின் இதர காரகங்களான ஆயுதங்கள், வெடி பொருட்கள், அறுவை சிகிச்சை, விபத்து, தீ விபத்து இத்யாதிக்கு பலியாகவேண்டி வரும்ங்கோ. மேற்படி உத்யோகங்கள்ள இருந்தா கண்ணாலம் கன்னா (சீக்கிரமா) ஆகும். அப்பாறம் என்ன கில்மாதான்.
எரிபொருள், மின்சாரம்:
வீட்ல கியாஸ் ஆயிருச்சு. கெரசின் இல்லை. எலக்ட்ரிக் ஓவன்ல ஆக்கி முடிச்சுரலாம்னு பார்த்தா வீராசாமி புண்ணியத்துல கரண்டு வாரா சாமி ஆயிருச்சு. சமையல் எப்படி முடியும். பெட் ரூமுக்கு எப்படி போகமுடியும். செவ் நல்லா இருந்தாதான் எல்லாமே கணக்கா முடியுங்கோ. எரிபொருள் தொடர்பான துறையில வேலை,தொழில் அமைஞ்சாலும் சுராங்கனிக்கா சேக்குதேன். தினம் தினம் அல்வா மல்லிப்பூதேன்..
தர்க்கம், வியூகம்:
அட என்ன பாஸ் எதுலதான் தர்க்கம் பார்க்கிறதுனு விவஸ்தையே இல்லையானு கேப்பிக சொல்றேன். ஆன்மீகத்துல மட்டும் தேன் தர்கம் நாலு காலை தூக்கிரும். உ.ம்: இழப்பவன் பெறுவான். காப்பவன் இழப்பான்.
கில்மாங்கறது உலகியல் வாழ்க்கையில ஒரு அங்கமே. அதனால ஜஸ்ட் ஒரே ஒரு தர்கத்தை கேட்ச் பண்ணினா ஊடல் கீடலையெல்லாம் ஊதித்தள்ளிட்டு காம் நகர்ல அப்பார்ட்மென்டே கட்டிரலாமுங்கோ.
அடுத்தது வியூகம். இதென்ன யுத்தமா வியூகம் வகுக்கனு கேப்பிக சொல்றேன். அச்சம், நாணம்,மடம்,பயிர்ப்பு அது இதுனு சொல்றாய்ங்கல்ல இதெல்லாம் என்னவாம் ஒவ்வொன்னும் ஒரு கோட்டை .இந்த கோட்டைகளுக்கெல்லாம் வேட்டு வைக்கலைன்னா நோ கில்மா. ஒவ்வொரு கோட்டைக்கும் ஒரு வியூகம் வகுத்து டமார் பண்ணாதான் கில்மா.
அறுவை சிகிச்சை:
செவ் சரியில்லைன்னா அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படுது. போதாதகுறைக்கு அவருக்கு சனியோட பார்வை தொடர்பு ஏற்பட்டுதுனு வைங்க அது எவ்ள தூரத்துக்கு போவும்னு சொல்லமுடியாது. அட ஒரு சிசேரியனை எடுத்துக்கங்க. லேடி டாக்டர் ” ஒரு ஆறு மாசத்துக்கு பொஞ்சாதிய தங்கச்சி மாதிரி பார்த்துக்கங்க”னு சொல்ட்டா கில்மாவாவது வேறொன்னாவது. இன்னம் ஓவரிய தூக்கறது, யூட் ரஸை தூக்கிர்ரதுனு கதைபோச்சுன்னா ஹார்மோன் சுரப்புலயே பிரச்சினை வந்து சம்சாரத்துக்கு மீசை தாடியெல்லாம் வர ஆரம்பிச்சுரும்.
சமையல்:
யுத்த காரகனான செவ்வாயை சமையலுக்கும் காரகம்னு சொல்லியிருக்காய்ங்க.ரெண்டுக்கு என்ன சம்மந்தம்? யுத்தம்னா மொதல்ல எதிரி நாட்டை வேவு பார்க்கனும், எதிராளியோட படைபலம் ,வியூகம் தெரியனும். அதுக்கேத்தமாதிரி நம்ம படைய பலப்படுத்தனும். சமையல்னா நாம யாருக்கு சமைக்கப்போறோம், அவிக காஞ்சு கிடக்காய்ங்களா?, ஓஞ்சு கிடக்காய்ங்களா? பசியேப்பமா? புளியேப்பமா தெரிஞ்சிக்கிடனும். அப்பாறம் கிச்சன்ல என்ன இருக்கு என்ன இல்லைனு (முக்கியமா கியாஸ்/கரண்ட்) பார்த்துக்கனும்.
யுத்தம்னா மொதல்ல ஏர் பாம்பிங்கா, காலாட்படையா, கடல் வழி தாக்குதலா முடிவு பண்ணனும். சமையல்னா மொதல்ல கொறிக்க ஏதாச்சும் கொடுத்துரலாமா? இல்லை அவசர அடியா பிரியாணி பண்ணி அதுக்கு தயிர் சட்னி கொடுத்துட்டு அதுக்குள்ளாற கோழிகுருமாவ ஒப்பேத்தமுடியுமானுல்லாம் ஸ்கெட்ச் பண்ணனும்.
இப்படி யுத்தத்துக்கும் சமையலுக்கும் நிறைய சம்பந்தமிருக்குங்கோ. சமைக்கிற கணவன் மாரை வச்சு நிறைய ஜோக்கெல்லாம் எழுதறாய்ங்க. ஆனால் சமைக்க தெரிஞ்ச கணவனா இருக்கிறதுல நிறை
லாபம் இருக்கு பாஸ்.
பொஞ்சாதி ஏகத்துக்கு பில்டப் கொடுக்கமுடியாது ( ஸ்டவ்வு கிட்டே நின்னு பாருங்க தெரியும்) – நெஜமாலுமே பொஞ்சாதிக்கு முடியாத சமயம் கோதாவுல இறங்கி கேட்டு கேட்டு செஞ்சா அவிகளுக்கும் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சன் ஆகும். மனசுல நன்றி உணர்ச்சி பொங்கும். அது கில்மாவுல கூட முடியலாம்.
ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள்:
செவ் சரியில்லைன்னா இதெல்லாம் வந்து கழுத்தறுக்க ஆரம்பிக்கும். லோ பிபி,ஹை பிபி உள்ளவுக,அல்சர் ,பெப்டிக் அல்சர் உள்ளவுக கில்மாவுக்கும் இந்த வியாதிகளுக்கும் என்ன தொடர்புனு சொல்லலாம்.
மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்:
இதுல வெறி கொண்டு ,வெற்றியே குறியா உள்ளவுகளுக்கு மைண்ட் கில்மா பக்கம் போகவே போகாது. உடம்பு கெட்டுரும்ங்கறதெல்லாம் சொம்மா சாக்கு. மனுஷன் பேசிக்கலா பண்றது ரெண்டுதேன். கொல்றது,கொல்லப்படுவது.இது செக்ஸுல சாத்தியம். ஆனால் இது ரெண்டுமே மேற்படி மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்ல சைக்கலாஜிக்கலா -சுத்தி வளைச்சு நடந்துருது -அதனாலதான் மேற்படி ஃபீல்டுல உள்ள பார்ட்டிங்க கில்மா பக்கம் திரும்பறதில்லை. ஆனால் தமாசு என்னடான்னா அதுகள்ள சாதனை பண்ணி முடிஞ்ச பிற்பாடு பலான மேட்டர்ல ஆர்வம் பீறிட்டு கிளம்பும். சில பிக்காலிங்க (முக்கியமா கோச்சுங்க) “ஏடாகூடமா”பிஹேவ் பண்றாய்ங்கனு கேள்வி. இதுக்கு காரணம் அவன் வெறி கொண்டு ,வெற்றியே குறியா செயல்படலைங்கறதுதேன்.
பால்:
மேட்டருக்கு மின்னாடி ஒரு தம்ளர் பால் (முடிஞ்சா ஒரு சில மசாலாக்கள் சேர்த்து) அடிச்சா தெம்பா இருக்கும்.
கொம்புள்ள பிராணிகள்:
மஞ்சு விரட்டு தெரியும்ல. மஞ்சு விரட்டுல குடல் சரியாம தப்பிச்சா குட்டிக மேலாடை சரிக்கும்னு சரித்திரம் சொல்லுதுல்ல .
மாமிசம்:
இது காம உணர்வை தூண்டும்.

ஆக ஒடனே உங்க குடும்ப ஜோதிடரை சந்திச்சு சாதகத்துல செவ் சாதகமா இல்லியானு ஒடனே தெரிஞ்சிக்கிடுங்க. சாதகமா இல்லாட்டி கீழ்காணும் பரிகாரங்களை ஆரம்பிச்சுருங்க.

1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

Advertisements

2 thoughts on “செவ்வாயும் கில்மாவும்

  மதுரை சரவணன் said:
  February 8, 2011 at 7:20 pm

  super..

  Vinoth said:
  February 9, 2011 at 7:03 am

  மின்சாரத்துக்கு கரகன் ராகுன்னு படிச்ச ஞாபகம்… ஜகன்னத அஸ்டிரோ குருப்பில் ஒருத்தர் ஜாதகத்தை கொடுத்து கேட்டு இருந்தாங்க. அவர் மின் துறையில் வேலை பார்குறவர். அந்த வேலைக்கு ராகு காரகன். working with unseen force. by rahu படிச்சேன் அதான் கேட்கிறென்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s